எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, November 29, 2010

ங்கொய்யாலே தமிழனா கொக்கா ????

நல்ல காலை நேரத்தில , செராங்கூன் ரோட்டில (சிங்கபூர்) ‘தம்’ அடிச்சுட்டு நடந்து போயி அனுபவிச்சிருக்கீங்களா?.............இல்லையா?..

அடக்கொடுமையே.. வாழ்க்கையில இதெல்லாம் சிறுசிறு இனபம் சார்.

உடனே, ப்ளைட் டிக்கெட் புக் பண்ணி, போகப்பாருங்க.

இப்ப நான் சொல்லப்போவது, ஒருத்தரை பற்றி.. ஆனா யாருனு சொன்னா, ப..............டிய உருவிவிட்டு அடிப்பான். எனக்கு வன்முறைனாவே, கை கால் , பிரபு தேவா மாறி ஆடும்..

ஆனா, ஜனநாயக கடமைனு ஒண்ணு இருக்கே.. அதைப் பண்ணாட்டி, தெய்வக்குத்தம் ஆகிவிடுமோனு பயந்து, உயிர் பயமில்லாம இங்க பதியறேன்..

அன்று அப்படித்தான், அவரு, தம் அடிச்சுட்டு, அடுத்த எலெக்‌ஷம் முடிச்ஞதும், தமிழநாடு முன்னேறுமா?.. இல்ல பின்னேறுமானு தீவிர சிந்தனை பண்ணிக்கிட்டு போயிட்டு இருந்திருக்காரு..

தும்மல், வந்தா தும்மனும். பிகர் வந்தா சைட் அடிக்கணும் , கடன்காரன் வந்தா ஓடி ஒழியனும் .. அதுபோல, சிகரெட் குடிச்சு முடிஞ்சதும், என்ன பண்ணுவோம்?????.

தூக்கி வீசுவோம்.. (குட அலர்ட்டா தான் இருக்கீங்க )

சராசரி மனிதனா, அதைதான் பண்ணியிருக்காரு நம்ம தலைவரு..

ஆனா..வந்து சுத்தி வளைச்சிடானுக ஆபீஸர்ஸ்.. நம்ம தலைவரு.. என்னாடா, குண்டு வீசினமாறி பயப்பட்டு, இவ்வளவு பேர் வந்திருக்கானுக?. என்னா விசயம்னு கேட்க, அவனுக , ஒரு வெள்ளப்பேப்பர்ல, அவரு பேரு, வயசு..கட்டவேண்டிய பைன்னு எழுதி கொடுத்திட்டு , அடுத்த ஆளை பிடிக்க போயிட்டாங்க..


அவரும். சரி கர்மத்தை கட்டிடலாமுனு பார்த்தா, அய்யோ... $500..
(ஹா.ஹா.. ரெண்டாவது தடவை மாட்டினா, $500ஆம்.. முதல் முறை குற்றத்துக்கு , $300.. நம்ம தல, போன வருஷமே, மாட்டி, $300 கட்டின பார்ட்டி.. ”பழைச மறக்கனுமு”னு, பதிவுலகத்தில யாரோ சொன்னதை கேட்டு, அதையும் மறந்துவிட்டது போல.. ஹா.ஹா. )

விதி கொடியது.. கட்டலேனா, கோர்ட் போகனும் .. அங்க போனா, ஈசியா $2000 கட்டச்சொல்லுவாங்க.. வேற வழியில்லாம $ 500 கட்டுனாரு


இவனுகள எப்படிடா பழிவாங்குரதுன்னு நம்ம தலைவரு ரெண்டுநாள் ரூம் போட்டு யோசிச்சாரு . (ரெண்டுநாள் ரூம் வாடகை $1400 , பரவாயில்ல விடு நமக்கு மானம் தான முக்கியம் )

கடைசில பளீர்ன்னு மூளைல பலப் எரிஞ்சது , நேரா கிளம்பி சந்தோசா ஐலேண்ட் போனாரு , அங்க போயி நைசா பார்க்குள்ள ஒரு வாட்டு உச்சா போனாரு, அப்படியே ஒரு கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு(?????) ஒரு தம்ம போட்டாரு . இந்த தம்ம கரக்ட்டா டஸ்ட்டு பின்னுள்ள போட்டு மறுபடியும் அந்த பார்க்குள்ள போயி உச்சா போனாரு .

ஹா,ஹா.ஹா,............ இப்போ அவனுகளையும் பழிவாங்கியாச்சு , $700 டாலரும் மிச்சம் பண்ணியாச்சு . தக்காளி யாருகிட்ட விளயாடுரிங்க நாங்கல்லாம் தன்மான தமிழர்கள் ....விடுவமா ....ம்ம்ம்ம்ம்..........

எனக்கு மண்ட காஞ்சு போச்சு என்னா தல எப்படி $700 மிச்சம்ன்னு கேட்டேன் .....

