எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, November 10, 2010

என்கவுன்டர் - எனது கருத்து

என்கவுண்டர் முறையில் மோகன்ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டது தப்புதான், பொதுமக்கள் மத்தியில் அடுத்து இந்த மாதிரி தப்பு பண்ணலாமான்னு யோசிக்கிறதுக்கு கூட பயப்படுறமாதிரி கொடூரமா கொன்னு இருக்கணும்.

///damildumil said... இந்த சம்பவத்தில் அவனுக்கு சிறிதளவு பங்கு இருந்தாலும் அடித்தே கொல்ல வேண்டிய நாய் தான் அது///

இவன் மாதிரி கொடூர கொலை செய்யும் முதல் குற்றவாளிகளை எவ்கவுண்டர் செய்வது இது முதல் முறை அல்ல . முன் ஆந்திராவில் ஒரு கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றி கொலைசெய்த இரண்டு மாணவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள்.

இந்த கருத்துக்கணிப்பில் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் குற்றவாளி கடுமையா தண்டிக்கப்படனுமின்னு தான் சொல்லிருக்காங்க , அதுல சிலபேர் என்கவுண்டர் முறைக்கு எதிரா வோட்டு போட்டு இருக்காங்க , குற்றவாளிக்கு ஆதரவா இல்லை , இப்படி என்கவுன்டரை ஆதரித்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கூறுகிறார்கள்.

போலீஸ் என்ன காலைல ஒன்னு சாயந்திரம் ஒண்ணுன்னு டெய்லி என்கவுண்டர் பன்றாங்களா ?

உண்மைய சொல்லனுமின்னா என்கவுட்டருக்கு பயந்து தான் பல ரவுடிகள் ஒழுங்கா இருக்கானுக . இதில் மாற்றம் வரணும்ன்னா சட்டம் மிகக் கடுமையாக்கப்படும் , தண்டனைகளை பார்த்து அடுத்து தப்பு செய்ய பயப்படனும் .

முதலில் இது முதல் என்கவுண்டர் அல்ல , இதற்கு முறை பலமுறை நடந்துள்ளது . இப்ப யாரு சார் சட்டத்திற்கு பயப்படுறாங்க?, எந்த அரசியல் வாதி , எந்த தொழில்முறை ரவுடி சட்டத்திற்கு பயப்படுகிறான்?. கொலை செய்து விட்டு கூட்டாக தைரியமாக கூலா போயி நீதிமன்றத்தில் சரணடைந்து விடுகிறார்கள் .இப்ப போலீசே அரசியல் வாதிகளுக்கு ரவுடிகளுக்கு பயந்து பணிந்து வேலைசெய்ய வேண்டி உள்ளது.

என்கவுண்டர் அல்லாத அனைத்து குற்றவாளிகளுக்கும் மிக நியாயமான தண்டனை கிடைத்து விட்டதா ? இல்லையே .................

போலீசார் & பத்திரிக்கையாளர்கள் கூட்டணி இருக்கு , விசாரணைக்கு பின்னால் நீங்களே இந்த போலீசை காரித்துப்புவிங்கன்னு ஒரு பத்திரிகை காரர் சொல்லி இருக்கார்.

அப்ப மக்கள் எல்லாம் பைத்தியக்காரன்களா? , என்னா மயி@#@#கு தப்பான நியுஸ் போடுறிங்க , மக்கள் பத்திரிகை , டி.வி போன்ற ஊடகங்களை பார்த்துதான் செய்திகளை அறிந்து கொள்கிறார்கள்.

நாங்க
ஒவ்வொருத்தரும் போயி அந்த பாட்டிகிட்டவும் , டாக்டர் கிட்டவும் உண்மையை கேட்கணுமா ?

பத்திரிகை நிருபர்களும் லஞ்சம் (கட்டாய அன்பளிப்பு) வாங்கும்
அயோக்கியர்கள் என்று நீங்கள்தான் ஒரு பதிவு போட்டு இருக்கீங்க . அப்புறம் எங்களை உணர்ச்சிவசப்படாதிங்க , உண்மை தெரியாமல் பேசாதிங்கன்னு சொல்ல எந்த லஞ்சம் (கட்டாய அன்பளிப்பு) வாங்கும் நல்லவர்களுக்கும் உரிமை இல்லை .

ஒரு முக்கியமான கேள்வி இவன்தான் உண்மையான குற்றவாளியா ???

இருந்துவிட்டால் ? - கோர்ட்டுக்கு போயிருந்தால் நிச்சையமாக தப்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .

இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .

75 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட... அவன் என்ன மகானா?.. செத்து ஒழியட்டும் நாய்..

ஆனால், இதற்குப்பின்னால், யார் உள்ளனர்?. அவர்களையும் கண்டுபிடித்து, போட்டு தள்ளட்டும் பாஸ்..

அடுத்த தடவை தப்பு செய்யும்போது பயப்படனும்

Anonymous said...

very good

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு ஒரு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .

//

அட.. இது நல்லாயிருக்கே....

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அட... அவன் என்ன மகானா?.. செத்து ஒழியட்டும் நாய்..

ஆனால், இதற்குப்பின்னால், யார் உள்ளனர்?. அவர்களையும் கண்டுபிடித்து, போட்டு தள்ளட்டும் பாஸ்..

அடுத்த தடவை தப்பு செய்யும்போது பயப்படனும்
///

அதேதான்

எல் கே said...

manguni vittuth thallunga.. ivananugalai ange suttu irukkanum. than thappu

மங்குனி அமைச்சர் said...

LK said...

manguni vittuth thallunga.. ivananugalai ange suttu irukkanum. than thappu
///

கரக்ட் LK

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்கவுன்டர்கள், பெரும்பாலும் குற்றவாளிகளைத் தண்டிக்க என்பதைவிட, மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடத்தப்படும் ஒருவித அதிர்ச்சி வைத்தியமே!

எனவே குற்றவாளி உண்மையில் குற்றவாளிதானா என்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லாதது (அவர்கள் நிச்சயம் அப்பாவிகளாக இருக்கமாட்டார்கள்). பெரும்பாலான எங்கவுன்ட்டர்களில் குற்றவாளிகள் மேல் 10-15 க்கு மேல் கேஸ்ககள் இருக்கும், யாரும் சாட்சிசொல்ல வராத சூழ்நிலை இருக்கும்!இந்த என்கவுன்டர் சற்று வித்ததியாசமானது.

அதற்கு நான் போன பதிவில் போட்ட விளக்கம்:
சமூகத்தில் அவ்வப்போது குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் போது இதுபோன்ற என்கவுன்ட்டர்கள் நடத்தப்படுவது வழமையே. ஆனால் இதுவரைக்கும், தொழில்முறை ரவுடிகளே என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வந்தார்கள். இப்போது பொதுக்குற்றவாளிகளுக்கும் செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது.

