எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, November 1, 2010

டைரடக்கர் டாக்குட்டர் விஜய்

முஸ்கி : கை விரல்களை மடக்கி நரம்புகள் முறுக்கேறி புடைக்க ஆவேசத்துடனும் ஒரு மாபெரும் மாஸ் ஹீரோவின் பில்டப்புடனும் கீழே உள்ள முதல் பாராவை படிக்கவும்.(இளைய தளபதியின் மூன்று வயது போடோ )


இத்தாலி எனும் அந்நிய நாட்டு சதிக்கு எதிராக பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வந்து தடைகளை தனது இரும்ப்புக் கரங்களால் உடைத்தெறிந்து இந்தியாவை காக்க பிச்சுவா கத்தியால் தனது பெருவிரலை கீறி வந்த ரத்தத்தில் ஆக்ரோசமாக சூளுரைத்த நமது வீரத்தளபதி டாக்குட்டர் விஜய் அவர்களின் உலக மக்களை காக்க எடுக்கும் அடுத்த அவதாரம் தான்...........
(வரும் காலத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகக்கூடிய சேர் )

இப்ப கூல் பேபி கூல் , கூல் ........................டொன்ட்ட.. டொன்ட்ட.. டொன்ட்ட.... டொய்ய்ய்ய்ய்யின்...........


டைரடக்கர் டாக்குட்டர் விஜய்


(டைரடக்கர் டாக்குட்டர் விஜய் டைரக்சன் வியு பார்க்கும் அபூர்வ புகைப்படம் )எங்க எல்லாரும் மூணுவாட்டி சத்தமா சொல்லுங்க ,வாழ்த்துகோசம் விண்ணைப் பிளக்க வேண்டும்

"
புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க "

"
புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க ,வாழ்க "

"புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

"வாழ்க ,வாழ்க,வாழ்க "

நடிகனாக அவர் திருத்திய வில்லன்களும் அடித்து நொறுக்கிய அடியாள்களும் புரட்டி எடுத்த அரசியவாதிகளும் ன் உயிரையும் துச்சமென மதித்து காப்பாற்றிய ஏழைகளும்புடைசூழ, தனது புது அவதாரத்திர்க்குள் தனது காலை எடுத்து வைத்தார் டாக்குட்டர் விஜய்.

டைரடக்கர் டாக்குட்டர் விஜய்யுடன் ஒரு பேட்டி

(இனி பேட்டி முழுவதும் நமது டைரடக்கர் டாக்குட்டர் விஜய் அவர்கள் சுக்கமாகவும் , செல்லமாகவும் டை. டா. விஜய் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படுவார் )


"வணக்கம் டை. டா. விஜய் சார்"

"வணக்கம் , வணக்கம் "
.

"ஏன் சார் திடீரென்று இப்படி ஒரு புதிய அவதாரம் ?"

"இது என்னுடைய 50 ஆண்டு கால கனவு. "

"இந்த டை. டா. விஜய் அவதாரத்தின் நோக்கம் ?"

"இந்தியாவை வல்லரசாக்குவது"

"வல்லரசுன்னா ன்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்"

"சரி என்ன படம் டைரக்ட் பண்ண போறீங்க ?"

"யுவாங் சுவாங் , அப்படின்னு ஒரு சைனீஸ் படம் , அதுல சீன சுரங்கத்துல கஷ்டப்படுற எழைகள காப்பாத்த போற ஒரு தமிழ் நாட்டு படிப்பறிவில்லாத பட்டிகாட்டு இளைஞன் எப்படி அமெரிக்க ஜனாதிபதியா ஆகுராங்குறது தான் கதை ."
(ஹீரோ டா. விஜய்க்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் டை. டா. விஜய் )


"சீன மொழி படம் எப்படி தமிழ்ல ?"

"இல்லை இது சீன மொழியில் எடுக்கப்பட்ட முழுநீள தமிழ் படம் தான் ."

"ஹீரோ ??"

"வேற யாரு , நம்ம உலகப் புகழ் இளையதளபதியாகிய நானேதான் . "


(யுவாங் சுவாங் படத்தில் மாறுபட்ட கெட்டப்பில் டாக்குடர் விஜய் )


"கதை பத்தி இன்னும் ???"

"சீனாவுல இருக்க ஒரு சுரங்கத்துக்குள்ள தண்ணி புகுந்திடுது , நம்ம ஹீரோ இங்க இருந்து சைக்கிள்ள போயி சைடிஸ் , மிக்சிங் சோடா கூட இல்லாம அப்படியே ராவா எல்லா தண்ணியையும் குடிச்சிட்டு மட்டையாயிடுறார் . இங்கதான் கதையோட "நாட்" இருக்கு ."

"சார் ஹீரோயின் பத்தி ??"

"புதுமுகம்தான் தேடிக்கிட்டு இருக்கேன் , நம்ம பன்னிகுட்டி பதிவுல போட்ட அந்த மூணு பேருல ஒரு ஹீரோயின நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க . "
"அப்புறம் கிளைமாக்ஸ் பத்தி ?"

"எல்லாத்தையும் பேட்டியிலேயே சொல்ல முடியுமா ? மீதியை வெண்திரையில் காண்க "டிஸ்கி: (இது ஆஃப தி ரிகார்டு யாருகிட்டயும் சொல்லிடாதிங்க) அடுத்த வருடம் யுவாங் சுவாங் படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்ற பின் பத்திரிக்கைகளுக்கு கொடுப்பத்தர்க்காக இப்பொழுதே எடுத்து வைக்கப்பட்டுள டை.டா .விஜய் அவர்களின் போடோ கீழே ...................
(ஊரு கண்ணு ஏன்? உலக கண்ணு பட்டு இருக்கு இப்பவே திருஷ்டி சுத்திபோடனும் )

130 comments:

S Maharajan said...

