எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, September 13, 2010

இனி சூரிய மண்டலத்தி ப.மு.க துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

எங்கள் ப.மு.க (யோவ் ப.மு.க ன்னா பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம் , அப்புறம் இந்த ஜாதி , மதம் ,ம@#று, மட்டைன்னு பேசுறவுங்க எல்லாம் அப்படிக்கா ஓடிப்போயிருங்க ) துணையில்லாமல் இனி யாரும் , மாநில, மத்திய அரசுகள் மட்டுமல்லாது செவ்வாய் , புதன் , வியாழன் , சனி கிரகங்களிலும், மொத்தத்தில் சூரிய, சந்திர மண்டலங்களில் ஆட்சி (யோவ் , ஆச்சி இல்லை ஆட்சி ) அமைக்க முடியாது என்று சமீபத்தில் தமிழ் நாட்டிற்கு சூறாவளி சுற்றுப் பயணம் சென்று வந்த ப.மு.க பொது செயலாளர் மாண்புமிகு , உயர்திரு மக்கள் தொண்டன், பாட்டிகளின் பாதுகாவலன், ஏழைகளின் இதைய தெய்வம் நமது பட்டாப்பட்டி அவர்கள் சிங்கப்பூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் .

மேலும் சிங்கபூர் பஸ் ஸ்டாண்டிற்கு நமது தானைத்தலைவன் , தன்மான சிங்கம், தரணி போற்றும் "பன்னிகுட்டி ராமசாமியின்" பெயர் வைக்கப்பட வேண்டும் இல்லையேல்
நமது "பனங்காட்டு நரி" சத்தியம் தியேட்டர் வாசலில் சாகும் வரை பிச்சை எடுப்பார் என்றும் கூறியுள்ளார் .

அதுமட்டுமில்லாமல் எங்கள் கொ.ப.சே. கீரிபுள்ளை புகழ் "பட்டிக்காட்டான் (பட்டணத்தில் ) ஜெய்" , அவர்களுக்கு டைபாயிடு வர காரணமாக இருந்த கயவர்களை கைது செய்யும் வரை எந்திரன் படம் பார்க்க மாட்டோம் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் .

நீங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு என்ன செய்வீர்கள் ? நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் ஏழைகளே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து ஏழைகளுக்கும் இலவச திருவோடு கொடுத்து கட்டாய பிச்சைகாரர்கள் ஆக்கிவிட்டால் அப்புறம் பிச்சைகாரர்கள் தான் இருப்பார்கள் , ஏழைகள் இருக்க மாட்டார்கள் .

சரி நாடு முன்னேற்றத்திக்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
எனது இரண்டு மச்சினர்களும் சும்மாதான் இருக்கிறார்கள் , அவர்களில் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும் அடுத்தவருக்கு மத்திய அமைசர் பதவில்யிலும் அமர்த்தி நாட்டு மக்களுக்காக மிக மிகக் கடுமையாக உழைக்க சொல்லபோகிறேன் .

உங்க கூட்டணி கட்சிகளுடான உடன் படிக்கை என்ன ?
அது ஒன்னும் இல்லை , ஒரு கட்சி தலைவர் மகனுக்கு ஒரு மத்திய அமைசர் பதவி குடுத்தால் போதும் , அப்புறம் அடுத்த கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சிக்குள் "நமக்கு பதிவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு பதவி கிடைக்க கூடாது" என்ற கொள்கை உடையவர்கள் எனவே அவர்கள் வெளியில் இருந்த ஆதரவு தருவார்கள் .

எதிர்கட்சியை எப்படி சமாளிப்பீர்கள் ?
அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க , கொடநாட்டுப்
பகுதியில் தூங்குபவர்களை தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள அதற்கென்று ஒரு அமைச்சரவை உருவாக்க ஆவன செய்யப்படும்.

கடைசியாக ஒரு கேள்வி , இந்த பதிவுலகத்தி ஒரே ரத்த பூமியா இருக்கே அதற்க்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?
இது சம்மந்தமாக மத்திய அரசுக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் எழுதி விட்டேன் , மீட்டும் எழுதுவேன். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சண்டையிட்டுகொள்ள சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பத்தூரில சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரே மைதானம் கட்டிக் கொடுக்கப்படும்.

108 comments:

உமர் | Umar said...

எப்பொழுதுமே குதிரை சவாரி செய்யும் எங்கள் பாங்கிரஸ் கட்சியை பற்றி இந்தப் பேட்டியில் ஒன்றும் கூறாததால், பேட்டி எடுத்த நிருபரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Unknown said...

காங்கிரஸ் சவாரி செய்ய ப.மு.க முதுகு தயாராய் இருப்பதால் பட்டா அதைப் பத்தி எதுவும் சொல்லலையா?

மங்குனி அமைச்சர் said...

அப்புறம் அடுத்த கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சிக்குள் "நமக்கு பதிவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு பதவி கிடைக்க கூடாது" என்ற கொள்கை உடையவர்கள் எனவே அவர்கள் வெளியில் இருந்த ஆதரவு தருவார்கள் ////

இது தான் தங்கள் பாங்கிராஸ் கட்சி கொள்கை கும்மி சார் , பட்டா தெளிவா சொல்லி இருக்காரே

உமர் | Umar said...

