எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, November 23, 2010

சரியான லூசுப் பசங்க சார்

ட்ரைன்ல ஊருக்கு போயிகிட்டு இருந்தேன் சார் , காலைல 10 மணிக்கு விழுப்புரம் ஸ்டேசன் வந்தது ,அட பதிவு போடுற டைம் ஆச்சேன்னு நானும் நேர டிரைவர் கிட்ட போயி சார் ஒரு அரைமணி நேரம் நில்லுங்க நான் போயி ஒரு பதிவு போட்டு வர்றேன் கேட்டேன் , அந்த ஆளு என்னைய ஏதோ பைத்தியத்த பாக்குற மாதிரி பாத்துட்டு ஸ்டேசன் மாஸ்டர் கிட்ட போயி கேட்க்க சொன்னாரு .

நானும் நேரா ஸ்டேசன் மாஸ்டர்கிட்ட போயி கேட்டேன் அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் , இதென்னடா வம்பாப் போச்சுன்னு அவரு பக்கத்துல இருந்த ஆளுகிட்ட கேட்டேன் , அவரு அதெல்லாம் நிக்க முடியாது சார் நீங்க வேணுமின்னா ட்ரைன் போயிகிட்டு இருக்கும் போதே பதிவு போட்டுக்கங்கன்னு சொன்னாரு .

சரியான லூசுப் பயலுக சார் , ட்ரைன்ல சிஸ்டத்த கொண்டுபோனா சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )

-----#####-----

அப்புறம் நம்ம பிரண்டு ஒரு பய சார் , கூடப் படிச்ச பய , சின்ன வயசுல நம்மள மாதிரி பிர்லியன்ட் கிடையாது , அவனுக்கு சரியா படிப்பு வராது . பாவம் 10th ல டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்டு மார்க் எடுத்து ஸ்கூலோட பேர கெடுத்துட்டான் . ஸ்கூல்ல அவனுக்கு +1 சீட்டு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க . அப்புறம் நாங்கல்லாம் போயி சாரி சார் இனிமே நல்லா படிப்பான்னு ரிகமன்ட் பண்ணி மறுபடியும் ஸ்கூல்ல சேத்தோம் .

அந்த பரதேசி பன்னாடப்பய மறுபடியும் +2 ல டிஸ்ட்ரிக்ட் பஸ்ட்டு வந்து மறுபடியும் ஸ்கூல் பேர நாரடிச்சிட்டான் . இது தெரிஞ்ச எங்க ஊரு காலேஜுல அவன சத்தியமா சேக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க . அப்புறம் என்ன நாங்க எங்க ஊரு காலேஜுல ஜாலியா படிச்சோம் , அவன் போயி மதுரைல ஏதோ மெடிகல் காலேஜாமே ?? அதுல சேந்தான் . பாவம் சார் எம்.பி.பி.எஸ் முடிச்ச உடன் நீ சரியா படிக்கிறதில்ல இன்னும் படிக்கனுமின்னு சொன்னாங்க , உடனே பி.ஜி எங்க காலேஜுல சேர வந்தான் . அப்பவும் சேக்கல , அப்புறம் வேற வழியில்லாம சென்னை மெடிகல் காலேஜுல எம்.எஸ் முடிச்சான் .

அதுக்கப்புறம் ஏதோ ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்காம் அத எழுதி ஸ்டேட் பஸ்ட்டு வந்து நம்ம ஸ்டேட்டையே அசிங்கப் படுத்திட்டான் . அப்புறம் கவுருமெண்ட்டு இனிமேயாவது ஒழுங்கா படின்னு ஏதோ கேன்சர பத்தி படிக்கிற படிப்பு குடுத்து இருக்காக .

அந்த முட்டாப் பய போன் பண்ணி கார் வாங்கி இருக்கேன் வாடா ஜாலியா வெளிய போயிட்டு வரலாமுன்னு சொன்னான் , சரிடா வாடான்னு சொன்னேன் , அவனும் கார எடுச்சுக்கிட்டு வந்தான் , காருக்குள்ள உட்காந்தா கிடுகிடுன்னு நடுங்குன் அவ்வளவு புல் ஏ.சி ஓடிகிட்டு இருக்கு . காசுவந்த கொழுப்புள இவ்ளோ ஏ.சி வச்சிருக்கான்னு அவன பாத்தா அவனும் நடுங்கிக்கிட்டு இருக்கான் .

டக்குன்னு ஏ.சிய குறைச்சேன் , அதுக்கு அவன் கேட்டாம் பாருங்க ஒரு கேள்வி ..............

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )

ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????

168 comments:

சௌந்தர் said...

வந்துட்டேன்

பட்டாபட்டி.. said...

ஸ்..ஸ்

சௌந்தர் said...

சரியான லூசுப் பயலுக சார் , ட்ரைன்ல சிஸ்டத்த கொண்டுபோனா சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )////

அட அவர் கேபிள் கனெக்சன் தான் கொடுப்பார் இன்டர்நெட் கனெக்சன் தர மாட்டார்

பட்டாபட்டி.. said...

உனக்குனு ஒரு நண்பன் கிடைக்கிறான் பாரு..

சரி.. டோமர் மாறி, ”நண்பேண்ண்ண்ண்டா”னு சொல்லாம விட்டதுக்கு நன்றி...

Chitra said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )

.... ha,ha,ha,ha.....

சௌந்தர் said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )////

அட அரியவகை தகவல் இது வரை எனக்கு தெரியாதே நல்ல பயன்வுள்ள தகவல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// காலைல 10 மணிக்கு விழுப்புரம் ஸ்டேசன் வந்தது ,அட பதிவு போடுற டைம் ஆச்சேன்னு நானும் /////

ம்ம்ம்... பதிவு போடாம இப்பெல்லாம் கக்கா கூட வரமாடடீங்கிதுல்லே?

பட்டாபட்டி.. said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )
//

உன் நண்பனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?...

கேள்வி......ஏன்னா பல டவுட் கிளியர் பண்ண வேண்டி வருமே.. அய்யோ பாவம் நீ..

ஹரிஸ் said...

//இது நெஜம்மா நடந்துச்சு சார்//

ரைட்டு...

ஜீ... said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா//
ha ha
//ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????//
super!! :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் , ////

அந்த வேல இன்னும் காலியா இருக்கா?

Balaji saravana said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா //

உங்க "நண்பேண்டா" இல்ல அதான் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அப்புறம் நாங்கல்லாம் போயி சாரி சார் இனிமே நல்லா படிப்பான்னு ரிகமன்ட் பண்ணி மறுபடியும் ஸ்கூல்ல சேத்தோம் . /////

எச்சூஸ் மி.... இன்னும் ஒரே ஒரு ரெகமண்டேசன் பண்ண முடியுமா ப்ளீஸ்?