(ஊரு கண்ணு ஏன்? உலக கண்ணு பட்டு இருக்கு இப்பவே திருஷ்டி சுத்திபோடனும் )

ayyo ayyo ayyo ayyo!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///புதுமுகம்தான் தேடிக்கிட்டு இருக்கேன் , நம்ம பன்னிகுட்டி பதிவுல போட்ட அந்த மூணு பேருல ஒரு ஹீரோயின நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க . "///

இதுக்கு ஏதாவது கமிசன் கெடைக்குமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்!

பிரியமுடன் பிரபு said...

pavamya vijai
vidduru
evvalavu than adikirathu oru manusana.... oru kanakku venamaa ......
pulla puchiya podu.....

viddudu amaissare......

ராஜகோபால் said...

யோ மங்குனி இங்க கொஞ்சம் வா .,

Dr.விஜய் - ன் கோலாயுதம்


http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_29.html

சௌந்தர் said...

(ஊரு கண்ணு ஏன்? உலக கண்ணு பட்டு இருக்கு இப்பவே திருஷ்டி சுத்திபோடனும் )/////

இதை பார்த்த எங்க கண்ணுக்கு தான் சுத்தி போடனும்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////[Image](வரும் காலத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகக்கூடிய சேர் )///

இந்தச் சேரு எங்க கிடைக்கிதுன்னு சொல்லுங்க, இப்பவே சல்லிசா நாலு வாங்கி போட்டுடோம்னா, பின்னாடி நல்ல ரேட்டுக்கு தள்ளி விட்ரலாம் பாருங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நமது வீரத்தளபதி டாக்குட்டர் விஜய் அவர்களின் உலக மக்களை காக்க எடுக்கும் அடுத்த அவதாரம் தான்...........///

அப்போ படத்துல எத்தன கேரக்டரு? எத்ததன ஹீரோயினு? (காமெடியனப் பத்திக் கேக்கல!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நடிகனாக அவர் திருத்திய வில்லன்களும் அடித்து நொறுக்கிய அடியாள்களும் புரட்டி எடுத்த அரசியவாதிகளும் தன் உயிரையும் துச்சமென மதித்து காப்பாற்றிய ஏழைகளும்புடைசூழ, தனது புது அவதாரத்திர்க்குள் தனது காலை எடுத்து வைத்தார் டாக்குட்டர் விஜய்.///

மொத்தமா அல்லக்கைன்னு சொல்லியிருக்கலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இல்லை இது சீன மொழியில் எடுக்கப்பட்ட முழுநீள தமிழ் படம் தான் ."///////

வெளங்கிரும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்த டை. டா. விஜய் அவதாரத்தின் நோக்கம் ?"

"இந்தியாவை வல்லரசாக்குவது"

"வல்லரசுன்னா என்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்"///

அப்போ கேப்டன் கட்சில சேரப் போறாரா, டாகுடரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கட ஓனரு எங்கே பன்னும் டீயும் சாப்புட போயிட்டாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி: (இது ஆஃப தி ரிகார்டு யாருகிட்டயும் சொல்லிடாதிங்க) அடுத்த வருடம் யுவாங் சுவாங் படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்ற பின் பத்திரிக்கைகளுக்கு கொடுப்பத்தர்க்காக இப்பொழுதே எடுத்து வைக்கப்பட்டுள டை.டா .விஜய் அவர்களின் போடோ கீழே ................... ////


அப்புறம், ஏதாவது வில்லங்கமான இன்டர்வியு வரும், அதுக்கும் ஒரு போட்டோ போட்ருக்கலாம்ல?

Chitra said...

SILENCE ........!!!!

ha,ha,ha,ha,ha..

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கட ஓனரு எங்கே பன்னும் டீயும் சாப்புட போயிட்டாரா?
///

சரியாக கண்டு பிடித்த நமது பன்னிக்கு டை.டா.விஜய் யின் , முதல் பட dvd அனுப்பப்படும்

மங்குனி அமைசர் said...

S Maharajan said...

(ஊரு கண்ணு ஏன்? உலக கண்ணு பட்டு இருக்கு இப்பவே திருஷ்டி சுத்திபோடனும் )

ayyo ayyo ayyo ayyo!///

உங்க கண்ணு கொள்ளிக்கன்னா இருக்கும் போல ????

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///புதுமுகம்தான் தேடிக்கிட்டு இருக்கேன் , நம்ம பன்னிகுட்டி பதிவுல போட்ட அந்த மூணு பேருல ஒரு ஹீரோயின நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க . "///

இதுக்கு ஏதாவது கமிசன் கெடைக்குமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்!///

கமிசன் என்ன ? புல் ராயல் டி உனக்குத்தான்

மங்குனி அமைசர் said...

பிரியமுடன் பிரபு said...

pavamya vijai
vidduru
evvalavu than adikirathu oru manusana.... oru kanakku venamaa ......
pulla puchiya podu.....

viddudu amaissare......///

என்ன இப்படி சொல்லிட்டிங்க ??? நாட்டுக்காக பாடுபடுரவுங்கள ஊக்கப்படுத்தணும் சார்

மங்குனி அமைசர் said...

ராஜகோபால் said...

யோ மங்குனி இங்க கொஞ்சம் வா .,

Dr.விஜய் - ன் கோலாயுதம்


http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_29.html///

வர்றேன் ராஜகோபால் சார்

வெட்டிப்பேச்சு said...

நெசமாலுமே ஆட்டோ வரும் போல..

மங்குனி அமைசர் said...

சௌந்தர் said...

