எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, October 27, 2010

மங்குனி ஹைகோர்ட்டில் ஜாமீன் மனு


டீ கிளாச நங்குன்னு சத்தத்தோட வைக்கும் போதே தெரிஞ்சிருச்சு இன்னும் என்னோட வீட்டு காரம்மாவுக்கு கோபம் தீரலன்னு(உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?) . இதென்னங்க அநியாயமா இருக்கு , நேத்து நைட்டு பூராம் வெட்கம் , மானம் , ரோசம் எல்லாம் தட்கல் டிக்கட் வாங்கி வைகை எக்ஸ்ப்ரெஸ் புடிச்சு போற அளவுக்கு சொரனைகெட்டுப்போயி திட்டு வாங்கினது நானு, அக்சுவலா நான்ல கோபப்படனும் .(என்ன அக்சுவலா , பெசிகளா , பிசிகலான்னு பீலா விடுற , எங்க ஒரு வாட்டி கோபப்பட்டுத்தான் பாரேன் ?)


ஒன்னும் இல்லைங்க , நேத்து நைட்டு வீட்டுக்கு போயி சாப்பாடு வைம்மான்னு ஒரு வார்த்த தாங்க சொன்னேன்.

"பாவம் அந்த பொண்ணு துளசி , அவ வீட்டுகாரர அவ கண்ணு முன்னாடியே வெட்டி போட்டானுக , இத கேள்விப்பட்ட துளசியோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு , இந்த நேரத்துல துளசிய கள்ளக்காதல்னால அவளே ஆள் வச்சு புருசன வெட்டிட்டான்னு பொய் கேஸ் போட்டு போலீஸ் துளசிய அரஸ்ட் பண்ணிட்டாங்க, பாவம் துளசின்னு நான் கவலை பட்டுகிட்டு இருக்கேன் , உனக்கு (நல்லா கவனிங்க ஒருமை ) சாப்பாடு கேட்குதா சாப்பாடு............????? "

எனக்கு நெஞ்சமெல்லாம் பதறிப் போச்சு ஐய்யய்யோ .... அடப் பாவமே , யாரும்மா அந்த துளசின்னு பதறிப்போய் கேட்டேன் .அது "தென்றல்" சீரியல்ல வர்ற ஹீரோயின் துளசியாம்.

(நமது பன்னிகுட்டியின் விருப்பத்திற்கு இணங்கி படம் சேர்க்கப்பட்டுள்ளது )


அடக் கொடுமையே , ... டி.வி சீரியல்ல ஹீரோயின அரஸ்ட் பண்ணினா நான் என்ன சார் பண்ணுவேன் ???.

டீ கிளாஸ வச்சிட்டு , "ஏங்க அந்த பொண்ணு துளசிக்கு ஜாமீன் கிடைக்க நாலு நாள் ஆகும்ன்னு சொல்றாங்க , பாவம் அந்த பொண்ணு , நீங்க கொஞ்சம் ஜாமீனுக்கு ட்ரை பன்னுங்களேன் ."


என்னது டீ.வி சீரியல்ல நடக்குரத்துக்கு ஜாமீனா ??? அடக்கலிகாலமே ...............

நாம நம்ம வீட்ல எதிர்த்து பேசமுடியுமா ? முடியாது...............

சரின்னு நேரா ஹை கோர்ட்டுல போயி ஒரு ஜாமீன் மனு தாக்கல் பண்ணினேன் . ஜட்சு என்னைய நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்குற மாதிரி பாத்தாரு .....

உங்களோட சேத்து மொத்தம் 1647255 மனுக்கள் இந்த கேசுக்கு ஜாமீன் கேட்டு பைல் ஆகி இருக்குன்னார் . (அட....நாம மட்டும் அடிமை இல்லை , நம்மள மாதிரி ஊருக்குள்ள நிறையா பேரு இருக்காங்கன்னு மனசுக்குள்ள ஒரு நிம்மதி )

அப்புறம் ஜட்சு லேசா கண்ண தொடச்சுகிட்டு (ஒய் பிளட் , செம் பிளட் ,.... பாவம் அவரும் அவுங்க வீட்ல பாதிக்கப்பட்டு இருப்பார் போல ?) என்னைய பாத்து இந்த கேச நாலு நாள் தள்ளி வக்கிறேன்னு சொன்னாரு .... என்னான்னு கேட்டா அந்த சீரியல்ல ஜாமீன் மனுவோட தீர்ப்பு அன்னைக்கு தான் சொல்றாங்களாம் , அத பார்த்துட்டு இவரு தீர்ப்பு சொல்கிறாராம் .

டிஸ்கி : இதற்காக ஹைகோர்ட் வளாகத்தில் சங்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது . மனுதாக்கல் செய்பவர்கள் வந்து சங்கத்தில் இணைந்து கொள்ளலாம்.

191 comments:

Balaji saravana said...

மீ பர்ஸ்ட் :)

LK said...

உனக்கெல்லாம் ஜாமீனே கிடையாது அமைச்சரே ...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... பாவம்ங்க நீங்க!

karthikkumar said...

தீர்ப்பு சாதகமாய் வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அமைச்சரே நீங்களும் கும்பிடுங்க

Selvamani said...

முதல்ல உங்கள தூக்கி ஜெயில்ல போடணும் ஒய்.

லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
Tamil Movie Gallery

வெறும்பய said...

அடக்கொடுமையே இப்படி வேற கிளம்பியிருக்காங்களா...

பட்டாபட்டி.. said...

ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

சொம்பு நசுங்கிருச்சோ...

Anonymous said...

முதல்ல உங்கள தூக்கி ஜெயில்ல போடணும் ஒய்.
repeatoy???


shareef

பட்டாபட்டி.. said...

நீ அதுக்கு ”சன் நீதிமன்றம் ” போயிருக்கனும் ஓய்...

சிவசங்கர். said...

மங்குனி! நேத்து ராத்திரி நம்ம பிரண்டு சாப்டும்போது அந்த சீரியல வச்சாரு... நான் மொத எழுதலாம்னு நெனைச்சா நீர் முந்திக்கிட்டீரே?

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

நீ அதுக்கு ”சன் நீதிமன்றம் ” போயிருக்கனும் ஓய்...
///

அங்கதான் நாலுநாள் டைம் கேட்டு இருக்காகளே ?

பட்டாபட்டி.. said...

அடுத்ததா. ஒரி கொலை விழப்போகுது ஓய்..

நீர்தான்
.
.
.
.
.
.
.
.
.
.
..

அதையும் இன்வெஸ்டிக்கேட் பண்ணனும்.
ம.
.
.
..

இம்சைஅரசன் பாபு.. said...

//நீ அதுக்கு ”சன் நீதிமன்றம் ” போயிருக்கனும் ஓய்//
சன் நீதி மன்றம் போன சொம்பு நசுங்காத பட்டாபட்டி

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் காமெடி...

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

சொம்பு நசுங்கிருச்சோ...////

ஆமாப்பு ஆமா

மங்குனி அமைசர் said...

Balaji saravana said...

மீ பர்ஸ்ட் :)///

வாழ்த்துக்கள்

மங்குனி அமைசர் said...

LK said...

உனக்கெல்லாம் ஜாமீனே கிடையாது அமைச்சரே ...////

நீங்களே இப்படி சொல்லிட்டா எப்படி சார் , கொஞ்சம் பாத்து கன்சிடர் பண்ணுங்க

பட்டாபட்டி.. said...

சன் நீதி மன்றம் போன சொம்பு நசுங்காத பட்டாபட்டி
//

மங்குனி.. பதில் சொல்லு...

இம்சைஅரசன் பாபு.. said...

பட்டாபட்டி மங்குனி க்கு சொம்பு மட்டும் நசுங்கிச்ச்ச அல்லது ....வேற எதாவது ......................சேர்த்து ........

மங்குனி அமைசர் said...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... பாவம்ங்க நீங்க!////

ஆமாமங்க சித்ரா மேடம் , மி ரொம்ப ரொம்ப பாவம்

பட்டாபட்டி.. said...

Blogger மங்குனி அமைசர் said...

Balaji saravana said...