//இது தான் தங்கள் பாங்கிராஸ் கட்சி கொள்கை //

ச்சே! என்ன பண்ணாலும் அரசியல் மட்டுமே நமக்கு புரியவே மாட்டேங்குதுப்பா! உடனடியா பமுக.வில செயல் தலைவர் பதவி வாங்கி அரசியல் கத்துக்கணும்பா!

Chitra said...

எதிர்கட்சியை எப்படி சமாளிப்பீர்கள் ?
அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க , கொடநாட்டுப் படுதியில் தூங்குபவர்களை தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள அதற்கென்று ஒரு அமைச்சரவை உருவாக்க ஆவன செய்யப்படும்.

...... ஹா,ஹா,ஹா,ஹா..... நல்ல யோசனை!

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

உடனடியா பமுக.வில செயல் தலைவர் பதவி வாங்கி அரசியல் கத்துக்கணும்பா! ////

தாங்களது இந்த முடிவு எங்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது , கண்டிப்பா தங்களுக்கு அந்த பதவி வழங்கப்படும்

settaikkaran said...

மங்குனி! பின்னிட்டீங்க! ரெண்டு நாளா இஞ்சி தின்ன கூனா மாதிரி இருந்தேன். படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சதுலே மனசு லேசாயிடுச்சு! சூப்பர்! :-)))

settaikkaran said...

மங்குனி, தமிழ்மணத்துலே ஓட்டுப் போட முடியலே! :-((

உமர் | Umar said...

//தாங்களது இந்த முடிவு எங்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது , கண்டிப்பா தங்களுக்கு அந்த பதவி வழங்கப்படும் //

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். அது என்ன சின்னப்புள்ளைத்தனமா உடனே பதவி கொடுக்குறது? நாங்க ஊர் ஊரா போயி பேட்டியெல்லாம் கொடுக்கணும். டிவில எல்லாம் செயல் தலைவர் நியமிக்கப்படுவாரா அப்படின்னு பேசணும். அதுக்கு அப்புறம்தான் நியமனம்ல்லாம். (ஐயோ! என்னை விடுங்கப்பா)

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//தாங்களது இந்த முடிவு எங்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது , கண்டிப்பா தங்களுக்கு அந்த பதவி வழங்கப்படும் //

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். அது என்ன சின்னப்புள்ளைத்தனமா உடனே பதவி கொடுக்குறது? நாங்க ஊர் ஊரா போயி பேட்டியெல்லாம் கொடுக்கணும். டிவில எல்லாம் செயல் தலைவர் நியமிக்கப்படுவாரா அப்படின்னு பேசணும். அதுக்கு அப்புறம்தான் நியமனம்ல்லாம். (ஐயோ! என்னை விடுங்கப்பா) ///

இப்பை நல்லவுங்க எல்லாம் ஒதுங்கிப்போனா நாடு எப்படி முன்னேறும் , மற்றும் கட்டபஞ்சாயத்து எப்படி அழியும் (மங்கு எப்படியாவது கும்மிய உள்ள இழுத்துபோட்ரு )

மங்குனி அமைச்சர் said...

Blogger சேட்டைக்காரன் said...

மங்குனி, தமிழ்மணத்துலே ஓட்டுப் போட முடியலே! :-((///

என்னன்னு புரியல சேட்ட , இணைத்து விட்டேன் ஆனால் ஒட்டு பட்டையை காணோம் , இன்னும் தமிழ் மனத்திலும் பப்ளிஸ் ஆகல

மங்குனி அமைச்சர் said...

இப்ப தமிழ் மனம் ஒட்டு பட்டை வேலை செய்கிறது சேட்ட

உமர் | Umar said...

//இப்பை நல்லவுங்க எல்லாம் ஒதுங்கிப்போனா நாடு எப்படி முன்னேறும் , மற்றும் கட்டபஞ்சாயத்து எப்படி அழியும்//

ஐயா! பெரியோரே! தாய்மாரே! நான் தமிழ்மணத்தில் வாக்களித்து என் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன். இதற்கு மேலும் என் மீது அரசியலை திணிக்க எதிர்க்கட்சிகள் செய்யும் சதியை எதிர்த்து போராட அணிதிரளுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

/ இதற்கு மேலும் என் மீது அரசியலை திணிக்க எதிர்க்கட்சிகள் செய்யும் சதியை எதிர்த்து போராட அணிதிரளுங்கள். ////

ஆமா கும்மி எதிர்கட்சி சதி செய்யுது , அதுக்குதான் சொல்லறேன் எப்பவுமே ஆளுங் கட்சிகூட கூட்டணி வக்கிர எங்ககூட சேந்திடுன்னு

உமர் | Umar said...

//அதுக்குதான் சொல்லறேன் எப்பவுமே ஆளுங் கட்சிகூட கூட்டணி வக்கிர எங்ககூட சேந்திடுன்னு //

இவ்வளவு வற்புறுத்திக் கேட்பதால், பமுகவில் போஸ்டர் ஒட்டும் கடைநிலைத் தொண்டனாக சேர நான் விருப்பம் தெரிவிக்கின்றேன். எங்கெல்லாம் பமுக கூட்டம் நடந்தாலும், விசிலடிக்க இந்த கும்மி வருவான் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//அதுக்குதான் சொல்லறேன் எப்பவுமே ஆளுங் கட்சிகூட கூட்டணி வக்கிர எங்ககூட சேந்திடுன்னு //

இவ்வளவு வற்புறுத்திக் கேட்பதால், பமுகவில் போஸ்டர் ஒட்டும் கடைநிலைத் தொண்டனாக சேர நான் விருப்பம் தெரிவிக்கின்றேன். எங்கெல்லாம் பமுக கூட்டம் நடந்தாலும், விசிலடிக்க இந்த கும்மி வருவான் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். ////

நீங்க உங்கள் கடமையை செய்யும் போது கட்சியும் அதன் கடைமையை செய்யும் , (பிரியாணி , கு@#@ர்.... எல்லாம் சப்ளை செய்யப் படும் , உங்களது அக்கவுன்ட் நம்பர் ப்ளீஸ் )

செல்வா said...

