எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, April 9, 2010

கேனப்பய vs மங்குனி அமைசர்

முஸ்கி: //....................................................................................// இந்த கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் , பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.(யப்பா மனுஷன் என்னா சேபிடியா வாழவேண்டி இருக்கு )

--------------- ---------------


கேனப்பய: நல்ல வேல நியுடன் புவி ஈர்ப்பு சக்திய கண்டுபிடிச்சார்

மங்குனி அமைசர்: அதுக்கு என்னா இப்போ ?

கேனப்பய: இல்லைன்னா நாம எல்லாம் இப்போ மிதந்துகிட்டே இருப்போம்


--------------- ---------------

கேனப்பய: ஏம்பா நியூ காலேஜ் கட்டி எத்தன வருஷம் ஆச்சு ?

மங்குனி அமைசர்: 1951
கட்னது , 59 வருஷம் ஆச்சு , ஏன் கேட்குற ?

கேனப்பய: 59 வருஷம் ஆச்சே அப்புறம் ஏன் இன்னும் நியூ காலேஜ்ன்னு சொல்றாக ....


டுச்கி: நிறைய ப்ளாகர்ஸ் அவுகளுக்கு நடந்த சோகத்தை எல்லாம் "னக்கு
மட்டும் ஏன் இப்படி நடக்குது" அப்படின்னு எழுதிருக்காக, நானும் என் சோகத்த கொஞ்சம் பகிர்துகிறேன்


னக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

1 . எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .இதுவே வெஜ்ஆ இருந்தா எனக்கு பக்கத்து இலைல தான் பெரிய அப்பளமா இருக்கும்

2 . ஆபிசுக்கு லீவு போட்டு , நல்லா செட்டப்பா நான் உங்கார்ந்து கிரிகெட் மேட்ச் பாக்கும்போதுதான் சச்சின் 4 ரன்ல அவுட் ஆவாரு .

3 . நான் போன் பன்னும் போது தான் எப்பவுமே என் நம்பர் பிசியாவே இருக்கும்

4 . தியேட்டர்ல என் பக்கத்து சீட்ல இருக்க ப்ரண்டுக்கு பக்கத்து சீட்ல தான் நல்லா பிகர் வந்து உட்காரும். (அந்த பன்னாட இன்ட்ரோல்ல கூட என்ன மாத்தி உட்கார விட மாட்டான் .


டிஸ்கி: இந்தா பாருங்க இந்த கேனபய யாருன்னு , கேனத்தனமா எல்லாம் என்கிட்ட கேட்ட கூடாது. அப்புறம் நான் நாம ராமராஜன் நடிச்ச "துறை" பட சி.டி உங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டி இருக்கும் ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரத...................




ஒரு போடோ காமெடி
(இது நான் இல்லைங்க, அந்த கேனப்பய இவருதாங்க )


ever pregnant never delivery




கிஸ்கி: மங்கு இந்த வாட்டி எப்படியோ உயிர் காபத்திகிட்ட , இப்படியே மெயின்டன் பன்னு



Monday, April 5, 2010

அசைவகொத்துபுரோட்டா

முஸ்கி: எல்லாரும் கொத்து பரோட்டா போடுறாக , சரி நாமளும் ஒன்னு போடலாம்னு யோசிச்சா சைவம் போடலாமா இல்ல அசைவம் போடலாமான்னு ஒரு கேள்வி ? நமக்கு சைவம் சரியா வராது , அதுனால அசைவகொத்துபுரோட்டா போட்டேன் , சாப்டு கொல வெறியோட என்ன தேடாம , பின்னுட்டத்துல போய் பின்னிஎடுங்க


முதல்ல ஒரு சந்தோசமான விஷயம்

அப்பாடா இந்த வருசமும் " good friday " sunday வரலே , ஒரு நாள் லீவ் வேஸ்ட் ஆகல , கவுருமென்ட் வருசா வருஷம் லீவு தர்றதே 12 நாள் தான் , அதுல ஏதாவது ரெண்டு மூணு சண்டே வந்து வேஸ்டா போய்டும் , இந்த வருஷம் "good friday " , friday வந்து ஒரு லீவு தப்பிச்சது .