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல//

யோவ் மங்குனி உன் நண்பன் உன்னை போல தானே இருப்பான்....நீங்க என்னைக்காவது பில்க்கு காசு கொடுத்திருக்க

Arun Prasath said...

///நானும் நேரா ஸ்டேசன் மாஸ்டர்கிட்ட போயி கேட்டேன் அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் ///

கிணத்த காணோம்ன்னு வடிவேல் கேட்ட மாறி கேட்டு
இருக்கீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )/////

ஏன் சார், அவ்வளவு தூரத்துக்கு நீளமா கரண்டு கம்பி போட்டிருக்காங்களே நீங்க பாக்கலிய்யா?

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

வந்துட்டேன்
////

வாங்க , வாங்க

karthikkumar said...

சின்ன வயசுல நம்மள மாதிரி பிர்லியன்ட் கிடையாது///
அப்போ நீங்க சினன் வயசுலதான் ப்ரில்லியண்டா. அவசரப்பட்டு பொதுவுல தெரியாம எழுதிட்டீங்களே மங்குனி

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ஸ்..ஸ்///

என்ன நாக்க கடிச்சுக்கிட்டியா ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )//////

அந்த பிரண்டோட வெலாசம் கெடைக்குமா... வெலாசம்.....?

karthikkumar said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா///
கிட்டத்தட்ட மன்குனியை போலவே

பட்டாபட்டி.. said...

ஏன் சார், அவ்வளவு தூரத்துக்கு நீளமா கரண்டு கம்பி போட்டிருக்காங்களே நீங்க பாக்கலிய்யா?
//

பார்த்திருப்பான்.
அதுமேல, பேண்ட் போட்டுக்கிட்டு உட்காரனுமா..இல்ல பட்டாபட்டியோடவா?-னு டவுட் வந்திருக்கும்..

விடுய்யா.. விடு...

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

சரியான லூசுப் பயலுக சார் , ட்ரைன்ல சிஸ்டத்த கொண்டுபோனா சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )////

அட அவர் கேபிள் கனெக்சன் தான் கொடுப்பார் இன்டர்நெட் கனெக்சன் தர மாட்டார்////

அப்ப அதுக்கு வேற தனியா வயர் வாங்கனுமா ???

karthikkumar said...

அந்த ப்ரென்ட் நம்ம பண்ணிகுட்டிதானே

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

உனக்குனு ஒரு நண்பன் கிடைக்கிறான் பாரு..

சரி.. டோமர் மாறி, ”நண்பேண்ண்ண்ண்டா”னு சொல்லாம விட்டதுக்கு நன்றி...///

பாருங்க மக்களே இதுக்கு நான் பொறுப்பு இல்லை

பட்டாபட்டி.. said...

யோவ்.. மங்குனி டோமர் பதில் சொல்ல ஆரம்பிச்சுடுச்சு.. எல்லோரும் ஜோரா ஒரு தடவை கைய தட்டுங்கோ.. ஹ..ஹா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????/////

ஹி..ஹி..ஹி...... நோ கமென்ட்ஸ்.....!

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

ஏன் சார், அவ்வளவு தூரத்துக்கு நீளமா கரண்டு கம்பி போட்டிருக்காங்களே நீங்க பாக்கலிய்யா?
//

பார்த்திருப்பான்.
அதுமேல, பேண்ட் போட்டுக்கிட்டு உட்காரனுமா..இல்ல பட்டாபட்டியோடவா?-னு டவுட் வந்திருக்கும்..

விடுய்யா.. விடு...///

ஹா,ஹா,ஹா,....... யோவ் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்பா

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )

.... ha,ha,ha,ha.....///

நன்றிங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
யோவ்.. மங்குனி டோமர் பதில் சொல்ல ஆரம்பிச்சுடுச்சு.. எல்லோரும் ஜோரா ஒரு தடவை கைய தட்டுங்கோ.. ஹ..ஹா../////

யாரு கையன்னு சொல்லல?

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )////

அட அரியவகை தகவல் இது வரை எனக்கு தெரியாதே நல்ல பயன்வுள்ள தகவல்///

என் அக்கவுன்ட்டுல ஒரு 1000 டூபா கிரடிட் பண்ணிடுங்க

பட்டாபட்டி.. said...

விடுய்யா.. விடு...///

ஹா,ஹா,ஹா,....... யோவ் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்பா
//

இப்ப எதுக்கு ஜம்ப் பண்ணி, பதில் சொன்னே..
செல்லாது...செல்லாது..
வரிசையா சொல்லிட்டு வா..

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// காலைல 10 மணிக்கு விழுப்புரம் ஸ்டேசன் வந்தது ,அட பதிவு போடுற டைம் ஆச்சேன்னு நானும் /////

ம்ம்ம்... பதிவு போடாம இப்பெல்லாம் கக்கா கூட வரமாடடீங்கிதுல்லே?///

ஹி.ஹி.ஹி.......அமைப்பு இல்லைன்னா சாமிகுத்தம் ஆகிப்போகும்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )
//

உன் நண்பனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?...

கேள்வி......ஏன்னா பல டவுட் கிளியர் பண்ண வேண்டி வருமே.. அய்யோ பாவம் நீ..///

அதான என்னடா பட்டாப்பட்டி இன்னும் இந்த கேள்விய கேட்கலையேன்னு நினைச்சேன் ???

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

//இது நெஜம்மா நடந்துச்சு சார்//

ரைட்டு...//

thanks

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

விடுய்யா.. விடு...///

ஹா,ஹா,ஹா,....... யோவ் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்பா
//

இப்ப எதுக்கு ஜம்ப் பண்ணி, பதில் சொன்னே..
செல்லாது...செல்லாது..
வரிசையா சொல்லிட்டு வா..///

ங்கொய்யாலே ..... ஆப்பு வக்கிரதுலே குறியா இரு

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா//
ha ha
//ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????//
super!! :)///

ரொம்ப நன்றிங்க ஜீ...

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் , ////

அந்த வேல இன்னும் காலியா இருக்கா?///

காலியாத்தான் இருக்கு , ஆனா என்னைய மாதிரி கேள்வி கேட்க்க ஒரு பத்துபய வரிசைல நிக்குராணுக பரவாயில்லையா ???