கடந்த 2-3 வருடங்களாகவே நடந்துவரும் குற்ற நிகழ்வுகளை நோக்கினால், அது முதல்முறைக் குற்றவாளிகளே அதிகம். மக்களிடம் சட்டம், தண்டனை குறித்த பயம் குறைந்துவருகிறது, இந்த நேரத்தில் குற்ற சம்பவம் மக்கள நினைவில் இருந்து மறைவதற்குள் நடத்தபட்ட இந்த என்கவுன்ட்டர் மிக மிகச் சரியானதே!

Chitra said...

இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு ஒரு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .

....... மங்குனி அமைச்சர் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்னு நினைக்கிறேன்.... யெப்பா!!!

தேவா said...

அமைச்சரே இன்னொருத்தனையும் இன்னும் எதுக்காக விட்டு வச்சிருக்காங்களோ தெரியல. கையோட அவனையும் போட்டிருந்தா இன்னும் நிம்மதியா இருக்கும். பரதேசிக( இன்னும் கேவலமாவெல்லாம் வாய்ல வருது).......... போடணும் இந்த மாதிரி பண்ணறவன் எவனா இருந்தாலும் போடணும். கோயமுத்தூர் போலீசுக்கு ராயல் சல்யூட். இந்த காவல் துறை இருக்கும் கோயமுத்துரில்தான் நானும் இருக்கிறேன்னு நினைக்கறப்ப பெருமையா இருக்கு.

Arun Prasath said...

என்கவுண்டர் அப்டின்னு கேள்வி பட்ட உடனே, சந்தோசமா தான இருந்தது.... சாகட்டும்... நாட்டுக்கு இவங்க எல்லாம் தேவ இல்ல....

எஸ்.கே said...

இது நல்ல விசயம்தான். ஆனால் தண்டனைகளும் சட்டங்களும் கடுமையானாதான் தப்பு நடக்காம இருக்கும். ஏன்னா தப்பு செஞ்ச பிறகு தண்டனை கொடுக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், தப்பு நடக்காம தடுக்கிறது அதைவிட முக்கியம் இல்லையா!

test said...

பன்னிக்குட்டி ராம்சாமி said //என்கவுன்டர்கள், பெரும்பாலும் குற்றவாளிகளைத் தண்டிக்க என்பதைவிட, மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடத்தப்படும் ஒருவித அதிர்ச்சி வைத்தியமே!//
well said!

Nice!! :)

தமிழ்க்காதலன் said...

மங்குனி அமைச்சா.... உன்னுடைய கருத்து என்ன...? என்கவுண்டர வரவேற்கிர... அவ்வளவுதானே..? இதுக்கு பதில சொல்லு? குற்றவாளி என குற்றம் சாட்டப் பட்டவனெல்லாம் உண்மையில் குற்றவாளியா எனப் பார்க்க வேண்டியிருக்கிறது. அடுத்து குற்றம் நிருபிக்கப் பட்ட பிறகுதான் அவனுக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும். அந்த தண்டனை வழங்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை. மேலும் என்கவுண்டர் என்றால் கண்டிப்பாக உயர் அதிகாரியிடமும் மாவட்ட கலெக்டரிடமும் முன் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். மிக கொடிய குற்றங்கள் தவிர மற்ற குற்றவாளிகளை முட்டிக்கு கீழே சுடத்தான் காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நெற்றிப் பொட்டில் சுடுவதற்கு அல்ல. அப்படியிருக்க இவனை நெற்றியில் சுடவேண்டிய அவசியம் என்ன? யாரையோ காப்பாற்ற நடந்த சதிப் போல தோன்றவில்லையா...உமக்கு? இவ்வளவு அவசரம் எதற்கு?
உங்கள் கருத்துப் படி பார்த்தால்... சேலம் சுரேஷ் ஏன் இன்னும் கொல்லப் பட வில்லை?
அவ்வளவு ஏன்? பாகிஸ்தான் தீவிரவாதி பிடிபட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவழித்து சிறப்புக் காவல், சிறந்த உணவு, முதல் தர கைதிகளுக்கான வசதிகளை ஏன் செய்து தருகிறது.? தமிழ்நாட்டைப் போல் சுட்டுப் போட்டிருந்தால் நம்முடைய வரிப் பணத்தில் பல கோடிகளாவது மிஞ்சுமே..! ஏன் அதை செய்யவில்லை? பம்பாய் போலிசுக்கு இது தெரியவில்லையா?
ஒரு விடயம் மங்குனி....
எல்லா போலிசும் நல்லப் போலிஸ் இல்லை என்பதை மறவாதே. இதை அதிகார துஷ்பிரயோகம் செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது. சட்டம் கை கட்டி வேடிக்கைப் பார்ப்பதுதான் ஆச்சரியம்? முறையாய் விசாரிக்க வேண்டிய சம்பவம் இது. அதுசரி நம்ம வலைப்பூ பக்கம் வாங்க மங்குனி. ( ithayasaaral.blogspot.com )

ஹரிஸ் Harish said...

இந்த பதிவின் கடைசி ரெண்டு பத்தி சூப்பர் தல..

செல்வா said...

//ஒரு முக்கியமான கேள்வி இவன்தான் உண்மையான குற்றவாளியா ???

இருந்துவிட்டால் ? - கோர்ட்டுக்கு போயிருந்தால் நிச்சையமாக தப்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .///

இதுதான் பிரச்சினையே ., நாம எல்லோருமே அந்த குற்றவாளியத்தான் சுட்டுட்டாங்க அப்படின்னு சந்தோசப்படுரோம் .. அதே சமயம் இறந்தவர் குற்றவாளியாக இல்லாமல் இருந்திருந்தால் ...? இத்தனையும் நாம் நிச்சயமாக சிந்தித்தே ஆகவேண்டும் .. இருந்தாலும் அப்படியே குற்றவாளியாக இல்லதிருந்திருந்தாலும் எத்தனையோ பேர் எப்படி எப்படியோ இறந்து போகிறார்கள் , எத்தனை இயற்கைச்சீற்றங்கள் , விபத்துக்கள் , ETC .. இதுல இறந்ததாக எண்ணிக்கொண்டாக வேண்டியதுதான். இவனது இறப்பு மற்றவர்களுக்குஆவது நல்ல பாடமாக அமையும் ..!!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்கவுன்டர்கள், பெரும்பாலும் குற்றவாளிகளைத் தண்டிக்க என்பதைவிட, மேலும் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடத்தப்படும் ஒருவித அதிர்ச்சி வைத்தியமே!

////

நேத்தே சரியா சொல்லிருக்க பன்னி

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

....... மங்குனி அமைச்சர் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்னு நினைக்கிறேன்.... யெப்பா!!!///

ரொம்ப நன்றி சித்ரா மேடம்

மங்குனி அமைச்சர் said...

தேவா said...

அமைச்சரே இன்னொருத்தனையும் இன்னும் எதுக்காக விட்டு வச்சிருக்காங்களோ தெரியல. கையோட அவனையும் போட்டிருந்தா இன்னும் நிம்மதியா இருக்கும். பரதேசிக( இன்னும் கேவலமாவெல்லாம் வாய்ல வருது).......... போடணும் இந்த மாதிரி பண்ணறவன் எவனா இருந்தாலும் போடணும். கோயமுத்தூர் போலீசுக்கு ராயல் சல்யூட். இந்த காவல் துறை இருக்கும் கோயமுத்துரில்தான் நானும் இருக்கிறேன்னு நினைக்கறப்ப பெருமையா இருக்கு.///

முக்கிய குற்றவாளி இவன்தான்

karthikkumar said...