///"பனங்காட்டு நரி" சத்தியம் தியேட்டர் வாசலில் சாகும் வரை பிச்சை எடுப்பார் என்றும் கூறியுள்ளார் .///

உண்மையான தொண்டர் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி, பஸ் ஸ்டாண்டுக்கு என் பேரு, பதவிய் மச்சினனுக்கா? ஒழுங்கா பேசின படி எனக்கும் ஒரு பதவி வந்துடனும், இல்லேன்னா கடிச்சு வெச்சுடுவேன்!

உமர் | Umar said...

//உங்களது அக்கவுன்ட் நம்பர் ப்ளீஸ் ) //

ஐ.த.ல.கா.ஐ வங்கி, 111 11 111 11 111

Anonymous said...

உங்களுக்கு வோட்டு போட்டாச்சு
ஆனா நீங்க சொன்ன நாதாரிங்களுக்கு ( ப.மு க ) போட மாட்டேன் ;)

செல்வா said...

//சண்டையிட்டுகொள்ள சென்னையை அடுத்த ஸ்ரிபெரம்பதூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரே மைதானம் கட்டிக் கொடுக்கப்படும். ///

நல்லவேளை , நான் ஈரோடுல இருக்கறதால தப்பிச்சேன் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுவுமில்லாம், சிங்கப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு மட்டும் எம்பேரா? அப்பிடியே துபாய் பஸ் ஸ்டாண்டு, லண்டன், பாரீஸ், நியூயார்க் பஸ் ஸ்டாண்டுகளுக்கு என்பேர வெக்கனும், சென்னைக்கு பன்னிக்குட்டி நகர்னு பேர மாத்தனும், இதெல்லாம் நடக்கலேன்னா என்கூட இருக்க 40 எம் எல் ஏக்கள கூட்டிக்கிட்டு அந்தப் பக்கமா போயிடுவேன், ஆமா!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் நடக்கலேன்னா என்கூட இருக்க 40 எம் எல் ஏக்கள கூட்டிக்கிட்டு அந்தப் பக்கமா போயிடுவேன், ஆமா! ////

எந்த பக்கம் ராசா போவிங்க ? போற வழியில பாத்து போங்க கேப்டன் லத்தியோட நிக்க போறாரு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

///"பனங்காட்டு நரி" சத்தியம் தியேட்டர் வாசலில் சாகும் வரை பிச்சை எடுப்பார் என்றும் கூறியுள்ளார் .///

உண்மையான தொண்டர் ..!!///

உண்மையான தொண்டன் சிக்குனா விட்ருவமா ?????

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//உங்களது அக்கவுன்ட் நம்பர் ப்ளீஸ் ) //

ஐ.த.ல.கா.ஐ வங்கி, 111 11 111 11 111///

ஓகே கும்மி , உங்க அக்கவுன்ட்டுல ருபீஸ் 00000000 /- கிரடிட் செய்யப் பட்டது

என்னது நானு யாரா? said...

நல்லா காமெடி பண்றீங்க அமைச்சரே!

ஸ்ரீபெரும்பத்தூரில 300 ஏக்கரில மைதானம் கட்டி கொடுக்கிறேன்னு சொன்னீங்க பாருங்க! அது தான் Super Touch!

சரி அமைச்சரே! உங்க சேனை பரிவாரங்களோட நம்ப கடைபக்கம் வந்து போங்க!

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

உங்களுக்கு வோட்டு போட்டாச்சு
ஆனா நீங்க சொன்ன நாதாரிங்களுக்கு ( ப.மு க ) போட மாட்டேன் ;)/////

என்னங்க நம்மளையும் அவுங்களையும் பிரிச்சு பேசுறிங்க

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//சண்டையிட்டுகொள்ள சென்னையை அடுத்த ஸ்ரிபெரம்பதூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரே மைதானம் கட்டிக் கொடுக்கப்படும். ///

நல்லவேளை , நான் ஈரோடுல இருக்கறதால தப்பிச்சேன் ..!!////

அங்க இருந்து ஈரோட்டுக்கு ஒரு பிளை ஓவர் கட்டிடலாமா ?

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

நல்லா காமெடி பண்றீங்க அமைச்சரே!

ஸ்ரீபெரும்பத்தூரில 300 ஏக்கரில மைதானம் கட்டி கொடுக்கிறேன்னு சொன்னீங்க பாருங்க! அது தான் Super Touch!

சரி அமைச்சரே! உங்க சேனை பரிவாரங்களோட நம்ப கடைபக்கம் வந்து போங்க!////

நன்றி சார்

என்னது நானு யாரா? said...