(ஊரு கண்ணு ஏன்? உலக கண்ணு பட்டு இருக்கு இப்பவே திருஷ்டி சுத்திபோடனும் )/////

இதை பார்த்த எங்க கண்ணுக்கு தான் சுத்தி போடனும்...!///

நம்ம டை.டா விஜய்யா பாத்து பொறாமை வயித்தெரிச்சல்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////[Image](வரும் காலத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகக்கூடிய சேர் )///

இந்தச் சேரு எங்க கிடைக்கிதுன்னு சொல்லுங்க, இப்பவே சல்லிசா நாலு வாங்கி போட்டுடோம்னா, பின்னாடி நல்ல ரேட்டுக்கு தள்ளி விட்ரலாம் பாருங்க?////

நம்ம டை.டா விஜய் உட்கார்ந்த பிறகுதான் அந்த சேருக்கு மரியாதையே வரும்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நமது வீரத்தளபதி டாக்குட்டர் விஜய் அவர்களின் உலக மக்களை காக்க எடுக்கும் அடுத்த அவதாரம் தான்...........///

அப்போ படத்துல எத்தன கேரக்டரு? எத்ததன ஹீரோயினு? (காமெடியனப் பத்திக் கேக்கல!)////

அதான் நம்ம டை.டா விஜய் மீதிய வெண்திரையில் காங்கன்னு சொல்லிருக்காரே

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நடிகனாக அவர் திருத்திய வில்லன்களும் அடித்து நொறுக்கிய அடியாள்களும் புரட்டி எடுத்த அரசியவாதிகளும் தன் உயிரையும் துச்சமென மதித்து காப்பாற்றிய ஏழைகளும்புடைசூழ, தனது புது அவதாரத்திர்க்குள் தனது காலை எடுத்து வைத்தார் டாக்குட்டர் விஜய்.///

மொத்தமா அல்லக்கைன்னு சொல்லியிருக்கலாம்ல?////

எல்லாம் ஒரு விளம்பரம்தான்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இல்லை இது சீன மொழியில் எடுக்கப்பட்ட முழுநீள தமிழ் படம் தான் ."///////

வெளங்கிரும்!////

பாரு இந்த படம் வந்தபின் நாட்டில் எவ்ளோ எழுச்சி உண்டாகுதுன்னு

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இந்த டை. டா. விஜய் அவதாரத்தின் நோக்கம் ?"

"இந்தியாவை வல்லரசாக்குவது"

"வல்லரசுன்னா என்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்"///

அப்போ கேப்டன் கட்சில சேரப் போறாரா, டாகுடரு?////

சே.... கேப்டன் லோகல் பாலிடிக்ஸ் , டை.டா.விஜய் உலக பாலிடிக்ஸ்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி: (இது ஆஃப தி ரிகார்டு யாருகிட்டயும் சொல்லிடாதிங்க) அடுத்த வருடம் யுவாங் சுவாங் படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்ற பின் பத்திரிக்கைகளுக்கு கொடுப்பத்தர்க்காக இப்பொழுதே எடுத்து வைக்கப்பட்டுள டை.டா .விஜய் அவர்களின் போடோ கீழே ................... ////


அப்புறம், ஏதாவது வில்லங்கமான இன்டர்வியு வரும், அதுக்கும் ஒரு போட்டோ போட்ருக்கலாம்ல?////


அதுக்கு இப்பத்தான் போடோ செசன் நடந்துக்கிட்டு இருக்கு

மங்குனி அமைசர் said...

Chitra said...

SILENCE ........!!!!

ha,ha,ha,ha,ha..///

என்னங்க மேடம் எங்க டை.டா.விஜய பாத்தா உங்களுக்கு சிரிப்பா வருதா , இருங்க ஆடோ அனுப்புறோம்

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

நெசமாலுமே ஆட்டோ வரும் போல..////

அப்படியா சொல்றிங்க , ரொம்ப பயமுத்துரின்களே ?????

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

பன்னிகுட்டு உயிர் தோழர் மங்கு வாழ்க!!

கே.ஆர்.பி.செந்தில் said...

"புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

பன்னிகுட்டு உயிர் தோழர் மங்கு வாழ்க!!
////

மாத்தி யோசி ,
டை.டா.விஜய்யின் தற்கொலைப் படை தலைவர்கள் பண்ணி, மங்கு வாழ்க வாழ்க

மங்குனி அமைசர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

"புதிய அவதாரம் டைரடக்கர் டாக்குட்டர் விஜய் "////

வாழ்க வாழ்க
சார் நீங்க நம்ம இனம் சார்

என்னது நானு யாரா? said...

உங்களைத்தான் தேடிட்டு இருக்காரம் டாக்டரு. தப்பித் தவறிக்கூட வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க மங்குனி! அப்புறம் கதைக் கந்தல் தான். இப்பவே முன் எச்சரிக்கை சொல்லிட்டேன்.

மங்குனி அமைசர் said...

என்னது நானு யாரா? said...

உங்களைத்தான் தேடிட்டு இருக்காரம் டாக்டரு. தப்பித் தவறிக்கூட வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க மங்குனி! அப்புறம் கதைக் கந்தல் தான். இப்பவே முன் எச்சரிக்கை சொல்லிட்டேன்.
////

நன்றிங்க சார் , நான் இப்போ அமேசான் காட்டுகுள்ளதான் ஒளிஞ்சு இருக்கேன்

பிரபாகர் said...

நல்லாத்தான் யோசிக்கிறீரு... இந்த பன்னிக்குட்டி தொல்ல தாங்க முடியலப்பா!.... பின்னூட்டத்துல பொளந்து கட்டுறாரு!...

பிரபாகர்...

சாருஸ்ரீராஜ் said...

ஹா ஹா. நகைசுவையா இருக்கு வேறு ஒன்ரும் சொல்றதுக்கு இல்லை

மர்மயோகி said...

டை டா. விஜயோட படம் தியேட்டர்ல ஓடுதோ இல்லையோ..நெறைய ப்ளோக்கேர்சுக்கு மேட்டர் கேடச்சுடுது

Anonymous said...

klsjdfklsajf lkjsklfsj iuyewiojr kljskldf n,mzxnv, lpqwuire ,mnzx,.vn

எனக்கு சைனீஸ்ல திட்ட தெரியாது.. அதனால தான் இப்டி.