இன்னும் நெறைய பேர் உள்ளனர் அமைச்சரே அவர்களையும் தண்டிக்க வேண்டும்

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

என்கவுண்டர் அப்டின்னு கேள்வி பட்ட உடனே, சந்தோசமா தான இருந்தது.... சாகட்டும்... நாட்டுக்கு இவங்க எல்லாம் தேவ இல்ல....
////

உண்மைதான்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

இது நல்ல விசயம்தான். ஆனால் தண்டனைகளும் சட்டங்களும் கடுமையானாதான் தப்பு நடக்காம இருக்கும். ஏன்னா தப்பு செஞ்ச பிறகு தண்டனை கொடுக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், தப்பு நடக்காம தடுக்கிறது அதைவிட முக்கியம் இல்லையா!///

கொடுக்கப்படும் தண்டனை மறுபடியும் தப்பு நடக்காம இருக்க வழிசெய்யனும்

மங்குனி அமைச்சர் said...

////தமிழ்க் காதலன். said...

. நெற்றிப் பொட்டில் சுடுவதற்கு அல்ல. அப்படியிருக்க இவனை நெற்றியில் சுடவேண்டிய அவசியம் என்ன?///

என்கவுண்டர் சார் இது , இதுல போயி லாஜிக் பாக்குறிங்க

///அவ்வளவு ஏன்? பாகிஸ்தான் தீவிரவாதி பிடிபட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவழித்து சிறப்புக் காவல், சிறந்த உணவு, முதல் தர கைதிகளுக்கான வசதிகளை ஏன் செய்து தருகிறது.? தமிழ்நாட்டைப் போல் சுட்டுப் போட்டிருந்தால் நம்முடைய வரிப் பணத்தில் பல கோடிகளாவது மிஞ்சுமே..! ஏன் அதை செய்யவில்லை? பம்பாய் போலிசுக்கு இது தெரியவில்லையா? //

என்னுடைய கேள்வியும் அதே ? ஏன் வேஸ்ட்டா செலவு செய்யனும் ?

///ஒரு விடயம் மங்குனி....
எல்லா போலிசும் நல்லப் போலிஸ் இல்லை என்பதை மறவாதே. இதை அதிகார துஷ்பிரயோகம் செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது. சட்டம் கை கட்டி வேடிக்கைப் பார்ப்பதுதான் ஆச்சரியம்? முறையாய் விசாரிக்க வேண்டிய சம்பவம் இது.////

இந்த ஒரு வாய்ப்பு இருக்கு சார் , ஆனால் இதனால் அதிக ரவுடிகள் தான் கொள்ளப்பட்டு உள்ளனர் .

//அதுசரி நம்ம வலைப்பூ பக்கம் வாங்க மங்குனி. ( ithayasaaral.blogspot.com )//

கண்டிப்பா வர்றேன் சார்

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

இந்த பதிவின் கடைசி ரெண்டு பத்தி சூப்பர் தல..///

thank you harish

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//ஒரு முக்கியமான கேள்வி இவன்தான் உண்மையான குற்றவாளியா ???

இருந்துவிட்டால் ? - கோர்ட்டுக்கு போயிருந்தால் நிச்சையமாக தப்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .///

இதுதான் பிரச்சினையே ., நாம எல்லோருமே அந்த குற்றவாளியத்தான் சுட்டுட்டாங்க அப்படின்னு சந்தோசப்படுரோம் .. அதே சமயம் இறந்தவர் குற்றவாளியாக இல்லாமல் இருந்திருந்தால் ...? இத்தனையும் நாம் நிச்சயமாக சிந்தித்தே ஆகவேண்டும் .. இருந்தாலும் அப்படியே குற்றவாளியாக இல்லதிருந்திருந்தாலும் எத்தனையோ பேர் எப்படி எப்படியோ இறந்து போகிறார்கள் , எத்தனை இயற்கைச்சீற்றங்கள் , விபத்துக்கள் , ETC .. இதுல இறந்ததாக எண்ணிக்கொண்டாக வேண்டியதுதான். இவனது இறப்பு மற்றவர்களுக்குஆவது நல்ல பாடமாக அமையும் ..!!///

மிகப்பெரிய தியாகிஆவான்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

இன்னும் நெறைய பேர் உள்ளனர் அமைச்சரே அவர்களையும் தண்டிக்க வேண்டும்///

aamaa karthik

'பரிவை' சே.குமார் said...

இவனுகளை பிடிச்ச அன்னைக்கே போட்டுத் தள்ளியிருக்கணும்... கோர்ட் கேசுன்னு அலையாம அப்பவே முடிச்சிருருந்தா வக்கீலெல்லாம் போராட்டம் பண்ணியிருக்க மாட்டாங்க... தள்ளுமுள்ளுல இறங்கியிருக்க மாட்டாங்க...

Anonymous said...

//இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான்//

கண்டிப்பாக..

அருண் பிரசாத் said...

//இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் //

நம்புவோம்...

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

இவனுகளை பிடிச்ச அன்னைக்கே போட்டுத் தள்ளியிருக்கணும்... கோர்ட் கேசுன்னு அலையாம அப்பவே முடிச்சிருருந்தா வக்கீலெல்லாம் போராட்டம் பண்ணியிருக்க மாட்டாங்க... தள்ளுமுள்ளுல இறங்கியிருக்க மாட்டாங்க...
///

இல்லை குமார் அவனிடமிருந்து உண்மைகள் வாங்கவேண்டி இருக்கும்

shiva said...

இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு ஒரு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .
.................
நான் ஒரு முன்னால் சிறைவாசி. சாத்தான் வேதம் ஊதுவதா என்று நினைக்க வேண்டாம். இது போன்ற குற்றவாளிகளுக்கு திடீர் மரணம் ஒரு தண்டனை அல்ல. அதே சமயம் இவ்வளவு பரப்பான வழக்கில் போலிசார் அப்பாவியை போட்டுத்தள்ளவும் வாய்ப்பில்லை. மேலே சொன்ன வாதம் ஏற்றுகொள்ள கூடியதே.

Unknown said...

நான் என்கவுண்டருக்கு எதிரானவன்... நாட்டில் நீதி அமைப்புகள் மூலம் மட்டுமே தண்டனைகள் உறுதி செய்யப்படல் வேண்டும்..

கேரளாக்காரன் said...

boss namakku kavundar melayo en koaundar melayo entha kovamum illa summa cinema police rangekku semaya pannirukkanga

vinu said...

still my stands remains; and will ever my stand is the same "no comments"

suneel krishnan said...

