எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, November 2, 2010

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்

முஸ்கி : நாம் வெங்கட் லேட்டா வந்து கமன்ட் போட்டு , கடைசீல வந்திருச்சு பச்ட்டுல கொண்டுவான்னு (என்னா வில்லத்தனம் ) போன் பண்ணி ரொம்ப பீஃல் பண்ணாரு அதான் பதிவுலே பஸ்ட்டா மேல போட்டுட்டேன் . ஓகே வா வெங்கட்??? ...............

வெங்கட் said...

// ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் .//

இது சொன்னீங்களே.. இது ரொம்ப நியாயமான வார்த்தை.... உங்களால மட்டும் எப்படி இப்படி எல்லாம் Think பண்ண முடியுது..?
அமைச்சரே.. Really U R Great..!!
ஆனா பாருங்க.. உங்களை நான் பாராட்டி Comment போட்டு இருக்கேன்..அது ரொம்ப கீழே., 104வது Comment-ஆ வரப்போகுது.. அதான் ஒரே பீலிங்கா இருக்கு..!!
கொஞ்சம் நம்ம Comment மேல வர்ற மாதிரி எதாவது பாத்து பண்ண முடியுமா..?!!


-------@@@@@@------


அனைவருக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள் , அனேகமா எல்லாலும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல சந்தோசமாக ரெடியாகிகொண்டு இருப்பீர்கள்
.

இந்தியாவில் உள்ள மக்கள் அதிக ஆசையுடனும், சந்தோசத்துடனும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிதை தீபாவளி , இதற்காக வெளிஊர்களில் வேலை செய்யும் அனைவரும் தமது சொந்த பந்தத்துடன் சேர்ந்து பண்டிகை கொண்டாட ஆர்வத்துடனும் தமது சொந்த ஊருக்கு செல்கிறார்கள் .

தீபாவளிக்கு முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் மற்றும் பஸ்களின் டிக்கட்டுகளும் விற்று தீர்ந்தன , மக்களுக்கு அவ்வளவு ஆர்வம் ஆசை .


ஆனால் என்ன நடக்கிறது , தீபாவளி மற்றும் பண்டிகை தினத்தன்று காலை 6 மணிக்கு போடப்படும் டி.வி இரவு 12 மணி வரை ஓடிக்கொண்டுள்ளது . அதில் ஆயிரத்தெட்டு ஒன்னுக்கு உபயோகம் இல்லாத நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் . இதை தவிர்த்து..........


ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்களது அருமையான நேரத்தை வெட்டியாக விரயம் செய்யும் சாதனம் அது.


அந்தக்காலங்களில் அனேகமாக குடும்ப உறுப்பினர்கள் , மற்றும் சொந்த பந்தங்கள் அனைவரும் ஒரே ஊரில் இருப்பார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் நிறைய விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளில் பார்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருந்தது .

அனால் இப்போது அனைத்து குடும்பங்களிலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் வேலைநிமித்தம் காரணமாக தொலைதூர வெளியூர்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் , சொந்தபந்தங்களை அடிக்கொருமுறை பார்க்கமுடியாத சூழ்நிலை . ஊர்களில் நடக்கும் அனைத்து விசேசங்களுக்கு போயி வர முடியாத வேலைப்பளு, தூரம் .

இந்த நிலையில் தீபாவளிக்கு அனைவரும் தன சொந்த ஊருக்கு செல்கின்றார்கள் , சில பேர் தீபாவளிக்கு மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள் . அதிக பட்சம் இரண்டு மூன்று நாள் தங்கமுடிகிறது.

இந்த நிலையில் எவனோ கோடிக்கணக்கில் சம்பாரிக்க பொழுதுபோக்கு என்ற பெயரில் டி.வி சேனல்கள் உங்கள் நேரத்தை தின்று விடுகிறது. இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய ஒரு படத்தை நான்கரை மணிநேரம் ஓட்டும் திறமை அவர்களுக்கு மட்டுமே உண்டு .

எல்லாம் விளம்பரம் , விளம்பரம் , விளம்பரம் ...

இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. பத்து பைசா பிரயோஜனமும் இல்லை . உங்களை வைத்துக்கொன்ன்டு கோடிக்கணக்கில் டி.வி நிறுவனங்கள் சம்பாரிக்கின்றன .

இந்த முறை ஊருக்கு செல்பவர்கள் தீபாவளி அன்று ஒரு நாள் மட்டும் டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்கள் சொந்த பந்தங்கள் அனைவரையும் நேரில் சென்று பார்த்து வாழ்த்துக்களும் , இனிப்புகளும் வழங்குங்கள். முக்கியமா வயதான தாத்தா, பாட்டி போன்றவர்களை தேடிச்சென்று சந்தியுங்கள் . அவர்க உங்கள் வருகைக்காவே ஆவலோடு வருடம் முழுவது காத்துக்கோடு இருப்பார்கள் . டி.வியின் முன் கைதியாகாமல் அனைத்து குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை விளையாட விடுங்கள் .

இனி பண்டிகைகளை மனிதர்களோடு கொண்டாடுங்கள் , பொழுதுபோக்கு சாதனங்களோடு வேண்டாம் .

மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .


125 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the first sudu soru enekkee

கருடன் said...

present :)

Arun Prasath said...

உள்ளேன் அய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

yes sir!

மங்குனி அமைச்சர் said...

டே......இங்க என்ன ஆர்மிக்கு ஆளஎடுக்குறாங்க??? , எல்லாம் அட்டன்டன்ஸ் போடுராணுக

மங்குனி அமைச்சர் said...