மீ பர்ஸ்ட் :)///
//

சரி.. இன்னக்கு தண்ணி வாங்கி கொடுக்க ஆள் சிக்கிருச்சு..

நடத்து..நடத்து...

மங்குனி அமைசர் said...

karthikkumar said...

தீர்ப்பு சாதகமாய் வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அமைச்சரே நீங்களும் கும்பிடுங்க////

ரொம்ப நன்றி கார்த்திக்குமார் , (நீங்களும் பாதிக்கப் பட்டின்களோ ?)

மங்குனி அமைசர் said...

Selvamani said...

முதல்ல உங்கள தூக்கி ஜெயில்ல போடணும் ஒய்.

லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
Tamil Movie Gallery ///

அங்கையாவது நிம்மதி கிடைக்குதான்னு பாக்குறேன்

karthikkumar said...

மங்குனி அமைசர் said...
karthikkumar said...

தீர்ப்பு சாதகமாய் வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அமைச்சரே நீங்களும் கும்பிடுங்க////

ரொம்ப நன்றி கார்த்திக்குமார் , (நீங்களும் பாதிக்கப் பட்டின்களோ ?///சேம் பிளட் அமைச்சரே

மங்குனி அமைசர் said...

வெறும்பய said...

அடக்கொடுமையே இப்படி வேற கிளம்பியிருக்காங்களா...///

ஓ..... அப்ப இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலையா ?

மங்குனி அமைசர் said...

Anonymous said...

முதல்ல உங்கள தூக்கி ஜெயில்ல போடணும் ஒய்.
repeatoy???


shareef////

என்னா வில்லத்தனம் ????

பட்டாபட்டி.. said...

பாதிக்கப் பட்டின்களோ ?)

//

இதுல பட்டி-னு சொன்னது என்னையா?..


சீக்கிரம் சொல்லு.. அடுத்த பதிவுல..உன்னைய கிழிக்கிறேன்.. ஹி,..ஹி

மங்குனி அமைசர் said...

சிவசங்கர். said...

மங்குனி! நேத்து ராத்திரி நம்ம பிரண்டு சாப்டும்போது அந்த சீரியல வச்சாரு... நான் மொத எழுதலாம்னு நெனைச்சா நீர் முந்திக்கிட்டீரே?///

ஹி,ஹி,ஹி,,,,,,, எப்பவும் அலர்ட்டா இருக்கணும் சார்

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

அடுத்ததா. ஒரி கொலை விழப்போகுது ஓய்..

நீர்தான்
.
.
.
.
.
.
.
.
.
.
..

அதையும் இன்வெஸ்டிக்கேட் பண்ணனும்.
ம.
.
.
..////

அடப்பாவிகளா ???? இப்ப என்னைய வச்சு சீரியலுக்கு கதை எழுத ஆரம்பிச்சிட்டிங்களா ?

மங்குனி அமைசர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//நீ அதுக்கு ”சன் நீதிமன்றம் ” போயிருக்கனும் ஓய்//
சன் நீதி மன்றம் போன சொம்பு நசுங்காத பட்டாபட்டி////

இருக்கும் பாபு பயபுள்ளைக்கு நிறையா எச்பீரியன்ஸ் போல , அதான் கரக்ட்டா சொல்றான்

மங்குனி அமைசர் said...

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் காமெடி...?////

ரொம்ப நன்றி சாருஸ்ரீராஜ் சார்

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

Blogger மங்குனி அமைசர் said...

Balaji saravana said...

மீ பர்ஸ்ட் :)///
//

சரி.. இன்னக்கு தண்ணி வாங்கி கொடுக்க ஆள் சிக்கிருச்சு..

நடத்து..நடத்து...////

கணக்குல என்னையும் சேத்துக்கங்கப்பா ? நான் ஹைகோர்ட் வாசல்ல நிக்கிறேன்

அருண் பிரசாத் said...

Mr மங்குனி,

ஜாமின் வாங்க என்ன புரொசிஜர்... நானும் ஒண்ணு தாக்கல் பண்ணனும்... வூட்டுகாரம்மா கட்டளை... துளசி கேசுக்குதான்..

மங்குனி அமைசர் said...

karthikkumar said...

மங்குனி அமைசர் said...
karthikkumar said...

தீர்ப்பு சாதகமாய் வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அமைச்சரே நீங்களும் கும்பிடுங்க////

ரொம்ப நன்றி கார்த்திக்குமார் , (நீங்களும் பாதிக்கப் பட்டின்களோ ?///சேம் பிளட் அமைச்சரே////

அவ்வ்வ்வ்வ்.............................

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

பாதிக்கப் பட்டின்களோ ?)

//

இதுல பட்டி-னு சொன்னது என்னையா?..


சீக்கிரம் சொல்லு.. அடுத்த பதிவுல..உன்னைய கிழிக்கிறேன்.. ஹி,..ஹி////

விடு பட்டா , சரி , சரி இந்த கேசுக்கு ஜாமீன் கிடைக்குமா / கிடைக்காதா ?

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

Mr மங்குனி,

ஜாமின் வாங்க என்ன புரொசிஜர்... நானும் ஒண்ணு தாக்கல் பண்ணனும்... வூட்டுகாரம்மா கட்டளை... துளசி கேசுக்குதான்..////

வாப்பு வா , ஒரு வெள்ளை பேப்பர் வாங்கிட்டு நேரா ஹைகோர்ட்டுக்கு வா , நான் வாசல்ல தான் நிக்கிறேன்

பட்டாபட்டி.. said...

வாப்பு வா , ஒரு வெள்ளை பேப்பர் வாங்கிட்டு நேரா ஹைகோர்ட்டுக்கு வா , நான் வாசல்ல தான் நிக்கிறேன்
//

அங்கயே பராக்கு பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இரு..

கூட்டணிக்கு ஆள் அனுப்பறேன்..( ஆமாய்யா.. மரம் வெட்டிதான்..)

தேவா said...

அமைச்சர் அண்ணே கீழ ரைட்ல சுத்தியால அடிசுகிட்டு இருக்கறது யாருன்னு இப்ப எனக்கு புரிஞ்சுபோச்சு.
உங்களோட போன பதிவுல கேசட் கடைக்காரனுக்கு நான் மந்திரிச்சு வச்ச முட்ட அநேகமா உங்களுக்குத்தான் யூஸ் ஆகும் போல

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?//

மைண்ட் வாய்ஸ் போடும் மண்ணாங்கட்டி மங்கு அவர்களுக்கு...உன்னை நீயே காரி துப்பிட்டா நாங்க என்னா செய்யரது??

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

விடு பட்டா , சரி , சரி இந்த கேசுக்கு ஜாமீன் கிடைக்குமா / கிடைக்காதா ?//

மங்குனி சென்னைல இருக்கிற எல்லா மீன் மார்கெட்லயும் கேட்டுட்டேன். இங்கே அது கெடைக்காதாம். கடல்லையே இல்லையாம்.

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

வாப்பு வா , ஒரு வெள்ளை பேப்பர் வாங்கிட்டு நேரா ஹைகோர்ட்டுக்கு வா , நான் வாசல்ல தான் நிக்கிறேன்
//

அங்கயே பராக்கு பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இரு..

கூட்டணிக்கு ஆள் அனுப்பறேன்..( ஆமாய்யா.. மரம் வெட்டிதான்..)
////

ஏன் நீ வரலையா ? ஓ ... சிங்கபூர் கோர்ட்டுல நீ நிக்கறியா ? ஓகே .ஓகே.....

இம்சைஅரசன் பாபு.. said...

மக்க மங்குனி .........மார்க்கெட்ல போய் நானும் கேட்டேன் ஜாமீன் எல்லா பய புள்ளைகளும் வாள மீன் இருக்கு ,வந்ஜீர மீன் இருக்கு ,நெத்திலி மீன் இருக்கு ,சாள மீன் இருக்கு ,நெய் மீன் இருக்கு ன்னு சொல்லுறான் களே தவீர ஒருத்தரும் ஜா மீன் தரமட்டுறான் மங்குனி ......

மங்குனி அமைசர் said...

தேவா said...