//சிங்கப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு மட்டும் எம்பேரா? அப்பிடியே துபாய் பஸ் ஸ்டாண்டு, லண்டன், பாரீஸ், நியூயார்க் பஸ் ஸ்டாண்டுகளுக்கு என்பேர வெக்கனும், சென்னைக்கு பன்னிக்குட்டி நகர்னு பேர மாத்தனும், இதெல்லாம் நடக்கலேன்னா என்கூட இருக்க 40 எம் எல் ஏக்கள கூட்டிக்கிட்டு அந்தப் பக்கமா போயிடுவேன், ஆமா!//

அந்த நிஜ அரசியல் கட்சிகளை தோக்கடிக்கிற மாதிரி இல்ல அறிக்கை விடறீங்க!

கோபிச்சிகாதீங்க பன்னிகுட்டி சாரே! உலகத்தில இருக்கிற எல்லா பஸ் ஸ்டாண்டுக்கும் உங்க பேரை வைக்க சொல்றேன் அமைச்சர்கிட்ட

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பமுக தொண்டர்களுக்கு ஒரு இனிய நற்செய்தி:
நமது பாசத்திற்குரிய கலாக்கா அவர்கள் கட்சியின் கொ.ப.செ. பதவியை ஏற்று பொதுச்சேவைசெய்ய இசைந்துள்ளார்கள். பழைய கொ.ப.செ. ஜெய் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். மேலும் தலைவரின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியில் விலங்குகள் அணி ஒன்று தனியாக உருவாக்கப்பட்டு அதற்கு ஜெய்யைத் தலைவராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கீரிப்புள்ளை விலங்குகள் அணியின் முதல் உறுப்பினராக கட்சியில் நாளை நடைபெறும் விழாவில் இணைக்கப்பட உள்ளது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எதிர்கட்சியை எப்படி சமாளிப்பீர்கள் ?
அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க , கொடநாட்டுப் படுதியில் தூங்குபவர்களை தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள அதற்கென்று ஒரு அமைச்சரவை உருவாக்க ஆவன செய்யப்படும்.//

துக்க சீ தூக்க மாத்திரை contract எனக்கு கொடுப்பீங்களா? அப்டின்னா ஓட்டு உங்களுக்குத்தான்...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தக்காளி வெட்ரேன்யா இங்க ...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அமைச்சரே ..,
இங்கு ஒரு மிக பெரிய ஆணியை பிடுங்க வேண்டும் (SERVER புட்டுகிடுசி) வந்து கச்சேரியில் கலந்து கொள்வேன் .....

vinu said...

சென்னையை அடுத்த ஸ்ரிபெரம்பதூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரே மைதானம் கட்டிக் கொடுக்கப்படும்.


excuse me sir, eathuvumae kattulenaathaan athu maythaanam, sorry par the disturbance........
he he he he.............

அருண் பிரசாத் said...

//"பட்டிக்காட்டான் (பட்டணத்தில் ) ஜெய்" , அவர்களுக்கு டைபாயிடு வர காரணமாக இருந்த கயவர்களை கைது செய்யும்//

அதுக்கு காரணம் நம்ம டெரர்னு சொன்னா நம்பவா போறீங்க

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// நமது "பனங்காட்டு நரி" சத்தியம் தியேட்டர் வாசலில் சாகும் வரை பிச்சை எடுப்பார் என்றும் கூறியுள்ளார் ./////

கண்கள் பனித்தது..,இதயம் இனித்தது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
///// நமது "பனங்காட்டு நரி" சத்தியம் தியேட்டர் வாசலில் சாகும் வரை பிச்சை எடுப்பார் என்றும் கூறியுள்ளார் ./////

கண்கள் பனித்தது..,இதயம் இனித்தது//

ஆமா புளி புளித்தது, கொட்டை கசக்குதுன்னு படுவா! பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் நடக்கலேன்னா என்கூட இருக்க 40 எம் எல் ஏக்கள கூட்டிக்கிட்டு அந்தப் பக்கமா போயிடுவேன், ஆமா! ////

எந்த பக்கம் ராசா போவிங்க ? போற வழியில பாத்து போங்க கேப்டன் லத்தியோட நிக்க போறாரு///

ஆமா கேப்டன் எப்போ கழுத வளக்க ஆரம்பிச்சாரு? (அப்பிடியே கழுத வளத்தாலும் லத்திய பொறுக்கக் கூடவா ஆள் இல்ல? என்னய்யா கட்சி அது?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
//அதுக்குதான் சொல்லறேன் எப்பவுமே ஆளுங் கட்சிகூட கூட்டணி வக்கிர எங்ககூட சேந்திடுன்னு //

இவ்வளவு வற்புறுத்திக் கேட்பதால், பமுகவில் போஸ்டர் ஒட்டும் கடைநிலைத் தொண்டனாக சேர நான் விருப்பம் தெரிவிக்கின்றேன். எங்கெல்லாம் பமுக கூட்டம் நடந்தாலும், விசிலடிக்க இந்த கும்மி வருவான் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.//

ஆமா உங்கள நம்பி எப்பிடி பசையவும் போஸ்டரையும் கொடுக்கிறது? (டெர்ரரு பாண்டி அப்பிடித்தான் பசையத் தின்னுபுட்டு, போஸ்டர பழைய பேப்பர் கடைல வித்துட்டு எஸ்கேப் ஆயிட்டாப்புல!) அதுனால யாராவது பெரிய மனுசன உங்களூக்கு செகுரிடி கொடுக்க சொல்லுங்க இல்ல கட்சி ஆபீஸ்ல 50000 ரூவா டெபாசிட் கட்டிட்டு வாங்க, அப்புறம் போஸ்டரும் பசையும் கொடுக்குறோம்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// ஆமா புளி புளித்தது, கொட்டை கசக்குதுன்னு படுவா! பிச்சிபுடுவேன் பிச்சி! ////