இது உணர்ச்சி கொதிப்பில் நாம் எடுத்த முடிவு .பொதுவாக என்கவுண்டர் ஆபத்தானது .உங்களது குற்றவாளி இல்லாது போனால் என்பதன் வாதம் ஏற்க முடியாது .அந்த இல்லாத போன குற்ற்றவாளி நீங்களோ நானாகவோ இருந்தால் நாம் இப்படி யோசிப்போமா ? அதை தியாகம் என்று சொல்லுவோமா ? ஆனால் பொதுவாக என்கவுண்டர் அப்படி குற்றம் ஊர்ஜித படுதமால் நடத்த மாட்டார்கள் , பொதுவாக எனக்கு என்கவுண்டர் மேல் இத்தகைய பார்வைகள் இருந்தாலும் நேற்றைய சம்பவம் எனக்கு நிம்மதியை அளித்தது என்பதும் உண்மை .இது சரியா தவறா என்று புரியவில்லை

vasan said...

காவ‌ல‌ர் ம‌ற்றும் ஊட‌க‌ச் செய்தியாய், ஒரு சாதார‌ண‌ டிரைவ‌ர் (மற்ற‌வ‌னுட‌ன் சேர்ந்து),
ப‌ச்சிள‌ம் குழ‌ந்தைக‌ளைக் க‌ட‌த்திவிட்டான்.ப‌ண‌ம் கேட்கவில்லை. சிறுமியை க‌ச‌க்கிப் பின் ஆற்றில் போட்டுவிட்டார்க‌ள், சிறுவ‌னின் ச‌ட‌ல‌மும் ஆற்றிலிருந்து எடுக்க‌ப்ப‌டுகிற‌து.
நீதிம‌ன்ற‌ காவலிருந்து, காவ‌ல்துறைக்கு விசார‌ண‌க்கு கூட்டிச் செல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் ம‌ட்டும்
என்கொளண்ட‌ரில் த‌லையில் சுட‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுகிறான்.
சாத‌ர‌ண ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ந்தேக‌ங்க‌ள்:
1, கைதிக்கு, துப்பாக்கியை கையால‌த் தெரியுமா? (சேஃப்டி லாக் / அதிகாரியின் ஹோல்ட‌ரிலிருந்து திருடுத‌ல்)
2, வ‌ழ‌க்க‌மாய் பின் இருக்கையில் இல்லாம‌ல் ஜீப்பின் முன் சீட்டில் கைதியை
அழைத்துச் சென்ற‌‌தாய் போலிஸ் சொல்வ‌து.
3, குற்ற‌ம் நடந்த‌ பொள்ளாச்சிக்கு போக‌ம‌ல் வேறு திக்கில் சென்ற‌து.
4, இரு குற்ற‌வாளிக‌ளில் ஒருவன் ம‌ட்டும் த‌னியாக‌ பிரிக்க‌ப்ப‌ட்ட‌து.
5, டிரைவ‌ர் த‌லையில் துப்பாக்கியை வைத்து மிர‌ட்டிய‌ கைதியின் துப்பாக்கி
அவ‌ரை சுடாது, ம‌ற்ற‌ இருவ‌ரின் கையிலும், வ‌யிற்றுலும் ச‌ரியாக‌ச் சுட்ட‌து.
கேள்விப்ப‌ட்ட‌ ஊட‌க‌, காவ‌ல்துறை செய்திக‌ளின் ப‌டி இத்த‌கு கொடுஞ்செய‌ல் புரிந்த‌
பாவிக‌ள் ச‌ரியாய் த‌ண்டிக்க‌ப்ப‌ட்டு கொல்ல‌ப் ப‌ட வேண்டிய‌ ந‌ர‌காசுர‌ர்க‌ள் தான்.
ஆனால் என்க‌வுண்ட‌ரில் அவ‌ச‌ர‌மாய் ஒருவ‌னைக் கொல்ல‌ வேண்டிய‌ நிர்ப‌ந்த‌ம்
ஏன் காவ‌ல்துறைக்கு வ‌ந்த‌து. காவல்துறை ஜீஸ‌ரின் ம‌ணைவி புனித‌த்தை
ப‌ல‌ கார‌ணங்க‌ளால் முன்பே பொதும‌க்க‌ளிட‌ம் இழ‌ந்து விட்ட‌து.
சட்ட‌ம் ஒழுங்கை நிர்வ‌கிப்ப‌வ‌ர்க‌ள், நீதிம‌ன்ற‌ வேலையை கையிலெடுக்க‌ வேண்டிய‌
க‌ட்டாய‌ம் ஏன்?

வெட்டிப்பேச்சு said...

//vinu said...
still my stands remains; and will ever my stand is the same "no comments" //

I agree with you Vinu. This type of euphoria will result in leading the mass to somewhere else.

read my sitings in

http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_10.html

Thank you.

God bless you.

வெட்டிப்பேச்சு said...

my blog page title:

'கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?'

Unknown said...

என் கவுன்ட்டர் என்ன மாதிரியான சூழ்நிலையில் நடத்தப்பட்டது என்று கமிஷ்னர் விளக்கியுள்ளார் .ஆனால் குற்றவாளியின் கைகள் ஏன் விலங்கிடபடவில்லை என்று கூறவில்லை.ஒருவேளை விலங்கிட்டு இரு ந்தால் இந்த கொலை தவிர்க்க பட்டிருக்கலாம் .இந்த செயலுக்கு போலிசை பாராட்டுவது தப்பு .அவர்களுக்கு என்ன ஆணையிடப்பட்டதோ அதை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள் அவ்வளவே . அவர்கள் முதலாளித்துவத்தின் கூலிபடைகள் அதிகாரவர்கத்தின் வேலைக்கார்கள்.
இதல்லாம் அந்த பிஞ்சுகளை நினைத்துபார்க்கும் வரைதான், அவர்களுக்காக இந்த கொலை சரியே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Encounter thevaithaan

மங்குனி அமைச்சர் said...

///shiva said...

................
நான் ஒரு முன்னால் சிறைவாசி. சாத்தான் வேதம் ஊதுவதா என்று நினைக்க வேண்டாம்.////

தெல்லாம் ஒன்னும் இல்லை சார் , நீங்க தைரியமா எந்த கருத்து வேணுமின்னாலும் சொல்லலாம்.

./// இது போன்ற குற்றவாளிகளுக்கு திடீர் மரணம் ஒரு தண்டனை அல்ல. அதே சமயம் இவ்வளவு பரப்பான வழக்கில் போலிசார் அப்பாவியை போட்டுத்தள்ளவும் வாய்ப்பில்லை. மேலே சொன்ன வாதம் ஏற்றுகொள்ள கூடியதே.////
சரியாக சொன்னீர்கள் , நன்றி

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

நான் என்கவுண்டருக்கு எதிரானவன்... நாட்டில் நீதி அமைப்புகள் மூலம் மட்டுமே தண்டனைகள் உறுதி செய்யப்படல் வேண்டும்..///

எல்லோருக்கு அதுதான் சார் ஆசை , ஆனால் முடியலையே ????

மங்குனி அமைச்சர் said...

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

boss namakku kavundar melayo en koaundar melayo entha kovamum illa summa cinema police rangekku semaya pannirukkanga////

இல்லை இது பிளான் பண்ணி பண்றதுதான்.