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா //

உங்க "நண்பேண்டா" இல்ல அதான் :))///

எல்லாம் நம்ம குரூப்பு தான் பாலாஜி சரவணன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அப்புறம் நாங்கல்லாம் போயி சாரி சார் இனிமே நல்லா படிப்பான்னு ரிகமன்ட் பண்ணி மறுபடியும் ஸ்கூல்ல சேத்தோம் . /////

எச்சூஸ் மி.... இன்னும் ஒரே ஒரு ரெகமண்டேசன் பண்ண முடியுமா ப்ளீஸ்?///

இருடா , இருடா .......நீ என்ன கேட்க்க வர்றேன்னு தெரியுது .....பப்ளிக் , பப்ளிக் ...கேர்புல்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல//

யோவ் மங்குனி உன் நண்பன் உன்னை போல தானே இருப்பான்....நீங்க என்னைக்காவது பில்க்கு காசு கொடுத்திருக்க////

இதுக்கு பயந்துக்கிட்டு தான் நான் பில்லே வாங்குறது இல்லை ,

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said...
சௌந்தர் said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )////

அட அரியவகை தகவல் இது வரை எனக்கு தெரியாதே நல்ல பயன்வுள்ள தகவல்///

என் அக்கவுன்ட்டுல ஒரு 1000 டூபா கிரடிட் பண்ணிடுங்க////

நான் சில தகவல் சொல்லி இருக்கேன் அங்க வந்து பார்த்து 2000 கொடுங்க 1000 ரூபாய் கழித்து கொண்டு மீதி 1000 ருபாய் கொடுங்க

NADESAN said...

ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????

மங்குனி அமைச்சரிடம் தான் இந்த மாதிரி செய்ய முடியும்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்

சாருஸ்ரீராஜ் said...

நல்ல நகைசுவை உங்கள் நண்பன் உங்களை மாதிரியே இருக்காப்ல

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

///நானும் நேரா ஸ்டேசன் மாஸ்டர்கிட்ட போயி கேட்டேன் அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் ///

கிணத்த காணோம்ன்னு வடிவேல் கேட்ட மாறி கேட்டு
இருக்கீங்க////

ஹா.ஹா.ஹா...... அப்படியா சொல்றிங்க ???

பாலாஜி சங்கர் said...

இத படிச்சிட்டுதான் அந்த புள்ள இப்படி ஒரு முடிவ எடுத்திருக்கும்
நல்ல முடிவு [ பதிவு ]

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )/////

ஏன் சார், அவ்வளவு தூரத்துக்கு நீளமா கரண்டு கம்பி போட்டிருக்காங்களே நீங்க பாக்கலிய்யா?///

ஓ......அது கரண்டு கண்பியா ? நான் ஏதோ துநிகாயப்போட கட்டிருக்கானுகன்னு நினைச்சேன்

நா.மணிவண்ணன் said...

ட்ரைன்ல ஏதாவுது பிகர உசார் பண்ணோம கடைலய போட்டமா ஊரு வந்தோன கலட்டி விட்டோமா இருப்பாய்ங்க.ஆனா நீங்க
ட்ரைன்ல வர்றப்ப கூட பதிவு போடணும்னு நினைக்கீரீங்களே உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு .(இதல்லாம் ஒரு பதிவு )

ஐஸ் ஐஸ் ஐஸ்

யோவ் யாருயா அது கமெண்ட் எழுதிக்கிட்டு இருக்குறப்ப ஐஸ் வண்டி யா தள்ளீட்டு வர்றது

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

சின்ன வயசுல நம்மள மாதிரி பிர்லியன்ட் கிடையாது///
அப்போ நீங்க சினன் வயசுலதான் ப்ரில்லியண்டா. அவசரப்பட்டு பொதுவுல தெரியாம எழுதிட்டீங்களே மங்குனி///

அட ஆமால்ல

வெட்டிப்பேச்சு said...

//அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் ,//

//ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????//

ஹி..ஹி..ஹி...

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )//////

அந்த பிரண்டோட வெலாசம் கெடைக்குமா... வெலாசம்.....?///

ராயப்பேட்ட ஜி.ஹெச்ச் பக்கத்துல போயி நம்ம பேமிலி சாங்க பாடினா கண்டுபுடிச்சிரலாம்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா///
கிட்டத்தட்ட மன்குனியை போலவே///

பழக்க தோஷம்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

அந்த ப்ரென்ட் நம்ம பண்ணிகுட்டிதானே///

சே.சே.....நீங்க வேற, அவரு எவ்ளோ புத்திசாலி

Madhavan Srinivasagopalan said...

///// காலைல 10 மணிக்கு விழுப்புரம் ஸ்டேசன் வந்தது ,அட பதிவு போடுற டைம் ஆச்சேன்னு நானும் //

அதான் நேத்திக்கு ஆளக் காணோமா.. நல்லவேளை.. நாங்க தப்பிச்சொம்ம்..

அது சரி மங்கு, எப்போ அடுத்த டிரைன் ட்ரிப்பு ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

யோவ்.. மங்குனி டோமர் பதில் சொல்ல ஆரம்பிச்சுடுச்சு.. எல்லோரும் ஜோரா ஒரு தடவை கைய தட்டுங்கோ.. ஹ..ஹா..///

ரிப்பீட்டு ...........

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????/////

ஹி..ஹி..ஹி...... நோ கமென்ட்ஸ்.....!///

அதான .......... ஹா.ஹா.ஹா...... இப்பத்தான் எனக்கு புரியுது ......ஹா.ஹா.ஹா

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் said...
சௌந்தர் said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )////

அட அரியவகை தகவல் இது வரை எனக்கு தெரியாதே நல்ல பயன்வுள்ள தகவல்///

என் அக்கவுன்ட்டுல ஒரு 1000 டூபா கிரடிட் பண்ணிடுங்க////

நான் சில தகவல் சொல்லி இருக்கேன் அங்க வந்து பார்த்து 2000 கொடுங்க 1000 ரூபாய் கழித்து கொண்டு மீதி 1000 ருபாய் கொடுங்க///

இதோ வர்றேன் , ஆனா என்ன நடந்தாலும் நீங்கதான் என் அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ணனும்

மங்குனி அமைச்சர் said...

NADESAN said...

ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????

மங்குனி அமைச்சரிடம் தான் இந்த மாதிரி செய்ய முடியும்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்///

நெல்லை பெ. நடேசன், துபாய் சார் , அப்ப துபைல ஒரு நெல்லை இருக்கா? இல்ல நெல்லைல ஒரு துபாய் இருக்கா ?

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

நல்ல நகைசுவை உங்கள் நண்பன் உங்களை மாதிரியே இருக்காப்ல///

நன்றிங்கோ ..... என்னா பன்றது பழக்க வழக்கம் அப்படி

மங்குனி அமைச்சர் said...

பாலாஜி சங்கர் said...

இத படிச்சிட்டுதான் அந்த புள்ள இப்படி ஒரு முடிவ எடுத்திருக்கும்
நல்ல முடிவு [ பதிவு ]///

அது என்ன முடிவு பாலாஜி சங்கர் சார் ???

சே.குமார் said...