குட்டி கவுஜ

கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து

வளைந்து

பெருக்கி போனால்
வாசல் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு


கரக்ட்டு தானே

சரக்கு ரயில்
தடம்
புரண்டது
இதில்
என்ன ஆச்சரியம்????


டுஸ்கி: நோக்கியா கேமரா மொபைல் போட்டியின் 5 கேள்விகளில் 4 கேள்விகளுக்குஅனைவரும் மிக சரியான பதில் கூறியுள்ளீர்கள் , அந்த 3-வது கேள்விக்குமங்குனி அமைசர் தவிர யாரும் சரியான பதில் சொல்லாததால் அந்த நோக்கியாகேமரா மொபைல் மங்குனி அமைச்சருக்கு பரிசாக வழங்கபடுகிறது.



மூளை கார பயபுள்ள என்னா கேள்வி கேட்குது பாருங்க

ஆமா சோமாலியாவுல கடலை கொள்ளையடிகளையே !!! கப்பல தானே கொள்ளையடிகிறாங்க அப்புறம் ஏன் எல்லோரும் அவுகள கடல் கொள்ளையர்கள்ன்னு சொல்றோம்?

இப்படிக்கு
ஓசி டீயோட ஓசி பேப்பர் படிப்போர் சங்கம்



கொள்ளிவாய் பிசாசு

திடீர்ன்னு எங்க ஊர்ல ஒரே பரபரப்பு .. மேட்டர் இது தான்

"தினமும் நைட்டு 8 மணிக்கு மேல எங்க ஊர் பக்கத்துல இருக்க சுடுகாட்ல கொள்ளிவாய் பிசாசு வந்து டான்ஸ் ஆடுது "

ஊருல இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி ஆத்த தான்டி போனா ஒரு சுடுகாடு இருக்கு. ஆத்து மேட்ல இருந்து பாத்தா சுடுகாடு தெரியும், அங்க ஒரு எரிக்கிற மேடையும் நிறைய சமாதிகளும் இருக்கும் . நம்ம பயபுள்ளைக ரெண்டு பேரு ஒரு நாள்நைட்டு 8 மணிக்கு ஆத்துக்கு போயிட்டு எதார்த்தமா சுடுகாட்ட பாத்துகங்க , அங்கசாமாதிகளுக்கு நடுவுல திடீர்ன்னு ஒரு செகண்டு தீ மாதிரி பளிச்சுன்னுஆடிருக்கு , அவ்வளவுதான் பயபுள்ளைக அங்க புடுச்ச ஓட்டம் அவிங்க வீட்லபோய் தான் நின்னாங்க , மறுநாள் ஒருத்தனுக்கு காயிச்சல் வந்துருச்சு , ஊருக்குள்ள ஒரே பரபரப்பு .

இந்த பேய் பிசாசு நம்பிக்க இல்லாத நாலு பேரு சிரிச்சுகிட்டே பகல்ல சுடுகாட்லபோய் பாத்தா அங்க ஒன்னும் இல்லை . பகல்ல எப்படி கொள்ளிவாய் பிசாசுவரும்? , வந்தாலும் வெளிச்சதுல்ல எப்படி தெரியும்? அப்படின்னு நாலு பேர்சொல்ல , சரின்னு நைட் போய் பாத்தாக .

பாத்தா நிஜமாவே தீ மாதிரி ஒன்னுஆடுது , அதுவும் ஒரு செகண்டு தான் , ஆனா ஒரு மணி நேரத்துல மூணு நாலு வாட்டி ஆடுது. இத பாத்தா பேய் பிசாசு நம்பிக்க இல்லாத நாலு பேரும் ஆடிபோயிட்டாக . அப்புறம் ஒரு வாரம் அனலைஸ் பண்ணி என்னான்னு பாத்தா , சாமாதிகளுக்கு நடுவுல ஒரு சமாதில கருப்பு டைல்ஸ்ல செந்தவுகள பத்தின டீடைல்ஸ் போட்டு இருந்தது , நைட்டு மெயின் ரோட்டல வர்ற வண்டிக லைட்டு ஒரு ஆங்கிள்ள படும்போது இங்க ஆத்து மேட்ல இருந்து பாத்தா அந்த கருப்புகல்லு கிளார் அடிக்குது , அது உண்மைலே ஏதோ தீ டான்ஸ் ஆடுறமாதிரிதான் இருந்தது . அந்த ஒரு வாரம் எங்க ஊரே ஒரே டென்சன் தான் போங்க , வீட்டுக்கு முன்னாடி பழைய செருப்ப கட்டி தொங்க விடுறது , பூசாரி மந்திருத்துகொடுக்கும் தண்ணிய வீட்ட சுத்தி தொளிசுகிட்டும் ஒரே அமர்களமா இருந்துச்சு .