நானும் ஆஜர் சார்

Chitra said...

சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்களது அருமையான நேரத்தை வெட்டியாக விரையம் செய்யும் சாதனம் அது.


...... a very good message - much needed one too.... :-)

Arun Prasath said...

நீர் அறிவாளி அமைச்சர் அப்டின்னு நிரூபிச்சுடீரு, சரியான தீர்ப்பு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரு இப்பத்தான் நாட்டு மக்களப்பத்தியும் கவலப்படுறாரு!

S Maharajan said...

உள்ளேன் அய்யா!yes sir!நானும் ஆஜர் சார்!

//"தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்"//

அருமையான கருத்து!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அமைச்சரே!

இம்சைஅரசன் பாபு.. said...

இந்த ஒன்னாம் வகுப்பு பையன யாரு உள்ள விட்டது ..........
வீட்டுல பொய் அப்பவ கூட்டிட்டு வந்த உள்ள விட்ட போதும் 11 மணிக்கு வந்து present சார் சொல்லுறன் .......

ராஜகோபால் said...

அப்ப தலைவர் படத்த பாக்க கூடாதுன்னு சொல்லுர.,

Unknown said...

மெசேஜ் சொல்றாராமா

NaSo said...

மங்குனி உங்களுடைய தீர்க்கதரிசன பதிவைப் பாராட்டுகிறேன்.

எஸ்.ஆர்.சேகர் said...

fantastic--இதுவரை தமாஷாக சொல்லிவந்த தம்பி மங்குன்னி அமைச்சரே இன்று முதல் நீ மங்குன்னி பிரதமராக நியமிக்கப்படிகிறாய்.ப்ளீஸ் தயவு செய்து மறுக்காதே--நல்ல கருத்து--ஆழமான “பஞ்ச்”--மனசுல ஒரச்சா சரி

Anonymous said...

தீபாவளிக்கு நமீதாவோட சிறப்பு பேட்டி போட்றானாமே.. மங்குனிக்கு தெரியாதுனு நெனக்கிறேன்..

செல்வா said...

உண்மையாவே நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க .
அதிலும் தாத்தா பாட்டி பத்தி சொன்னது நல்லா இருக்கு ..
இதுக்காகவெல்லாம் கும்மி அடிக்காம இருக்க மாட்டோம் ..
எல்லோரும் வாங்க ..

Unknown said...

வாந்தது வந்தோம்
எதையவுது கொளித்துவிட்டுடு போவோம்
இவர்களில் எவருக்கெல்லாம் மங்குனி ஒன்று விட்ட அண்ணன் முறை ஆக வேண்டும்
அ)நமீதா
ஆ)தமன்னா
இ)அசின்
ஈ)கண்ணாம்பாள்
உ)அனைவருக்கும்

பின் குறிப்பு :
வர போகும் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு கேட்ட்கபடவுள்ள முதல் கேள்வி

ராஜகோபால் said...

யாரு டிவி பாக்காம இருக்க நா ஒரு ஐடியா சொல்லுடா., எல்லா டிவியும் மங்குனி தலைமைல கைப்பற்றி

உலக தொலைகாட்சிககளில் முதல் முறையாகா அனைத்து டிவியிலயும்

Dr.விஜய்-இன் சுறா,வேட்டைக்காரன், வில்லு,குருவி,ஆதி

என வருசயாக இந்த அற்புத படங்களை மக்களுக்கு வருந்து விப்போம் விளம்பரம் இல்லாமல்.

vinu said...

enaiyum aataththukku serthikkangapaaaa - me 20thuuuuuuuu

Unknown said...

very good message

vinu said...

இந்திரா said...
தீபாவளிக்கு நமீதாவோட சிறப்பு பேட்டி போட்றானாமே.. மங்குனிக்கு தெரியாதுனு நெனக்கிறேன்..


anthaa pettiyai manguni mattumeaa thaniyaaga paarkka seaiythaa velinaattu sathiyee intha pathivu endru ,thaalmaiyaaga aandorum sandorum nirainthulla ipperaviyil theriviththuk kolgiren

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

சொந்த பந்தங்களுடன் சேர்ந்து தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் , அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில் உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் . உங்களது அருமையான நேரத்தை வெட்டியாக விரையம் செய்யும் சாதனம் அது.


...... a very good message - much needed one too.... :-)
////

thank you

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

நீர் அறிவாளி அமைச்சர் அப்டின்னு நிரூபிச்சுடீரு, சரியான தீர்ப்பு....///

சொம்ம்பு இல்லை ,மரத்தடி இல்லை எப்படி தீர்ப்பு மட்டும் வந்துச்சு ????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரு இப்பத்தான் நாட்டு மக்களப்பத்தியும் கவலப்படுறாரு!////

எப்படியாவது டி.வி காரனுக்க கிட்ட கமிசன் வாங்கலாம்ன்னு ஒரு முயற்ச்சிதான்

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

உள்ளேன் அய்யா!yes sir!நானும் ஆஜர் சார்!

//"தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்"//

அருமையான கருத்து!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அமைச்சரே!////

ரொம்ப நன்றி மகாராஜன் சார்

மங்குனி அமைச்சர் said...

ராஜகோபால் said...

அப்ப தலைவர் படத்த பாக்க கூடாதுன்னு சொல்லுர.,////

தலைவர எபவேனாலும் பாத்துக்கல்லாம்

'பரிவை' சே.குமார் said...