மங்குனி அமைசர் said...

பிரபாகர் said...

நல்லாத்தான் யோசிக்கிறீரு... இந்த பன்னிக்குட்டி தொல்ல தாங்க முடியலப்பா!.... பின்னூட்டத்துல பொளந்து கட்டுறாரு!...

பிரபாகர்...
///

பன்னி ஆடி அம்மாவசை நடுராத்திரி 12 மணிக்கு பிறந்தது பிரபாகர் சார் , பிறக்கும் போதே ஜாதகத்துல ஏதோ பிசகு அதான் இப்பிடி..............

மங்குனி அமைசர் said...

சாருஸ்ரீராஜ் said...

ஹா ஹா. நகைசுவையா இருக்கு வேறு ஒன்ரும் சொல்றதுக்கு இல்லை////

ஆகா , நல்லா சிரிங்க அதுல என்ன யோசனை , சிரிக்கிறது தானே நம்ம வேலை , அப்புறம் நாம என்ன நாட்ட திருத்த மேச்செஜா சொல்லப்போறோம்

நாகராஜசோழன் MA said...

யோவ் மங்குனி, டாகுடரு பத்தி பதிவு படிக்காம இந்த ரெண்டு நாலா நான்பட்ட கஷ்டத்தை தீர்த்து வச்சிட்டே. கண்டிப்பா வர்ற தேர்தல்ல உனக்கு ஒரு சீட் கெடைக்கும்.

மங்குனி அமைசர் said...

மர்மயோகி said...

டை டா. விஜயோட படம் தியேட்டர்ல ஓடுதோ இல்லையோ..நெறைய ப்ளோக்கேர்சுக்கு மேட்டர் கேடச்சுடுது///


இது ஒரு சீசன் மர்மயோகி சார் , அப்புறம் உங்க புது பதிவு என்ன ஆச்சு ????

மங்குனி அமைசர் said...

இந்திரா said...

klsjdfklsajf lkjsklfsj iuyewiojr kljskldf n,mzxnv, lpqwuire ,mnzx,.vn

எனக்கு சைனீஸ்ல திட்ட தெரியாது.. அதனால தான் இப்டி.////

அதெல்லாம் ஓகே , மேடம் இப்ப நீங்க திட்டினது என்ன மொழி ???

Gayathri said...

haha nadippe thangala ithula directiona kadavule naan illa

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///புதுமுகம்தான் தேடிக்கிட்டு இருக்கேன் , நம்ம பன்னிகுட்டி பதிவுல போட்ட அந்த மூணு பேருல ஒரு ஹீரோயின நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க . "///

இதுக்கு ஏதாவது கமிசன் கெடைக்குமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்!//

மாம்ஸ் இதெல்லாம் சேவை. அதுக்கு கமிசன் எதிர்பார்க்கக் கூடாது.

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

யோவ் மங்குனி, டாகுடரு பத்தி பதிவு படிக்காம இந்த ரெண்டு நாலா நான்பட்ட கஷ்டத்தை தீர்த்து வச்சிட்டே. கண்டிப்பா வர்ற தேர்தல்ல உனக்கு ஒரு சீட் கெடைக்கும்.////

அப்படியா நண்பா ???? எலக்சன்ல நிக்காம நேரா மந்திரி போஸ்ட் எல்லாம் கிடைக்காதா ???

மங்குனி அமைசர் said...

Gayathri said...

haha nadippe thangala ithula directiona kadavule naan illa////

நீங்க இந்த உலகத்துல எங்க போனாலும் தப்பிக்க முடியாது ., உங்க வீடு தேடி dvd வரும்

நாகராஜசோழன் MA said...

// TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

பன்னிகுட்டு உயிர் தோழர் மங்கு வாழ்க!!//

அப்படியே டாகுடரு வாழ்கன்னு சொல்லிடு டெர்ரர்.

நாகராஜசோழன் MA said...

49

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///புதுமுகம்தான் தேடிக்கிட்டு இருக்கேன் , நம்ம பன்னிகுட்டி பதிவுல போட்ட அந்த மூணு பேருல ஒரு ஹீரோயின நீங்களே செலக்ட் பண்ணி சொல்லுங்க . "///

இதுக்கு ஏதாவது கமிசன் கெடைக்குமான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார்!//

மாம்ஸ் இதெல்லாம் சேவை. அதுக்கு கமிசன் எதிர்பார்க்கக் கூடாது.////

நல்லா எடுத்து சொல்லு நாகராஜசோழன், எப்ப பாரு காசு காசுன்னே அலையுறான்

நாகராஜசோழன் MA said...

நான் தான் 50

மங்குனி அமைசர் said...

போட்டாம் பாரும் 50 (ஏமாந்தியா , ஏமாந்தியா )

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

நான் தான் 50///

ஜஸ்ட்டு மிச்சு வடை போயி போச்சு , போயிந்தி , இட்ஸ் கான்

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

யோவ் மங்குனி, டாகுடரு பத்தி பதிவு படிக்காம இந்த ரெண்டு நாலா நான்பட்ட கஷ்டத்தை தீர்த்து வச்சிட்டே. கண்டிப்பா வர்ற தேர்தல்ல உனக்கு ஒரு சீட் கெடைக்கும்.////

அப்படியா நண்பா ???? எலக்சன்ல நிக்காம நேரா மந்திரி போஸ்ட் எல்லாம் கிடைக்காதா ???//

அதுக்கு நீ நம்ம தாத்தாக்கு பேரனா பொறந்திருக்கணும் மங்குனி!

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

போட்டாம் பாரும் 50 (ஏமாந்தியா , ஏமாந்தியா )//

எப்பவாவது சிக்காமலா போயிடுவே அப்ப கவனிச்சிக்குறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதெல்லாம் சரி. யாரைக்கேட்டு என்னோட போட்டோ வ முதல்ல போட்டு என்னை அசிங்க படுத்திருப்ப. சாகும் வரை மன்னிப்பு கேள்

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

நான் தான் 50///

ஜஸ்ட்டு மிச்சு வடை போயி போச்சு , போயிந்தி , இட்ஸ் கான்//

அவள் பறந்து போனாளே!

