எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, November 3, 2010

தீபாவளி பரிசு மழை (மாட்னின்களா ?)



முஸ்கி : ஊரு உலகமே தீபாவளிக்கு பரிசு மற்றும் ஆஃபார் தர்றாங்க . அது தவிர பரிசு தந்தாத்தான மக்கள் வந்து போறாங்க , எனவே இந்த போட்டியும் பொறாமையும் புடிச்ச உலகத்தில பிரபல பதிவராகனுமின்னா நீயும் தீபாவளிக்கு பரிசு குடுத்தாதான் பிரபலபதிவராக முடியுமுன்னு நம்ம காரமட ஜோசியர் கனவுல வந்து சொன்னாருங்க .

------######--------

தித்திக்கும் தீபாவளிக்கு சிறப்பு பரிசுகள் , மங்குனி ப்ளாக் பாருங்கள் பரிசுகளை வெல்லுங்கள் , விசிட் செய்யும் அனைவருக்கும் நிச்சைய பரிசு ........

மங்குனி ப்ளாக் வழங்கும் பலகோடி ரூபாய் மதிப்பிலான தீபாவளி பரிசு மழை

* இந்த பதிவை படிப்பவர்களுக்கு அனைவருக்கு சாலமன் பாப்பையா அவர்கள் வழங்கும் எட்டாம் வகுப்பு கோனார் தமிழ் உரை நிச்சைய பரிசாக வழங்கப்படும்.

* காலை 12 மணிக்குள் படிப்பவர்களுக்கு 50 % சலுகையாக அசோக் லேலாண்ட் வழங்கும் அரைபாடி லாரி இலவசம் .

* முதல் பத்து கமன்ட் போடுபவர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை வழங்கும் அரை கிலோ அல்வா இலவசம்.

* தொடர்ச்சியாக மூன்று கமன்ட் போடுபவர்களுக்கு பனங்காட்டு நரி உபயோகிக்கும் நாத்தம்புடிச்ச நான்கு சோப்புக்கள் பரிசு .

* 50 100 மற்றும் 200 என கமன்ட் போடுபவர்களுக்கு பட்டாபட்டியின் படு கேவலமான திட்டுக்கள் இலவசம்.

* ஒட்டு போடும் அனைவருக்கும் சிரிப்புபோலீஸ் மாமா கடையிலிருந்து பட்டாசுகள் இலவசமாக திருடி தரப்படும் .

* கள்ள ஒட்டு போடும் நல்ல உள்ளங்களுக்கு நாயுடுஹால் வழங்கும் 40 பக்க கோடுபோட்ட நோட்டு பரிசாக வழங்கப்படும் .

* 5 கள்ள ஓட்டுக்கு மேல் ஒட்டு போடுபவர்கள் குழுக்கள் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஜெட் ஏர்வேஸ் வழங்கும் போயின் 747 விமானங்கள் இரண்டு பேருக்கு .

* படித்து விட்டு ஒட்டு போடாமல் செல்பவர்களது கன்னத்தில் நமது இன்சைஅரசன் பாபு அருவாளைக்கொண்டு செல்லமாக இரண்டு இழுப்பு இழுக்கப்படும்.

* மேலும் கமன்ட் போடாமல் செல்பவர்கள் காதில் காப்படி கட்டெறும்பு காம்பிளிமெண்டாக கவிழ்த்தப்படும்.


* தீபாவளியின் பம்பர் பரிசாக ஒரு அதிர்ஷ்ட்டசாலி குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மவுன்ட் ரோடு அஞ்சப்பர் அருகில் உள்ள கையேந்தி பவனில் ரெண்டு இட்லி கெட்டிசட்னி ஸ்பெசல் பரிசாக வாங்கித்தரப்படும்.

எனவே மக்களே பந்திக்கு முதுங்கள் படைக்கு பிந்துங்கள் (சே.... சாரி பாஸ் பழக்க தோசத்துல ஒரு புலோவுல வந்திருச்சு )

எனவே மக்களே மங்குனி ப்ளாக் படியுங்கள் பலகோடி மதிப்பிலான பரிசுகளை வெல்லுங்கள்.



Tuesday, November 2, 2010

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்

முஸ்கி : நாம் வெங்கட் லேட்டா வந்து கமன்ட் போட்டு , கடைசீல வந்திருச்சு பச்ட்டுல கொண்டுவான்னு (என்னா வில்லத்தனம் ) போன் பண்ணி ரொம்ப பீஃல் பண்ணாரு அதான் பதிவுலே பஸ்ட்டா மேல போட்டுட்டேன் . ஓகே வா வெங்கட்??? ...............

வெங்கட் said...

// ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் .//

இது சொன்னீங்களே.. இது ரொம்ப நியாயமான வார்த்தை.... உங்களால மட்டும் எப்படி இப்படி எல்லாம் Think பண்ண முடியுது..?
அமைச்சரே.. Really U R Great..!!
ஆனா பாருங்க.. உங்களை நான் பாராட்டி Comment போட்டு இருக்கேன்..அது ரொம்ப கீழே., 104வது Comment-ஆ வரப்போகுது.. அதான் ஒரே பீலிங்கா இருக்கு..!!
கொஞ்சம் நம்ம Comment மேல வர்ற மாதிரி எதாவது பாத்து பண்ண முடியுமா..?!!