ஆமா இதை யாருக்கு சொன்னே பன்னி!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
//// ஆமா புளி புளித்தது, கொட்டை கசக்குதுன்னு படுவா! பிச்சிபுடுவேன் பிச்சி! ////

ஆமா இதை யாருக்கு சொன்னே பன்னி!!!!!!//

இப்போ இனிச்சது புளிச்சதுன்னு சொன்னது யாருலே?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நான் அப்போ சொன்னத இப்போ சொன்னேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்குமேல கொழப்புனா கடிச்சி வெச்சிடுவேன்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ha ha ha ....,

சிங்கக்குட்டி said...

ஹாஹாஹ...அம்மாவுக்கே ஆளா ?

ஜெய்லானி said...

அரசியலா :-))))

Umapathy said...

பண்ணிகுட்டி ராம்சாமியை,
பண்ணிகுட்டி ராமசாமி என கூறிய மங்குனி அமைச்சரை எதிர்த்து சிங்கப்பூர் பஸ் ஸ்டாண்டு முன்னாடி ஆர்ப்பாட்டம்

p said...

சூப்பர்.. :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆஜர் வாத்தியாரே...

சசிகுமார் said...

நானே தலைப்ப பார்த்து பயந்திட்டேன்.

Gayathri said...

சண்டைப்போட்டுக்க நிலம் தரீங்கள?? ஆஹா வீடுகட்டி அடிக்குறது பார்த்துருக்கேன்..இதென்ன நிலம் விட்டு அடிப்பத....சுப்பர்

Vidhya Chandrasekaran said...

:))

r.v.saravanan said...

சரி நாடு முன்னேற்றத்திக்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
எனது இரண்டு மச்சினர்களும் சும்மாதான் இருக்கிறார்கள் , அவர்களில் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும் அடுத்தவருக்கு மத்திய அமைசர் பதவில்யிலும் அமர்த்தி நாட்டு மக்களுக்காக மிக மிகக் கடுமையாக உழைக்க சொல்லபோகிறேன் .

இது சூப்பர்

மாலுமி said...

ஐயா,
கும்மி -ய போல், எனக்கும் ப.மு.க -வில் பொறுப்பு தருமாறு வேண்டிகொள்கிறேன்.
எனது முன் அனுபவங்கள்,
சோடா பாட்டில், சைக்கிள் செயின், பொருள், வெடிகுண்டு போன்றவை வீசுவது....
தலைவர், அவரது !@#$%^, பட்டபட்டி போன்றவை துவைப்பது, காயவைப்பது.......
சொம்பு தூக்குவது, ஜால்ரா அடிப்பது......
நைட் 9 மணிக்கு பிறகு, RC அடித்து விட்டு மட்டை - யாக கிடைப்பது......

இப்படிக்கு,
உங்கள் ப.மு.க-ன் பாதுகாவலன், ஓசி சரக்கு-க்கு வெயிட் பண்ணும்,
மாலுமி

உமர் | Umar said...

//எனக்கும் ப.மு.க -வில் பொறுப்பு தருமாறு வேண்டிகொள்கிறேன்.//

மங்கு,
ஒரு அடிமை சிக்கிருச்சி! என்னைய விட்டுருய்யா!

மாலுமி said...

டேய்...... எவண்டா......டெரர்.......
எங்கள் ஜெய் அண்ணன்- க்காக, உன்னைய முள் படுக்கை-ல ஆய் இருக்க வைப்பேன்....

(ஐயா, நல்லா கூவு ரேனா???)

சாமக்கோடங்கி said...

//அதுவுமில்லாம், சிங்கப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு மட்டும் எம்பேரா? அப்பிடியே துபாய் பஸ் ஸ்டாண்டு, லண்டன், பாரீஸ், நியூயார்க் பஸ் ஸ்டாண்டுகளுக்கு என்பேர வெக்கனும், சென்னைக்கு பன்னிக்குட்டி நகர்னு பேர மாத்தனும், இதெல்லாம் நடக்கலேன்னா என்கூட இருக்க 40 எம் எல் ஏக்கள கூட்டிக்கிட்டு அந்தப் பக்கமா போயிடுவேன், ஆமா! //

பன்னிங்க வரும்போது தான் கூட்டமா வரும்னு கேள்விப் பட்டு இருக்கேன்.. போகும்போது கூடவா....?

சாமக்கோடங்கி said...

//பண்ணிகுட்டி ராம்சாமியை,
பண்ணிகுட்டி ராமசாமி என கூறிய மங்குனி அமைச்சரை எதிர்த்து சிங்கப்பூர் பஸ் ஸ்டாண்டு முன்னாடி ஆர்ப்பாட்டம்//

பன்னிக்குட்டி ராம்சாமி யை பண்ணிகுட்டி ராம்சாமி என்று சொன்னதுக்காக சிங்கப்பூர் பஸ் ஸ்டாண்டு பின்னாடி ஆர்ப்பாட்டம்...

சாமக்கோடங்கி said...