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதெல்லாம் சரி. யாரைக்கேட்டு என்னோட போட்டோ வ முதல்ல போட்டு என்னை அசிங்க படுத்திருப்ப. சாகும் வரை மன்னிப்பு கேள்//

போலிசு கண் தெரியலையா? வேளச்சேரில அகர்வால் கண் மருத்துவமனை இருக்கு அங்க போய் கண்ணை செக் பண்ணு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதெல்லாம் சரி. யாரைக்கேட்டு என்னோட போட்டோ வ முதல்ல போட்டு என்னை அசிங்க படுத்திருப்ப. சாகும் வரை மன்னிப்பு கேள்//

போலிசு கண் தெரியலையா? வேளச்சேரில அகர்வால் கண் மருத்துவமனை இருக்கு அங்க போய் கண்ணை செக் பண்ணு.

November 1, 2010 11:18 AM///

அது என் போட்டோ. என்னை நேர்ல பாத்ததில்லையே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

"வல்லரசுன்னா என்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்//
டாக்டர் விஜய் ஆஸ்கார்,அவதார் விருதுகளை குவிக்க வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...


அதுக்கு நீ நம்ம தாத்தாக்கு பேரனா பொறந்திருக்கணும் மங்குனி!
////

அந்த பொழப்புக்கு மருந்த குடிச்சு சாகலாம்

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

போட்டாம் பாரும் 50 (ஏமாந்தியா , ஏமாந்தியா )//

எப்பவாவது சிக்காமலா போயிடுவே அப்ப கவனிச்சிக்குறேன்.////

ஹி.ஹி.ஹி....... என்ன இப்ப கோபம் , எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம் , சமாதானம் , வெள்ளைக்கொடி

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதெல்லாம் சரி. யாரைக்கேட்டு என்னோட போட்டோ வ முதல்ல போட்டு என்னை அசிங்க படுத்திருப்ப. சாகும் வரை மன்னிப்பு கேள்////

ஹா.ஹா.ஹா...... உனக்கு காமடி சென்ஸ் ஜாஸ்த்தி போலீசு

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

நான் தான் 50///

ஜஸ்ட்டு மிச்சு வடை போயி போச்சு , போயிந்தி , இட்ஸ் கான்//

அவள் பறந்து போனாளே!////

நோ ஏணி திலி பீலிங்க்ஸ்

நா.மணிவண்ணன் said...

இந்த டாக்டர் தம்பிய விடமாட்டீங்களா .நீங்க எல்லாரும் சேர்ந்து கிழிக்கிற கிழில டாக்டர் தம்பி பேஷன்ட் ஆகிடபோறார் .அப்பறம் நாம எல்லாரும் ஒரு எதிர்கால முதலமைச்சரை இழந்துவிடுவோம்

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதெல்லாம் சரி. யாரைக்கேட்டு என்னோட போட்டோ வ முதல்ல போட்டு என்னை அசிங்க படுத்திருப்ப. சாகும் வரை மன்னிப்பு கேள்//

போலிசு கண் தெரியலையா? வேளச்சேரில அகர்வால் கண் மருத்துவமனை இருக்கு அங்க போய் கண்ணை செக் பண்ணு.////

விடுங்க நாகராஜசோழன் , பாவம் சின்ன பைய்யன் ஆசைப்படுறான் , சொல்லிட்டு போகட்டும்

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...


அதுக்கு நீ நம்ம தாத்தாக்கு பேரனா பொறந்திருக்கணும் மங்குனி!
////

அந்த பொழப்புக்கு மருந்த குடிச்சு சாகலாம்//

நீதானே மங்குனி கேட்டாய் ஜெயிக்காமலே மந்திரி ஆகமுடியுமானு. எனக்கு தெரிஞ்சு இன்னொரு வழி இருக்கு அதுக்கு நீ இத்தாலி மொழி கத்துக்கணும் பரவாயில்லையா?

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...


அது என் போட்டோ. என்னை நேர்ல பாத்ததில்லையே////

வேணாண்டா சாமே, பாக்க பயம்மா இருக்கு , எவ்ளோ காசு வேணாலும் தர்றேன் தயவு செய்து மாறுவேசம் போட்டு வா ,

மங்குனி அமைசர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

"வல்லரசுன்னா என்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்//
டாக்டர் விஜய் ஆஸ்கார்,அவதார் விருதுகளை குவிக்க வாழ்த்துக்கள்////

நீங்க நம்ம ஆளு சார் , மத்த எல்லா பயலுகளும் பொறாமை புடிச்ச பயலுகளா இருக்கானுக

மங்குனி அமைசர் said...

நா.மணிவண்ணன் said...

இந்த டாக்டர் தம்பிய விடமாட்டீங்களா .நீங்க எல்லாரும் சேர்ந்து கிழிக்கிற கிழில டாக்டர் தம்பி பேஷன்ட் ஆகிடபோறார் .அப்பறம் நாம எல்லாரும் ஒரு எதிர்கால முதலமைச்சரை இழந்துவிடுவோம்////

ஆமா சார் , நீங்கள் சொல்றதுலயும் ஒரு பாயிட்டு இருக்கு , கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும்

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...நீதானே மங்குனி கேட்டாய் ஜெயிக்காமலே மந்திரி ஆகமுடியுமானு. எனக்கு தெரிஞ்சு இன்னொரு வழி இருக்கு அதுக்கு நீ இத்தாலி மொழி கத்துக்கணும் பரவாயில்லையா?////

ஹி.ஹி.ஹி.... விடு நான் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டை.டா.விஜய் கிட்டயே பதவி வாங்கிக்கிர்றேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கடைக்கு வாய்யா...!