அது வேற ஒன்னும் இல்லை இங்க உச்சா போனா முதல் வாட்டி $500 பைன் , ரெண்டாவது வாட்டு $1000 டாலர் பைன் , நான் பைன் கட்டாம ஏமாத்தி ரெண்டு வாட்டி உச்சா போயிட்டேன் . அப்போ நமக்கு $1500 லாபம் , முன்னாடி தம்மடிச்சதுக்கு $800 கட்டினேன் ....இப்ப கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்

அடங்....ங்கொன்னியா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக

Thursday, November 25, 2010

லிவிங் டுகெதர் (18 +)

உஸ்.................... அப்பா முடியல ..................... என்னத்த எழுத ................அதான் எல்லாம் பிரிச்சு மேஞ்சு , தொவைச்சு காயப்போட்டாங்க .

நாமளும் இதைப்பத்தி ஒரு பதிவு போட்டு எப்படியும் பிரபல பதிவரா ஆயிடனும்.

சீரியஸ்ஸா எழுதலாம்ன்னு பாத்தா நம்ம வெங்கட் போன் போட்டு கண்டபடி திட்ராப்ள அதுவும் கன்னடத்துல ............... ஏதோ கெட்ட வார்த்தைன்னு தெரியுது ஆனா அர்த்தம்தான் புரிய மாட்டேங்குது . கூட டெர்ரர் வேற அருவாளோட சுத்துறான்.

சரி காமடியா எழுதலாமுன்னா நம்ம பிராபள பிரபல வெளிநாட்டுப் பதிவர் ( பட்டாப்பட்டி தான் - ஆஃப் ரெகார்டா வச்சுக்கங்க,) வேற ஒழுங்கா தப்புல்லாம தமிழ்ல எழுதுடான்னு " @#@$@#%$" இப்படி திட்றாரு , அது என்ன லாங்குவேஜ்ன்னே தெரியல? ...அப்புறம் எப்படி அர்த்தம் புரியும் . நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பன்றேன், சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும் .

சரி என்னதான் மேட்டர் ,

லிவிங் டுகெதர் - அப்படின்னா ஆண்களும், பெண்களும் நிறையா பேரு காண்டம் பாக்கட்டோட வரிசைல நிக்கிறதா நிறைய பேரு நினச்சுகிட்டாங்க . இன்னைக்கு ஒரு ஆளோட செக்ஸ் , நாளைக்கு வேற ஆளோட செக்ஸ் அப்படின்னு எல்லாரும் செக்ஸ் மட்டுமே அடிப்படைன்னு நினைச்சுக்கிட்டு சண்டைக்கு வர்றாங்க.

அங்க யாரும் ஆறுமாசம்தான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று முடிவு செய்துகொண்டு வாழ்வதில்லை. அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது கடைசிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .ஆனால் அவர்களுடைய தனிமனித சுதந்திரம் சிறு கருத்து வேறுபாடு வந்தால் கூட பிரிந்து செல்லும் மனநிலையை தருகிறது . அவர்கள் அந்த வாழ்க்கையில் பழக்கப்பட்டவர்கள் .

நம் ஒரு தலைமுறையால் அவர்களது வாழ்க்கைமுறையில் உள்ள தவறுகளையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள முடியாது .

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் நம்மை மிகவும் ஈர்ப்பது அவர்களுடைய தனிமனித சுதந்திரம்தான் . நமது கலாச்சாரத்திலும் தனிமனித சுதந்திரம் , முக்கியமாக பெண்களுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது .

உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் , விதவைகள் மறுமணம் , விவாகரத்து இதெல்லாம் கலாச்சார சீரழிவுன்னு மிகக்கடுமையா எதிர்த்த காலம் போயி இப்ப உடன்கட்டை ஏறுதல் , பாலியல் திருமணம் செய்தாலோ விதவைகள் மறுமணம் , விவாகரத்து செய்வதை தடுத்தால் குற்றம்ன்னு அதுக்கு எதிரா சட்டமே கொண்டுவந்தாச்சு .

லிவிங் டுகெதர் தப்பாக போனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நமது திருமண முறையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சொந்த பந்த சுற்றத்தாரின் பாதுகாப்பு உண்டு .


இன்னும் நம்மிடம் உள்ள வரதச்சனை கொடுமைகள் , ஆணாதிக்கம் போன்றவற்றை தவிர்த்துவிட்டால் இன்னும் சிறப்பான வாழ்க்கைமுறை அமையும்.

நம்மால் நமது பருவத்தை தவிர , குழந்தைப்பருவம் , வயது முதிர்ந்த பருவங்களில் அவர்கள் வாழும் வாழ்க்கையை வாழமுடியாது .

