(பின்னா"டி" எழுதினா "டி"ஸ்கி , "மு"ன்னாடி எழுதினா "மு"ஸ்கி, எப்படி நம்ம கண்டுபிடிப்பு ? ஹி ஹி ஹி ...) இந்த தொடர (மங்கு எல்லாம் நேரம்டா, பித்தன் அண்ணே நான் உங்க கைய புடிச்சு கெஞ்சினத பத்தி எல்லாரும் கேட்ப்பாக சொல்லிடாதீங்க, அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க ) சீரியசா இல்ல மொக்கையா எப்படி எழுதலாம்னு யோசிச்சு சரி சீரியசா எழுதிடலாம்னு எழுதி படிச்சு பாத்தேன் , எனக்கே சிரிப்பு தாங்கல. நமக்கு சீரியஸ் எல்லாம் சரி வராதுன்னுட்டு அப்புறம் உங்க நல்லதுக்காக மொக்கையாவே எழுதிட்டேன்.
நான் அப்ப எட்டாவது படிசுகிட்டு இருந்தேன், ( தக்காளி இப்பவரைக்கும் நீ எட்டாவது தானடா படிச்சிருக்க ) கூட்டாளிக (எங்கம்மா கூட்டுகலவானிக-ன்னு சொல்லுவாங்க ) எல்லாம் சேந்து "புன்னகை மன்னன் " படத்துக்கு போறதா முடிவு பண்ணிட்டோம், நாங்கள்லாம் அப்பவே டெர்ரர் தாடி காரன் மொக்க படத்த ரெண்ட்ருதடவ பாக்குற தற்கொலைபடைங்க. இது நம்ம கமல் படம் , நாங்க கமலின் தீவிர ரசிகர்கள் , அந்த படம் எங்க ஊர்லருந்து 15 கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊர்ல போட்டு இருந்தார்கள். கமலுக்காக கண்டம் விட்டு கண்டம் கூட தாண்டலாம்.
பணம் ? !!!!!!!!!
பக்கத்து ஊர் வேற, அமொண்ட் ஜாஸ்தியாகும் , என்ன பண்ணலாம் ???
…………………
………………….
யோசிச்சு கடைசியா ரைட்டு நம்ம லாக்கர்ல கைவக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு லாக்கர் என்னோட அக்காவோட உண்டியல், ரெண்டு ரூபா , அஞ்சு ரூபா காயின்ச சேத்து வைக்கும் . பாவம் அதும் கிட்டத்தட்ட அஞ்சு வருசமா சேத்துச்சு ஆனா அந்த உண்டியல் தான் ரொம்பவே இல்ல. நம்ம அந்த உண்டியல்ல ஜாயின் அக்கௌன்ட் (வித்ட்ராவல் only) வச்சிரிந்தோம்னு அதுக்கு தெரியல.
வழக்கம் போல அக்கௌன்ட்-ல வித்ட்ராவல் பன்னிட்டு படத்துக்கு போயாச்சு. கோனைசு, சமோசா எல்லாம் சாப்படு படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன்.
வாசல்ல....... அம்மா .... !!!
அம்மா : எங்கடா போயிட்டு வர்ற ?
நம்ம : கிரிகெட் விளையாடம்மா
(பொலேர்ன்னு ஒரு அர, தல கிர்ருன்னு சுத்தி கண்ணுல தண்ணி வந்திடுச்சு )
அம்மா : பொய் சொல்லாதடா
(ஆகா எந்த பன்னாடயோ போட்டுகுடுதுட்டான் )
நம்ம : இல்லம்மா விளையாடதாம்மா போயிட்டு வர்றேன்
அம்மா : நம்ம குமார் உன்னைய "தேனி" -ல (ஊர் பேரு ) சினிமா தியேட்டர்ல பார்த்ததா சொன்னான் ?
நம்ம : (நாதாரி, குமார் எங்க அண்ணனோட பிரெண்ட்) இல்லம்மா குமார் அண்ணன் பொய் சொல்லுதும்மா
அம்மா : நீ ரொம்ப யோக்கியம் , குமார நீ சொல்றியா ?
சரி அடுத்த மேட்டர்க்கு வருவோம் ,
(பதிவுல ந"டு"ல போட்டா "டு"ஸ்கி , எப்பூ......டி )
அப்ப நடந்தத இப்ப நினச்சா சிப்பா இருக்கு , இது நடத்த அன்னைக்கு சீரீஸ்- ஆ எனக்கு எவ்வளவு பயம் , டென்சன் இருந்தது தெரியுமா ? இப்ப சொன்னா அந்த எபெக்ட் உங்களுக்கு புரியாது. அந்த கடை காரன் பிரேக் இன்னர் விலை சொல்லவும் தான் எனக்கு உயிரே வந்துச்சு.
ஆண்டவா 114 ரூபாக்குள்ள இருக்கணும்னு கடவுள வேண்டிகிட்டு பயந்துகிட்டே போய் கடைல கேட்டேன்
நம்ம : சார் ஒரு TVS -50 ப்ரேக் இன்னர் குடுன்ங்க?
நம்ம : எவ்வளவு சார் ?
>
>
>
>
கடக்காரன்: : எட்டு ரூபா குடுப்பா
நம்ம : எவ்வளவு ?
கடக்காரன்: : எட்டு ரூபாப்பா
நம்ம : ***&%#@^***
(நாம அந்த வயசிலேயே மன்குநியாதான் இருந்திக்கோம் )
அத மாட்ட ஒரு ரெண்டு ரூபா , ஆக மொத்தம் செலவு பத்து ரூபா.
டிஸ்கி :இதுல முக்கியமான இன்னொரு மேட்டர் என்னன்னா , எங்க சித்தி வீட்ல போய் பணத்த திரும்ப குடுக்கும் போது எங்கம்மா அங்க வந்துட்டாங்க, அப்புறம் என்ன நடந்திருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்றேன் .
டிஸ்க்கிக்கு ஒரு கிஸ்கி : இதுக்கு மேல தொடரலாமா வேணாமான்னு நீங்க தான் முடிவு பண்ணி சொல்லனும்.