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி பண்ணி கூட சேராத ன்னு எத்தனை வட்டி சொன்னேன் கேட்டீங்களா .......பாருங்க இப்ப நாங்க கஷ்டபடுறோம்........போங்க பொய் புள்ள குட்டி கள படிக்க வைங்க ........
யோவ் பண்ணி தாங்க முடியலே டாபிக மாத்து

மண்டையன் said...

அது வேற ஒன்னும் இல்ல மூக்கு கொஞ்சம் போடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணும் .

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கடைக்கு வாய்யா...!
////

வந்தா டீயும் பண்ணும் தருவியா ????

மங்குனி அமைசர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி பண்ணி கூட சேராத ன்னு எத்தனை வட்டி சொன்னேன் கேட்டீங்களா .......பாருங்க இப்ப நாங்க கஷ்டபடுறோம்........போங்க பொய் புள்ள குட்டி கள படிக்க வைங்க ........
யோவ் பண்ணி தாங்க முடியலே டாபிக மாத்து////

விடுங்க பண்ணிகுட்டிய விஜய் படத்துல வில்லனா போடருவோம் , கடைசில விஜய் பண்ணிகுட்டிய திருத்திருவாறு

மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

அது வேற ஒன்னும் இல்ல மூக்கு கொஞ்சம் போடைப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணும் .////

அப்ப டை.டா.விஜய்க்கு மூக்கு புடிப்பா இருக்குன்னு சொல்றிங்களா ????

அருண் பிரசாத் said...

இந்த வாயில்லாத பிள்ளைய எத்தனை பேருதான் அடிச்சி அடிச்சி விளையாடுவீங்களோ?!

அப்துல்மாலிக் said...

:) :) :)))))

வானம்பாடிகள் said...

காலைல ஏன் கொலை வெறி:))

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

இந்த வாயில்லாத பிள்ளைய எத்தனை பேருதான் அடிச்சி அடிச்சி விளையாடுவீங்களோ?!//////


அடிச்சு அடிச்சு செதுக்கித்தான் பாரைய சிலையா விடக்க முடியும் , அடிவாங்க அடிவாங்க த்தான் தங்கம் மின்னும் ......

மங்குனி அமைசர் said...

அப்துல்மாலிக் said...

:) :) :)))))////

thank you abdul maalik

மங்குனி அமைசர் said...

வானம்பாடிகள் said...

காலைல ஏன் கொலை வெறி:))////


இல்லைங்க சார் நம்ம டை.டா.விஜய்யோட மதிப்பு தெரியாம நம்ம பன்னிகுட்டி ஓவரா விளையாடுறான் , அதான் அவரோட பவர பத்தி சும்மா சின்ன சாம்பிள் போட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நாகராஜசோழன் MA said...


அது என் போட்டோ. என்னை நேர்ல பாத்ததில்லையே////

வேணாண்டா சாமே, பாக்க பயம்மா இருக்கு , எவ்ளோ காசு வேணாலும் தர்றேன் தயவு செய்து மாறுவேசம் போட்டு வா ,///

அந்த பயம் இருக்கணும், நான் தனி ஆள் இல்ல. என் கூட டாக்டர் விஜய் இருக்கார்,

பிரவின்குமார் said...

தல.. பி்ன்னிட்டீங்க..!!! அப்புறம் அடுத்து உங்களுக்கு போட்டியா பிலாக் எழுத வர்ரதா கேள்விப்பட்டேன்..!! ஹி... ஹா.. ஹா...! மங்குனி அமைச்சர் vs டைரடக்கர் டாக்குட்டர் விஜய்" னு பல பதிவுகள் வந்தாலும் வரலாம்.!! ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

எஸ்.கே said...

படம் வெள்ளி விழா கொண்டாடுமென நினைக்கிறேன்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டைரடக்கர் டாக்குட்டர் விஜய் வாழ்க வாழ்க.................... :))

அன்பரசன் said...

//"இது என்னுடைய 50 ஆண்டு கால கனவு. "//

செம செம..

வெட்டிப்பேச்சு said...

என்னாண்ணே! உங்களை போலீஸ் பின்னி பெடலெடுத்திட்டிருக்கார்.. பதிவுலகத்திலே இன்னொரு கலவரம் வெடிச்சிருச்சே..!!

அய்யோ.. எங்க போனீங்க.. நெசமாலுமே ஆட்டோ வந்திருச்சா..தெய்வமே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

வெட்டிப்பேச்சு said...

என்னாண்ணே! உங்களை போலீஸ் பின்னி பெடலெடுத்திட்டிருக்கார்.. பதிவுலகத்திலே இன்னொரு கலவரம் வெடிச்சிருச்சே..!!

அய்யோ.. எங்க போனீங்க.. நெசமாலுமே ஆட்டோ வந்திருச்சா..தெய்வமே...//

மங்குனி தலை மறைவு. பதிவுலகில் பதற்றம்

philosophy prabhakaran said...

விஜய்யை கலைச்சு போடுற பதிவுகளை படிச்சு படிச்சு போர் அடிச்சிடுச்சு நண்பரே... புதுசா வேற யாரையாவது வம்புக்கு இழுக்கலாமே...

dr suneel krishnan said...

"யுவாங் சுவாங் , அப்படின்னு ஒரு சைனீஸ் படம் , அதுல சீன சுரங்கத்துல கஷ்டப்படுற எழைகள காப்பாத்த போற ஒரு தமிழ் நாட்டு படிப்பறிவில்லாத பட்டிகாட்டு இளைஞன் எப்படி அமெரிக்க ஜனாதிபதியா ஆகுராங்குறது தான் கதை .//
இத்தகைய கதை அம்சம் நிறைந்த படங்களை அவர் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்

vinu said...

me @ HP campus; chennai; ennakkeallam intha maatri oru vaaypu varumunnu naan kanavulla kooda niaichu paarthathu illay;


Ayouuuuuu ayooooooooooooo

வெங்கட் said...