அமைச்சர் அண்ணே கீழ ரைட்ல சுத்தியால அடிசுகிட்டு இருக்கறது யாருன்னு இப்ப எனக்கு புரிஞ்சுபோச்சு.
உங்களோட போன பதிவுல கேசட் கடைக்காரனுக்கு நான் மந்திரிச்சு வச்ச முட்ட அநேகமா உங்களுக்குத்தான் யூஸ் ஆகும் போல////

அப்படித்தான் நானும் நினைக்கிறேன் தேவா

பட்டாபட்டி.. said...

அய்யோ..அய்யோ.. கொல்றாங்களே....
( இது கலைஞராமாயனதில் இருந்து உருவப்பட்டது..)

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?//

மைண்ட் வாய்ஸ் போடும் மண்ணாங்கட்டி மங்கு அவர்களுக்கு...உன்னை நீயே காரி துப்பிட்டா நாங்க என்னா செய்யரது??////

நீ இன்னும் கொஞ்சம் காரி காரி துப்பு

மண்டையன் said...

ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் .அப்பா முடியல .முடியல .

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

அய்யோ..அய்யோ.. கொல்றாங்களே....
( இது கலைஞராமாயனதில் இருந்து உருவப்பட்டது..)////

ஆற்காடு வீரா சாமி சார் , இங்க கொஞ்சம் கவனம் பிளீஸ்

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

//மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

விடு பட்டா , சரி , சரி இந்த கேசுக்கு ஜாமீன் கிடைக்குமா / கிடைக்காதா ?//

மங்குனி சென்னைல இருக்கிற எல்லா மீன் மார்கெட்லயும் கேட்டுட்டேன். இங்கே அது கெடைக்காதாம். கடல்லையே இல்லையாம்./////

ஓ... அவனா நீ ?? ஓகே .ஓகே ...... வா டீ சாப்ட்டு வரலாம்

இம்சைஅரசன் பாபு.. said...

அய்யோ..அய்யோ.. கொல்றாங்களே/
அப்போ கலைஞர் பட்டப்ட்டியோட ரோட்டுல இருந்தாரா ........அது உன்னோட பட்டப்ட்டி தான

நாகராஜசோழன் MA said...

50

மங்குனி அமைசர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

மக்க மங்குனி .........மார்க்கெட்ல போய் நானும் கேட்டேன் ஜாமீன் எல்லா பய புள்ளைகளும் வாள மீன் இருக்கு ,வந்ஜீர மீன் இருக்கு ,நெத்திலி மீன் இருக்கு ,சாள மீன் இருக்கு ,நெய் மீன் இருக்கு ன்னு சொல்லுறான் களே தவீர ஒருத்தரும் ஜா மீன் தரமட்டுறான் மங்குனி ////

எதுக்கு சரவணா ஸ்டோர்ல போயி ஒரு வார்த்த கேட்டு பாரேன்

பட்டாபட்டி.. said...

நீ அடிமையாகி இன்னும் இன்னும் விழுவதா சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா .... உன் சீருடைகளை எனக்குத்தா உன் பாதனிகளை எனக்குத்தா

மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் .அப்பா முடியல .முடியல .////

அட விடுங்க மண்டையன் , இதுக்கேவா ? இன்னும் எவ்ளோ இருக்கு

பட்டாபட்டி.. said...

அய்யோ..அய்யோ.. கொல்றாங்களே/
அப்போ கலைஞர் பட்டப்ட்டியோட ரோட்டுல இருந்தாரா
//


ஏதோ(?) ஒரு வீட்டில் இருந்திருப்பார்..ஹி..ஹி

நாகராஜசோழன் MA said...

//பட்டாபட்டி.. said...

அய்யோ..அய்யோ.. கொல்றாங்களே....
( இது கலைஞராமாயனதில் இருந்து உருவப்பட்டது..)//

கலைஞராமாயனதில் - பட்டாப்பட்டி சாப், இந்த மாதிரி இலக்கியம் உருவாக்குவதி உங்களை மிஞ்ச ஆள் இல்ல சாப்!!

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

நீ அடிமையாகி இன்னும் இன்னும் விழுவதா சிறகு முளைத்த குருவி உனக்கு சிறைகளா .... உன் சீருடைகளை எனக்குத்தா உன் பாதனிகளை எனக்குத்தா///

அதெல்லாம் தர்றேன் சிக்கன் பீசா மட்டும் கேட்காத , வாரத்துக்கு ஒரு நாள் தான் சிக்கன் போடுராணுக . அது சரி நீ எப்ப புழல் ஜெயிலுக்கு வந்த ?

பட்டாபட்டி.. said...

நீ அச்சம் தவிர். மூச்சுக்காற்றே அக்கினியே. நீ யே ஒளி எனக்குத் தா. நீயே வலிமை எனக்குத் தா. நீயே பலம் எனக்குத்தா

நாகராஜசோழன் MA said...

//கலைஞராமாயனதில் - பட்டாப்பட்டி சாப், இந்த மாதிரி இலக்கியம் உருவாக்குவதி உங்களை மிஞ்ச ஆள் இல்ல சாப்!!//

அப்பாடி அரசியல்வாதின்னு நிரூபிச்சாச்சு!!

மண்டையன் said...

ராஜன் கல்யாணத்தில் ஜீன்ஸ் .டீசேர்ட் போட்டது .நீர்தானே .தலையில் கிரீடம் இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை .

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

நீ அச்சம் தவிர். மூச்சுக்காற்றே அக்கினியே. நீ யே ஒளி எனக்குத் தா. நீயே வலிமை எனக்குத் தா. நீயே பலம் எனக்குத்தா///

பரங்கி மலை ஜோதி தியேட்டருக்கு ஒரு டிக்கட் இருக்கு வேணுமா ?

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

ஓ... அவனா நீ ?? ஓகே .ஓகே ...... வா டீ சாப்ட்டு வரலாம்//

மங்குனி நான் இப்ப கோயம்பேடு மார்கெட்ல இருக்கேன் இங்க வா டீ சாப்பிடலாம்.

பட்டாபட்டி.. said...

மண்டையன் said...

ராஜன் கல்யாணத்தில் ஜீன்ஸ் .டீசேர்ட் போட்டது .நீர்தானே .தலையில் கிரீடம் இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை .

//


விடுங்க..விடுங்க...மொய் காசுல தண்ணிய போட்டுப்புட்டு... கடைசி நேரத்தில கீரிடத்தை கொடுத்திட்டு வந்திருக்கும்

மண்டையன் said...

பரங்கி மலை ஜோதி தியேட்டருக்கு ஒரு டிக்கட் இருக்கு வேணுமா ?//
மீ பர்ஸ்ட் :)

நாகராஜசோழன் MA said...

//பட்டாபட்டி.. said...

நீ அச்சம் தவிர். மூச்சுக்காற்றே அக்கினியே. நீ யே ஒளி எனக்குத் தா. நீயே வலிமை எனக்குத் தா. நீயே பலம் எனக்குத்தா//

எதை தர்றதுன்னு சொல்லவே இல்லையே சாப்??

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

பரங்கி மலை ஜோதி தியேட்டருக்கு ஒரு டிக்கட் இருக்கு வேணுமா ?//

மீ தி செகண்ட்.

பட்டாபட்டி.. said...

6
3PB6" t N )
t
A0 BC G! +28& N %& ' 8 * > B 6
1B$ 0 9! 0 G , C 1(y/ - 6

S29
Z g (P (P g 3,w9 -

பட்டாபட்டி.. said...

இத்தாலி மொழியில உன்னை திட்டினேன்.. கோவிச்சுக்காதே...

தமிழ் செல்வன் said...

ஒய் மங்குனி அமைச்சரே அந்த 1647255 லிஸ்ட்ல ஒன்னு விட்டுபோச்சு ஒய் 1647255 இல்ல 1647256 அந்த ஒன்னு நன் தான் ஹி ஹி ஹி

மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

ராஜன் கல்யாணத்தில் ஜீன்ஸ் .டீசேர்ட் போட்டது .நீர்தானே .தலையில் கிரீடம் இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை .////

அப்ப நான் மாருவேசத்தில் இருந்தேன் மண்ட

vinu said...

நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்குற மாதிரி பாத்தாரு .....


maathiriyellaam kidaiyaathu atheaaathaaann


naanum presenntupaaa

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

ஓ... அவனா நீ ?? ஓகே .ஓகே ...... வா டீ சாப்ட்டு வரலாம்//

மங்குனி நான் இப்ப கோயம்பேடு மார்கெட்ல இருக்கேன் இங்க வா டீ சாப்பிடலாம்.///

இடம் போட்டு வையி , இதோ கிளம்பிட்டேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் வர்ற நாடகங்களிலேயே அந்த துளசி தான் சூப்பரா இருக்கு FIGURE ..,அதுக்கு ஜாமீன் எடுத்ததுக்கு பெருமை படனும்யா ..,சரி அந்த சங்கம் எங்க வச்சிருக்கே ..,NSC BOSE ROAD அ ..,இல்ல பீச் ரோடா ..,

மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

பரங்கி மலை ஜோதி தியேட்டருக்கு ஒரு டிக்கட் இருக்கு வேணுமா ?//
மீ பர்ஸ்ட் :)////

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

பரங்கி மலை ஜோதி தியேட்டருக்கு ஒரு டிக்கட் இருக்கு வேணுமா ?//

மீ தி செகண்ட்.////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................... ஒரு டிக்கட் தான இருக்கு , சரி குழுக்கள் போட்டுறலாம் . (தக்காளி பட்டா இதுக்கு ஏதாவது டபுள் மீனிங் கேள்வி கேட்ட கொன்னே போடுவேன் )

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

6
3PB6" t N )
t
A0 BC G! +28& N %& ' 8 * > B 6
1B$ 0 9! 0 G , C 1(y/ - 6

S29
Z g (P (P g 3,w9 -////

தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் , ரொம்ப நன்றி பட்டா

மங்குனி அமைசர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் வர்ற நாடகங்களிலேயே அந்த துளசி தான் சூப்பரா இருக்கு FIGURE ..,அதுக்கு ஜாமீன் எடுத்ததுக்கு பெருமை படனும்யா ..,சரி அந்த சங்கம் எங்க வச்சிருக்கே ..,NSC BOSE ROAD அ ..,இல்ல பீச் ரோடா ..,////

பீச் ரோடுல வந்து நம்ம பேமிலி சாங் பாடு, நான் உன்னை பிக் அப் பண்ணிகிர்றேன்

மண்டையன் said...

அப்ப நான் மாருவேசத்தில் இருந்தேன் மண்ட//
ஆமா நானும் கவனிச்சேன் கண்ணாடி போட்டா .
அது மாருவேசமா .சொல்லவேஇல்ல

மங்குனி அமைசர் said...

தமிழ் செல்வன் said...

ஒய் மங்குனி அமைச்சரே அந்த 1647255 லிஸ்ட்ல ஒன்னு விட்டுபோச்சு ஒய் 1647255 இல்ல 1647256 அந்த ஒன்னு நன் தான் ஹி ஹி ஹி////

எனக்கு முன்னமே நீங்க வந்து பைல் பண்ணிட்டு போனதா சொன்னாங்களே சார் ???

மங்குனி அமைசர் said...

vinu said...

நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்குற மாதிரி பாத்தாரு .....


maathiriyellaam kidaiyaathu atheaaathaaann


naanum presenntupaaa////

வாப்பு ........ அட்டன்டன்ஸ் போட்டாச்சு

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................... ஒரு டிக்கட் தான இருக்கு , சரி குழுக்கள் போட்டுறலாம் . (தக்காளி பட்டா இதுக்கு ஏதாவது டபுள் மீனிங் கேள்வி கேட்ட கொன்னே போடுவேன் )//

ஒரு சின்ன சந்தேகம் மங்குனி குலுக்கல்னா யாரை (??), @#தை(??) குலுக்கரதுன்னு சொல்லவே இல்ல??

மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

அப்ப நான் மாருவேசத்தில் இருந்தேன் மண்ட//
ஆமா நானும் கவனிச்சேன் கண்ணாடி போட்டா .
அது மாருவேசமா .சொல்லவேஇல்ல////

அது ராணுவ ரகசியம் யார் கிட்டயும் சொல்லக்கூடாது மண்டையன் , நீங்களும் படிச்சத மறந்திருங்க

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

// மங்குனி அமைசர் said...

மண்டையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................... ஒரு டிக்கட் தான இருக்கு , சரி குழுக்கள் போட்டுறலாம் . (தக்காளி பட்டா இதுக்கு ஏதாவது டபுள் மீனிங் கேள்வி கேட்ட கொன்னே போடுவேன் )//

ஒரு சின்ன சந்தேகம் மங்குனி குலுக்கல்னா யாரை (??), @#தை(??) குலுக்கரதுன்னு சொல்லவே இல்ல??///

அடப்பாவி ..... பட்டாவ எச்சரிக்கை பண்ணினா நீ விடமாற்றியே ?

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு & நரி

//பீச் ரோடுல வந்து நம்ம பேமிலி சாங் பாடு, நான் உன்னை பிக் அப் பண்ணிகிர்றேன்//

அப்படியே சேர்ந்து போய் கடல்ல குதிச்சிடுங்க.. தயவு செஞ்சி திரும்ப வந்துடாதிங்க!!

சௌந்தர் said...

நீங்க தான் கேஸ் போட்டதா உங்களை சன் டிவி காரங்க தேடி கொண்டு இருக்காங்க..

vinu said...

வாப்பு ........ அட்டன்டன்ஸ் போட்டாச்சு


pottaaaaachupaaaaaaaaa


appalaa innikkum office vanthathum dutyai aarambichaachu polaaaa

posttu 9.00 manikkea post aagi irrukku roamba aani pudunguraapula irrukku

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// பீச் ரோடுல வந்து நம்ம பேமிலி சாங் பாடு, ////

எந்த பாட்டு அமைச்சரே ..,சோம பானம் அடித்து விட்டு அந்த புறத்தில் பாடுவோமே அந்த பாடலா ...,

''' எதுக்கு வைச்ச ..,ஹே ஹே எதுக்கு வைச்சே ..,
கறி குழம்பு எதுக்கு வைச்சே ..,'''

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன அமைச்சரே இதுக்காகவா கோர்ட்டு கேசுன்னு அலையறீங்க? எங்க ஊரு மீன் மார்க்கெட்டுக்கு வந்தா வாங்கியிருக்கலாமே? அங்க இல்லாத மீனா?

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு & நரி

//பீச் ரோடுல வந்து நம்ம பேமிலி சாங் பாடு, நான் உன்னை பிக் அப் பண்ணிகிர்றேன்//

அப்படியே சேர்ந்து போய் கடல்ல குதிச்சிடுங்க.. தயவு செஞ்சி திரும்ப வந்துடாதிங்க!!
///

என்னை தூக்கி கடலில் போட்டாலும் , நான் உங்களுக்கு கட்டுமரமாகத்தான் இருப்பேன் , மூழ்கி விட மாட்டேன்

-இதுவும் கலைஞராமாயனதில் இருந்து உருவப்பட்டது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்த சீரியல்ல வர்ர புள்ளையோட போட்டோவ போட்டிருக்கலாம்ல, என்ன ஏதுன்னு எங்களுக்கும் கொஞ்சம் வெளங்கியிருக்கும்!

மங்குனி அமைசர் said...

சௌந்தர் said...

நீங்க தான் கேஸ் போட்டதா உங்களை சன் டிவி காரங்க தேடி கொண்டு இருக்காங்க..////

அவுங்களும் கோர்ட்டுல கியுல நின்னுகிட்டு இருந்தாங்களே ???

மண்டையன் said...