//சென்னையை அடுத்த ஸ்ரிபெரம்பதூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரே மைதானம் கட்டிக் கொடுக்கப்படும்.


excuse me sir, eathuvumae kattulenaathaan athu maythaanam, sorry par the disturbance........
he he he he.............//

தலைவா.. காலக் கொஞ்சம் காட்டுங்க.... படுத்து இருக்கும்போதே இப்படி யோசிக்கிரீன்களே....

சாமக்கோடங்கி said...

முக்கியச் செய்தி...:
"பன்றிக்காய்ச்சல் நோய் வராமல் ஆரம்பத்திலேயே தடுக்க இரு வித மருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன"

பன்னிசார்... உங்க ஆட்டம் ஓவர்....

பித்தனின் வாக்கு said...

manguni un thenthiravu thanga mudiyama, patta katchiya kalaichidappa poraru. parthu appu. kalaka thondar padai varap poguthu.

அ.முத்து பிரகாஷ் said...

அமைச்சரே!
இப்படி எல்லாக் கட்சிகளையும் தாக்கினால் அடுத்த மந்திரி சபையில் தங்களுக்கு இடம் கிடைக்காமல் போய் விடாதா? பார்த்துப் பண்ணுங்கள் அமைச்சர் பெருமானே!

அ.முத்து பிரகாஷ் said...

சூரிய மண்டலத்திற்கு அப்பாலும் சில கோள்கள் இருப்பதாக ஒற்றர் படை தெரிவித்தாம் அமைச்சரே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் அமைச்சரே!!!

'பரிவை' சே.குமார் said...

அரசியல் நமக்கு சரியா தெரியலை...
குடும்பக்கட்சிக்கு போனா நமக்கு மதிப்பிருக்காது...
கொடநாட்டுக்குப் போக வழியில்லை...
அதனால ப.மு.க.வில் சேர்ந்து அரசியல் அறிவை வளர்த்துக்கலாமுன்னு எண்ணம் என்ன புலவரே வாய்ப்புகிடைக்குமா?

மார்கண்டேயன் said...

அமைச்சரே, எனக்கு ஒரு போஸ்டு (ங்கொய்யால, வாய விட்டோமா . . . தக்காளி கரண்டு போஸ்ட காமிச்சு ஒதுங்கச் சொல்லீருவாய்ங்களே ) . . . அது சரி, நம்ம கட பக்கம் கொஞ்சம் வர்றது . . .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஓய்.... ரொம்ப நக்கல் புடிச்ச ஆளய்யா நீ..

பேட்டி கலக்கல்... நடக்கப்போவதை முன்கூட்டியே ஆறியும் உம் திறமையப் பார்த்தால்.. நித்தி பய ஜுஜிபியா.. ஹா..ஹா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எந்த பக்கம் ராசா போவிங்க ? போற வழியில பாத்து போங்க கேப்டன் லத்தியோட நிக்க போறாரு
//

ஏம்பா.. ஊர்ல தண்ணிக்கஷ்டமா?

அன்புடன் மலிக்கா said...

எதிர்கட்சியை எப்படி சமாளிப்பீர்கள் ?
அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க , கொடநாட்டுப் படுதியில் தூங்குபவர்களை தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள அதற்கென்று ஒரு அமைச்சரவை உருவாக்க ஆவன செய்யப்படும்.//

என்னா ஒரு நல்ல யோசனை அமுல்படுதுங்கையா.அமுல்படுதுங்க.

மொக்கச்சாமி ப.மு.க. தலைவர் மங்குனியில்லாமல் மொக்கையே செல்லாது. அப்படின்னு ஏதும் அறிக்கை விடுவீங்களா தலைவலியே! அச்சோ தலைவரே!

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...துக்க சீ தூக்க மாத்திரை contract எனக்கு கொடுப்பீங்களா? அப்டின்னா ஓட்டு உங்களுக்குத்தான்...
//////

அவ்ளோ தான நீங்களே எடுத்துக்கங்க

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...

தக்காளி வெட்ரேன்யா இங்க ...,////


வெட்டும் போது சொல்லிட்டு வெட்டு , நானும் வந்து பாக்குறேன்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

சென்னையை அடுத்த ஸ்ரிபெரம்பதூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரே மைதானம் கட்டிக் கொடுக்கப்படும்.


excuse me sir, eathuvumae kattulenaathaan athu maythaanam, sorry par the disturbance........
he he he he............./////

உஸ்............... இப்படி மடக்குனா அப்புறம் கட்சி எப்படி நடத்துறது , நாங்க மொட்ட மாடில மைதானம் கட்டி தர்றேன்னு சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...அதுக்கு காரணம் நம்ம டெரர்னு சொன்னா நம்பவா போறீங்க/////

டெர்ரர் இப்ப இந்த வேலையெல்லாம் செய்யுதா ?

மங்குனி அமைச்சர் said...

சிங்கக்குட்டி said...

ஹாஹாஹ...அம்மாவுக்கே ஆளா ?/////


சத்தம் போடாதிங்க சிங்கக்குட்டி அம்மா எழுந்துக்க போறாங்க

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

அரசியலா :-))))////

இல்லப்பு , கரும்பு எப்படி விவசாயம் பண்றதுன்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்

மங்குனி அமைச்சர் said...

உமாபதி said...