// விஜய்யை கலைச்சு போடுற பதிவுகளை படிச்சு படிச்சு போர் அடிச்சிடுச்சு நண்பரே... புதுசா வேற யாரையாவது வம்புக்கு இழுக்கலாமே... //

Repeattuuuuuu...

Adutha Dummi Piece yaaru..?
Vera yaaru namma " thalai Ajith " thaan

வெறும்பய said...

ரொம்ப லேட்டா வந்திட்டமோ...

Dhayanithi Sriram ( Astro ) said...

அருமை....
டாக்குடர் விஜய் டைரக்டர்னு சொல்லிட்டு..
அவர் படத்த நீங்க டைரக்ட் பண்ணிட்டிங்க....!!
சூப்பர்..............

Jayadeva said...

இப்ப டாக்குடர வச்சு ஏற்கனவே ஹிட்டான மூணு படங்கள ரீமேக் பண்ணப் போறாங்க. அதுல ஒன்னு ஓடினாலும், நம்ம பொழப்பு நாறப் பொழப்பாயிடுமே, யராச்சும் இத நினச்சு பாத்தீங்களா?

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


அந்த பயம் இருக்கணும், நான் தனி ஆள் இல்ல. என் கூட டாக்டர் விஜய் இருக்கார்,
////

ஆமா போலீசு , எனக்கு பேய் பிசாசு கண்டா ரொம்ப பயம் தான்

மங்குனி அமைசர் said...

பிரவின்குமார் said...

தல.. பி்ன்னிட்டீங்க..!!! அப்புறம் அடுத்து உங்களுக்கு போட்டியா பிலாக் எழுத வர்ரதா கேள்விப்பட்டேன்..!! ஹி... ஹா.. ஹா...! மங்குனி அமைச்சர் vs டைரடக்கர் டாக்குட்டர் விஜய்" னு பல பதிவுகள் வந்தாலும் வரலாம்.!! ஆவலுடன் எதிர்பார்ப்போம்.////


பதிவுலகம் இனி உய்த்து விடும் , எனக்கு போட்டியா டை.டா.விஜய் ஆ ,,,,,,,, ஹி.ஹி.ஹி... நான் வேலைய ரிசைன் பண்ணிட்டு எங்க குலத்தொழில் மாடு மேய்க்க போயிடுவேன்

மங்குனி அமைசர் said...

போட்டாம் பாரு 100

மங்குனி அமைசர் said...

எஸ்.கே said...

படம் வெள்ளி விழா கொண்டாடுமென நினைக்கிறேன்!////

என்னது வெள்ளி விழாவா ? ஏன் சார் மிச்சம் இருக்கும் , தங்க வில்லா , வைர வில்ல பிளாட்டினம் விழா எல்லாம் கொண்டாடும் சார்

மங்குனி அமைசர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டைரடக்கர் டாக்குட்டர் விஜய் வாழ்க வாழ்க.................... :))////


நீங்களும் நம்ம ஆளுதான் சார்

மங்குனி அமைசர் said...

அன்பரசன் said...

//"இது என்னுடைய 50 ஆண்டு கால கனவு. "//

செம செம..////

ஹி.ஹி.ஹி... .... கனவு நினைவாக வாழ்த்துங்கள் சார்

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

என்னாண்ணே! உங்களை போலீஸ் பின்னி பெடலெடுத்திட்டிருக்கார்.. பதிவுலகத்திலே இன்னொரு கலவரம் வெடிச்சிருச்சே..!!

அய்யோ.. எங்க போனீங்க.. நெசமாலுமே ஆட்டோ வந்திருச்சா..தெய்வமே...////

அது ஒரு டம்மி பீசு வெறுப்பையா , பாரு ஒரு பிரியாணிக்கு ஏன்னா பொலம்பு போலபிருக்குன்னு

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

வெட்டிப்பேச்சு said...மங்குனி தலை மறைவு. பதிவுலகில் பதற்றம்////


சென்னை முழுவது கடை அடைப்பு , பஸ்கள் ஓடவில்லை , ரயில்கள் ஆங்காங்கே நின்றன ,,,,,, மக்கள் அதிர்ச்சி......

மங்குனி அமைசர் said...

philosophy prabhakaran said...

விஜய்யை கலைச்சு போடுற பதிவுகளை படிச்சு படிச்சு போர் அடிச்சிடுச்சு நண்பரே... புதுசா வேற யாரையாவது வம்புக்கு இழுக்கலாமே...////

ஆமா தல , எனக்கே போரடிச்சு போச்சு , இருங்க அடுத்து தனுஸ் ச .... கூப்பிடுவோமா ??

மங்குனி அமைசர் said...

dr suneel krishnan said...

"யுவாங் சுவாங் , அப்படின்னு ஒரு சைனீஸ் படம் , அதுல சீன சுரங்கத்துல கஷ்டப்படுற எழைகள காப்பாத்த போற ஒரு தமிழ் நாட்டு படிப்பறிவில்லாத பட்டிகாட்டு இளைஞன் எப்படி அமெரிக்க ஜனாதிபதியா ஆகுராங்குறது தான் கதை .//
இத்தகைய கதை அம்சம் நிறைந்த படங்களை அவர் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்////


அந்த அம்சத்த பாத்து பாத்து தான் , அவரு நடிச்ச 59 படத்திலும் ஒரே கதைய தெர்தேடுத்துள்ளார்

மங்குனி அமைசர் said...

vinu said...

me @ HP campus; chennai; ennakkeallam intha maatri oru vaaypu varumunnu naan kanavulla kooda niaichu paarthathu illay;


Ayouuuuuu ayooooooooooooo////

வாழ்த்துக்கள் வினு

மங்குனி அமைசர் said...

வெங்கட் said...