ஒரு சின்ன சந்தேகம் மங்குனி குலுக்கல்னா யாரை (??), @#தை(??) குலுக்கரதுன்னு சொல்லவே இல்ல??//
என்ன கேள்வி இது . போறது பரங்கிமல ஜோதி எத குலுக்கணும்னு எல்லாருக்கும் தெரியும் .
டபுள் மீனிங் எல்லாம் இல்ல . டிக்கெட் தான்பா குலுக்கனும்

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்த சீரியல்ல வர்ர புள்ளையோட போட்டோவ போட்டிருக்கலாம்ல, என்ன ஏதுன்னு எங்களுக்கும் கொஞ்சம் வெளங்கியிருக்கும்!////

அட ஆமா பன்னிகுட்டி , பாரு உன் அளவுக்கு எனக்கு மூளை வேலைய செய்யலை , (இருந்தாத்தானே )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜட்சு என்னைய நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்குற மாதிரி பாத்தாரு .....////

ஜட்ஜுக எதையுமே கரெக்ட்டா செய்வாங்கன்னு நான் சொல்லல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உங்களோட சேத்து மொத்தம் 1647255 மனுக்கள் இந்த கேசுக்கு ஜாமீன் கேட்டு பைல் ஆகி இருக்குன்னார் .////

சன்டீவிக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப திறமைசாலிகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி : இதற்காக ஹைகோர்ட் வளாகத்தில் சங்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது . மனுதாக்கல் செய்பவர்கள் வந்து சங்கத்தில் இணைந்து கொள்ளலாம். ////

ஆமா நாட்டுல இது ஒண்ணுதான் பாக்கி, போங்க போயி அடுத்த எலக்சன்ல நில்லுங்க (அதுக்கும் ஓட்டுப் போடுவாங்ய....!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?)////

அமைச்சரு நெலம கொஞ்சம் கவலைக்கிடம்தான் போல?

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?)////

அமைச்சரு நெலம கொஞ்சம் கவலைக்கிடம்தான் போல?
////

படம் சேத்தாச்சு பன்னி

பட்டாபட்டி.. said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்த சீரியல்ல வர்ர புள்ளையோட போட்டோவ போட்டிருக்கலாம்ல, என்ன ஏதுன்னு எங்களுக்கும் கொஞ்சம் வெளங்கியிருக்கும்!
//

எப்பப்பாரு படத்தை போடறதிலேயே இரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
வாப்பு வா , ஒரு வெள்ளை பேப்பர் வாங்கிட்டு நேரா ஹைகோர்ட்டுக்கு வா , நான் வாசல்ல தான் நிக்கிறேன்
//

அங்கயே பராக்கு பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இரு..

கூட்டணிக்கு ஆள் அனுப்பறேன்..( ஆமாய்யா.. மரம் வெட்டிதான்..)////


பாத்துய்யா அருள் வந்து ஆடிறப்போறாரு!

karthikkumar said...

ME THE 100

மங்குனி அமைசர் said...

vinu said...

வாப்பு ........ அட்டன்டன்ஸ் போட்டாச்சு


pottaaaaachupaaaaaaaaa


appalaa innikkum office vanthathum dutyai aarambichaachu polaaaa

posttu 9.00 manikkea post aagi irrukku roamba aani pudunguraapula irrukku////

ஹி.ஹி.ஹி..... எல்லாம் பிரம்மை

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜட்சு என்னைய நேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய பாக்குற மாதிரி பாத்தாரு .....////

ஜட்ஜுக எதையுமே கரெக்ட்டா செய்வாங்கன்னு நான் சொல்லல?////

பெரிய மனுஷன் நீ சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும் பன்னி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?)////

அமைச்சரு நெலம கொஞ்சம் கவலைக்கிடம்தான் போல?
////

படம் சேத்தாச்சு பன்னி///

என்னய்யா படம், எல்லாம் அவுட் ஆப் போகஸ்ல இருக்கு, ஒண்ணுமே தெரியல?
நல்லா ஜூம் பண்ணிப் போடுய்யா...!

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உங்களோட சேத்து மொத்தம் 1647255 மனுக்கள் இந்த கேசுக்கு ஜாமீன் கேட்டு பைல் ஆகி இருக்குன்னார் .////

சன்டீவிக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப திறமைசாலிகள்!////

இது சென்னை கோர்ட்டுல மட்டும் , இன்னும் தமிழ் நாடு புல்லா , ஏன் சிங்கபூருல நம்ம பட்டாகூட மனு குடுத்து இருக்கானாம்

ஜெயந்தி said...

சூப்பர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்த சீரியல்ல வர்ர புள்ளையோட போட்டோவ போட்டிருக்கலாம்ல, என்ன ஏதுன்னு எங்களுக்கும் கொஞ்சம் வெளங்கியிருக்கும்!
//

எப்பப்பாரு படத்தை போடறதிலேயே இரு....////

எல்லாம் உங்கள மாதிரி சின்னப் பசங்களுக்காகத்தான்!

vinu said...

பட்டாபட்டி.. said...
.........நான் வாசல்ல தான் நிக்கிறேன்

eammpaa vaa ulla vaaaa vanthu kummila kalanthukka veandiyathuthaaneaa chummaaa vaaappaaa

vekapadaatheaaa

மங்குனி அமைசர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?)////

அமைச்சரு நெலம கொஞ்சம் கவலைக்கிடம்தான் போல?
////

ஆமா பன்னி ஆமா, என்ன பண்றது நம்ம தலைஎழுத்து அப்படி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உங்களோட சேத்து மொத்தம் 1647255 மனுக்கள் இந்த கேசுக்கு ஜாமீன் கேட்டு பைல் ஆகி இருக்குன்னார் .////

சன்டீவிக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப திறமைசாலிகள்!////

இது சென்னை கோர்ட்டுல மட்டும் , இன்னும் தமிழ் நாடு புல்லா , ஏன் சிங்கபூருல நம்ம பட்டாகூட மனு குடுத்து இருக்கானாம்///

நானும் இங்க ஒரு கேசு கொடுக்கலாம்னு பாக்குறேன், ஆனா இவனுங்க சீரியலப் பாத்துப்புட்டு செக்சு படம் பாத்தேன்னு சொல்லி புடிச்சி உள்ள போட்ருவானுங்களே?

பட்டாபட்டி.. said...

ஏம்பா. சீரியல்ல ..ரெண்டு பொண்டாட்டி... மூணு பெண்டாட்டி..எல்லாம் சகஜமா காட்ரானுகளே..

நிஜ வாழ்க்கையில பன்ணினா.. சொம்பு நசுங்காது?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உனக்கு வீட்டுல டீயெல்லாம் தர்றாங்களா ?)////

அமைச்சரு நெலம கொஞ்சம் கவலைக்கிடம்தான் போல?
////

ஆமா பன்னி ஆமா, என்ன பண்றது நம்ம தலைஎழுத்து அப்படி////

இதுக்குத்தான் அப்பப்போ வெளிய பெசல் டீ அடிக்கனும்கிறது!

vinu said...

மங்குனி அமைசர் said...
பெரிய மனுஷன் நீ சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும் பன்னி


vaayaa vaaaa ummaithaan theadittu irrunthoam theerpu sollurathukkuuu

பட்டாபட்டி.. said...

சிங்கபூருல நம்ம பட்டாகூட மனு குடுத்து இருக்கானாம்
//

யோவ்.. வென்றி.. சீரியல் பார்ப்பதில்லைனு ...இந்திய அன்னை .. இத்தாலி ராணி மேல சத்தியம் பண்ணியிருக்கேன்..

என்னப்போய்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
ஏம்பா. சீரியல்ல ..ரெண்டு பொண்டாட்டி... மூணு பெண்டாட்டி..எல்லாம் சகஜமா காட்ரானுகளே..

நிஜ வாழ்க்கையில பன்ணினா.. சொம்பு நசுங்காது?...///

சொம்பு மட்டுமாய்யா நசுங்கும், அவனவன் ஒண்ணுக்கே டோட்டல் டேமேஜ் ஆயிக் கெடக்கான்!

நாகராஜசோழன் MA said...

பகு மாம்ஸ், அமைச்சருக்கும் ஜட்ஜ்க்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகல. அதனாலதான் ஜாமீன் கெடைக்கலே!!

vinu said...

பட்டாபட்டி.. said...

நிஜ வாழ்க்கையில பன்ணினா.. சொம்பு நசுங்காது?...

namma thosthu oruthaar ithaipathi oru post pottu irrukuraar patta nee venumnaaa ithai padichu paaru paaaaa

http://ramamoorthygopi.blogspot.com/2010/10/blog-post_25.html

மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...