-------@@@@@@------


அனைவருக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள் , அனேகமா எல்லாலும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல சந்தோசமாக ரெடியாகிகொண்டு இருப்பீர்கள்
.

இந்தியாவில் உள்ள மக்கள் அதிக ஆசையுடனும், சந்தோசத்துடனும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிதை தீபாவளி , இதற்காக வெளிஊர்களில் வேலை செய்யும் அனைவரும் தமது சொந்த பந்தத்துடன் சேர்ந்து பண்டிகை கொண்டாட ஆர்வத்துடனும் தமது சொந்த ஊருக்கு செல்கிறார்கள் .

தீபாவளிக்கு முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் மற்றும் பஸ்களின் டிக்கட்டுகளும் விற்று தீர்ந்தன , மக்களுக்கு அவ்வளவு ஆர்வம் ஆசை .


ஆனால் என்ன நடக்கிறது , தீபாவளி மற்றும் பண்டிகை தினத்தன்று காலை 6 மணிக்கு போடப்படும் டி.வி இரவு 12 மணி வரை ஓடிக்கொண்டுள்ளது . அதில் ஆயிரத்தெட்டு ஒன்னுக்கு உபயோகம் இல்லாத நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் . இதை தவிர்த்து..........


ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்களது அருமையான நேரத்தை வெட்டியாக விரயம் செய்யும் சாதனம் அது.


அந்தக்காலங்களில் அனேகமாக குடும்ப உறுப்பினர்கள் , மற்றும் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒரே ஊரில் இருப்பார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைய விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் பார்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருந்தது .

அனால் இப்போது அனைத்து குடும்பங்களிலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் வேலைநிமித்தம் காரணமாக தொலைதூர வெளியூர்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் , சொந்தபந்தங்களை அடிக்கொருமுறை பார்க்கமுடியாத சூழ்நிலை . ஊர்களில் நடக்கும் அனைத்து விசேசங்களுக்கு போயி வர முடியாத வேலைப்பளு, தூரம் .

இந்த நிலையில் தீபாவளிக்கு அனைவரும் தன சொந்த ஊருக்கு செல்கின்றார்கள் , சில பேர் தீபாவளிக்கு மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள் . அதிக பட்சம் இரண்டு மூன்று நாள் தங்கமுடிகிறது.

இந்த நிலையில் எவனோ கோடிக்கணக்கில் சம்பாரிக்க பொழுதுபோக்கு என்ற பெயரில் டி.வி சேனல்கள் உங்கள் நேரத்தை தின்று விடுகிறது. இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய ஒரு படத்தை நான்கரை மணிநேரம் ஓட்டும் திறமை அவர்களுக்கு மட்டுமே உண்டு .

எல்லாம் விளம்பரம் , விளம்பரம் , விளம்பரம் ...

இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. பத்து பைசா பிரயோஜனமும் இல்லை . உங்களை வைத்துக்கொன்ன்டு கோடிக்கணக்கில் டி.வி நிறுவனங்கள் சம்பாரிக்கின்றன .

இந்த முறை ஊருக்கு செல்பவர்கள் தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும் டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்கள் சொந்த பந்தங்கள் அனைவரையும் நேரில் சென்று பார்த்து வாழ்த்துக்களும் , இனிப்புகளும் வழங்குங்கள். முக்கியமா வயதான தாத்தா, பாட்டி போன்றவர்களை தேடிச்சென்று சந்தியுங்கள் . அவர்க உங்கள் வருகைக்காவே ஆவலோடு வருடம் முழுவது காத்துக்கோடு இருப்பார்கள் . டி.வியின் முன் கைதியாகாமல் அனைத்து குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள் .

இனி பண்டிகைகளை மனிதர்களோடு கொண்டாடுங்கள் , பொழுதுபோக்கு சாதனங்களோடு வேண்டாம் .

மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .


Monday, November 1, 2010

டைரடக்கர் டாக்குட்டர் விஜய்

முஸ்கி : கை விரல்களை மடக்கி நரம்புகள் முறுக்கேறி புடைக்க ஆவேசத்துடனும் ஒரு மாபெரும் மாஸ் ஹீரோவின் பில்டப்புடனும் கீழே உள்ள முதல் பாராவை படிக்கவும்.