மங்குனி அமைச்சர் said...

vinu said...

still my stands remains; and will ever my stand is the same "no comments"///

நன்றி வினு , சாரி அடுத்த பதிவில் மீட் பண்ணலாம்

மங்குனி அமைச்சர் said...

dr suneel krishnan said...

இது உணர்ச்சி கொதிப்பில் நாம் எடுத்த முடிவு .பொதுவாக என்கவுண்டர் ஆபத்தானது .உங்களது குற்றவாளி இல்லாது போனால் என்பதன் வாதம் ஏற்க முடியாது .அந்த இல்லாத போன குற்ற்றவாளி நீங்களோ நானாகவோ இருந்தால் நாம் இப்படி யோசிப்போமா ? அதை தியாகம் என்று சொல்லுவோமா ?////

உண்மைய சொல்லனுமின்னா அந்த பதிலோட கடைசில நானானாக இருந்தாலும் சரின்னு பிராக்கட்ல எழுதினேன். அப்புறம் எல்லாம் ஓவர் அக்சன் பண்ணுறன்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு தான் அதை எடுத்துவிட்டேன். இப்பொழுது சொல்டிறேன் = அந்த முடிவு எனக்காக இருந்தாலும் சரி சார்

///ஆனால் பொதுவாக என்கவுண்டர் அப்படி குற்றம் ஊர்ஜித படுதமால் நடத்த மாட்டார்கள் , பொதுவாக எனக்கு என்கவுண்டர் மேல் இத்தகைய பார்வைகள் இருந்தாலும் நேற்றைய சம்பவம் எனக்கு நிம்மதியை அளித்தது என்பதும் உண்மை .இது சரியா தவறா என்று புரியவில்லை////

கோவையில் அந்த குழந்தைகளின் சாவு ஊவலத்திர்க்கு எவ்வளவு மக்கள் கூட்டம் வந்தது தெரியுமா சார் ? எல்லோருக்கும் இப்ப பெரிய நிம்மதி , அனைவரும் அவைகள் வீட்டில் துக்கம் நடந்ததுபோல் அவ்வளவு கவலை பட்டார்கள்

கெட்ட கோபக்காரன் said...

நல்ல வேளை இந்த பதிவு எழுதுற பயலுவ கையில் எல்லாம் பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. அஞ்சு நிமிஷ பிரபலத்துக்கு ஆசைப்படு அவன் அவன் ரெளடிகள் உயிர்க்கு அவ்வளவு வக்காலத்து வாங்குறானுவ !! எதோ நீதிப் படியாம் எலே வெளங்காதவனுகல என்னைக்கு யாருக்குடா நீதி கிடைச்சிருக்கு இங்கே !! 3 வயசுக்கு வந்த பெண்களை உயிரோடு கொளுத்தினவனுக தூக்கு தண்டனை க்யூவில் குந்திக்கினுகிரானுவ.. அபசல்குரு விதி முடிஞ்சி சாவற வரைக்கும் அந்த பய புள்ளைகளுக்கு கவலை இல்ல.

சட்ட சட்ட படின்னு பேசுற நல்லவனுகளுக்கு எல்லாம் பெரிசா சாபம் எதுவும் கொடுக்கலை ஆனா அவனுக பைக் மாசத்துக்கு ஒரு தடவை தொலையனும், மினிமம் டேமேஜோட திரும்பக் கிடைக்கனும். அந்தக் குற்றவாளி இவனுக கண்ணு முன்னாடியே தண்டனை இல்லாம கூல வெளிய திரியனும்.

பர்சை அடிச்சிக்கிட்டு போனவனுகளை இவனுகளை கையும் களவுமா பிடிச்சுக்குடுத்தாக் கூட ஆதாரமே இல்லைன்னு அவனுகளை விட்டுறனும்
அப்ப தெரியும் இவனுகளுக்கு வலின்னா என்னான்னு.

மங்குனி அமைச்சர் said...

vasan said...

நீதிம‌ன்ற‌ காவலிருந்து, காவ‌ல்துறைக்கு விசார‌ண‌க்கு கூட்டிச் செல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் ம‌ட்டும்
என்கொளண்ட‌ரில் த‌லையில் சுட‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுகிறான்.
சாத‌ர‌ண ம‌க்க‌ளின் அடிப்ப‌டை ச‌ந்தேக‌ங்க‌ள்:
1, கைதிக்கு, துப்பாக்கியை கையால‌த் தெரியுமா? (சேஃப்டி லாக் / அதிகாரியின் ஹோல்ட‌ரிலிருந்து திருடுத‌ல்)
2, வ‌ழ‌க்க‌மாய் பின் இருக்கையில் இல்லாம‌ல் ஜீப்பின் முன் சீட்டில் கைதியை
அழைத்துச் சென்ற‌‌தாய் போலிஸ் சொல்வ‌து.
3, குற்ற‌ம் நடந்த‌ பொள்ளாச்சிக்கு போக‌ம‌ல் வேறு திக்கில் சென்ற‌து.
4, இரு குற்ற‌வாளிக‌ளில் ஒருவன் ம‌ட்டும் த‌னியாக‌ பிரிக்க‌ப்ப‌ட்ட‌து.
5, டிரைவ‌ர் த‌லையில் துப்பாக்கியை வைத்து மிர‌ட்டிய‌ கைதியின் துப்பாக்கி
அவ‌ரை சுடாது, ம‌ற்ற‌ இருவ‌ரின் கையிலும், வ‌யிற்றுலும் ச‌ரியாக‌ச் சுட்ட‌து.
////

என்னங்க சார் சின்னப்புள்ள மாதிரி கேள்விகேட்டுக்கிட்டு இருக்கீங்க . இது ஒரு என்கவுண்டர் இதுல லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது சார் .

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

my blog page title:

'கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?'///

thank you sir

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

என் கவுன்ட்டர் என்ன மாதிரியான சூழ்நிலையில் நடத்தப்பட்டது என்று கமிஷ்னர் விளக்கியுள்ளார் .ஆனால் குற்றவாளியின் கைகள் ஏன் விலங்கிடபடவில்லை என்று கூறவில்லை.ஒருவேளை விலங்கிட்டு இரு ந்தால் இந்த கொலை தவிர்க்க பட்டிருக்கலாம் .இந்த செயலுக்கு போலிசை பாராட்டுவது தப்பு .அவர்களுக்கு என்ன ஆணையிடப்பட்டதோ அதை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள் அவ்வளவே . அவர்கள் முதலாளித்துவத்தின் கூலிபடைகள் அதிகாரவர்கத்தின் வேலைக்கார்கள்.
இதல்லாம் அந்த பிஞ்சுகளை நினைத்துபார்க்கும் வரைதான், அவர்களுக்காக இந்த கொலை சரியே///

thank you manivannan sir

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Encounter thevaithaan///

thank you ramesh

மங்குனி அமைச்சர் said...

கெட்ட கோபக்காரன் said...