சிங்கபூருல நம்ம பட்டாகூட மனு குடுத்து இருக்கானாம்
//

யோவ்.. வென்றி.. சீரியல் பார்ப்பதில்லைனு ...இந்திய அன்னை .. இத்தாலி ராணி மேல சத்தியம் பண்ணியிருக்கேன்..

என்னப்போய்...
////

இப்ப நான் என்ன நான்பாத்தா சொன்னனா ? அதான் உங்க வீட்டுக்காரம்மா பாத்ததுக்கு தானே இப்ப நீ கோர்ட் வாசல்ல நிக்கிற

வித்யா said...

:))

எங்க வீட்ல இந்த கொடுமையெல்லாம் இல்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

119

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

120

enna comment podurathunnu theriyaama comment poduvor sankam..

பட்டாபட்டி.. said...

Blogger vinu said...

பட்டாபட்டி.. said...

நிஜ வாழ்க்கையில பன்ணினா.. சொம்பு நசுங்காது?...

namma thosthu oruthaar ithaipathi oru post pottu irrukuraar patta nee venumnaaa ithai padichu paaru paaaaa
//

அடப்பாவி.. இந்நேரம்.. தமிழத்தான் ஆங்கிலத்தில டைப்பிட்டு இருந்தியா?..

நான் என்னவோ.. யாரோ வெள்ளக்கார தொரைதான்... மங்குனியோட பிரண்டு போல.. தமிழே தெரியாம.. பதில் சொல்லிட்டு இருக்கேனு நினச்சேன்.. ஹி..ஹி

சிவசங்கர். said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யோவ் வர்ற நாடகங்களிலேயே அந்த துளசி தான் சூப்பரா இருக்கு FIGURE ..,அதுக்கு ஜாமீன் எடுத்ததுக்கு பெருமை படனும்யா ..,சரி அந்த சங்கம் எங்க வச்சிருக்கே ..,NSC BOSE ROAD அ ..,இல்ல பீச் ரோடா ..,///

பிரபல பதிவர் என்பதை நொடிக்கொருதரம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் நரி!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அமைச்சரே.......தூள்.......பாவம்தாங்க நீங்க.....வேற என்னா சொல்றது..என்ற ஊட்லயும் இதே நிலமத்தானே....?

swathi said...

haa haa haa hi hi hi

மங்குனி அமைசர் said...

vinu said...

மங்குனி அமைசர் said...
பெரிய மனுஷன் நீ சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும் பன்னி


vaayaa vaaaa ummaithaan theadittu irrunthoam theerpu sollurathukkuuu
////

தீர்ப்பா ??? நானா ??? ஓகே .ஓகே ....... அந்த முக்குல இருக்க மரத்தடில இருங்க வந்திடுறேன்

ப.செல்வக்குமார் said...

//"ஏங்க அந்த பொண்ணு துளசிக்கு ஜாமீன் கிடைக்க நாலு நாள் ஆகும்ன்னு சொல்றாங்க ,பாவம் அந்த பொண்ணு , நீங்க கொஞ்சம் ஜாமீனுக்கு ட்ரை பன்னுங்களேன் ."//

அதானே , அவுங்க இவ்ளோ வேதனைப்பட்டு சொல்லுறாங்க ., நீங்க ஏதாவது பண்ணி அவுங்கள ஜாமீன் எடுக்கப்பாருங்க ..

மங்குனி அமைசர் said...

நாகராஜசோழன் MA said...

பகு மாம்ஸ், அமைச்சருக்கும் ஜட்ஜ்க்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகல. அதனாலதான் ஜாமீன் கெடைக்கலே!!////

நல்லா கணக்கு போட்டு பாக்குறியே ???? வெரி குட்

மங்குனி அமைசர் said...

வித்யா said...

:))

எங்க வீட்ல இந்த கொடுமையெல்லாம் இல்ல.////

அத நீங்க சொல்லக்கூடாது , உங்க வீட்டுக்காரர் சொன்னாத்தான் நம்புவோம்

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

120

enna comment podurathunnu theriyaama comment poduvor sankam..////

நீதாண்டா நம்பன் , ஒரு நண்பனுக்கு நேர்ந்த கத்திய பாத்து வாயடைச்சு போயி நிக்கிற பாத்தியா , நண்பன்டா

ப.செல்வக்குமார் said...

//டிஸ்கி : இதற்காக ஹைகோர்ட் வளாகத்தில் சங்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது . மனுதாக்கல் செய்பவர்கள் வந்து சங்கத்தில் இணைந்து கொள்ளலாம். ///

இதெல்லாம் என்ன பெரிய மேட்டர் .,
*.அன்னிக்கு ஒரு நாள் T .V ல "அபிராமி " நாடகம் பார்த்துட்டிருந்தேன். அதுல கௌதமி சொன்னாங்க " இந்த போலி மருந்து விவகாரத்துல சம்பந்தப்பட்ட எல்லோரையும் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்."
அதுக்கு எங்க அம்மா சொன்னாங்க "உன் புருஷன் தான் முக்கியமான ஆளு .."
ஆனா இது கௌதமிக்கு கேக்கவே இல்ல.அவுங்களுக்கு காதுல ஏதாவது கோளாறா...?

மங்குனி அமைசர் said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அமைச்சரே.......தூள்.......பாவம்தாங்க நீங்க.....வேற என்னா சொல்றது..என்ற ஊட்லயும் இதே நிலமத்தானே....?////

சீக்கிரம் ஒரு வெள்ளை பேப்பர் வாங்கிட்டு ஹைகோர்ட் வந்து சேருங்க

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

//"ஏங்க அந்த பொண்ணு துளசிக்கு ஜாமீன் கிடைக்க நாலு நாள் ஆகும்ன்னு சொல்றாங்க ,பாவம் அந்த பொண்ணு , நீங்க கொஞ்சம் ஜாமீனுக்கு ட்ரை பன்னுங்களேன் ."//

அதானே , அவுங்க இவ்ளோ வேதனைப்பட்டு சொல்லுறாங்க ., நீங்க ஏதாவது பண்ணி அவுங்கள ஜாமீன் எடுக்கப்பாருங்க ..////

நான் மட்டுமா , ஹைகோர்ட் வந்து பாரு ஊரே இங்கதான் இருக்கு

மங்குனி அமைசர் said...

swathi said...

haa haa haa hi hi hi////


பாரேன் இங்க இவுங்களுக்கு என்ன ஒரு சந்தோசம் , இம் .......... நடக்கட்டும் ,,,நடக்கட்டும்

மங்குனி அமைசர் said...

ப.செல்வக்குமார் said...

//டிஸ்கி : இதற்காக ஹைகோர்ட் வளாகத்தில் சங்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது . மனுதாக்கல் செய்பவர்கள் வந்து சங்கத்தில் இணைந்து கொள்ளலாம். ///

இதெல்லாம் என்ன பெரிய மேட்டர் .,
*.அன்னிக்கு ஒரு நாள் T .V ல "அபிராமி " நாடகம் பார்த்துட்டிருந்தேன். அதுல கௌதமி சொன்னாங்க " இந்த போலி மருந்து விவகாரத்துல சம்பந்தப்பட்ட எல்லோரையும் கண்டிப்பா கண்டுபிடிப்பேன்."
அதுக்கு எங்க அம்மா சொன்னாங்க "உன் புருஷன் தான் முக்கியமான ஆளு .."
ஆனா இது கௌதமிக்கு கேக்கவே இல்ல.அவுங்களுக்கு காதுல ஏதாவது கோளாறா...?/////

நீங்க ஒரு வேலை டி.வி வால்யும் கம்ம்னியா வச்சு இருப்பிங்க

எஸ்.கே said...

கவலைப்பட வேண்டாம் எல்லாவற்றையும் டைரக்டர் பார்த்துக் கொள்வார்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆடர்.. ஆடர். சரியான ஆதாரங்களும் சாட்சிகளும் இல்லாத காரணத்தால், உங்களுடைய ஜாமீன் மீதான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மங்குனி அமைசர் said...

எஸ்.கே said...