//பண்டிகைகளை மனிதர்களோடு கொண்டாடுங்கள் , பொழுதுபோக்கு சாதனங்களோடு வேண்டாம் .//

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை அமைச்சரே...
தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்ப அன்பர்களுக்கும்.

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

மெசேஜ் சொல்றாராமா////

ஹி.ஹி.ஹி....... போறாம . வயித்தெரிச்சல்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி உங்களுடைய தீர்க்கதரிசன பதிவைப் பாராட்டுகிறேன்.////

//தீர்க்கதரிசன///....... என்னமா தமிழ் வார்த்தை யூஸ் பண்றானுக ?????

மங்குனி அமைச்சர் said...

எஸ்.ஆர்.சேகர் said...

fantastic--இதுவரை தமாஷாக சொல்லிவந்த தம்பி மங்குன்னி அமைச்சரே இன்று முதல் நீ மங்குன்னி பிரதமராக நியமிக்கப்படிகிறாய்.ப்ளீஸ் தயவு செய்து மறுக்காதே--நல்ல கருத்து--ஆழமான “பஞ்ச்”--மனசுல ஒரச்சா சரி////


ரொம்ப நன்றி சேகர் சார்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

தீபாவளிக்கு நமீதாவோட சிறப்பு பேட்டி போட்றானாமே.. மங்குனிக்கு தெரியாதுனு நெனக்கிறேன்..////

தட் ஓல்ட் ஆண்டி , அது வேஸ்ட்டு மேடம் , இப்ப லேட்டஸ்ட் ஏதாவது பேட்டி இருக்கா ???? (டக்குன்னு பதிவ உல்டாவா மாத்திடலாம் )

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

உண்மையாவே நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க .
அதிலும் தாத்தா பாட்டி பத்தி சொன்னது நல்லா இருக்கு ..
இதுக்காகவெல்லாம் கும்மி அடிக்காம இருக்க மாட்டோம் ..
எல்லோரும் வாங்க ..///

ஸ்டார்ட் மூசிக் ..............

NaSo said...
This comment has been removed by the author.
NaSo said...

//உலக தொலைகாட்சிககளில் முதல் முறையாகா அனைத்து டிவியிலயும்

Dr.விஜய்-இன் சுறா,வேட்டைக்காரன், வில்லு,குருவி,ஆதி

என வருசயாக இந்த அற்புத படங்களை மக்களுக்கு வருந்து விப்போம் விளம்பரம் இல்லாமல்.//

மேலும் TR, சாம் ஆண்டர்சன் போன்றவர்களின் படங்களையும் போடலாம்.

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

வாந்தது வந்தோம்
எதையவுது கொளித்துவிட்டுடு போவோம்
இவர்களில் எவருக்கெல்லாம் மங்குனி ஒன்று விட்ட அண்ணன் முறை ஆக வேண்டும்
அ)நமீதா
ஆ)தமன்னா
இ)அசின்
ஈ)கண்ணாம்பாள்
உ)அனைவருக்கும்

பின் குறிப்பு :
வர போகும் கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு கேட்ட்கபடவுள்ள முதல் கேள்வி////

மணிவண்ணன் சார் , பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டயல்டு , நீங்கள் டயல் செய்த எண்னை சரிபார்க்கவும்

மங்குனி அமைச்சர் said...

ராஜகோபால் said...

யாரு டிவி பாக்காம இருக்க நா ஒரு ஐடியா சொல்லுடா., எல்லா டிவியும் மங்குனி தலைமைல கைப்பற்றி

உலக தொலைகாட்சிககளில் முதல் முறையாகா அனைத்து டிவியிலயும்

Dr.விஜய்-இன் சுறா,வேட்டைக்காரன், வில்லு,குருவி,ஆதி

என வருசயாக இந்த அற்புத படங்களை மக்களுக்கு வருந்து விப்போம் விளம்பரம் இல்லாமல்.////

இது நல்ல ஐடியா சார் , அத்தோட எல்லாரும் வீட்டுல டி.விய போட்டு உடைச்சிருவாங்க அப்புறம் டி.வி தொந்திரவு இருக்காது

மங்குனி அமைச்சர் said...

vinu said...

enaiyum aataththukku serthikkangapaaaa - me 20thuuuuuuuu////

வந்தமா விளையாண்டமான்னு இல்லாம இடைல என்ன கேள்வி ???

மங்குனி அமைச்சர் said...

swathi said...

very good message////

thank you swathi

செல்வா said...

//Dr.விஜய்-இன் சுறா,வேட்டைக்காரன், வில்லு,குருவி,ஆதி//

கலைஞ்சர் டிவில சிவாஜி போடுறாங்க .

மங்குனி அமைச்சர் said...

vinu said...

இந்திரா said...
தீபாவளிக்கு நமீதாவோட சிறப்பு பேட்டி போட்றானாமே.. மங்குனிக்கு தெரியாதுனு நெனக்கிறேன்..


anthaa pettiyai manguni mattumeaa thaniyaaga paarkka seaiythaa velinaattu sathiyee intha pathivu endru ,thaalmaiyaaga aandorum sandorum nirainthulla ipperaviyil theriviththuk kolgiren////

வெளிநாட்டு சதியா ??? இருக்கும் , இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

//பண்டிகைகளை மனிதர்களோடு கொண்டாடுங்கள் , பொழுதுபோக்கு சாதனங்களோடு வேண்டாம் .//

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை அமைச்சரே...
தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்ப அன்பர்களுக்கும்.////

thank you kumar sir and wish you tha same

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//உலக தொலைகாட்சிககளில் முதல் முறையாகா அனைத்து டிவியிலயும்

