எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, December 29, 2011

விடைபெறுகிறேன் நண்பர்களே


டியர் பிரண்ட்ஸ் ,


எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, என்னால இனிமே இந்த வலையுலகில் தொடர்ந்து செயல்படமுடியாத சூழல் உருவாகிவிட்டது . ஆனால் கடந்த நாட்களில் எனக்கு இந்த உலகம் முழுவதிலிருந்து பல நண்பர்கள் கிடைத்தார்கள் .  எனது நட்பின் மூலம் அதில் சிலருக்கு மனவருத்தங்களும் சங்கடங்களும் ஏற்பட்டு இருக்கலாம் , எனவே நண்பர்களே விடைபெறும் இந்த நேரத்தில் அவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . தயவு செய்து உங்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். கலங்கிய கண்களுடன் விடைபெறுகிறேன் .

இப்படிக்கு

2011



டுஸ்கி : தயவுசெய்து கீழேயுள்ள டிஸ்கியை யாரும் படிக்காதீர்கள் .

டிஸ்கி : ஹி.ஹி.ஹி.....ஒன்னும் இல்லைங்க போனவருசம் (2010 ) ஒரு பதிவர் இந்தமாதிரி பதிவு போட்டு இருந்தார். இந்த கான்செப்ட் ரொம்ப எனக்கு புடிச்சிருந்தது அதான். (@பட்டா ..... இந்த இடத்துல தான் நீ காரி துப்பனும் )

சரி இப்போ மேட்டருக்கு வருவோம் ..........

டெர்ரர் கும்மி குரூப்புல இருந்த நாங்க பதிவர்களின் பதிவுகளுக்கு  ஒரு சின்ன பரிசுப்போட்டி    வச்சிருக்கோம் . கீழ உள்ளத கிளிக் பண்ணி டீடைல்ஸ் பார்த்துக்கங்க .  









இதுல முதல் முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மி மெம்பர்கள் யாரும் போட்டி  நடுவர்கள் கிடையாது  .

அடடா ..... ஆமா இவனுக பூராம்  ஹை கோர்ட் ஜட்ஜா இருந்தவுங்க , தீர்ப்பு சொல்லிட்டாலும் .......???


இதுல ரெண்டாவது  முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மியை சேர்ந்த யாரும் இந்த போட்டில கலந்துக்க கூடாது .

அடிங்.... ங்கொய்யாலே , நாதாரி கும்மி நாயிகளா என்னமோ இவனுகள கலந்துக்க விட்டுட்டா எல்லாரும் பரிசு வாங்கி குவிக்கப்போறது  மாதிரி  என்னமா பில்டப் குடுத்திருக்காணுக. ஒரு பயலுக்கு (முக்கியமா என்னையும் சேர்த்துதான்)  ஒழுங்கா ஒரு பதிவு எழுத தெரியாது , இப்படி ஒரு கண்டிசன் இவனுகளா போட்டு போட்டில கலந்து தோத்துபோயி  கேவலப்படுரதுல இருந்து தப்பிக்க ஐடியா பண்ணிட்டானுக .



Wednesday, November 2, 2011

இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?

காலைல ஆறுமணிக்கு   எழுந்து ..........



"ஹேய் இரு,இரு,இரு, ஆமா நீ என்ன கருமத்துக்கு  ஆறுமணிக்கு எழுந்த ?"

ஷட்டில் விளையாட , ஹேய் பேசிகலி  ஐ எம் எ ஸ்போட்ஸ் மென் யா .

"அடிங்... நாதாரி நாயே பாத்திரம் கழுவி ,வீட்ட கூட்டி, பையன ஸ்கூலுக்கு ரெடிபண்ணி அனுப்பனும் , அதுக்குத்தான உன்னோட வீட்டுக்காரம்மா மூஞ்சில சுடுதண்ணிய  ஊத்தி எழுப்பிவிட்டுச்சு . "

"அடப்பாவிகளா ஊருக்கே தெரிஞ்சுபோச்சா ? சரி விடு மேட்டருக்கு வர்றேன் "

"வா "

காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே 

" மறுபடியும் ஸ்டாப் "

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........  இப்போ என்ன ?"

