எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, January 28, 2011

கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

நம்ம கும்மியும் , செந்தழல் ரவியும் ஒரு முக்கிய மான விசயத்துக்கு பதிவு எழுத சொல்லி இருக்காங்க . கண்டிப்பா எல்லோரும் அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் . தயவு செய்து அனைவரும் முயற்சி செய்யுங்கள் .

நமது மீனவர்கள் கடலுக்குள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப் படுவது , கொள்ளப் படுவதும் சர்வ சாதாரண விஷயம் . அதற்கு உடனடியாக நமது தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதமும் , இறந்தவர்களுக்கு இழப்பீடும் தருவது டிராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவது மாதிரி அதைவிட சாதாரண விஷயம் .

எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லைங்க முன்னாடி தான் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்ததால் சந்தேகத்தின் பெயரில் தாக்கப்பட்டார்கள் தமிழக மீனவர்கள் ...... இது கூட கொஞ்சம் நியாயமான விஷயம் ..... ஆனா இப்ப என்ன நடக்குது???

புதிதாக சேரும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நமது தமிழக மீனவர்கள் தான் ஜாலினான இலக்கு . ஆனா இப்போது சீன மற்றும் இலங்கை கூட்டு கடற்படைக்கும் நமது மீனவர்கள் தான் இலக்கு . இன்னும் கொஞ்ச நாள் போனா ஐ.நா. சபைலே உலக நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடுவதில் பயிர்ச்சி பெற இந்திய கடலோர பகுதி உலகின் சிறந்த பகுதின்னு அறிவிச்சாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை .

என்ன சார் முட்டாத்தனமா இருக்கு ... ஒரு தடவை ரெண்டு தடவை என்றால் பரவாயில்லை ஏதோ கவனக்குறைவு என்று கூறலாம் ..........

இந்த நியுஸ் வர்றப்ப நாம என்ன பன்றோம் டீ, தம்மோட பேப்பர் படிச்சுக்கிட்டே ...ச்சு...ச்சு....ச்சுன்னு கவலைப்பட்டு , "கள்ளக்காதல் கொலை " இல்லை "உல்லாச அழகிகள் கைது" நியுஸ் எங்கடா இருக்குன்னு தேட ஆரம்பிச்சிடுவோம் .

இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ...அரசாங்கம் மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். ஆனா நாம் எல்லாரும் சேர்ந்து குரல் கொடுத்து அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டுவரலாம்.

ஒரு வேலை தமிழக மீனவர்கள் தினமும் கடலுக்குள் சென்று விட்டு வந்து "இலங்கை கடற்படை தாக்குதில் இருந்து நாங்கள் தப்பி வந்தற்காக கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

டிஸ்கி : பதிவெழுதும் நண்பர்கள் தங்களுடைய பதிவுகளை கீழே உள்ள தளத்தில் இணைக்கவும்

"www.savetnfisherman.org "

Thursday, January 27, 2011

எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க

நான் ஸ்கூல்ல படிக்கும் போது அப்ப வருசத்துக்கு ஒரு தடவை ஒரு பங்கசன் வரும் ................. ஊர்ல இருக்க எல்லாரும் நைட்டு 2 , 3 மணிவரைக்கு முழிச்சிருந்து புது டிரஸ் எல்லாம் போட்டுக்கிட்டு ஊரே ஜே.ஜே.ன்னு இருக்கும் . (அட அந்த "ஜே" இல்லைப்பா ??? எப்பவும் குதர்க்கமா யோசிச்சே நமக்கு பழகிப்போச்சு )


நாம எப்பவுமே நம்ம பிரண்ட்ஸ் க்ரூப்போட சுத்துவோம் (எங்கம்மா எப்பவுமே எங்க குரூப்ப தறுதலைகன்னு செல்லமா கூப்பிடுவாங்க ...... அவ்வ்வ்வ்வ் ....... ..............) .

அன்னைக்கு நம்ம கைல காசும் கொஞ்சம் தாராளமா புழங்கும் , நம்ம குரூப் பசங்க எல்லாம் அன்னைக்கு இவுங்களுக்கெல்லாம் டிமிக்கி குடுத்துட்டு நைட் சோ படத்துக்கு போயிடலாமுன்னு ஒரு வாரத்துக்கு முன்னாடியே செயற்குழு கூட்டி முடிவெடுத்திட்டோம்.

அந்த நாளும் வந்தது .......... பிளான் படி எங்க அண்ணன் குரூப்புக்கு தெரியக்கூடாதுன்னு நைசா சைக்கிள் எடுத்துக்கிட்டு ஊருக்கு கடைசில இருக்க தியேட்டருக்கு போனா ??? அங்க எங்களுக்கு முன்னாடியே எங்க அண்ணன் குரூப் டிக்கட் எடுக்க வரிசைல நிக்கிறானுக .......... ( இந்த நாதாரிக வருசா வருஷம் இந்த வேலைதான் பாத்திருக்கானுகன்னு அப்புறம் தான் தெரிஞ்சது )

சரி சைக்கிள்ள ரிவர்ஸ் கியர் போட்டு அப்படியே ஒரு யு டேர்ன் எடுத்து ஊருக்கு இந்தப்பக்கம் கடைசில இருக்க தியேட்டருக்கு போனோம் .

அதான் வீட்டு தெரியாம பஸ்ட்டு, பஸ்ட்டு அதுவும் நைட் சோ படத்துக்கு போறது .........பயந்துக்கிட்டே உள்ள போயி உட்கார்ந்தோம் .......... பென்ச் டிக்கட் ......... பக்கத்துல எங்க வயசுள்ள நிறையா சின்னபசங்க எல்லாம் சட்டைய கழட்டி மடில சுருட்டி வச்சிக்கிட்டு படம் பாத்தாணுக ...ஹி,ஹி,ஹி....சரியான லூசுப்பசங்க.