அதுசரி...
லூசுப்பயலுக நல்லாயிருக்கு...
கேபிள் அண்ணா... நெட் அண்ணாவா மாறலையே...?
உங்க பிரண்ட் கதை நல்லாயிருக்கு.
கடைசியா மனசைத் தொட்டு சொல்லுங்க... நீங்களா பில் கொடுக்குறீங்க... சும்மா பில்டப் கொடுக்கக்கூடாது அமைச்சரே...

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

ட்ரைன்ல ஏதாவுது பிகர உசார் பண்ணோம கடைலய போட்டமா ஊரு வந்தோன கலட்டி விட்டோமா இருப்பாய்ங்க.ஆனா நீங்க
ட்ரைன்ல வர்றப்ப கூட பதிவு போடணும்னு நினைக்கீரீங்களே உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு .(இதல்லாம் ஒரு பதிவு )

ஐஸ் ஐஸ் ஐஸ்

யோவ் யாருயா அது கமெண்ட் எழுதிக்கிட்டு இருக்குறப்ப ஐஸ் வண்டி யா தள்ளீட்டு வர்றது///

சார் ஒரு பிகர உசார் பண்ணிட்டேன் , சும்மா படம் காம்பிக்கலாமுன்னுதான் பதிவ போடா நினைச்சேன்.......அப்புறம் அந்த ஐஸ் வண்டி யாருப்பா ????

கக்கு - மாணிக்கம் said...

எப்பா ..........மொத்த கூட்டமும் சரியான பக்கா கிரிமினலாதான் இருக்கும் போலா சாமி. தாங்கல.
Keep it up !

பட்டாபட்டி.. said...

அய்... நாந்தான் பஸ்ட்டு...

வடை எனக்கு...

ஹி..ஹி

Madhavan Srinivasagopalan said...

/////சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )/////

மங்கு.. அதெல்லாம் அந்தக் காலம்..
இப்போ, லேப்டாப்பு, வயர்லெஸ் யு.எஸ்.பி. மோடம் இருக்குதே.. ஒனக்கு தெரியாதா ?

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் ,//

//ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????//

ஹி..ஹி..ஹி...////

நன்றி வெட்டிப்பேச்சு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அய்... நாந்தான் பஸ்ட்டு...

வடை எனக்கு...

ஹி..ஹி////

ஐ.... நான்தான் செகண்டு .............யோவ் பட்டா பதிவடைய குடுய்யா

Arun Prasath said...

Arun Prasath said...

///நானும் நேரா ஸ்டேசன் மாஸ்டர்கிட்ட போயி கேட்டேன் அந்த ஆளு என்ன கோவத்துல இருந்தானோ டக்குன்னு வேலைய ரிசைன் பண்ணிட்டு ஓடிட்டான் ///

கிணத்த காணோம்ன்னு வடிவேல் கேட்ட மாறி கேட்டு
இருக்கீங்க////

ஹா.ஹா.ஹா...... அப்படியா சொல்றிங்க ???///

பாத்தா அப்டி தான் தெரியுது அமைச்சரே.

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

///// காலைல 10 மணிக்கு விழுப்புரம் ஸ்டேசன் வந்தது ,அட பதிவு போடுற டைம் ஆச்சேன்னு நானும் //

அதான் நேத்திக்கு ஆளக் காணோமா.. நல்லவேளை.. நாங்க தப்பிச்சொம்ம்..

அது சரி மங்கு, எப்போ அடுத்த டிரைன் ட்ரிப்பு ?//

ஹி.ஹி.ஹி.....இப்பக்கூட திருச்சி ஸ்டேசன்ல இருந்துதான் பதிவுபோட்டேன்

நா.மணிவண்ணன் said...

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

ட்ரைன்ல ஏதாவுது பிகர உசார் பண்ணோம கடைலய போட்டமா ஊரு வந்தோன கலட்டி விட்டோமா இருப்பாய்ங்க.ஆனா நீங்க
ட்ரைன்ல வர்றப்ப கூட பதிவு போடணும்னு நினைக்கீரீங்களே உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு .(இதல்லாம் ஒரு பதிவு )

ஐஸ் ஐஸ் ஐஸ்

யோவ் யாருயா அது கமெண்ட் எழுதிக்கிட்டு இருக்குறப்ப ஐஸ் வண்டி யா தள்ளீட்டு வர்றது///

சார் ஒரு பிகர உசார் பண்ணிட்டேன் , சும்மா படம் காம்பிக்கலாமுன்னுதான் பதிவ போடா நினைச்சேன்.......அப்புறம் அந்த ஐஸ் வண்டி யாருப்பா ????

அந்த பிகர் நம்பர் ப்ளீஸ்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

அதுசரி...
லூசுப்பயலுக நல்லாயிருக்கு...
கேபிள் அண்ணா... நெட் அண்ணாவா மாறலையே...?
உங்க பிரண்ட் கதை நல்லாயிருக்கு.
கடைசியா மனசைத் தொட்டு சொல்லுங்க... நீங்களா பில் கொடுக்குறீங்க... சும்மா பில்டப் கொடுக்கக்கூடாது அமைச்சரே...///

கரக்ட்டா கண்டுபுடுச்சிட்ட்யே கள்ளி , சே..சே...கள்ளா

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

எப்பா ..........மொத்த கூட்டமும் சரியான பக்கா கிரிமினலாதான் இருக்கும் போலா சாமி. தாங்கல.
Keep it up !///

என்ன தலைவரே இப்படி சொல்லிட்டிங்க . .... நீங்க காட்டும் நல் வழிப்பாதையில தானே நாங்க ராஜ நடை போட்டுக்கிட்டு இருக்கோம்

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

/////சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன் ?(கேபிள் சங்கர் சார் கிட்ட தான் கேட்டுப்பாக்கணும் )/////

மங்கு.. அதெல்லாம் அந்தக் காலம்..
இப்போ, லேப்டாப்பு, வயர்லெஸ் யு.எஸ்.பி. மோடம் இருக்குதே.. ஒனக்கு தெரியாதா ?///

என்னங்க மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன் (யப்பா எவ்ளோ பெரிய பேரு ?) இன்னும் கொயந்த புள்ளையாவே இருக்கீங்க ???

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

Arun Prasath said...பாத்தா அப்டி தான் தெரியுது அமைச்சரே.///

எங்க கண்ண மூடிக்கிட்டு இன்னொருவாட்டி பாத்துச்சொல்லுங்க ?

பட்டாபட்டி.. said...

”புதைப்பவன் முகத்தில்
புன்னகை......
......
வீறிடும் குழந்தை...”

ஹி..ஹி ஹைகூ..

சசிகுமார் said...