நல்ல வேளை இந்த பதிவு எழுதுற பயலுவ கையில் எல்லாம் பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. அஞ்சு நிமிஷ பிரபலத்துக்கு ஆசைப்படு அவன் அவன் ரெளடிகள் உயிர்க்கு அவ்வளவு வக்காலத்து வாங்குறானுவ !! எதோ நீதிப் படியாம் எலே வெளங்காதவனுகல என்னைக்கு யாருக்குடா நீதி கிடைச்சிருக்கு இங்கே !! 3 வயசுக்கு வந்த பெண்களை உயிரோடு கொளுத்தினவனுக தூக்கு தண்டனை க்யூவில் குந்திக்கினுகிரானுவ.. அபசல்குரு விதி முடிஞ்சி சாவற வரைக்கும் அந்த பய புள்ளைகளுக்கு கவலை இல்ல.

சட்ட சட்ட படின்னு பேசுற நல்லவனுகளுக்கு எல்லாம் பெரிசா சாபம் எதுவும் கொடுக்கலை ஆனா அவனுக பைக் மாசத்துக்கு ஒரு தடவை தொலையனும், மினிமம் டேமேஜோட திரும்பக் கிடைக்கனும். அந்தக் குற்றவாளி இவனுக கண்ணு முன்னாடியே தண்டனை இல்லாம கூல வெளிய திரியனும்.

பர்சை அடிச்சிக்கிட்டு போனவனுகளை இவனுகளை கையும் களவுமா பிடிச்சுக்குடுத்தாக் கூட ஆதாரமே இல்லைன்னு அவனுகளை விட்டுறனும்
அப்ப தெரியும் இவனுகளுக்கு வலின்னா என்னான்னு.///

ஹா,ஹா,ஹா,,,,,,விடுங்க சார் பாவம்

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி,உங்கள் பதிவில் வழக்கமாக நையாண்டி இருக்கும்,இதில் சமூக அக்கறையும்,விழிப்புணர்வும் உள்ளது,வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி,உங்கள் பதிவில் வழக்கமாக நையாண்டி இருக்கும்,இதில் சமூக அக்கறையும்,விழிப்புணர்வும் உள்ளது,வாழ்த்துக்கள்
////

ரொம்ப சீரியஸ் ஆனா டாபிக் செந்தில் ,...அதான்...

Ramesh said...

//இருந்துவிட்டால் ? - கோர்ட்டுக்கு போயிருந்தால் நிச்சையமாக தப்பிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது .//

ஆம்.. தப்பியிருக்க வாய்ப்பு அல்ல.. நிச்சயம் தப்பியிருப்பான்..

//இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான்.//

ஏற்றுக்கொள்ளும்படி இல்லை..

//இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .
//

எப்படிங்க கிடைக்கும்...

தண்டனைகளே முதல்ல கடுமையாக்கப்படனும், துரிதமாக்கப்படனும்.. இல்லன்னா திரைமறைவுல இதெல்லாம்.. நிறைய நடந்துக்கிட்டுதான் இருக்கும்.. நாமலும் வெளிய தெரியற.. மக்கள் ஆதரவு நிறைய இருக்கற விசயத்துக்கு மட்டும் கொந்தளிச்சுட்டு போயிடுவோம்.. அப்புறம் அதை மறந்திடுவோம்..
போனவாரம்.. நோக்கியால அனியாயமா ஒரு பொண்ண கொண்ணாங்க.. அந்தப் பொண்ணோட இறுதி ஊர்வலத்துல கூட யாரும் இல்லை.. நம்மள்ல (என்னையும் சேர்த்துதான்) எத்தனை பேர் இனி நோக்கியா மொபைலே யூஸ் பண்ண மாட்டேன் அப்படின்னு முடிவு எடுப்போம்.. இல்லை.. அனியாயயமா அந்தப் பொண்ணு கொடூரமா சாவக் காரணமாக இருந்த அந்த நோக்கியா கம்பெனி மேனேஜர கைது பண்ணி நடவடிக்கை எடுக்க போராடத் தயாரா இருக்கோம்.. உயிருன்னா எல்லாரோட உயிரும் உயிருதாங்க.. அந்த மேட்டரே முதல்ல மீடியால சரியா சொல்லப்படவே இல்லை.. "ரோபா தாக்கி பெண் பலின்னு" அதையும் எந்திரன் மேட்டர்ல ஒன்னாக்கி விட்டுட்டாங்க...

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் ரமேஷ் said...

தண்டனைகளே முதல்ல கடுமையாக்கப்படனும், துரிதமாக்கப்படனும்.. ///

எல்லாத்துக்கும் இது தான் சார் சிறந்த தீர்வு

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோரும் தீர்ப்பு சொல்லி முடிச்சாச்ச நன் சொம்ப தூக்கி உள்ளே வைக்கலாமா ....மங்குனி

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோரும் தீர்ப்பு சொல்லி முடிச்சாச்ச நன் சொம்ப தூக்கி உள்ளே வைக்கலாமா ....மங்குனி
///

இருக்கட்டும் நாளைக்கு வச்சுக்கலாம்

Gayathri said...

unga karuthu sarithan..kadumaya thandikkanum odane sagadikka kodathu..valiya unara vaikanum..

வெங்கட் said...

@ தமிழ்காதலன்.,

// மிக கொடிய குற்றங்கள் தவிர மற்ற
குற்றவாளிகளை முட்டிக்கு கீழே சுடத்தான்
காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
நெற்றிப் பொட்டில் சுடுவதற்கு அல்ல. //

ஓ.. அப்ப அவன் பண்ணினது கொடிய
குற்றம் இல்லையா..? அப்ப எது தான் சார்
கொடிய குற்றம்..?!!

// உங்கள் கருத்துப் படி பார்த்தால்...
சேலம் சுரேஷ் ஏன் இன்னும் கொல்லப் பட வில்லை? //

சேலம் சுரேஷை என்கவுண்டர்ல
கொன்னுட்டா மட்டும் சும்மா
விட்டுடுவீங்களா..? இதே மாதிரி
ஒரு Comment போட்டு கலக்கி
இருக்க மாட்டீங்க..?!!

// எல்லா போலிசும் நல்லப் போலிஸ் இல்லை
என்பதை மறவாதே. //

ஒரு குற்றவாளியை ( மோகன்ராஜ் )
கொன்னாங்க..அது தப்புங்கறீங்க..

ஒரு குற்றவாளியை ( சுரேஷ் ) கொல்லலை..
அதையும் தப்புங்கறீங்க..

பாவம்பா இந்த போலீஸ்..

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

unga karuthu sarithan..kadumaya thandikkanum odane sagadikka kodathu..valiya unara vaikanum..///

thanks Gayathri

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

@ தமிழ்காதலன்.,

பாவம்பா இந்த போலீஸ்..///

எது செஞ்சாலும் கேள்வி கேட்பார்கள் , அதுவும் அவர்கள் உரிமைதான்

raji said...