// விஜய்யை கலைச்சு போடுற பதிவுகளை படிச்சு படிச்சு போர் அடிச்சிடுச்சு நண்பரே... புதுசா வேற யாரையாவது வம்புக்கு இழுக்கலாமே... //

Repeattuuuuuu...

Adutha Dummi Piece yaaru..?
Vera yaaru namma " thalai Ajith " thaan////

ஓகே.ஓகே..... பதிவுலக நண்பர்களே , அடுத்த பதிவுலகி ஜேம்ஸ் பாண்டு ஆக நமது அஜித் தேர்தெடுக்கப் பட்டுள்ளார்.

மங்குனி அமைசர் said...

Jayadeva said...

இப்ப டாக்குடர வச்சு ஏற்கனவே ஹிட்டான மூணு படங்கள ரீமேக் பண்ணப் போறாங்க. அதுல ஒன்னு ஓடினாலும், நம்ம பொழப்பு நாறப் பொழப்பாயிடுமே, யராச்சும் இத நினச்சு பாத்தீங்களா?////

ஐயய்யோ , என்ன இவ்ளோ பெரிய அணுகுண்டு தூக்கி தலைல போடுறிங்க

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...

ரொம்ப லேட்டா வந்திட்டமோ...////

இல்லை இல்லை , கொஞ்சம் தான் லேட்

மங்குனி அமைசர் said...

Dhayanithi Sriram ( Astro ) said...

அருமை....
டாக்குடர் விஜய் டைரக்டர்னு சொல்லிட்டு..
அவர் படத்த நீங்க டைரக்ட் பண்ணிட்டிங்க....!!
சூப்பர்..............///

thank you Dhayanithi Sriram

கார்த்திகைப் பாண்டியன் said...

பட்டாசு கிளப்பி இருக்கீங்க நண்பா.. இந்தப் பதிவை என்னோட பஸ்ஸுல வுட்டுருக்கேன்..:-))

எஸ்.ஆர்.சேகர் said...

தம்பி--(நிச்சயமாக நீங்க தம்பியாத்தான் இருப்பீங்க )ரொம்ப நல்லா எழுதுரீங்க --வாழ்த்துக்கள்.
எஸ்.ஆர்.சேகர்

மங்குனி அமைசர் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

பட்டாசு கிளப்பி இருக்கீங்க நண்பா.. இந்தப் பதிவை என்னோட பஸ்ஸுல வுட்டுருக்கேன்..:-))////

ரொம்ப நன்றி சார் , கொஞ்சம் லிங்க் குடுங்க சார்

மங்குனி அமைசர் said...

எஸ்.ஆர்.சேகர் said...

தம்பி--(நிச்சயமாக நீங்க தம்பியாத்தான் இருப்பீங்க )ரொம்ப நல்லா எழுதுரீங்க --வாழ்த்துக்கள்.
எஸ்.ஆர்.சேகர்////


ரொம்ப நன்றி எஸ்.ஆர்.சேகர் சார்

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,சுடிதார் ஃபார் லேட்,மிடி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

உலக பதிவுலக வரலாற்றிலேயே பதிவு போட்ட 3 மணீ நேரத்தில் 117 கமெண்ட்,இத்தனை ஓட்டு,ரெக்கார்டுய்யா

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இல்லை இது சீன மொழியில் எடுக்கப்பட்ட முழுநீள தமிழ் படம் தான் ."///////

வெளங்கிரும்!

சீன மொழியா?சீன் மொழியா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

நான் தான் 50

யோவ் நாகராஜா இனிமே நீ நெம்பர்ராஜா

சி.பி.செந்தில்குமார் said...

"வல்லரசுன்னா என்னா சார் ?"


வள் வள் நு குலைக்கிற அரசோ

vinu said...

sorry paa HP campus kulla ennoda photon internet kooda olungaa veallai seaiiya maateanguthuuuuuuu

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,சுடிதார் ஃபார் லேட்,மிடி ஃபார் லேட்
////

அதுனால என்ன பரவாயில்லை , இதுனால என்ன பரவாஇல்லை , எதுனால என்ன பரவாஇல்லை

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

உலக பதிவுலக வரலாற்றிலேயே பதிவு போட்ட 3 மணீ நேரத்தில் 117 கமெண்ட்,இத்தனை ஓட்டு,ரெக்கார்டுய்யா///

என்ன சார் குழப்புரிங்க , 6 மணிநேரத்துக்கு மேல ஆச்சே

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

"வல்லரசுன்னா என்னா சார் ?"


வள் வள் நு குலைக்கிற அரசோ///

இருக்கும் ,இருக்கும்

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இல்லை இது சீன மொழியில் எடுக்கப்பட்ட முழுநீள தமிழ் படம் தான் ."///////

வெளங்கிரும்!

சீன மொழியா?சீன் மொழியா?////

எல்லாத்தையும் வித்தியாசமான ஆங்கிள்ளே பாக்குறது

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

நான் தான் 50

யோவ் நாகராஜா இனிமே நீ நெம்பர்ராஜா///

அதுவும் 50 நம்பர் ராஜா

மங்குனி அமைசர் said...

vinu said...

sorry paa HP campus kulla ennoda photon internet kooda olungaa veallai seaiiya maateanguthuuuuuuu////

ஓகே .ஓகே,,, பஸ்ட்டு வேலைல செட் ஆகு அப்புறம் பாத்துகல்லாம்

ஸ்மார்ட் said...

இறுதியாக என்னை வசிறு வலிக்க சிரிக்க வைத்தது இந்த பதிவுதான்.....நன்றி அமைச்சரே....
இதுபோல் நிறைய மொக்கை பதிவு எழுதும்....

ஜீ... said...

//"இந்தியாவை வல்லரசாக்குவது"

"வல்லரசுன்னா என்னா சார் ?"

"இது கூட தெரியாதா? கேப்டன் வியஜகாந்த் நடிச்ச படம்"//

உண்மையாவே அவர் அப்பிடித்தான் சொல்லுவார்! :)