பண்ணிகுட்டி ராம்சாமியை,
பண்ணிகுட்டி ராமசாமி என கூறிய மங்குனி அமைச்சரை எதிர்த்து சிங்கப்பூர் பஸ் ஸ்டாண்டு முன்னாடி ஆர்ப்பாட்டம்/////

சார் நீங்களும் தப்பா தான் எழுதி இருக்கீங்க , (யோவ் பன்னி பாரு எல்லாரும் கஷ்ட்டப் படுறம் பஸ்ட்டு உன் பேர மாத்துய்யா)

மங்குனி அமைச்சர் said...

sethupathy said...

சூப்பர்.. :-)///

thank you sethupathy sir

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

ஆஜர் வாத்தியாரே...///

லேட்டா வந்ததுக்கு 100 ரூபா பைன் கட்டு

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

நானே தலைப்ப பார்த்து பயந்திட்டேன்.///

கண்ணா மூடிகிட்டே படிக்க வேண்டியது தானே

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

சண்டைப்போட்டுக்க நிலம் தரீங்கள?? ஆஹா வீடுகட்டி அடிக்குறது பார்த்துருக்கேன்..இதென்ன நிலம் விட்டு அடிப்பத....சுப்பர்///

அப்பத்தான் பாக்குற நமக்கு சுவாரசியமா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

வித்யா said...

:))///

thank you vithya medam

மங்குனி அமைச்சர் said...

r.v.saravanan said...இது சூப்பர்////

thank you saravanan sir

மங்குனி அமைச்சர் said...

Malumi said...

ஐயா,
கும்மி -ய போல், எனக்கும் ப.மு.க -வில் பொறுப்பு தருமாறு வேண்டிகொள்கிறேன்.
எனது முன் அனுபவங்கள்,
சோடா பாட்டில், சைக்கிள் செயின், பொருள், வெடிகுண்டு போன்றவை வீசுவது....
தலைவர், அவரது !@#$%^, பட்டபட்டி போன்றவை துவைப்பது, காயவைப்பது.......
சொம்பு தூக்குவது, ஜால்ரா அடிப்பது......
நைட் 9 மணிக்கு பிறகு, RC அடித்து விட்டு மட்டை - யாக கிடைப்பது......

இப்படிக்கு,
உங்கள் ப.மு.க-ன் பாதுகாவலன், ஓசி சரக்கு-க்கு வெயிட் பண்ணும்,
மாலுமி////

நீங்களே ஒரு கட்சி ஆரம்பிக்கிற அளவுக்கு உங்க கிட்ட திறமை இருக்கே , ஓகே ... உங்களுக்கு வேண்டிய பதவிய ப.மு.க விழ கிடைக்க முயற்சி செய்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//எனக்கும் ப.மு.க -வில் பொறுப்பு தருமாறு வேண்டிகொள்கிறேன்.//

மங்கு,
ஒரு அடிமை சிக்கிருச்சி! என்னைய விட்டுருய்யா!///

ஹி.ஹி.ஹி .... அதெப்படி விடமுடியும்

மங்குனி அமைச்சர் said...

Malumi said...

டேய்...... எவண்டா......டெரர்.......
எங்கள் ஜெய் அண்ணன்- க்காக, உன்னைய முள் படுக்கை-ல

(ஐயா, நல்லா கூவு ரேனா???)////


சூப்பரா கூவுரிங்க இன்னும் கொஞ்சம் டீசன்ட்டா கூவுங்க

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...பன்னிங்க வரும்போது தான் கூட்டமா வரும்னு கேள்விப் பட்டு இருக்கேன்.. போகும்போது கூடவா....?////

அது எங்க போனாலும் அப்படித்தான் சார்

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

முக்கியச் செய்தி...:
"பன்றிக்காய்ச்சல் நோய் வராமல் ஆரம்பத்திலேயே தடுக்க இரு வித மருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன"

பன்னிசார்... உங்க ஆட்டம் ஓவர்....///

இது தான் ஒரிஜினல் ஆப்பு

மங்குனி அமைச்சர் said...

நியோ said...

அமைச்சரே!
இப்படி எல்லாக் கட்சிகளையும் தாக்கினால் அடுத்த மந்திரி சபையில் தங்களுக்கு இடம் கிடைக்காமல் போய் விடாதா? பார்த்துப் பண்ணுங்கள் அமைச்சர் பெருமானே!////

அடுத்த ஆட்சியே நம்மாளுதான்

மங்குனி அமைச்சர் said...

நியோ said...

சூரிய மண்டலத்திற்கு அப்பாலும் சில கோள்கள் இருப்பதாக ஒற்றர் படை தெரிவித்தாம் அமைச்சரே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் அமைச்சரே!!!////


ரொம்ப தூரமா இருக்கேன்னு யோசிச்சேன் , சரி விடுங்க இந்த பால்வெளி முழுவதும் நம்ம துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாமல் பாத்துக்குவோம்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

அரசியல் நமக்கு சரியா தெரியலை...
குடும்பக்கட்சிக்கு போனா நமக்கு மதிப்பிருக்காது...
கொடநாட்டுக்குப் போக வழியில்லை...
அதனால ப.மு.க.வில் சேர்ந்து அரசியல் அறிவை வளர்த்துக்கலாமுன்னு எண்ணம் என்ன புலவரே வாய்ப்புகிடைக்குமா?////

அதுக்கு ஏகப்பட்ட என்ட்ரன்ஸ் எக்ஸ்சாம் இருக்கு சார் , இப்பவே படிக்க ஆரம்பிங்க

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

manguni un thenthiravu thanga mudiyama, patta katchiya kalaichidappa poraru. parthu appu. kalaka thondar padai varap poguthu.////

வாங்க வாங்க ,பித்தன் வாக்கு சார் , அதெல்லாம் கவலை படாதிங்க அங்கங்க ஆள் போட்டு வச்சுருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

மார்கண்டேயன் said...