(இளைய தளபதியின் மூன்று வயது போடோ )


இத்தாலி எனும் அந்நிய நாட்டு சதிக்கு எதிராக பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வந்து தடைகளை தனது இரும்ப்புக் கரங்களால் உடைத்தெறிந்து இந்தியாவை காக்க பிச்சுவா கத்தியால் தனது பெருவிரலை கீறி வந்த ரத்தத்தில் ஆக்ரோசமாக சூளுரைத்த நமது வீரத்தளபதி டாக்குட்டர் விஜய் அவர்களின் உலக மக்களை காக்க எடுக்கும் அடுத்த அவதாரம் தான்...........
(வரும் காலத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகக்கூடிய சேர் )

இப்ப கூல் பேபி கூல் , கூல் ........................டொன்ட்ட.. டொன்ட்ட.. டொன்ட்ட.... டொய்ய்ய்ய்ய்யின்...........


டைரடக்கர் டாக்குட்டர் விஜய்


(டைரடக்கர் டாக்குட்டர் விஜய் டைரக்சன் வியு பார்க்கும் அபூர்வ புகைப்படம் )



எங்க எல்லாரும் மூணுவாட்டி சத்தமா சொல்லுங்க ,வாழ்த்துகோசம் விண்ணைப் பிளக்க வேண்டும்

"
புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க "

"
புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க ,வாழ்க "

"புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க ,வாழ்க,வாழ்க "

நடிகனாக அவர் திருத்திய வில்லன்களும் அடித்து நொறுக்கிய அடியாள்களும் புரட்டி எடுத்த அரசியவாதிகளும் ன் உயிரையும் துச்சமென மதித்து காப்பாற்றிய ஏழைகளும்புடைசூழ, தனது புது அவதாரத்திர்க்குள் தனது காலை எடுத்து வைத்தார் டாக்குட்டர் விஜய்.

டைரடக்கர் டாக்குட்டர் விஜய்யுடன் ஒரு பேட்டி

(இனி பேட்டி முழுவதும் நமது டைரடக்கர் டாக்குட்டர் விஜய் அவர்கள் சுக்கமாகவும் , செல்லமாகவும் டை. டா. விஜய் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவார் )


"வணக்கம் டை. டா. விஜய் சார்"

"வணக்கம் , வணக்கம் "
.

"ஏன் சார் திடீரென்று இப்படி ஒரு புதிய அவதாரம் ?"

"இது என்னுடைய 50 ஆண்டு கால கனவு. "

"இந்த டை. டா. விஜய் அவதாரத்தின் நோக்கம் ?"

"இந்தியாவை வல்லரசாக்குவது"

"வல்லரசுன்னா ன்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்"

"சரி என்ன படம் டைரக்ட் பண்ண போறீங்க ?"

"யுவாங் சுவாங் , அப்படின்னு ஒரு சைனீஸ் படம் , அதுல சீன சுரங்கத்துல கஷ்டப்படுற எழைகள காப்பாத்த போற ஒரு தமிழ் நாட்டு படிப்பறிவில்லாத பட்டிகாட்டு இளைஞன் எப்படி அமெரிக்க ஜனாதிபதியா ஆகுராங்குறது தான் கதை ."
(ஹீரோ டா. விஜய்க்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் டை. டா. விஜய் )


"சீன மொழி படம் எப்படி தமிழ்ல ?"

"இல்லை இது சீன மொழியில் எடுக்கப்பட்ட முழுநீள தமிழ் படம் தான் ."

"ஹீரோ ??"

"வேற யாரு , நம்ம உலகப் புகழ் இளையதளபதியாகிய நானேதான் . "


(யுவாங் சுவாங் படத்தில் மாறுபட்ட கெட்டப்பில் டாக்குடர் விஜய் )


"கதை பத்தி இன்னும் ???"

"சீனாவுல இருக்க ஒரு சுரங்கத்துக்குள்ள தண்ணி புகுந்திடுது , நம்ம ஹீரோ இங்க இருந்து சைக்கிள்ள போயி சைடிஸ் , மிக்சிங் சோடா கூட இல்லாம அப்படியே ராவா எல்லா தண்ணியையும் குடிச்சிட்டு மட்டையாயிடுறார் . இங்கதான் கதையோட "நாட்" இருக்கு ."

"சார் ஹீரோயின் பத்தி ??"

"புதுமுகம்தான் தேடிக்கிட்டு இருக்கேன் , நம்ம பன்னிகுட்டி பதிவுல போட்ட அந்த மூணு பேருல ஒரு ஹீரோயின நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க . "
"அப்புறம் கிளைமாக்ஸ் பத்தி ?"

"எல்லாத்தையும் பேட்டியிலேயே சொல்ல முடியுமா ? மீதியை வெண்திரையில் காண்க "



டிஸ்கி: (இது ஆஃப தி ரிகார்டு யாருகிட்டயும் சொல்லிடாதிங்க) அடுத்த வருடம் யுவாங் சுவாங் படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்ற பின் பத்திரிக்கைகளுக்கு கொடுப்பத்தர்க்காக இப்பொழுதே எடுத்து வைக்கப்பட்டுள டை.டா .விஜய் அவர்களின் போடோ கீழே ...................




(ஊரு கண்ணு ஏன்? உலக கண்ணு பட்டு இருக்கு இப்பவே திருஷ்டி சுத்திபோடனும் )