கவலைப்பட வேண்டாம் எல்லாவற்றையும் டைரக்டர் பார்த்துக் கொள்வார்!
////

எங்க சார் , அவரு கோட்டை விட்டதுனால தானே அர்ரஸ்ட் பன்னி இருக்காங்க , இனி நாம தான் சார் காப்பாத்தணும்

மங்குனி அமைசர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆடர்.. ஆடர். சரியான ஆதாரங்களும் சாட்சிகளும் இல்லாத காரணத்தால், உங்களுடைய ஜாமீன் மீதான மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.////

சார் , இந்த தீர்ப்பு நாலா தமிழக பெண்களின் ஒட்டுமொத்த எதிர்ப்ப சம்பாரிச்சிட்டிங்க , அனேகமா உங்களுக்கு சோமாலியாவுக்கு டிரான்ஸ்பார் சீக்கிரம் வந்திரும்ன்னு நினைக்கிறேன்

vinu said...

பட்டாபட்டி.. said...

அடப்பாவி.. இந்நேரம்.. தமிழத்தான் ஆங்கிலத்தில டைப்பிட்டு இருந்தியா?..

நான் என்னவோ.. யாரோ வெள்ளக்கார தொரைதான்... மங்குனியோட பிரண்டு போல.. தமிழே தெரியாம.. பதில் சொல்லிட்டு இருக்கேனு நினச்சேன்.. ஹி..ஹிhe ehe he namakku intha vilambaramellam pudukaathunaaga thoraiiiii


appaa namakku tamil type adikka varaathunga nynaaa

namma thanglish eppudikeethupaa

vinu said...

thiru.chitraa madam avargalin blogil poii

ivvaaru

vinu said...
rendaavathu photovil unga pair very beautifull

naan aangilathil pottathai


copy saithu tamil typiththaa
மங்குனி அமைசர் said...
எச்சூச்மி அந்த ரெடாவதா இருக்கு உங்க பேமிலி போடோ ரொம்ப அழகா இருக்கு மேடம்


thiru manguni avargali vanmayyaaga kandikuroooommmmmmmmmmm


inthaa vazakkai puthithaaga manguniyin peril vazakku thodukkireaan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்கு இன்னும் கோர்ட்டுலதான் இருக்கியா? சீக்கிரம் ஆபீஸ் க்கு வா, உன் முதலாளி தேடிட்டு இருக்காரு(அவரும் ஜாமீன் வாங்கனுமாம்)

மின்மினி RS said...

ஹா ஹா ஹா.. சிரிக்க வைத்தற்கு நன்றி.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தீர்ப்பெல்லாம் குடுக்க நீதிபதி ரெடியாத் தான் இருக்காரு. ஆனா அவரோட சுத்தியல ஒரு பாப்பா எடுத்துகிட்டு உங்க ப்ளாக் பக்கம் வந்திருக்குதாமே, அதைக் குடுத்தாத்தான் தீர்ப்பு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சீக்கிரம் யாராவது நாலஞ்சு கமெண்ட் போடுங்கப்பா, me 150 போடணும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நீங்க யாரும் போடலைனா நானே போட வேண்டியதிருக்கும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

146,147ன்னு வரிசையா போட வேண்டியதுதானோ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இப்போதைக்கு me 147 போட்டுக்கறேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இன்னும் ரெண்டுதான் பாக்கி.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me the 149

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ai, me the 150

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆஹா, வடை எனக்கே கிடைத்து விட்டது!

(ங்கொய்யால, மத்தவங்களுக்கெல்லாம் ஆணி, அதுனால, உனக்கு me the 150)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆஹா, வடை எனக்கே கிடைத்து விட்டது!

(ங்கொய்யால, மத்தவங்களுக்கெல்லாம் ஆணி, அதுனால, உனக்கு me the 150)//

இதனால் தாங்கள் அடைந்த பயன் என்னவோ?

ரசிகன்! said...

அப்பாடா... என்னிக்கும் போல இல்லாம.. இன்னிக்கு பொழுது சந்தோஷமா ஆரம்பிக்குது எனக்கு...

ஒரு காமெடி படம் பார்த்த திருப்தி...

ரொம்ப நன்றி சார்!

Kousalya said...

உங்க பதிவையும் , மத்தவங்க கமெண்டும் படிச்சிட்டு இன்னும் சிரிச்சு முடியல அமைச்சரே....! உங்களின் இந்த பணி சிறக்கட்டும்...வாழ்த்துகிறேன். :)))

மங்குனி அமைசர் said...

vinu said...thiru manguni avargali vanmayyaaga kandikuroooommmmmmmmmmm


inthaa vazakkai puthithaaga manguniyin peril vazakku thodukkireaan////

அப்படியா நான் பார்க்கலையே விணு???

மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்கு இன்னும் கோர்ட்டுலதான் இருக்கியா? சீக்கிரம் ஆபீஸ் க்கு வா, உன் முதலாளி தேடிட்டு இருக்காரு(அவரும் ஜாமீன் வாங்கனுமாம்)////

ஏன்யா மறுபடியும் அலையணும் , பேசாம போன்ல டீடைல் வாங்கி அப்படியே இங்க ஜாமீன் பைல் பண்ணிடுறேன்

மங்குனி அமைசர் said...

மின்மினி RS said...

ஹா ஹா ஹா.. சிரிக்க வைத்தற்கு நன்றி.///

அவன் அவன் இங்க நொந்து நூலாகிப் போயி கோர்ட்டுல உங்கார்ந்து கிடக்கான் , உங்களுக்கு சிரிப்பா இருக்கா ,? இருக்கட்டும் பாத்துகிர்றேன்

மங்குனி அமைசர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தீர்ப்பெல்லாம் குடுக்க நீதிபதி ரெடியாத் தான் இருக்காரு. ஆனா அவரோட சுத்தியல ஒரு பாப்பா எடுத்துகிட்டு உங்க ப்ளாக் பக்கம் வந்திருக்குதாமே, அதைக் குடுத்தாத்தான் தீர்ப்பு./////

அட ஆமாங்க சார் , நான்கூட இத கவனிக்கலையே ???? இந்த பயபுள்ள என்ன சொன்னாலும் சுத்திய தரமாட்ட்றான் சார்

மங்குனி அமைசர் said...

ரசிகன்! said...

அப்பாடா... என்னிக்கும் போல இல்லாம.. இன்னிக்கு பொழுது சந்தோஷமா ஆரம்பிக்குது எனக்கு...

ஒரு காமெடி படம் பார்த்த திருப்தி...

ரொம்ப நன்றி சார்!////

thank you rasikan sir

மங்குனி அமைசர் said...

Kousalya said...

உங்க பதிவையும் , மத்தவங்க கமெண்டும் படிச்சிட்டு இன்னும் சிரிச்சு முடியல அமைச்சரே....! உங்களின் இந்த பணி சிறக்கட்டும்...வாழ்த்துகிறேன். :)))///

ரொம்ப நன்றி கௌசல்யா மேடம்

நாஞ்சில் மனோ said...

//தண்ணி வாங்கி கொடுக்க ஆள் சிக்கிருச்சு//
ஏய் நானும் கிளாஸ் கொண்டு வாறேனப்போய்......என்னையும் உங்க கட்சியில சேத்துக்கோங்க....

விந்தைமனிதன் said...

இன்னுமாய்யா உம்மமேல கன்டெம்ப்ட் ஆப் கோர்ட் போடாம இருக்காங்க?!

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி,காலைல போட்ட பதிவுக்கு இப்போ லிங்க் குடுத்தா எப்படி? செல்லுக்கு மெசேஜ் அனுப்பறது? 9842713441

மங்குனி அமைசர் said...

நாஞ்சில் மனோ said...

//தண்ணி வாங்கி கொடுக்க ஆள் சிக்கிருச்சு//
ஏய் நானும் கிளாஸ் கொண்டு வாறேனப்போய்......என்னையும் உங்க கட்சியில சேத்துக்கோங்க....
////


வாங்க தல , உங்களுக்கு ஒரு இடம் துண்டு போட்டு புடிச்சு வச்சுரிக்கேன்

மங்குனி அமைசர் said...

விந்தைமனிதன் said...

இன்னுமாய்யா உம்மமேல கன்டெம்ப்ட் ஆப் கோர்ட் போடாம இருக்காங்க?!////

அட சும்மா இருங்க சார் , அவுங்க மறந்தாலும் நீங்க போட்டு குடுத்துடுவிங்க போல இருக்கு

மங்குனி அமைசர் said...