அண்ணே உங்கள் தளம் வந்தாலே செம காமெடி தான். ஒரே சிரிப்போ சிரிப்பு அதுவும் அந்த ஏசி மேட்டர் பயங்கரம் கணினி முன் உட்கார்ந்து சிரித்து கொண்டே இந்த கமென்ட் போடுகிறேன்.

மங்குனி அமைச்சர் said...

நா.மணிவண்ணன் said...

மங்குனி அமைச்சர் said...

அந்த பிகர் நம்பர் ப்ளீஸ்///

ஐ......ஆசை , தோசை அப்பளவடை

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

”புதைப்பவன் முகத்தில்
புன்னகை......
......
வீறிடும் குழந்தை...”

ஹி..ஹி ஹைகூ..///

யார்ரா அவன் பட்டாப்பட்டி பேருல போலி கமன்ட் போடுறவன் ?????

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

அண்ணே உங்கள் தளம் வந்தாலே செம காமெடி தான். ஒரே சிரிப்போ சிரிப்பு அதுவும் அந்த ஏசி மேட்டர் பயங்கரம் கணினி முன் உட்கார்ந்து சிரித்து கொண்டே இந்த கமென்ட் போடுகிறேன்.///

ஆகா.... நீங்களும் உள்குத்து வச்சு கமன்ட் போட்டு பழகிட்டின்களா????

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா "//
கொடுமையிலும் கொடுமைதான்

பட்டாபட்டி.. said...

நீ கேட்டதற்க்கு சசி பதில் சொல்லியிருக்காரு..

பார்த்து பண்ணிக்க மங்குனி அமைச்சரே...

http://vandhemadharam.blogspot.com/2010/11/how-to-change-blogger-login-email.html

ராஜகோபால் said...

கக்கக்க போ., அமச்சருகுக்கு ட்ரைன் பொட்டியில் பொட்டி தட்ட ஒரு ஆளும்., பொட்டிக்கு கம்பி இல்லா நீலபல்லு இன்டர்நெட் கணக்சனும் கொடுபோம்.

மண்டையன் said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?"/
அந்த ரகசியத்த எனக்கும் சொல்லிகுடுங்க .
நானும் பெட்ஷீட் போட்டு நடுங்கி கிட்டு தான் இருக்கேன் .

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா "//
கொடுமையிலும் கொடுமைதான்
///

ஆமா சார் , ஆமா

Yuva said...

பார்த்து... அடுத்தடவை ஹெலிகாப்டர்ல ஏத்திக்கினிப்போய் குளிரிதுன்னு பேனை 'ஆப்' பண்ணிட்டு 'எப்படி என் விவரம்'-னு சிரிக்கப் போறார்.

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

நீ கேட்டதற்க்கு சசி பதில் சொல்லியிருக்காரு..

பார்த்து பண்ணிக்க மங்குனி அமைச்சரே...

http://vandhemadharam.blogspot.com/2010/11/how-to-change-blogger-login-email.html///

என்ன அங்கயும் போயி என்னைய கோத்து கொத்து விட்டிய ? இரு பாத்துட்டு வந்து வச்சிக்கிர்றேன்

மங்குனி அமைச்சர் said...

ராஜகோபால் said...

கக்கக்க போ., அமச்சருகுக்கு ட்ரைன் பொட்டியில் பொட்டி தட்ட ஒரு ஆளும்., பொட்டிக்கு கம்பி இல்லா நீலபல்லு இன்டர்நெட் கணக்சனும் கொடுபோம்.//

ஹி.ஹி.ஹி......போட்டி தட்டுற ஆளு கொஞ்சம் நாலா பிகரா இருக்கட்டும் ராஜகோபால்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?"/
அந்த ரகசியத்த எனக்கும் சொல்லிகுடுங்க .
நானும் பெட்ஷீட் போட்டு நடுங்கி கிட்டு தான் இருக்கேன் .///

டக்குன்னு அந்த இடத்த விட்டு மொட்ட மாடிக்கு ஓடிப்போயிடுங்க மண்டையன்

மங்குனி அமைச்சர் said...

Yuva said...

பார்த்து... அடுத்தடவை ஹெலிகாப்டர்ல ஏத்திக்கினிப்போய் குளிரிதுன்னு பேனை 'ஆப்' பண்ணிட்டு 'எப்படி என் விவரம்'-னு சிரிக்கப் போறார்.///

அப்ப ஹெலிகாப்ட்டர்ல ஏ.சி இல்லையா சார் ???

Arun Prasath said...

//எங்க கண்ண மூடிக்கிட்டு இன்னொருவாட்டி பாத்துச்சொல்லுங்க ?//

அது என்ன மூடிட்டு? தெறந்தே சொல்ரேனே

வார்த்தை said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா "//

இதே மாதிரி தான் எனக்கும் ஒரு நண்பேன் இருக்கான்.
அவன் ஆனா இந்தளவுக்கு இல்ல சுமாரா படிப்பான்.

அதுனால கவர்மென்ட்டே கடுப்பாகி,
"நீ MD படிச்சதும் போதும், உன் கூட்டாளிங்க பேர கெடுத்ததும் போதும்", னு
வெளி மாநிலத்துல ஒரு அரசாங்க வேலய குடுத்து ஆணி பூடுங்க சொல்லிருச்சு.

சரி தான் இவன் வாழ்க்க இப்டி நாசமா போச்சேன்னு வருத்தபட்டுகிட்டே, ஊர காலிபண்ணி அவன் கிள‌ம்புறப்ப,

"அப்பப்ப ஈமெயிலாவது பண்ணுடா, என் ஐ டி டுபாக்கூர்அலப்பரே அட் டிபிள்குனாரி.காம்", நு

சொன்னேன் அதுக்கு அந்த டாகுட‌ர் கேட்டான் பாருங்க‌...

"மாப்ளே அட்னா இந்த a நா போட்டு சுத்தி முட்ட போடனுமே அதான்னே?"

மொக்கராசா said...

//சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன்

எத்தனை தடவை உங்களுக்கு சொல்லுறது,நீர் மங்குனி அமைச்சர் என்பதை மறுபடியும் நிருபித்துவிட்டீர்கள்.எங்க போனாலும் ஒர் பெரிய 'டரங்கு பெட்டி' நிறைய வயரை எடுத்துட்டு போகனும்.

மற்றவர்களும் உன்ன பாத்து இந்த 'டரங்கு பெட்டி technology' காப்பி பன்னுவாங்க ,சீக்கரம் copy rights வாங்கிக்கோய்யா

பிரியமுடன் ரமேஷ் said...

ha ha ha.. செம காமெடி..

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

//எங்க கண்ண மூடிக்கிட்டு இன்னொருவாட்டி பாத்துச்சொல்லுங்க ?//

அது என்ன மூடிட்டு? தெறந்தே சொல்ரேனே
///

இல்லைங்க உங்க கண்ணு டாக்குடர் விஜய் கண்ணு மாதிரி பிரகாசமா இருக்கு , எனக்கு அதப்பாத்தா கண்ணு கூசுது அதான் ........