Dr.விஜய்-இன் சுறா,வேட்டைக்காரன், வில்லு,குருவி,ஆதி

என வருசயாக இந்த அற்புத படங்களை மக்களுக்கு வருந்து விப்போம் விளம்பரம் இல்லாமல்.//

மேலும் TR, சாம் ஆண்டர்சன் போன்றவர்களின் படங்களையும் போடலாம்.////

இப்படியே நாலுநாள் போட்டா அப்புறம் மொத்தமா ரிலாக்ஸ் ஆகிடலாம்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//Dr.விஜய்-இன் சுறா,வேட்டைக்காரன், வில்லு,குருவி,ஆதி//

கலைஞ்சர் டிவில சிவாஜி போடுறாங்க .////

பாருங்க பொங்கலுக்கு என்திரன் போடுவானுக

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையான தேவையான பதிவு..தக்க சமயத்தில்..

Ramesh said...

மங்குனிக்கு திடீர்னு என்ன ஆச்சு.. மக்களுக்கு மெசேஜா அள்ளித் தெளிக்கறாரு...

நல்ல மெசேஜ்

தனி காட்டு ராஜா said...

//தீபாவளிக்கு நமீதாவோட சிறப்பு பேட்டி போட்றானாமே.. //

//கலைஞ்சர் டிவில சிவாஜி போடுறாங்க .//

//இனி பண்டிகைகளை மனிதர்களோடு கொண்டாடுங்கள் , பொழுதுபோக்கு சாதனங்களோடு வேண்டாம் .//


அது அவரவர் விருப்பம் .....நீங்கள் இப்படிதான் விரும்பவேண்டும் என விருப்பதை திணிக்காமல் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் :)

p said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)

Think Tank said...

கட்டுக் கதையில் தமிழனை கொன்ற தினம்
தமிழர்களின் உணர்வுகளை குழிதோண்டி புதைத்த தினம்
மக்களின் அன்றாட சம்பாத்தியத்தை பட்டாசுகலுக்கும் புஷ்வனத்திர்க்கும் கரியாக்கி இரையாக்கும் தினம்.
வடமொழிக் கொள்கைகள் தமிழகத்தில் ஊடுறுவிய தினம்
இந்தியாவின் போலி சனநாயகத்தின் மாதிரி வடிவம்தான் இந்த தீப ஒளியும், மட்டை விளையாட்டும்,

கர்நாடக காரன் (ஹிந்து வெறி பிடிச்ச பிஜேபி அரசு) தமிழகத்திற்கு தண்ணி தர மறுக்கின்றான்
கருணாநிதியோ கர்நாடக காரன் நடித்த படத்திற்கு வாழ்த்து பாடி கொண்டு இருகின்றான்

karthikkumar said...

அமைச்சரின் இந்த சமூக பற்று என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது

செல்வா said...

//அது அவரவர் விருப்பம் .....நீங்கள் இப்படிதான் விரும்பவேண்டும் என விருப்பதை திணிக்காமல் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் :)//

ஐயோ அவரு விருப்பத்த திநிக்களைங்க .. உண்மையா சொன்னாரு ...

karthikkumar said...

ச்சே 50 போச்சே இதுக்காகத்தானே முன்னாடி ஒரு கமென்ட் போட்டேன் so sad

செல்வா said...

//ச்சே 50 போச்சே இதுக்காகத்தானே முன்னாடி ஒரு கமென்ட் போட்டேன் so சட/

விடுங்க விடுங்க ..

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையான தேவையான பதிவு..தக்க சமயத்தில்..
////

ரொம்ப நன்றி அமுதா கிருஷ்ணா மேடம்

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் ரமேஷ் said...

மங்குனிக்கு திடீர்னு என்ன ஆச்சு.. மக்களுக்கு மெசேஜா அள்ளித் தெளிக்கறாரு...

நல்ல மெசேஜ்////

thank you ramesh

மங்குனி அமைச்சர் said...

தனி காட்டு ராஜா said...

//தீபாவளிக்கு நமீதாவோட சிறப்பு பேட்டி போட்றானாமே.. //

//கலைஞ்சர் டிவில சிவாஜி போடுறாங்க .//

//இனி பண்டிகைகளை மனிதர்களோடு கொண்டாடுங்கள் , பொழுதுபோக்கு சாதனங்களோடு வேண்டாம் .//


அது அவரவர் விருப்பம் .....நீங்கள் இப்படிதான் விரும்பவேண்டும் என விருப்பதை திணிக்காமல் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் :)////

நம்ம செல்வகுமார் சொன்னது மாதிரி , எனக்கு தோன்றியதை சொன்னேன் , யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது . அவரவர் விருப்பம் தான்.

மங்குனி அமைச்சர் said...

sethupathy said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)///

thank you sethupathy wish you tha same

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி வாழ்க.. ஏய்யா.. நேற்று அடிச்சது இன்னும் இறங்கலையா?..

தத்துவமா பொழியறே..

உம்.. நல்லாத்தான் சொல்லியிருக்கே,


தீபாவளி முடிஞ்சதும், டீவி பார்க்கலாமானு சொல்லாம போயிட்டியே ராசா.. இது ஒரு நல்ல குடி(?) மகனுக்கு அழகில்லையே

மங்குனி அமைச்சர் said...

உண்மைவிரும்பி said...