"உனக்கு வீட்டுல டீயெல்லாம் போட்டு தர்றாங்களா ?"

" நானா போட்டுக்கிட்டது தாண்டா, ஐய்யோ சாவடிக்கிரானுகளே , சொல்ல வந்தத சொல்ல விடுங்கடா "

"சரி சொல்லு  "
  
காலைல ஆறுமணிஎழுந்து பல்லு விளக்காம வீட்டுக்காரம்மா குடுத்த  டீ சாப்டுகிட்டே பால்கனிலருந்து கீழ பாத்தா கீழ் போர்சன்ல இருக்க  நம்ம கண்ணன் பைக்ல  வந்து சேர்ந்தான் . அந்த பயபுள்ள ரெகுலரா இந்த நேரத்துல  வாக்கிங் போற ஆளு ..........

"என்ன கண்ணா இந்நேரத்துல வாக்கிங் போகாம பைக்ல  எங்க போயிட்டு வர்ற ?"

"இல்லைண்ணே இன்னைக்கு சீக்கிரம் ஆஃபீஸ்  போகணும் , நடந்து வாக்கிங்(?) போனா லேட் ஆகும் அதான் பைக்லே வாக்கிங் போயிட்டு வந்துட்டேன் "

# இப்படி ஒரு பிரண்டு தேவையா மச்சான் ?

Monday, September 26, 2011

சரக்கடிக்கும் பெண்கள் போட்டோ ???


மெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... 

அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணுக ஒயின் சாப்புல சரக்கு வாங்குறதுக்கு நிக்கிறது மாதிரி இருக்கு ......



அடிங் ....ங்கொய்யாலே ......ஹே, ஹே,ஹே....... யார ஏமாத்த பாக்குறிங்க ? எங்க டாஸ்மாக் அவ்ளோ கேவலமா போச்சா , இந்த போடவா ஏதோ  வெளிநாட்டு தீவிரவாதிகள் செட் பண்ணி எடுத்து தமிழ் நாட்டு டாஸ்மாக்க அசிங்கப் படுத்தி இருக்காங்க .......அப்புறம் என்ன சார் ........

இங்க பாருங்க ஒரிஜினல் டாஸ்மாக் நிலைமைய ...




இல்ல அட்லீஸ்ட் இந்த கூட்டமாவது இருக்கும் 








இதுல இந்த பொண்ணுக வாங்குற டாஸ்மாக்குல கூட்டமே இல்லையாம் , டாஸ்மாக் கவுண்டர் காலியா இருக்காம் , .......ஹே, ஹே,ஹே........ நம்புரமாதிரியா இருக்கு ........ யார ஏமாத்த பாக்குறிங்க  ???


அப்புறம் ரெண்டாவது போடோ சார் ......இத பாருங்க ........... 










இம்மம்ம்ம்ம் ...... பார்த்துட்டிங்களா ??? இதுலே ஒரு பிழை உள்ளது யுவர் ஆனார்  . 

அதாவது பாரில் உட்கார்ந்துகொண்டு பீர் அருந்தும்போதுதான் பாட்டிலை இந்த வகையில் பிடித்து அருந்த முடியும் ........ நின்று கொண்டு பீர் அருந்த பாட்டிலை வாத்து கழுத்தை பிடித்து தூக்குவது  போல் பாட்டிலின் கழுத்து பகுதியை பிடித்து தான் குடிக்க முடியும் ........கீழ பாருங்க 








(பயபுள்ள ஒரு டிராப் கூட மிச்சம் வைக்காது போலருக்கே ?)


 எனவே மை லார்ட்  அந்த பெண் சும்மா லொலலாயிக்காக  பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளது . எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொண்ட நீதி என்னவென்றால் மேலே உள்ள இரண்டு போடோகளும் வேண்டுமென்றே , செட் செய்து எடுக்கப்பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்  யுவர் ஆனார் .


கோரஸ் : போட்டோக்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து தமிழ் நாட்டு பெண்களின் கவுரவத்தை காப்பாற்றியதால் இன்று முதல் நீ 

" டாக்டர் .மங்குனி அமைச்சர், Ph.d ..  " .... என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்