மங்குனி அமைச்சர் said...

வார்த்தை said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா "//

இதே மாதிரி தான் எனக்கும் ஒரு நண்பேன் இருக்கான்.
அவன் ஆனா இந்தளவுக்கு இல்ல சுமாரா படிப்பான்.

அதுனால கவர்மென்ட்டே கடுப்பாகி,
"நீ MD படிச்சதும் போதும், உன் கூட்டாளிங்க பேர கெடுத்ததும் போதும்", னு
வெளி மாநிலத்துல ஒரு அரசாங்க வேலய குடுத்து ஆணி பூடுங்க சொல்லிருச்சு.

சரி தான் இவன் வாழ்க்க இப்டி நாசமா போச்சேன்னு வருத்தபட்டுகிட்டே, ஊர காலிபண்ணி அவன் கிள‌ம்புறப்ப,

"அப்பப்ப ஈமெயிலாவது பண்ணுடா, என் ஐ டி டுபாக்கூர்அலப்பரே அட் டிபிள்குனாரி.காம்", நு

சொன்னேன் அதுக்கு அந்த டாகுட‌ர் கேட்டான் பாருங்க‌...

"மாப்ளே அட்னா இந்த a நா போட்டு சுத்தி முட்ட போடனுமே அதான்னே?"////

ஹா,ஹா,ஹா,,,,,அதேதான் எனக்கும் இந்த டவுட்டு இருக்கு சார்

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...

//சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரிய வயருக்கு நான் எங்க சார் போவேன்

எத்தனை தடவை உங்களுக்கு சொல்லுறது,நீர் மங்குனி அமைச்சர் என்பதை மறுபடியும் நிருபித்துவிட்டீர்கள்.எங்க போனாலும் ஒர் பெரிய 'டரங்கு பெட்டி' நிறைய வயரை எடுத்துட்டு போகனும்.

மற்றவர்களும் உன்ன பாத்து இந்த 'டரங்கு பெட்டி technology' காப்பி பன்னுவாங்க ,சீக்கரம் copy rights வாங்கிக்கோய்யா///

ஆமா சார் , இந்த பச்சமன்ன அடிக்கடி எமாத்திடுராணுக , அது சரி சார் இந்த காபி ரைட்ஸ் எந்த கடையிலும் கிடைக்க மாட்டேங்குது , அது எங்க சார் விக்கித்து ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பிரியமுடன் ரமேஷ் said...

ha ha ha.. செம காமெடி..///

ரொம்ப நன்றி பிரியமுடன் ரமேஷ்

பிரியமுடன் பிரபு said...

ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????

//////////

ha ha

Arun Prasath said...

98

Arun Prasath said...

100

Arun Prasath said...

வடை எனக்கே

S Maharajan said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )//

நம்பிட்டேன்

//அப்புறம் என்ன நாங்க எங்க ஊரு காலேஜுல ஜாலியா படிச்சோம்//

என்னடா இது புது புரளியா இருக்கு!

மங்குனி அமைசர் said...

பிரியமுடன் பிரபு said...

ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????

//////////

ha ha///

thank you prabu

பட்டாபட்டி.. said...

மந்திரப்புன்னகையை பார்க்க வரும் அனைத்து பதிவர்களையும் வருக ..வருக என வரவேற்க்கிறோம்..@மங்குனி..
உண்மைத்தமிழன் அண்ணாச்சிகிட்ட டிக்கெட்டுக்கெ சொல்லி வெச்சுடு.. எவ்வளவு குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு போலாமாம்...

மறக்காம. பேப்பர் பேனா எடுத்துகிட்டு போயிடு மாம்ஸ்..

சோறு போடுவாங்கலானு தெரியலே..
என்னாலதான் வரமுடியாது.. நம்ம முக்கிய ம(த)ந்திரியை கேட்டதாக் கூறவும்.. ஹி..ஹி

http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_5515.html

எஸ்.கே said...

A brilliant friend of brilliant blogger!

தக்குடுபாண்டி said...

அப்பிடியா? நெஜமாவே ஏசியை குறைக்கலாமா??...:))

Madhavan Srinivasagopalan said...

//என்னங்க மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன் (யப்பா எவ்ளோ பெரிய பேரு ?) //

மாதவன் -- அப்படி சொல்லுங்க போதும்

// இன்னும் கொயந்த புள்ளையாவே இருக்கீங்க ??? //
யாரு நானா? .. அடப்ப்பாவி..
அது சரி.. 'கொயந்தயா' 'புள்ளையா' ? என்ன சொல்ல வர்ர..

THOPPITHOPPI said...

//மங்குனி அமைச்சர் //

எப்படி உங்களால தொடர்ந்து சிரிக்க வைக்க முடியிதுன்னு தெரியல

Anonymous said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " //

கடைசில அவன் தான் அவுட்டா????
என்ன கொடுமை மங்கு சார்?

தமிழ்க் காதலன். said...

மங்குனி கரக்டா.... மங்குனித்தனமா வேலைப் பார்த்திருக்கப் பத்தியா?..... யாரய்யா அது... அப்பேர் பட்ட நண்பன்.... பில்லக் கட்டச் சொல்லு....., எனக்கு கிடைச்ச மாதிரியே கிடைச்சிட்டன்பா உனக்கும்.

LK said...

விவரமா இருக்கனுங்க எல்லாரும்

நாகராஜசோழன் MA said...

மங்கு என்னது இது ட்ரைன்னு ஏசின்னு? இப்போ புதுசா ஒரு ஸ்கீம் வந்திருக்காம் டாஸ்மாக்ல. சரக்கு வாங்கினா பிரியாணி ப்ரீயாம். சீக்கிரம் போயா! பிரியாணி தீர்ந்திடப் போகுது!

YOGA.S.Fr said...

பில்லை மட்டும் என்னையே குடுக்க வச்சிடுறான்!சூப்பர் பிரண்டுப்பா!!!

Gayathri said...

chennai to madurai cable?? super ponga..

ac sama ponga..

nalla sirichen

வெறும்பய said...

Present sir.

Anonymous said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல
அடிச்சுக்கிட்டேன் )//

முடியல பா
பின்னிரிங்க!!!!!
எப்பிடி இப்பிடி எல்லாம்

Dhinakar said...

அடங்​கொய்யல! டிரைவர் நம்ம பிரெண்டுதான் , நம்ம பெயர சொல்லிருக்கலாம் இல்ல !!?