நான் என்கவுன்டரை ஆதரிக்கவிலலை ஏனெனில், சில சமயம் அப்பாவி மக்களும் அந்த நேரத்தில் கொல்லப்படுகிறார்கள்... ஆனால், காமத்துக்காக இரு உயிர்களை பலியிட்டவனுக்கு இதைவிட கொடூரமான தண்டனை கிடைத்து இருக்க வேண்டும் ., அப்போது இன்னும் மகிழ்ந்திருப்பேன். சமீபத்தில்தான் ஒரு குறுந்தகட்டின் மூலம் சிறுமி பட்ட இன்னலைக் கண்டு(இதை எனது ப்ளாக்கில் "பார்த்ததில் பாதித்ததென"ஒரு பதிவாகவே இட்டுள்ளேன். முடிந்தால் தயவுசெய்து படிக்கவும். )..., அதிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு சிறுமியின்மீது பாலியல் வன்கொடுமை. இதுப் போன்ற நிகழ்ச்சிகள் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது.

எனது ப்ளாக்:
rajiyinkanavugal.blogspot.com

சாமக்கோடங்கி said...

//dr suneel krishnan said...

இது உணர்ச்சி கொதிப்பில் நாம் எடுத்த முடிவு .பொதுவாக என்கவுண்டர் ஆபத்தானது .உங்களது குற்றவாளி இல்லாது போனால் என்பதன் வாதம் ஏற்க முடியாது .அந்த இல்லாத போன குற்ற்றவாளி நீங்களோ நானாகவோ இருந்தால் நாம் இப்படி யோசிப்போமா ? அதை தியாகம் என்று சொல்லுவோமா ? ஆனால் பொதுவாக என்கவுண்டர் அப்படி குற்றம் ஊர்ஜித படுதமால் நடத்த மாட்டார்கள் , பொதுவாக எனக்கு என்கவுண்டர் மேல் இத்தகைய பார்வைகள் இருந்தாலும் நேற்றைய சம்பவம் எனக்கு நிம்மதியை அளித்தது என்பதும் உண்மை .இது சரியா தவறா என்று புரியவில்லை
//

இது என்னுடைய கருத்தோடு ஒத்துப் போகிறது..

ஆனால்....

//நல்ல வேளை இந்த பதிவு எழுதுற பயலுவ கையில் எல்லாம் பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. அஞ்சு நிமிஷ பிரபலத்துக்கு ஆசைப்படு அவன் அவன் ரெளடிகள் உயிர்க்கு அவ்வளவு வக்காலத்து வாங்குறானுவ !! எதோ நீதிப் படியாம் எலே வெளங்காதவனுகல என்னைக்கு யாருக்குடா நீதி கிடைச்சிருக்கு இங்கே !! 3 வயசுக்கு வந்த பெண்களை உயிரோடு கொளுத்தினவனுக தூக்கு தண்டனை க்யூவில் குந்திக்கினுகிரானுவ.. அபசல்குரு விதி முடிஞ்சி சாவற வரைக்கும் அந்த பய புள்ளைகளுக்கு கவலை இல்ல.

சட்ட சட்ட படின்னு பேசுற நல்லவனுகளுக்கு எல்லாம் பெரிசா சாபம் எதுவும் கொடுக்கலை ஆனா அவனுக பைக் மாசத்துக்கு ஒரு தடவை தொலையனும், மினிமம் டேமேஜோட திரும்பக் கிடைக்கனும். அந்தக் குற்றவாளி இவனுக கண்ணு முன்னாடியே தண்டனை இல்லாம கூல வெளிய திரியனும்.

பர்சை அடிச்சிக்கிட்டு போனவனுகளை இவனுகளை கையும் களவுமா பிடிச்சுக்குடுத்தாக் கூட ஆதாரமே இல்லைன்னு அவனுகளை விட்டுறனும்
அப்ப தெரியும் இவனுகளுக்கு வலின்னா என்னான்னு.//

இதுவும் சரியான சரியே.. ஒரு சராசரி மனிதனின் மனக்குமுறல்..

என்கவுண்டர் என்பது சரி என பல சமயங்களில் கருத வேண்டி இருக்கிறது. ஆனால் அது சட்டப்படி தவறு என்று இருக்கிறது..ஏன் இதற்காக ஒரு சட்ட வரைவைக் கொண்டு வரக்கூடாது என்று சட்டவியலாளர்கள் யோசிக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளைப் பயமுறுத்தவும் தண்டிக்கவும் ஏற்றவாறு சட்டம் இலகுவாக மாற்றப் பட வேண்டும்..

வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்த அந்த சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..

உண்மையான குற்றவாளி அவனாகத் தான் இருப்பான் என்கிற பட்சத்தில் இந்த அதிரடி முடிவு சரியானதே..

சைலேந்திர பாபு தன்னுடைய வரவை அனைத்து மொள்ளமாரிகளுக்கும் உணர்த்தியுள்ளார்..

எது எப்படியோ, இனி கோயம்புத்தூர் ரவுடிகள் கொஞ்ச காலம் அடக்கி வாசிப்பார்கள்.. அதுதான் இப்போது தேவை..

Anisha Yunus said...

அமைச்சரே,

நல்ல கருத்துக்கள்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா உண்மையான குற்றவாளிய புடிச்சு என்கவுண்டர் பண்ணியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். இந்த மாதிரி ஆளுங்களை காப்பாத்தணும்னு நான் சொல்லலை. ஆனா சட்டங்களை திருத்தி அதன் மூலம் மக்களை திருத்தறதை விட்டுட்டு என்கவுண்டர்கள் மூலம் மக்களுக்கு பயம் வர வெக்கிறது சீப்பான வேலை. அப்படியே பயம் வருதுன்னு வெச்சுக்கங்களேன், சாதாரணமா முத த்டவை செய்யப்போறவன், செஞ்சவந்தேன் பயப்படுவான். தொழில்முறையா இருக்கறவனுங்களுக்கு எப்படியும் நியூஸ் கிடச்சிடும்.அவன் சரணடஞ்சாலும் அவனை போட்டு தள்ளிருவாங்க. ஆக மொத்தம் இது மாதிரி பல பிரச்சினைகளுக்கு பின்னாடி இருக்கற பண முதலைகளை, அரசியல்வாதிகளை பயமுறுத்த என்கவுண்டர்கள் பத்தாது.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஎத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .ஃஃஃஃஃஃ
ஒரு ஆக்கத்தின் முடிவுப் பகுதி தான் முக்கியமானதாக கருதப்படும்.. அது தங்களுக்க கைவந்த கலை போலல்லவா இருக்கிறது...

அன்பரசன் said...

//இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .//

நல்லாயிருக்கு அமைச்சரே

தினேஷ்குமார் said...

அமைச்சரே முதல் முறை வருகிறேன் (சரக்கடிச்சிட்டு எப்பயாவது வந்திருப்பேன் தெரியல உடேன்பா)
உங்கள் வரிகள் நெஞ்சை கீறியது உண்மைத் தமிழனின் உணர்ச்சி பூர்வமான ஆதங்கம்...........

ஆமினா said...

தப்பு செய்தவனானால் கண்டிப்பாக அதற்கு வருத்தப்பட தேவையே இல்லை. சில நேரங்களில் என் கவுண்டர் என்ற பேரில் அப்பாவி மக்கள் கொள்ளப்படுவது தான் வேதனையளிக்கிறது!