கட்டுக் கதையில் தமிழனை கொன்ற தினம்
தமிழர்களின் உணர்வுகளை குழிதோண்டி புதைத்த தினம்
மக்களின் அன்றாட சம்பாத்தியத்தை பட்டாசுகலுக்கும் புஷ்வனத்திர்க்கும் கரியாக்கி இரையாக்கும் தினம்.
வடமொழிக் கொள்கைகள் தமிழகத்தில் ஊடுறுவிய தினம்
இந்தியாவின் போலி சனநாயகத்தின் மாதிரி வடிவம்தான் இந்த தீப ஒளியும், மட்டை விளையாட்டும்,

கர்நாடக காரன் (ஹிந்து வெறி பிடிச்ச பிஜேபி அரசு) தமிழகத்திற்கு தண்ணி தர மறுக்கின்றான்
கருணாநிதியோ கர்நாடக காரன் நடித்த படத்திற்கு வாழ்த்து பாடி கொண்டு இருகின்றான்////

சார் , எல்லா இடத்திலும் மாற்றுக்கருத்து உண்டு . இது ஒரு ஜெனரலான விஷயம் , பண்டிகைகளின் ஆதி நகத்தை தோண்டி துருவி பாத்தோம் என்றால் பல கேள்விகள் வரும் , இப்போதைக்கு மக்கள் இதை விரும்பி சந்தோசமாக கொண்டாடுகிறார்கள் . அவ்வளவே ...

தனி காட்டு ராஜா said...

//ஐயோ அவரு விருப்பத்த திநிக்களைங்க .. உண்மையா சொன்னாரு ...//



ம்.....அட .......இதுக்கு பேரு தான் Universal Truth -ங்களா :)

உண்மை பொய் எல்லாம் ஒன்றும் இல்லை ......அவரவர் விருப்பத்துக்கு கொண்டாடுவோம்......:)

நமிதா பேட்டியை பார்க்க வேண்டாம் ....சிவாஜி (The boss ) படத்தை பார்க்க வேண்டாம் என்று மறைமுகமாக ஊர்க்கு உபதேசம் செய்யும் மங்குனி அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன் :))

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

அமைச்சரின் இந்த சமூக பற்று என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது////

பத்து சார் , போர்வை போத்திக்காங்க , முடியெல்லாம் கொட்டிட போகுது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நேரத்தை வெட்டியாக விரையம் செய்யும் சாதனம் அது.

//


யோவ்.. வென்று.. அதுக்கு பேரு விரயம்..

ஒரே நிமிசத்தில் திசக்காட்டி ரோஸ்விக் உடன் கை கோர்க்கப்பார்த்தியே..

முழிக்காதே...
அது கடைசியா எழுதின பதிவு

”ஒரு விறைவீக்கக்காரனின் வீரம்”

Arun Prasath said...

//நீர் அறிவாளி அமைச்சர் அப்டின்னு நிரூபிச்சுடீரு, சரியான தீர்ப்பு....///

//சொம்ம்பு இல்லை ,மரத்தடி இல்லை எப்படி தீர்ப்பு மட்டும் வந்துச்சு ????//

அமைச்சரே உங்கள புகழ்ந்து பேசலாம் னு நெனச்சா, கால வாரி விடறீங்களே

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்குனி வாழ்க.. ஏய்யா.. நேற்று அடிச்சது இன்னும் இறங்கலையா?..

தத்துவமா பொழியறே..

உம்.. நல்லாத்தான் சொல்லியிருக்கே,


தீபாவளி முடிஞ்சதும், டீவி பார்க்கலாமானு சொல்லாம போயிட்டியே ராசா.. இது ஒரு நல்ல குடி(?) மகனுக்கு அழகில்லையே////

வாப்பு , தெளிவா இருக்க மாதிரி தெரியுது ???? தப்பாச்சே .....

மங்குனி அமைச்சர் said...

தனி காட்டு ராஜா said...

//ஐயோ அவரு விருப்பத்த திநிக்களைங்க .. உண்மையா சொன்னாரு ...//



ம்.....அட .......இதுக்கு பேரு தான் Universal Truth -ங்களா :)

உண்மை பொய் எல்லாம் ஒன்றும் இல்லை ......அவரவர் விருப்பத்துக்கு கொண்டாடுவோம்......:)

நமிதா பேட்டியை பார்க்க வேண்டாம் ....சிவாஜி (The boss ) படத்தை பார்க்க வேண்டாம் என்று மறைமுகமாக ஊர்க்கு உபதேசம் செய்யும் மங்குனி அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன் :))////

ஆமா சார் , நானும் கடுங் கோபத்துடன் , வன்மையாக கண்டிக்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அது அவரவர் விருப்பம் .....நீங்கள் இப்படிதான் விரும்பவேண்டும் என விருப்பதை திணிக்காமல் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம் :)
//

அப்படித்தாண்ணே.. இன்னும் ராவா போடுங்க..
நாம போயி தலை தீபாவளி கொண்டாடலாம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

நேரத்தை வெட்டியாக விரையம் செய்யும் சாதனம் அது.

//


யோவ்.. வென்று.. அதுக்கு பேரு விரயம்..

ஒரே நிமிசத்தில் திசக்காட்டி ரோஸ்விக் உடன் கை கோர்க்கப்பார்த்தியே..