டிஸ்கி : பித்தன் சார் " , விளக்காடும் விநாயகர்" படிச்சப்புறம் , எங்க ஊர்ல நடந்த இந்தகொள்ளிவாய் பிசாசு நியாபகம் வந்தது


கிஸ்கி : வேணாம்..........., சொன்னா கேளுங்க.............,
அப்புறம் கொல கேஸ்ல உள்ள போய்டுவிங்க , ஆமா சொல்லிபுட்டேன் .





Friday, April 2, 2010

நோகியா கேமரா மொபைல் பரிசு


முஸ்கி : மங்குனி அமைசர் ப்ளாக்ல் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை .

கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மிகசரியான விடை எழுதுவோர்களில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு கீழே உள்ள "நோக்கியா கேமரா மொபைல்" பரிசு வழங்கப்படும்..


1 )
கேபிள் சங்கர் யார் ?

a .
கேபிள் டி.வி நடத்துபவர்
b .
கேபிள் இல்லாத டி.வி நடத்துபவர்
c . கேபிள் டி.வி நடிகர்


2 )
பட்டாபட்டி டவுச்சரில் எத்தை கோடுகள் உள்ளன ?

a .
பட்டாபட்டி டவுசரா , அப்படின்னா ?
b .
நான் எண்ணியதே இல்லை
c . மேலுள்ள இரண்டும் கிடையாது


3 )
டூ வீலருக்கு எத்தனை சக்கரங்கள் உள்ளன ?

a .
இரண்டு சக்கரங்கள்
b .
இரண்டு சக்கரங்கள்
c .
இரண்டு சக்கரங்கள்



4 ) T 20 கிரிக்கட் மேட்சில் எத்தனை ஓவர்கள் வீசபடுகின்றன ?

a .
ரெண்டு ஆபாயில் பார்சல்
b .
2010 நவம்பரில் உலகப்போர்
c .
டீலா, நோ டீலா



டிஸ்கி :இனி வருவது கொஞ்சம் ஸ்பெஷல் கேள்வி நல்லா யோசிச்சு பாத்து பதில் கூறவும்



5 )
நடந்து முடிந்த இடை தேர்தலில் வெற்றி பெற்றது யார் ?

a .
சிம்ரன்
b .
நயன்தாரா
c .
ஸ்ரேயா
d . திரிஷா
e . அசின்
f . நமீதா
g . ப்ரியாமணி
h . மாளவிகா
i . ரீமா சென்

j. சோனா

k. மேல உள்ள எல்லாரும்
l . இல்ல உங்களுக்கு புடிசவுங்க பேரு


நீங்கள் வோடோபோன், ஏர்டெல் , ஏர்செல் , டோகோமோ வாடிக்கையாளராகஇருந்தால்

"உங்கபேர்" ஸ்பேஸ் "மங்குனி" ஸ்பேஸ் "கேள்வி நம்பர்" ஸ்பேஸ் "a" or "b" or "c" என்று டைப் செய்து 58585 என்ற எண்ணுக்கு sms அனுப்பினால்...........

பத்து பைசா கூட கிடைக்காது


டிஸ்கி :ஒழுங்கா என் கமான்ட்ஸ்ல ஆன்ஸ்வர் எழுதுங்க , வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலிக்கு கீழே உள்ள நோகியா கேமரா மொபைல் பரிசளிக்கப்படும்
?
?
?/


கிஸ்கி : நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது
(அப்பாட............ இனி நம்ம இஷ்டம் யாருக்கு வேனாலும் குடுதுகலாம்)

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?