சி.பி.செந்தில்குமார் said...

sema comedy nainaa

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

வடை எனக்கே
///

யோவ் ,யோவ், எனக்கு கொஞ்சம் குடுய்யா

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல அடிச்சுக்கிட்டேன் )//

நம்பிட்டேன் //

சார் , நிஜம்மாவ , நிஜம்மா சார் , நம்புங்க சார் ,

//அப்புறம் என்ன நாங்க எங்க ஊரு காலேஜுல ஜாலியா படிச்சோம்//

என்னடா இது புது புரளியா இருக்கு!///

ஆமாங்க சார் , பலபேரு இப்படி கிளம்பிருக்காணுக . நம்மதான் சார் கேர்புல்லா இருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

என்னாலதான் வரமுடியாது.. நம்ம முக்கிய ம(த)ந்திரியை கேட்டதாக் கூறவும்.. ஹி..ஹி

http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_5515.html///

ஏதோ போடிவச்சு பேசுற , இரு என்னான்னு பாத்துட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

A brilliant friend of brilliant blogger!///

அதான , புலியோட பிரண்டு பூனையாக இருக்க முடியுமா ??? (அட மங்கு பழமொழியா , பின்றடா, பின்றடா )

மங்குனி அமைச்சர் said...

தக்குடுபாண்டி said...

அப்பிடியா? நெஜமாவே ஏசியை குறைக்கலாமா??...:))///

தெரியலைங்க சார், ஏ.சி யா குறைச்சா இன்ச்பெக்டராதான் ஆக முடியும்ன்னு நினைக்கிறேன் . நீங்க அசிஸ்டன்ட் கமிசினர் பத்தி தானே கேட்டிங்க ???

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

//என்னங்க மாதவன் ஸ்ரீனிவாச கோபாலன் (யப்பா எவ்ளோ பெரிய பேரு ?) //

மாதவன் -- அப்படி சொல்லுங்க போதும்

// இன்னும் கொயந்த புள்ளையாவே இருக்கீங்க ??? //
யாரு நானா? .. அடப்ப்பாவி..
அது சரி.. 'கொயந்தயா' 'புள்ளையா' ? என்ன சொல்ல வர்ர..//

கொழந்த புள்ளையத்தான் , நாங்க செல்லமா கொயந்த புள்ளைன்னு சொல்லுவோம் மாதவன்

மங்குனி அமைச்சர் said...

THOPPITHOPPI said...

//மங்குனி அமைச்சர் //

எப்படி உங்களால தொடர்ந்து சிரிக்க வைக்க முடியிதுன்னு தெரியல///

சார், சும்மா கிண்டல் பண்ணாதிங்க ஆபஊரம் எனக்கு கோபம் வந்திடும் , கோபம் வந்தா .................. அப்புறம் அழுதுடுவேன் ..............ஜாக்கிரத

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

//"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " //

கடைசில அவன் தான் அவுட்டா????
என்ன கொடுமை மங்கு சார்?///

எங்க மேடம் , எங்க போனாலும் கடசீல நமக்கு தான் அல்வா குடுக்குராணுக ................நீங்க அடுத்த லைன் படிக்கலையா ??? அன்னைக்கு செலவு பூராம் நான் பண்ணினேன்

மங்குனி அமைச்சர் said...

தமிழ்க் காதலன். said...

மங்குனி கரக்டா.... மங்குனித்தனமா வேலைப் பார்த்திருக்கப் பத்தியா?..... யாரய்யா அது... அப்பேர் பட்ட நண்பன்.... பில்லக் கட்டச் சொல்லு....., எனக்கு கிடைச்ச மாதிரியே கிடைச்சிட்டன்பா உனக்கும்.///

யு , மீ.,.....செம் பிளட் ................ அவ்வ்வ்வ்வ்......................

மங்குனி அமைச்சர் said...

LK said...

விவரமா இருக்கனுங்க எல்லாரும்//

அதுல மட்டும் ரொம்ப விவரமா இருக்கானுக LK

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்கு என்னது இது ட்ரைன்னு ஏசின்னு? இப்போ புதுசா ஒரு ஸ்கீம் வந்திருக்காம் டாஸ்மாக்ல. சரக்கு வாங்கினா பிரியாணி ப்ரீயாம். சீக்கிரம் போயா! பிரியாணி தீர்ந்திடப் போகுது!///

நீ சுத்த வேஸ்ட்டு , லேட்டா வந்துட்டு என்னா எகத்தாளம் , ஏற்கனவே ரெண்டு பிரியாணி சாப்டாச்சு

மங்குனி அமைச்சர் said...

YOGA.S.Fr said...

பில்லை மட்டும் என்னையே குடுக்க வச்சிடுறான்!சூப்பர் பிரண்டுப்பா!!!///

உங்களுக்கு சந்தோசமா இருக்கா ??? இருக்கட்டும் , இருக்கட்டும் பாத்துக்கிர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

chennai to madurai cable?? super ponga..

ac sama ponga..

nalla sirichen///

நன்றிங்கோ ,.............

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

Present sir.///

அட்டன்டன்ஸ் போட்டாச்சு

மங்குனி அமைச்சர் said...

kalpanarajendran said...

"ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா " (இது நெஜம்மா நடந்துச்சு சார் , நான் தலைல
அடிச்சுக்கிட்டேன் )//

முடியல பா
பின்னிரிங்க!!!!!
எப்பிடி இப்பிடி எல்லாம்///

நானும் ஒரு வாரம் ஆபீசுக்கு லீவு போட்டு சிரிச்சேங்க

மங்குனி அமைச்சர் said...

Dhinakar said...

அடங்​கொய்யல! டிரைவர் நம்ம பிரெண்டுதான் , நம்ம பெயர சொல்லிருக்கலாம் இல்ல !!?//

சொன்னேன் சார் , அப்புறம்தான் வண்டி கண்ணாடிய ஏத்திவிட்டு அடிச்சான் சார்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா "

யார் அந்த மக்கா நம்ம சிரிப்பு போலீஸ் தானே....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா "

யார் அந்த மக்கா நம்ம சிரிப்பு போலீஸ் தானே....

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

sema comedy nainaa///

ஹி.ஹி.ஹி.....என்ன ஒரு தன்னடக்கம்,...................... நடக்கட்டும் , நடக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஏன் மச்சான் ஏ.சிய குறைக்கலாமா ?" இது தெரியாம நான் இவ்ளோ நேரம் நடுங்கிட்டே வந்தேன்டா "

யார் அந்த மக்கா நம்ம சிரிப்பு போலீஸ் தானே....///

சார் சும்மா காமடி பண்ணாதிங்க , நம்ம சிரிப்பு போலீசுக்கு கார் டோரவே திறக்கத்தேரியாது , நீங்க ஏ.சி வரைக்கும் யோசிக்கிறிங்க

பித்தனின் வாக்கு said...

////ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????/////

ஆகா மங்குனி இது எனக்கு தெரியாம போச்சே. எப்ப சந்திக்கலாம், தாஜ் கோரமண்டல் ஓட்டலில் மீட் பண்ணலாமா? வழக்கம் போல பில்லு நீதான் அப்புச்சி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

வெங்கட் said...

// ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ???? //

அந்த விவரம் கூட உங்களுக்கு
இல்லையே.. நீங்க போயி அவரை
கிண்டல் பண்றீங்க..?
ஹி., ஹி., ஹி..!!

Arun said...

cable shankar அவர்களை வாரி விட்டீர்கள் அமைச்சரே

கலாநேசன் said...

@#$ #$@%$#@

கலாநேசன் said...

சூப்பருங்க....

அங்கித வர்மா said...

நானும் இங்கே சப்வே ட்ரைன்ல போகும் போது எனது லாப் டாப்பிலே பதிவு எழுதிடுவேன். அனால் நம்ம ஊர்ல இப்படி பதிவு போடுவதற்கு ஊரையே காலி பண்ணி இருக்கீங்க. செம காமெடி பதிவுங்க

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

////ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????/////

ஆகா மங்குனி இது எனக்கு தெரியாம போச்சே. எப்ப சந்திக்கலாம், தாஜ் கோரமண்டல் ஓட்டலில் மீட் பண்ணலாமா? வழக்கம் போல பில்லு நீதான் அப்புச்சி.
////

தாஜ் கோரமண்டல் .............. பிளீஸ் செக் தி நம்பர் யு ஹேவ் டயல்டு , நீங்கள் டயல் செய்த என்னை சரிபார்க்கவும்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir///

லேட்டா வந்ததுக்கு 200 பைன் கட்டு

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

// ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ???? //

அந்த விவரம் கூட உங்களுக்கு
இல்லையே.. நீங்க போயி அவரை
கிண்டல் பண்றீங்க..?
ஹி., ஹி., ஹி..!!///

ஆகா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக ???????? மங்கு பி கேர்புல்

மங்குனி அமைச்சர் said...

Arun said...

cable shankar அவர்களை வாரி விட்டீர்கள் அமைச்சரே///

கோர்த்துவிடுவதில் வல்லவரா இருப்பிங்க போல ??? நடத்துங்க நடத்துங்க .............

மங்குனி அமைச்சர் said...

ஐ ....150 ........
போட்டாம் பாரு 150

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

@#$ #$@%$#@///

రొంబ నంద్రింగా సర్

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

சூப்பருங்க....///.

தேங்க்ஸ்சுங்கோ

மங்குனி அமைச்சர் said...

அங்கித வர்மா said...

நானும் இங்கே சப்வே ட்ரைன்ல போகும் போது எனது லாப் டாப்பிலே பதிவு எழுதிடுவேன். அனால் நம்ம ஊர்ல இப்படி பதிவு போடுவதற்கு ஊரையே காலி பண்ணி இருக்கீங்க. செம காமெடி பதிவுங்க///

எல்லாம் சும்மா உலுலாயி சார்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரைட்டு...

ப.செல்வக்குமார் said...

//ட்ரைன்ல சிஸ்டத்த கொண்டுபோனா சென்னைல இருந்து மதுரை வரைக்கும் அவ்ளோ பெரியவயருக்கு நான் எங்க சார் போவேன் ?(//

அதானே ., இதே மாதிரி தான் நானும் ஒரு தடவ பெட்ரோல் நல்லா ஓடுதா அப்படின்னு டெஸ்ட் பண்ணினேன் ., அதுதான் உங்க கிட்ட சொல்லிருக்கேனே ..

ப.செல்வக்குமார் said...

/////ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????///

காருல ஓடுற AC இக்கு கூட நீங்க கரண்ட் பில் கட்டுறீங்களா ..?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////ஆனா எங்க போனாலும் பில்லுக்கு காசு மட்டும் என்னைய கொடுக்க வச்சிடுறான் சார் , இதுல மட்டும் எப்படி இவ்ளோ விவரமா இருக்கான்னு தெரியல ????/////

மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒருதரம் நிருபித்துகொன்டே இருகிறீர்கள் போங்க . . . .

H said...

nee eppyaa mail id koduththaaaa

மங்குனி அமைச்சர் said...

H said...

nee eppyaa mail id koduththaaaa
///

அடப்பாவி உன்கிட்ட இல்லையா ???

manguniamaicher@gmail.co
yasinshaji@gmail.com

அன்னு said...

//அப்புறம் நம்ம பிரண்டு ஒரு பய சார் , கூடப் படிச்ச பய , சின்ன வயசுல நம்மள மாதிரி பிர்லியன்ட் கிடையாது ,//

அமைச்சரே வடைல பருப்பு வேகலை...பாத்துக்குங்க :)

சாமக்கோடங்கி said...

சார் கடைசி வரைக்கும் உங்க காலேஜு எதுன்னு சொல்லவே இல்லையே... என்ன மார்க்கு வாங்கினீங்க...?

razin said...

ஆமா சார்.அவன் சரியான லூசுப்பயதான்,பொழச்சு போரான் விடுங்க....மங்குனியின் பதிவு,,,வெய்ட்டு தான்,,வித்யாசமா இருக்கு...வாழ்த்துக்கள்..

razin said...

ஆமா சார்.அவன் சரியான லூசுப்பயதான்,பொழச்சு போரான் விடுங்க....மங்குனியின் பதிவு,,,வெய்ட்டு தான்,,வித்யாசமா இருக்கு...வாழ்த்துக்கள்..

ILLUMINATI said...
This comment has been removed by the author.
ILLUMINATI said...

மங்குனி அன்னாரிடம் ஒரு சின்ன கேள்வி...

ரயில்ல கக்கூசுக்கு போகும் போது, வயர எங்கண்ணே சொருகுவீங்க? இல்ல, பிளக் பாயிண்ட் இருக்காதே னு கேட்டேன். ;)

Comicology said...

•••• இவன் பிளாக் பக்கம் வந்தேன் பாரு ... என்னைய ......... ••••

இதற்கு இப்ப காரணம் புரியுது :)

பட்டாபட்டி.... said...

ரயில்ல கக்கூசுக்கு போகும் போது, வயர எங்கண்ணே சொருகுவீங்க? இல்ல, பிளக் பாயிண்ட் இருக்காதே னு கேட்டேன். ;)//

எப்பவும்போல மூக்குலதான்.. ஹி..ஹி

ILLUMINATI said...

மூக்கா? நானு கூட.....வாய் ல னு நினைச்சேன். கோடிட்ட இடத்தை தயவு செய்து நிரப்ப வேண்டாம்.அது சும்மா ஒரு எபக்ட்க்காக கொடுத்தது. ;)