முதல்ல எனக்கே அப்படித்தான் இருந்துச்சு .........
காலைல ஒரு பதினோரு மணி இருக்கும் , இல்லாத ஆணிய புடுங்க டிரை பண்ணிக்கிட்டு இருந்தேன் ....திடீர்ன்னு
நான் அடிச்சா தாங்க மாட்ட நாலுமாசம் தூங்க மாட்ட ...............
(அட நம்ம ரிங் டோனு தாங்க )
"ஹலோ ............"
"தம்பி வணக்கம்"
ஆடிப் போயிட்டேன் . கலைஞர் லைன்ல இருந்தார் . ஒரு வேலை கனவா இருக்குமோ ?????????????
டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ......
அது செகுலசேந்து பொளேர்ன்னு ஒரு அரை விட்டுச்சு . அப்பாடா இது கனவு இல்லை. (ஓபனிங் நல்லா தான் இருக்கு பினிசிங் தான் சரியில்ல - அடுத்த வாட்டி ஹெல்மெட் போட்டு டிரை பண்ணனும் )
நடுங்கிகிட்டே போன்ல
"சார் வணக்கம் சார் "
"தம்பி நான் உங்க பிளாக்கோட தீவிர ரசிகன் தம்பி , எப்ப மனசு கஷ்டமா இருக்கோ , எப்ப எப்ப டென்சனா இருக்கோ உங்க பதிவுகள படிப்பேன் , மனசு ரிலாக்ஸ் ஆகிடும் தம்பி "
"சார் நீங்க என் பிளாக் படிக்கிறிங்களா ??? ரொம்ப நன்றி சார் "
"அது சரிங்க தம்பி ஏன் சமிபகாலமா நீங்க பதிவு எதுவும் போடலை? "
"சார் , ஆபீசுல கொஞ்சம் வேலை அதான் சார் "
"சரி , சரி முதல்ல நமக்கு வேலைதான் முக்கியம் ,நேரம் கிடைக்கும் போது பதிவு போடுங்க "
"சரிங்க சார் , நீங்க கால் பண்ணியதற்கு ரொம்ப நன்றி சார் "
"பரவாயில்லைங்க தம்பி , வச்சிடுறேன்.,"
டிஸ்கி 1 : இப்போ என்கிட்ட பேசியவர் மிகப்பெரிய சமையல் கலைஞர் சார் , கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல் லீ ராயல் மெரிடியன் ...................... பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார் .
டிஸ்கி 1 .5 : சமையல் டிப்ஸ் : ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் . (எப்படியெல்லாம் உயிரை காப்பாத்திக்க வேண்டி இருக்கு ....)
டிஸ்கி 2 : ங்கொய்யாலே இத படிச்சிட்டு எவனாவது எனக்கு அம்மா போன் பண்ணினாங்க , கேப்டன் போன் பன்னினாருன்னு பதிவு போட்டிங்க ...........