ஆனால், பெண்கள் தங்கள் சுயமாக கடைசிவரை வாழும் நிலை வரும்போது நாம் விரும்பினாலும் , எதிர்த்தாலும் மாற்றங்கள் வந்தே தீரும்.


நீதி : ஹி.ஹி.ஹி......யாராவது புரிஞ்சா சொல்லுங்க
.

Tuesday, November 23, 2010

சரியான லூசுப் பசங்க சார்

ட்ரைன்ல ஊருக்கு போயிகிட்டு இருந்தேன் சார் , காலைல 10 மணிக்கு விழுப்புரம் ஸ்டேசன் வந்தது ,அட பதிவு போடுற டைம் ஆச்சேன்னு நானும் நேர டிரைவர் கிட்ட போயி சார் ஒரு அரைமணி நேரம் நில்லுங்க நான் போயி ஒரு பதிவு போட்டு வர்றேன் கேட்டேன் , அந்த ஆளு என்னைய ஏதோ பைத்தியத்த பாக்குற மாதிரி பாத்துட்டு ஸ்டேசன் மாஸ்டர் கிட்ட போயி கேட்க்க சொன்னாரு .

நானும் நேரா ஸ்டேசன் மாஸ்டர்கிட்ட போயி கேட்டேன் அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் , இதென்னடா வம்பாப் போச்சுன்னு அவரு பக்கத்துல இருந்த ஆளுகிட்ட கேட்டேன் , அவரு அதெல்லாம் நிக்க முடியாது சார் நீங்க வேணுமின்னா ட்ரைன் போயிகிட்டு இருக்கும் போதே பதிவு போட்டுக்கங்கன்னு சொன்னாரு .

சரியான லூசுப் பயலுக சார் , ட்ரைன்ல சிஸ்டத்த கொண்டுபோனா சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )

-----#####-----

அப்புறம் நம்ம பிரண்டு ஒரு பய சார் , கூடப் படிச்ச பய , சின்ன வயசுல நம்மள மாதிரி பிர்லியன்ட் கிடையாது , அவனுக்கு சரியா படிப்பு வராது . பாவம் 10th ல டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்டு மார்க் எடுத்து ஸ்கூலோட பேர கெடுத்துட்டான் . ஸ்கூல்ல அவனுக்கு +1 சீட்டு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க . அப்புறம் நாங்கல்லாம் போயி சாரி சார் இனிமே நல்லா படிப்பான்னு ரிகமன்ட் பண்ணி மறுபடியும் ஸ்கூல்ல சேத்தோம் .

அந்த பரதேசி பன்னாடப்பய மறுபடியும் +2 ல டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்டு வந்து மறுபடியும் ஸ்கூல் பேர நாரடிச்சிட்டான் . இது தெரிஞ்ச எங்க ஊரு காலேஜுல அவன சத்தியமா சேக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க . அப்புறம் என்ன நாங்க எங்க ஊரு காலேஜுல ஜாலியா படிச்சோம் , அவன் போயி மதுரைல ஏதோ மெடிகல் காலேஜாமே ?? அதுல சேந்தான் . பாவம் சார் எம்.பி.பி.எஸ் முடிச்ச உடன் நீ சரியா படிக்கிறதில்ல இன்னும் படிக்கனுமின்னு சொன்னாங்க , உடனே பி.ஜி எங்க காலேஜுல சேர வந்தான் . அப்பவும் சேக்கல , அப்புறம் வேற வழியில்லாம சென்னை மெடிகல் காலேஜுல எம்.எஸ் முடிச்சான் .

அதுக்கப்புறம் ஏதோ ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்காம் அத எழுதி ஸ்டேட் பஸ்ட்டு வந்து நம்ம ஸ்டேட்டையே அசிங்கப் படுத்திட்டான் . அப்புறம் கவுருமெண்ட்டு இனிமேயாவது ஒழுங்கா படின்னு ஏதோ கேன்சர பத்தி படிக்கிற படிப்பு குடுத்து இருக்காக .

அந்த முட்டாப் பய போன் பண்ணி கார் வாங்கி இருக்கேன் வாடா ஜாலியா வெளிய போயிட்டு வரலாமுன்னு சொன்னான் , சரிடா வாடான்னு சொன்னேன் , அவனும் கார எடுச்சுக்கிட்டு வந்தான் , காருக்குள்ள உட்காந்தா கிடுகிடுன்னு நடுங்குன் அவ்வளவு புல் ஏ.சி ஓடிகிட்டு இருக்கு . காசுவந்த கொழுப்புள இவ்ளோ ஏ.சி வச்சிருக்கான்னு அவன பாத்தா அவனும் நடுங்கிக்கிட்டு இருக்கான் .

டக்குன்னு ஏ.சிய குறைச்சேன் , அதுக்கு அவன் கேட்டாம் பாருங்க ஒரு கேள்வி ..............

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )

ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????