முழிக்காதே...
அது கடைசியா எழுதின பதிவு

”ஒரு விறைவீக்கக்காரனின் வீரம்”////

வாங்க நக்கீரரே , மாத்திடுறேன் (எப்படா மாட்டுவானுகன்னு அலையுராணுக )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாங்க நக்கீரரே , மாத்திடுறேன் (எப்படா மாட்டுவானுகன்னு அலையுராணுக )
//

எப்படா இல்லை... எப்”பட்டா”.. ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

//நீர் அறிவாளி அமைச்சர் அப்டின்னு நிரூபிச்சுடீரு, சரியான தீர்ப்பு....///

//சொம்ம்பு இல்லை ,மரத்தடி இல்லை எப்படி தீர்ப்பு மட்டும் வந்துச்சு ????//

அமைச்சரே உங்கள புகழ்ந்து பேசலாம் னு நெனச்சா, கால வாரி விடறீங்களே///

அதான் ஒத்த காலுல அவ்ளோ பெரிய பைக்க பேலன்ஸ் பண்ணி ஸ்ட்றாங்க நிக்குரின்களே

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

வாங்க நக்கீரரே , மாத்திடுறேன் (எப்படா மாட்டுவானுகன்னு அலையுராணுக )
//

எப்படா இல்லை... எப்”பட்டா”.. ஹி..ஹி
///

சாரி நான் கொஞ்சம் டிங்கரிங் , "பட்டி" பாக்காம கமன்ட் போட்டுட்டேன்

வெட்டிப்பேச்சு said...

மனித உறவுகளை வளர்க்க உதவும் வகையிலான இந்தப் பதிவு மிகவும் மதிக்கத்தக்கது..

அமைச்சரே.. வாழ்த்துக்கள்..

God Bless You

Praveenkumar said...

மங்குனியாரே..! தங்களது பயனுள்ள சிந்திக்கவைக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..! பட்டாசுடன் சரவெடியாய் கலக்குங்க..!!!

எஸ்.கே said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி மங்குனி தாத்தா. தீபாவளி வாழ்த்துக்கள்

Ahamed irshad said...

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்//

உங்க‌ள‌ பார்த்து எதிர் வீட்டுக்கார‌ரு சொன்னாரா ம‌ங்குனி..

vinu said...

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்"


paththaathu manithathoodum kondaada vendum, naalu peru[manguni,pattapatti, panikutti, sirippu polisu]pattiniyaa kidakkura areala poi kaalailathaan naan virunthu saaputtu vantheannu sollurathu eppudi oru vanmurai illatha vanmuraiyoo athu pola namathu akkam pakkaththukaarargal eatheenum sogaththi irrukaiyil poi dewali vaalthukkal solvathum; soo manthm malarattum; magailchi pongattum;

vinu said...

manitham malarattum; magailchi pongattum;

vinu said...

manitham malarattum; magilchi pongattum;

என்னது நானு யாரா? said...

மங்குனிக்கு எவ்வள்வு அறிவுப் பாரேன். இவ்வளவு அறிவு எப்படி திடீர்ன்னு மங்குனி அவர்களே! டீவிக்கிட்ட இருக்கிற காந்தம் ரொம்ப பவுர்ஃபுள். யார் என்ன சொன்னாலும் மக்களுக்கு இருக்கிற சினிமா மோகம் இருக்கிற வரைக்கும் டீவியை விடப்போவதில்லை. அன்னைக்கு வருகிற விருந்தாளிகளைத் தான் இடைஞ்சலாக நினைப்பார்கள். எல்லாம் காலம் செய்கிற கோலம்....ம்ம்ம்ம்ம்

உங்க ஆட்சிகாலத்திலாவது இதெல்லாம மாறுகிறதா பார்க்கலாம்.

Madhavan Srinivasagopalan said...

//ஒரு படத்தை நான்கரை மணிநேரம் ஓட்டும் திறமை அவர்களுக்கு மட்டுமே உண்டு . //

குறைவாக மதிப்பிட்ட மங்குனி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..
'ஐந்தரை அல்லது ஆறு'தான் சரி.

தெளிவா சொல்லிட்டேங்க, தலை... சூப்பரு.

சுந்தரா said...

ரொம்ப அவசியமான அறிவுரை அமைச்சரே...
மக்கள் கடைப்பிடிக்கிறாங்களான்னு பாப்போம் :)

சுந்தரா said...

ரொம்ப அவசியமான அறிவுரை அமைச்சரே...
மக்கள் கடைப்பிடிக்கிறாங்களான்னு பாப்போம் :)

suneel krishnan said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் .
உண்மையிலயே உபயோகமான பதிவு

அருண் பிரசாத் said...

சாரி சார் நான் கிளாஸ்க்கு ரொம்ப லேட்டா வந்துட்டேன்...

நோ...நோ bad words

நல்ல பதிவு... இதை நான் விநாயக சதூர்த்திக்கே சொல்லிட்டேன் ஒரு பயலும் கேக்க மாட்டரான்... நீங்க அரசானை பிறப்பிய்யுங்கள்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

மனித உறவுகளை வளர்க்க உதவும் வகையிலான இந்தப் பதிவு மிகவும் மதிக்கத்தக்கது..

அமைச்சரே.. வாழ்த்துக்கள்..////

நன்றி வெட்டிப்பேச்சு சார்

மங்குனி அமைச்சர் said...

பிரவின்குமார் said...

மங்குனியாரே..! தங்களது பயனுள்ள சிந்திக்கவைக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..! பட்டாசுடன் சரவெடியாய் கலக்குங்க..!!!////

நன்றி, நன்றி, நன்றி ...........wish you the same

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!////

thank you s.k

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி மங்குனி தாத்தா. தீபாவளி வாழ்த்துக்கள்////

சிங்கையில் ஆப்பு தேடிப்போகும் ரமேஸ் வாழ்க

மங்குனி அமைச்சர் said...

அஹமது இர்ஷாத் said...