அமைச்சரே, எனக்கு ஒரு போஸ்டு (ங்கொய்யால, வாய விட்டோமா . . . தக்காளி கரண்டு போஸ்ட காமிச்சு ஒதுங்கச் சொல்லீருவாய்ங்களே ) . . . அது சரி, நம்ம கட பக்கம் கொஞ்சம் வர்றது . . .///

நீங்க ரொம்ப நல்லவரு சார் , நீங்களே கேள்வி கேட்டு நீகள பாதிக் சொல்லிகிர்ரிங்க , அதுக்காகவே உங்களுக்கு போஸ்டிங் கிடைக்க ஏற்பாடு பண்ணலாம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ஓய்.... ரொம்ப நக்கல் புடிச்ச ஆளய்யா நீ..

பேட்டி கலக்கல்... நடக்கப்போவதை முன்கூட்டியே ஆறியும் உம் திறமையப் பார்த்தால்.. நித்தி பய ஜுஜிபியா.. ஹா..ஹா///

எல்லாம் தங்களிடம் கற்ற ஞானப் பால் மன்னா

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் மலிக்கா said...என்னா ஒரு நல்ல யோசனை அமுல்படுதுங்கையா.அமுல்படுதுங்க.

மொக்கச்சாமி ப.மு.க. தலைவர் மங்குனியில்லாமல் மொக்கையே செல்லாது. அப்படின்னு ஏதும் அறிக்கை விடுவீங்களா தலைவலியே! அச்சோ தலைவரே!/////

அதெல்லாம் நாம சொல்லகூடாது மேடம் , தொண்டர்களா வச்சு சொல்ல வக்கணும்

Anonymous said...

"மேலும் சிங்கபூர் பஸ் ஸ்டாண்டிற்கு நமது தானைத்தலைவன் , தன்மான சிங்கம், தரணி போற்றும் "பன்னிகுட்டி ராமசாமியின்" பெயர் வைக்கப்பட வேண்டும் இல்லையேல் நமது "பனங்காட்டு நரி" சத்தியம் தியேட்டர் வாசலில் சாகும் வரை பிச்சை எடுப்பார் என்றும் கூறியுள்ளார் ."

ஐயோ பாவம்...பிச்சை எடுத்து தொடங்கினா சொல்லுங்க நானும் கொஞ்சம் காசு போட்டிட்டு வரேன் ..ஹி ஹி"அதுமட்டுமில்லாமல் எங்கள் கொ.ப.சே. கீரிபுள்ளை புகழ் "பட்டிக்காட்டான் (பட்டணத்தில் ) ஜெய்" , அவர்களுக்கு டைபாயிடு வர காரணமாக இருந்த கயவர்களை கைது செய்யும் வரை எந்திரன் படம் பார்க்க மாட்டோம் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் .:"

நல்லது ..இது சரியான முடிவு ஜெ..

லேட் கமெண்ட் க்கு மன்னிக்கவும் மங்குனி

Unknown said...

97

Unknown said...

98

Unknown said...

99

Unknown said...

100..hey

enagal manguni amichar..100 idangalai kaipatri vittar...

mejartiudan aatchi amika pokirar....

valthukkal

Unknown said...

101..inum pala thoguthigalil nama
MANGUNI AMICHAREY Munnaiyil erukirar enpathai therivithu kolkirom...

Unknown said...

manna

thangal katchi aruthi perum panmai petruvittathu..

neengal than MUDTHALVAR..

nan nethithurai ammichar..

panikutikui..water deptmetn..

apram selvaku..tamil membadu dept.

apram panakatuku...entha forest deptment.

aprm kummiku epothaiku avara bendingala vachu eruphom..

then CHITRA AKKAVAUKU magalir membadu..enna deal okva..
amacherey..

Anonymous said...

இப்படியே போனால் அடுத்த தேர்தலில் உங்கள் பதவியை புடுங்கிடுவாங்களே அமைச்சரே...

அது யாருப்பா சிவா???

வெட்டிப்பேச்சு said...

வுங்கள மாரி நாலு பேர் இருக்கரதாலதா சாமி பாட்டுக் கேட்டுக்கிட்டே நாத்து நடவு பண்றமாரி சனங்க வலிதெரியாம ஆனி புடுங்கராங்க.

நீங்க நல்லாயிருக்கனும்

Unknown said...

அது யாருப்பா சிவா???-

Varungala Valai ulaga mudalvarum...

indivin prathamarum and

Nithithudurai amaicharum agai padivigali vagikka pogum nanbarey "siva" agum.

Vijiskitchencreations said...

அமைச்சர் நல்லாவே அரசியலில் புகுந்துட்டிங்க.

நான் சொல்ல வருவதும், சித்ரா சொல்லிட்டிங்க,அப்படியே கட் & காப்பி.

NS Manikandan said...

என்னையும் உங்க கட்சியில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

aiiii 108....
me present :-))