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி,காலைல போட்ட பதிவுக்கு இப்போ லிங்க் குடுத்தா எப்படி? செல்லுக்கு மெசேஜ் அனுப்பறது? 9842713441/////

என்னது செல்லுக்கு சிடத்தில இருந்து மெச்செஜ் அனுப்பவா ? அந்த அளவுக்கு நான் ஓர்த்து இல்லைப்பா ? நமக்கு அதெல்லாம் தெரியாது

வால்பையன் said...

உம்ம தூக்கி உள்ள போடனுமய்யா!

வானம்பாடிகள் said...

// வால்பையன் said...
உம்ம தூக்கி உள்ள போடனுமய்யா!//

ரிப்பீட்டு. அலப்பறை தாங்கல:))

அன்பரசன் said...

உம்மை பிடித்து முதலில் சிறையில் அடைக்க வேண்டுமய்யா..

வெங்கட் said...

@ மங்குனி.,

// நேத்து நைட்டு வீட்டுக்கு போயி சாப்பாடு
வைம்மான்னு ஒரு வார்த்த தாங்க சொன்னேன். //

என்னாது..?!! சாப்பாடு வைம்மான்னு
கேட்டீங்களா..?!!
நீங்க இவ்ளோ பெரிய ஆணாத்திக்கவாதியா.?!!
உங்க பேச்சு " கா"..!!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மக்கா தீர்ப்பு மட்டும் அந்தப் பொண்ணுக்கு சாதகமா இல்லையின்னா..., தமிழ்நாட்டு குடும்பத் தலைவர்களின் (குடும்ப அமைச்சர்களின்) நிலையை என்னால் யூகிக்க முடியவில்லை..

அன்னு said...

அமைச்சரே உங்க பிளாகுல மட்டும்தான் பதிவை விட பக்கம் பக்கமா கமெண்ட் வாசிக்க வேண்டியிருக்கு. நடத்துங்க :))

Ananthi said...

ஹா ஹா ஹா... :-)))
சீரியல் பாத்து case போட சொல்லிட்டாகளா...???சூப்பர் சூப்பர்...

(நல்ல வேளை... எங்க அந்த புள்ள ரொம்ப கஷ்டபடுது.. நம்ம எதாச்சும் உதவி செய்வமானு கேட்டுறாமங்க..! )

பித்தனின் வாக்கு said...

மங்குனி நல்லா இருக்கு, இந்த சீரியல் பார்க்கும் போது எங்க வீட்டிலையும் தகராறுதான். மறுபடியும் நம்ம பிளாக்கில் ஆட்டம் ஆரம்பிச்சாச்சு.

மங்குனி அமைசர் said...

வால்பையன் said...

உம்ம தூக்கி உள்ள போடனுமய்யா!
////

ஆமா வாலு , எதுக்குல போடனுமின்னு சொல்லவே இல்லையே ????

மங்குனி அமைசர் said...

வானம்பாடிகள் said...

// வால்பையன் said...
உம்ம தூக்கி உள்ள போடனுமய்யா!//

ரிப்பீட்டு. அலப்பறை தாங்கல:))
////

ஓ...... நீங்களுமா ??

மங்குனி அமைசர் said...

அன்பரசன் said...

உம்மை பிடித்து முதலில் சிறையில் அடைக்க வேண்டுமய்யா..////

ஆஹா , நம்மள உள்ள தள்ள ஒரு கூட்டமே அலையுது போல , முடியுமா ??? இல்ல முடியுமான்னு கேட்குறேன் , நாங்க தான் எப்பயுமே மருவச்சு , கூலிங் கிளாஸ் போட்டு மாருவேசத்தில் இருப்பமே

மங்குனி அமைசர் said...

வெங்கட் said...

@ மங்குனி.,

// நேத்து நைட்டு வீட்டுக்கு போயி சாப்பாடு
வைம்மான்னு ஒரு வார்த்த தாங்க சொன்னேன். //

என்னாது..?!! சாப்பாடு வைம்மான்னு
கேட்டீங்களா..?!!
நீங்க இவ்ளோ பெரிய ஆணாத்திக்கவாதியா.?!!
உங்க பேச்சு " கா"..!!/////

ஹலோ , என்ன அநியாயமா இருக்கு , சமையல் பண்ணி , பாத்திரபந்தம் எல்லாம் கழுவி , துணியெல்லாம் துவைச்சு வக்கிறது நானு , இதுல ஆணாதிக்கம் வேறையா ????

மங்குனி அமைசர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மக்கா தீர்ப்பு மட்டும் அந்தப் பொண்ணுக்கு சாதகமா இல்லையின்னா..., தமிழ்நாட்டு குடும்பத் தலைவர்களின் (குடும்ப அமைச்சர்களின்) நிலையை என்னால் யூகிக்க முடியவில்லை..////

ஆமா சார், எங்க நிலைமை ரொம்ப மோசமாகிடும் , நீங்களும் கொஞ்சம் எங்களுக்காக பிரார்த்தனை பண்ணிக்கங்க

மங்குனி அமைசர் said...

அன்னு said...

அமைச்சரே உங்க பிளாகுல மட்டும்தான் பதிவை விட பக்கம் பக்கமா கமெண்ட் வாசிக்க வேண்டியிருக்கு. நடத்துங்க :))////

ரொம்ப நன்றி அன்னு மேடம்

மங்குனி அமைசர் said...

Ananthi said...

ஹா ஹா ஹா... :-)))
சீரியல் பாத்து case போட சொல்லிட்டாகளா...???சூப்பர் சூப்பர்...

(நல்ல வேளை... எங்க அந்த புள்ள ரொம்ப கஷ்டபடுது.. நம்ம எதாச்சும் உதவி செய்வமானு கேட்டுறாமங்க..! )////

இதுவேறையா , ஏற்கனவே அவுங்களுக்கு தெரியாது , நீங்க வேற ஐடியா குடுங்க ........................

மங்குனி அமைசர் said...

பித்தனின் வாக்கு said...

மங்குனி நல்லா இருக்கு, இந்த சீரியல் பார்க்கும் போது எங்க வீட்டிலையும் தகராறுதான். மறுபடியும் நம்ம பிளாக்கில் ஆட்டம் ஆரம்பிச்சாச்சு.////

வாங்க சார் , படிச்சிட்டேன் , வாழ்த்துக்கள் ......

பட்டாபட்டி.. said...

இன்றைய
சிலம்பாட்டம் நடைபெறும் மைதானம்..

http://thisaikaati.blogspot.com/2010/10/software.html


சீக்கிரம் வரவும்
...

வெட்டிப்பேச்சு said...

ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நீங்கள் கொடுக்கும் பதிலே ஒரு இருவரிப் பதிவுபோல் presense of mind and humor நிறைந்திருக்கிறது.


வாழ்த்துக்கள்

வெட்டிப்பேச்சு said...

ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நீங்கள் கொடுக்கும் பதிலே ஒரு இருவரிப் பதிவுபோல் presense of mind and humor நிறைந்திருக்கிறது.


வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

1647256!

மங்குனி அமைசர் said...

வெட்டிப்பேச்சு said...

ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் நீங்கள் கொடுக்கும் பதிலே ஒரு இருவரிப் பதிவுபோல் presense of mind and humor நிறைந்திருக்கிறது.


வாழ்த்துக்கள்
////

thank you sir

மங்குனி அமைசர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

1647256!////

வாங்க சார் , வாங்க கொஞ்சம் லேட் ஆனாலும் கரட்டா வரவேண்டிய நேரத்துக்கு வந்துட்டிங்க , நாளைக்கு காலைல தீர்ப்பு சொல்றாங்க

Anonymous said...

தீர்ப்பு சொல்லிட்டாங்களா??
ஆயுள் தண்டனையா? தூக்கு தண்டனையா?

மங்குனி அமைசர் said...

இந்திரா said...

தீர்ப்பு சொல்லிட்டாங்களா??
ஆயுள் தண்டனையா? தூக்கு தண்டனையா?/////

ஹி.ஹி.ஹி....... ஏற்கனவே ஆயுள் தண்டனைதான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன் மேடம் .

dr suneel krishnan said...

ஹா ஹா :) கலக்கல்