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்//

உங்க‌ள‌ பார்த்து எதிர் வீட்டுக்கார‌ரு சொன்னாரா ம‌ங்குனி..////

பப்ளிக் , பப்ளிக் .... இந்த மாதிரி விசயத்தையெல்லாம் இப்படி பப்ளிக்ல சொல்லக்கூடாது அஹமது இர்ஷாத்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

தீபாவளியை மனிதர்களோடு கொண்டாடுங்கள்"


paththaathu manithathoodum kondaada vendum, naalu peru[manguni,pattapatti, panikutti, sirippu polisu]pattiniyaa kidakkura areala poi kaalailathaan naan virunthu saaputtu vantheannu sollurathu eppudi oru vanmurai illatha vanmuraiyoo athu pola namathu akkam pakkaththukaarargal eatheenum sogaththi irrukaiyil poi dewali vaalthukkal solvathum; soo manthm malarattum; magailchi pongattum;////

good one vinu

மங்குனி அமைச்சர் said...

vinu said...

manitham malarattum; magilchi pongattum;////

அனைவருக்கு வாழ்த்துகள்

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

மங்குனிக்கு எவ்வள்வு அறிவுப் பாரேன். இவ்வளவு அறிவு எப்படி திடீர்ன்னு மங்குனி அவர்களே! டீவிக்கிட்ட இருக்கிற காந்தம் ரொம்ப பவுர்ஃபுள். யார் என்ன சொன்னாலும் மக்களுக்கு இருக்கிற சினிமா மோகம் இருக்கிற வரைக்கும் டீவியை விடப்போவதில்லை. அன்னைக்கு வருகிற விருந்தாளிகளைத் தான் இடைஞ்சலாக நினைப்பார்கள். எல்லாம் காலம் செய்கிற கோலம்....ம்ம்ம்ம்ம்

உங்க ஆட்சிகாலத்திலாவது இதெல்லாம மாறுகிறதா பார்க்கலாம்./////

உண்மை தான் சார் , அதை ஜெயிப்பது சுலபமில்லை , நம்மால் முடிந்த சிறு முயற்சி

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

//ஒரு படத்தை நான்கரை மணிநேரம் ஓட்டும் திறமை அவர்களுக்கு மட்டுமே உண்டு . //

குறைவாக மதிப்பிட்ட மங்குனி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..
'ஐந்தரை அல்லது ஆறு'தான் சரி.

தெளிவா சொல்லிட்டேங்க, தலை... சூப்பரு.////

மன்னித்துக் கொள்ளுங்கள் மாதவன் சார், நான் கணக்குல ரொம்ப வீக்கு . உண்மையில் ஐதரை மணிநேரம் ஓட்டுகிறார்கள் . நான் கொஞ்சம் தப்பாக போட்டு விட்டேன்

மங்குனி அமைச்சர் said...

சுந்தரா said...

ரொம்ப அவசியமான அறிவுரை அமைச்சரே...
மக்கள் கடைப்பிடிக்கிறாங்களான்னு பாப்போம் :)////

ரொம்ப கஷ்டம் , வேணுமின்னா உல்டாவா வேணா நடக்கும்

மங்குனி அமைச்சர் said...

dr suneel krishnan said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் .
உண்மையிலயே உபயோகமான பதிவு////

thank you suneel krishnan

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

சாரி சார் நான் கிளாஸ்க்கு ரொம்ப லேட்டா வந்துட்டேன்...

நோ...நோ bad words

நல்ல பதிவு... இதை நான் விநாயக சதூர்த்திக்கே சொல்லிட்டேன் ஒரு பயலும் கேக்க மாட்டரான்... நீங்க அரசானை பிறப்பிய்யுங்கள்///

எங்க வீட்டுலையே நான் சொல்றது எடுபட மாட்டேங்குது இதுல அரசானை வேறையா ???? ஏன்யா என் வயித்தெரிச்சலை கிளப்புற

அலைகள் பாலா said...

அன்னைக்கு ஒருநாள் மட்டும் டி.வி வேலை செய்யாத மாதிரி எதாவது பில்லி சூனியம் வச்சா நல்லா இருக்கும்ல அமைச்சரே...?

செல்வா said...

வந்ததுக்கு நூறு அடிச்சு வடை வாங்கலாம் ..!!

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

100
////

ரைட்டு , இதையே நாளைக்கு பதிவுல பண்ணு பரிசு கிடைக்கும்

மங்குனி அமைச்சர் said...

அலைகள் பாலா said...

அன்னைக்கு ஒருநாள் மட்டும் டி.வி வேலை செய்யாத மாதிரி எதாவது பில்லி சூனியம் வச்சா நல்லா இருக்கும்ல அமைச்சரே...?/////

நல்ல ஐடியா சார், கேரளாவுல கேட்டுப்பாக்கலாம்

GSV said...

yes sir...

வெங்கட் said...

// ஊர்ல போயி சொந்த பந்தங்களுடன் சேர்ந்து
தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்கள் ,
அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் வீட்டில்
உள்ள டி.வியை ஆஃப் செய்து விடுங்கள் .//

இது சொன்னீங்களே.. இது ரொம்ப
நியாயமான வார்த்தை.... உங்களால
மட்டும் எப்படி இப்படி எல்லாம் Think
பண்ண முடியுது..?

அமைச்சரே.. Really U R Great..!!

ஆனா பாருங்க.. உங்களை நான்
பாராட்டி Comment போட்டு இருக்கேன்..
அது ரொம்ப கீழே., 104வது Comment-ஆ
வரப்போகுது.. அதான் ஒரே பீலிங்கா இருக்கு..!!