நல்லபதிவு

மங்குனி அமைச்சர் said...

raji said...

நான் என்கவுன்டரை ஆதரிக்கவிலலை ஏனெனில், சில சமயம் அப்பாவி மக்களும் அந்த நேரத்தில் கொல்லப்படுகிறார்கள்... ஆனால், காமத்துக்காக இரு உயிர்களை பலியிட்டவனுக்கு இதைவிட கொடூரமான தண்டனை கிடைத்து இருக்க வேண்டும் ., அப்போது இன்னும் மகிழ்ந்திருப்பேன். சமீபத்தில்தான் ஒரு குறுந்தகட்டின் மூலம் சிறுமி பட்ட இன்னலைக் கண்டு(இதை எனது ப்ளாக்கில் "பார்த்ததில் பாதித்ததென"ஒரு பதிவாகவே இட்டுள்ளேன். முடிந்தால் தயவுசெய்து படிக்கவும். )..., அதிலிருந்து மீள்வதற்குள் மற்றொரு சிறுமியின்மீது பாலியல் வன்கொடுமை. இதுப் போன்ற நிகழ்ச்சிகள் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது.

எனது ப்ளாக்:
rajiyinkanavugal.blogspot.com
////

thank you raji

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//dr suneel krishnan said...

எது எப்படியோ, இனி கோயம்புத்தூர் ரவுடிகள் கொஞ்ச காலம் அடக்கி வாசிப்பார்கள்.. அதுதான் இப்போது தேவை..///

மக்களும் கொஞ்ச நாள் நிம்மதியா இருப்பாங்க

மங்குனி அமைச்சர் said...

அன்னு said...

அமைச்சரே,

நல்ல கருத்துக்கள்தான் சொல்லியிருக்கீங்க. ஆனா உண்மையான குற்றவாளிய புடிச்சு என்கவுண்டர் பண்ணியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். இந்த மாதிரி ஆளுங்களை காப்பாத்தணும்னு நான் சொல்லலை. ஆனா சட்டங்களை திருத்தி அதன் மூலம் மக்களை திருத்தறதை விட்டுட்டு என்கவுண்டர்கள் மூலம் மக்களுக்கு பயம் வர வெக்கிறது சீப்பான வேலை. அப்படியே பயம் வருதுன்னு வெச்சுக்கங்களேன், சாதாரணமா முத த்டவை செய்யப்போறவன், செஞ்சவந்தேன் பயப்படுவான். தொழில்முறையா இருக்கறவனுங்களுக்கு எப்படியும் நியூஸ் கிடச்சிடும்.அவன் சரணடஞ்சாலும் அவனை போட்டு தள்ளிருவாங்க. ஆக மொத்தம் இது மாதிரி பல பிரச்சினைகளுக்கு பின்னாடி இருக்கற பண முதலைகளை, அரசியல்வாதிகளை பயமுறுத்த என்கவுண்டர்கள் பத்தாது.///

thank you annu

மங்குனி அமைச்சர் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஎத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .ஃஃஃஃஃஃ
ஒரு ஆக்கத்தின் முடிவுப் பகுதி தான் முக்கியமானதாக கருதப்படும்.. அது தங்களுக்க கைவந்த கலை போலல்லவா இருக்கிறது...///

ரொம்ப நன்றி சுதா

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

//இல்லாவிட்டால் ? - எத்தனை ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தன உயிரை இழந்திருக்கிறார்கள் , எத்தனை அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் . இந்த மாதிரி கொடூர குற்றங்கள் இனி நடக்க விடாமல் தடுப்பதற்கு தன் உயிரை விட்ட மிகப்பெரிய தியாகிஆவான் .இந்த தவறை செய்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் .//

நல்லாயிருக்கு அமைச்சரே////

ரொம்ப நன்றி அன்பரசன்

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

அமைச்சரே முதல் முறை வருகிறேன் (சரக்கடிச்சிட்டு எப்பயாவது வந்திருப்பேன் தெரியல உடேன்பா)
உங்கள் வரிகள் நெஞ்சை கீறியது உண்மைத் தமிழனின் உணர்ச்சி பூர்வமான ஆதங்கம்...........////

thank you dineshkumar

ஆனந்தி.. said...

மங்குனி சார்...இது நல்ல பதிவு...மதுரை ரிங் ரோடு பக்கம் போன வருஷம் ஒரு என்கவுன்டர் நடந்தது...பக்கா ப்ரீ ப்ளான் ..அந்த குரூப் பில் இருந்த ஒரு போலீஸ் எங்க பக்கத்து வீட்டு காரருக்கு சொந்தம்...அவரை கொல்ல வந்து மத்த போலீஸ் போட்டு தள்ளிய மாதிரி தான் நாடக ஒத்திகை...அப்படியே பண்ணிட்டாங்க...அந்த போலீஸ் அங்கிள் செமையா நடிச்சுட்டு இருந்தார் பெரிய ஆஸ்பத்திரியில்...போட்டு தள்ளின ரவுடி மதுரையில் கட்ட பஞ்சாயத்து பண்ற அரசியல் இன்ப்ளுயன்ஸ் ஆளு...போலீஸ் க்கு ஒத்துவராத ஆளுங்களும் என்கவுன்ட்டர் லிஸ்ட் இல் இருப்பாங்க...:))

மீடில் ஈஸ்ட் முனி said...

அது சரி மங்குனி எனக்கு ஒரு & சில & பல சந்தேகம் !! எல்லார் கருத்தும் படிக்க நல்லா தான் இருக்கு ... ஆனா மக்கள் ஒரு விசயத்த பொதுவா சிந்திக்க மாட்டிகிறீங்க .... இந்த மாதிரி சைக்கொ கொலைகள் எதனால நடக்குது ? அடிப்படை காரணம் என்ன ? அத எப்படி தடுக்கலாம் ? இந்த சமூகத்துக்கு அதுகுறிய நம்ம பங்கு என்ன ? ... இப்படி எல்லாம் நம்ம யோசிக்க ஆரம்பிச்சா நாடு தான் முன்னேறிடுமே ... அதனால யாருக்கு என்ன லாபம் ?

அவங்களோட பத்திரிகை தான் விக்குமா ? இல்ல குற்றம்..... போல நிகழ்ச்சி TRP Rating தான் எறுமா ? இல்ல நடிகராள பத்திரிகைக்கு பேட்டி தான் கொடுக்க முடியுமா ? நம்ம மக்களும் இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டு அடுத்த வேலை சோருக்கு சொம்பு தூக்க ஓடிடுரோம்....

கடவுலாம்.... அரசனாம்.... அன்னைக்கே கொல்லுறாங்கலாம் .... மண்ணாங்கட்டி ..... அடிப்படையான விசயத்த யோசிக்காமா மூணு உயிர் போச்சுணு எவனும் யோசிக்குறத்தில.....!!! நம்ம கொஞ்சம் சுயநலமா இல்லாம இருந்தாலே போதும் இந்த மாதிரி உயிர் சேதங்கல தடுக்கலாம்...!