படம் பாத்துட்டு நைட்டு ஒரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம் ..... வீட்டுக்குள்ள போனேன் எங்கப்பா பின்னாடி இருந்து இங்க வாடான்னு கூப்பிட்டார்

"எங்கப்பா போன ?"

"எங்கயும் இல்லைப்பா , இங்க தான் இருந்தேன் "

"டேய் மரியாதையா சொல்லு எந்த படத்துக்கு போன ?"
(ஆஹா, எந்த பரதேசியாவது போட்டு குடுத்துட்டானா )

"இல்லைப்பா ..........."

பொலேர்ன்னு ஒரு அரை விழுந்தது ............ எனக்கு தலைக்கு மேல வட்டமா குட்டி குட்டி பறவைகள் பறக்க ஆரம்பிச்சுச்சு ...........

" சட்டைய கலட்டி பின்னாடி பாருடா "

கலட்டி பாத்தா அடங் ங்கொன்னியா , புது சட்டை பூராம் ஓட்டை ஓட்டையா இருக்கு ,.....எவனோ சிகரட்டால ஓட்டை போட்டு இருக்கானுக , எனக்கு ஒண்ணுமே புரியல

(அப்படின்னா எங்கப்பாவும் சின்னவயசுல நைட் சோ படத்துக்கு போயிருப்பாரு ???? )

அப்பத்தான் எங்க அண்ணன் பக்கத்துல வந்து

"டேய் நைட் சோ படத்துக்கு போனா சட்டைய கழட்டி சுருட்டி மடில வச்சுக்கிரனும், பின்னாடி சிகிரட் பிடுக்கிரவன் புது சட்டைல ஓட்ட போட்டுடுவாணுக "

(இந்த பன்னாட நாயி இந்த நீதிய முதல்லே சொல்லி இருக்கலாம்ல ?)

ஆஹா ........... அப்ப நாங்க தான் லூசா (ஹி.ஹி.ஹி........ இத எங்க வாயல வேற சொல்லனுமா ?)............ மறுநாள் தான் தெரிஞ்சது நம்ம குரூப்புல நாலஞ்சு பேரு வீட்டுல பொளக்க காச்சி இருக்காங்க .

நீதி : ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது போயி புள்ள குட்டிகள படிக்க வையுங்க

Wednesday, January 19, 2011

டேய்....என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத

ஐயோ , ஐயோ , ஐயோ ............ என் பொண்டாட்டி மடார் மடார்ன்னு தலையிலே அடிச்சுக்கிட்டு

" இப்படி ஒரு பைத்தியக்காரனுக்கு போயி என்னைய கட்டி வச்சிருக்கான் பாரு எங்கப்பன செருப்பால அடிக்கணும்..... என் பொழப்பு இப்படி நாசமா போச்சேன்னு" பொலம்ப ஆரம்பிச்சா ...........

என் பையன் அவனோட புக்கு நோட்டு எல்லாத்தையும் கிழிச்சு போட்டு

"மம்மி நீ அழுகாத மம்மி , பேசாம இந்த ஆள டைவேர்ஸ் பண்ணிட்டு வா நான் உன்னைய மாடு மேச்சாவது காப்பாத்துறேன் , இந்த ஆளுக்கு புள்ளையா பொறத்ததுக்காக இனி நான் ஸ்கூல் பக்கமே போகமாட்டேன் "

திடீர்ன்னு பக்கத்து வீட்டுல ஒரே சத்தம் என்னான்னு போயி பாத்தா.........

அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது .

வெளிய வந்து பாத்தா பக்கத்து வீட்டு ஹவுஸ் ஓனர் ரெண்டாவது மாடியில இருந்து கீழ குதிச்சு சூசைட்டு டிரை பன்னி கால உடைச்சிக்கிட்டார் ............

ரோட்டுல ஒரே சைரன் சத்தம் போலீசு , ஆம்புலன்சுன்னு ஒரே களேபரம் ......

போலீசு நேர என்கிட்ட வந்து

"யோவ் , இதுவரைக்கு 67 போன் கம்ப்ளைன்ட் வந்திருக்கு , மரியாதையா இனி பாட்டு பாடாத , அப்படியே பாடனும்னாலும் அடுத்து வீடுகளுக்கு கேக்காம சத்தமில்லாம வாயில சைலன்சர் வச்சிக்கிட்டு பாடு , இல்லை உன்னைய என்கவுன்டர்ல போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரத "

இது என்னங்க சார் அநியாயமா இருக்கு , அப்படி என்ன சார் நான் பெரிய்ய தப்பு பன்னிட்டேன் .......... நீங்களே சொல்லுங்க சார் , அயன் படத்துல வர்ற

"விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே "

பாட்ட இங்கிலீசுல கீழ உள்ளது மாதிரி பாடினேன் சார் ,



ஐஸ்மூடி திங்க்பன்னினால்
தெயரும் கம்முனாய் பிரன்டே பிரன்டே
லோன்லியாக டாக்கிடும் ஹெப்பியை
கிவ்வுனாய் பேக்கே பேக்கே
அடி திஸ்போல் ரெயின் காலம் மை லைபில் கம்முமா
ரெயின் பேரட்டே ரெயின் பேரட்டே உன் ஐஸை சீத்தேனே
ஐஸ் வழியே ஐஸ் வழியே மீ மையை சீத்தேனே ............ ரெட்ஹனியே ...............



இது ஒரு தப்பா சார் ............. நான் இங்கிலீசு பேசுறது , பாடுறத பாத்து எல்லாரும் பொறாம புடிச்ச பேட் பீபுளா இருக்காங்க சார் .