கொஞ்சம் நம்ம Comment மேல வர்ற மாதிரி
எதாவது பாத்து பண்ண முடியுமா..?!!

வெங்கட் said...

@ To All.,

உங்கள எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா இருக்கு..!!

எதுக்கும் பதிவை இன்னொரு தரம்
போயி பார்த்துட்டு வாங்களேன்..
அந்த " முஸ்கி " ரொம்ப முக்கியம்..!!

ஹி., ஹி., ஹி..!!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ரொம்ப நல்ல பதிவு மங்குனி அமைச்சரே!
நீங்க சொன்னதோட அருமை எல்லாம் என்னை போல் பத்து வருடங்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தான் புரியும்.தீபாவளிக்கு ஊருக்கு போய் பத்து வருஷம் ஆச்சு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஐடியா அது பின்னூட்ட்டத்தை மேல போடுவது. ஆனா இப்படியே போனா பதிவு பின்னூட்ட இடத்துல போய் சேந்துடபோது .. :)

Philosophy Prabhakaran said...

அப்படின்னா காபி வித் கமல் பார்க்ககூடாதா... பாட்டியோடு சேர்ந்து சுக்குகாபிதான் குடிக்கோனும்னு சொல்றீங்களா...

Unknown said...

டவுட்டு: மங்குனி அமைச்சர் ப்லாக்ல வேற யாரோ பதிவு போடறாங்களோ...

erodethangadurai said...

மங்குனி... ! தீபாவளிக்கு என்ன பிளான் ?

erodethangadurai said...

நீங்க பிரபல பதிவரானு சி.பி. செந்தில் கிட்ட கேளுங்க ...!

erodethangadurai said...

உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

ஒட்டு போட்டாச்சு... .

மங்குனி அமைச்சர் said...

GSV said...

yes sir...
///

அட்டன்டன்ஸ் போட்டேன் GSV சார்

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

@ To All.,

உங்கள எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா இருக்கு..!!

எதுக்கும் பதிவை இன்னொரு தரம்
போயி பார்த்துட்டு வாங்களேன்..
அந்த " முஸ்கி " ரொம்ப முக்கியம்..!!

ஹி., ஹி., ஹி..!!///

இதுக்கு பேருதான் குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற டெக்னிக்கா ???

மங்குனி அமைச்சர் said...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ரொம்ப நல்ல பதிவு மங்குனி அமைச்சரே!
நீங்க சொன்னதோட அருமை எல்லாம் என்னை போல் பத்து வருடங்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தான் புரியும்.தீபாவளிக்கு ஊருக்கு போய் பத்து வருஷம் ஆச்சு.///

உண்மைதான் சார், வரும் பொங்கல் சொந்த பந்தங்களுடன் கொண்டாட வாழ்த்துக்கள் சார்

மங்குனி அமைச்சர் said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஐடியா அது பின்னூட்ட்டத்தை மேல போடுவது. ஆனா இப்படியே போனா பதிவு பின்னூட்ட இடத்துல போய் சேந்துடபோது .. :)////

அப்படித்தான் ஆயிடும் போல முத்துலெட்சுமி மேடம்

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

அப்படின்னா காபி வித் கமல் பார்க்ககூடாதா... பாட்டியோடு சேர்ந்து சுக்குகாபிதான் குடிக்கோனும்னு சொல்றீங்களா...///

ஒரே ஒரு நாள் சுக்குகாப்பி சாப்பிடலாமே ????

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

டவுட்டு: மங்குனி அமைச்சர் ப்லாக்ல வேற யாரோ பதிவு போடறாங்களோ...///

இருக்கும் சார் , எனக்கும் அதே டவுட்டு

மங்குனி அமைச்சர் said...

ஈரோடு தங்கதுரை said...

மங்குனி... ! தீபாவளிக்கு என்ன பிளான் ?////

ஈரோடு வரல்லாமுன்னு ஐடியா , நீங்க என்ன சொல்றிங்க தங்கதுரை

மங்குனி அமைச்சர் said...

ஈரோடு தங்கதுரை said...

நீங்க பிரபல பதிவரானு சி.பி. செந்தில் கிட்ட கேளுங்க ...!///

ஏன் இந்த கொலைவெறி ???

மங்குனி அமைச்சர் said...

ஈரோடு தங்கதுரை said...

உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

ஒட்டு போட்டாச்சு... .///

thank you and wish you tha same

elamthenral said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ஆனந்தி.. said...

தலைப்பு நல்லா இருக்கு..உருப்படியான பதிவு மங்குனி சார்...Happy diwali!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாரவது கேட்டா வந்திட்டு போனேன்னு சொல்லுங்க...

சாமக்கோடங்கி said...

//முக்கியமா வயதான தாத்தா, பாட்டி போன்றவர்களை தேடிச்சென்று சந்தியுங்கள் . அவர்க உங்கள் வருகைக்காவே ஆவலோடு வருடம் முழுவது காத்துக்கோடு இருப்பார்கள் .//

ஆமாம்ப்பா... எங்க பாட்டியும் நான் வருவேன்னு எதிர்பாத்துகிட்டு இருக்கும்.. கண்டிப்பா போய்ப் பார்க்கணும்..

சாமக்கோடங்கி said...

அப்படியே இந்த பதிவு எழுதுறது, வரிஞ்சு கட்டிக்கிட்டு பின்னூட்டம் போடுறது இதை எல்லாம் கூட ஒரு நாள் தள்ளிப் போடலாம்....

சரியா...???

சிவசங்கர். said...

:)