எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, October 14, 2010

சென்னை நகர பெண்களே உஷார்

சென்னை நகர பெண்களே உங்களை நோக்கி எப்பொழுது ஒரு கேமரா படமெடுக்க காத்துக்கொண்டுள்ளது , பொது இடத்தில் , நடக்கும் போது , பஸ்ஸில் பயணம் செய்யும் அதுவும் பஸ் சீட்டில் அமர்திருக்கும் போது மிக கவனமாக இருங்கள் . உங்களை தவறான கோணத்தில் படம் எடுக்க ஒரு கும்பல் அலைகிறது .

பிளாட் பார கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும் , கூட்ட நெரிசலில் நடக்கும் போதும் கவனமாக இருங்கள் . கீழே கிடக்கும் பொருட்கள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள் . தி.நகர் போன்ற பகுதிகளில் உள்ள பிளாட்பாம் கடைகளில் மிக மிக விலைகுறைவாக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள் . விற்பனை செய்பவரின் பின்புறம் உங்களுக்காக கேமரா காத்திருக்கலாம் .

அவர்களது மெயின் டார்கெட் வண்டி ஓட்டுபவர்கள் தானாம் . எனவே இரு சங்ககர வாகனங்கள் ஓட்டிச்செல்லும் பெண்கள் தங்களுது மேலாடை (துப்பட்டா ) அல்லது சேலை சைடு பகுதிகளில் சரியாக கவர் செய்து உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் . ஏனென்றால் மற்ற இடங்களை விட நீங்கள் வண்டி ஓட்டும் போது படம் எடுக்கப்பட்டால் அதை உங்களால் நிச்சியமாக கண்டுபிடிக்க இயலாது.

சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் கூறினார். சென்னை நகரில் பெண்களை படமெடுக்க மொபைல் கேமராவுடன் ஒரு பெரிய கும்பல் அலைந்து கொண்டு உள்ளதாம் . அவர்களுக்கு ஆபாசமாக மட்டும் படம் எடுப்பதில்லை , எல்லா பெண்களையும் ஆபாசமில்லாமலும் படம் பிடிக்கிறார்கள் . இவர்கள் பிடிக்கும் படங்கள் இவர்கள் ரசிப்பதற்காக அல்ல , இதற்கென்று ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது , இந்த படங்களை விலை கொடுத்து வாங்கிகொள்கிறார்களாம் .

அது அந்த படத்தின் ஆபாசத்தை பொறுத்து ஒரு ஒரு ரூபாயிலிருந்து
இரண்டாயிரம் ரூபாய் வரை வாங்கப் படுகிறதாம். நமது இந்திய பெண் முகங்கள் அதுவும் முக்கியமாக தென் இந்திய பெண் முகங்களுக்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நிறைய டிமாண்ட் உள்ளதாம்.

இதை படம் பிடிப்பவர்களுக்கு தினமும் குறைந்த பட்சம் 250 ரூபாய் வருமானம் கிடைக்கின்றதாம் .படம் எடுப்பவர்கள் எல்லாம் விடலை பசங்கதான் . 4 அல்லது 5 பேர் கொண்ட கும்பலாக வளம் வருகிறார்களாம் .
அவர்களுடைய டார்கட் எல்லாம் மேலே துப்பட்டா போடாமல் எடுப்பாக மார்பகம் உடைய பெண்கள் , முகத்தோடு சேர்த்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியாக படம் எடுக்கின்றார்கள் .

எல்லாம் இதை இப்பொழுது ஒரு தொழிலாகவே செய்கிறார்களாம் .
தற்போது நமது காவல் துறையும் இது பற்றி அறிந்து இது சம்பந்தமான முழு நெட் வொர்கையும் டிரேஸ் செய்து கொண்டு உள்ளார்களாம் . எனவே அனைவரும் கவனமாக இருங்கள் , உங்களுக்கு தெரிந்த பெண்களிடமும் கூறி எச்சரிக்கையாக இருக்கச்சொல்லுங்கள்.

63 comments:

Anisha Yunus said...

நல்ல, தேவையான, முக்கியமான பதிவு அமைச்சரே. பதித்ததற்காகவும், உதவி மனப்பான்மைக்காகவும், நன்றி, நன்றி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வடை எனக்குதான்...அப்டின்னு நினச்சேன். வட போச்சே

எல் கே said...

erkanave nan oru pathivu potrunthen ithai patthi. yarum kettadhaana

தமிழ் உதயம் said...

பெண்கள், எச்சரிகையுடன் இருப்பது நல்லது. நல்ல சிந்தனை பதிவு.

அம்பிகா said...

எப்படியெல்லாம் இருக்கிறார்கள்?
அவசியமான பகிர்வு.

Unknown said...

nalla pathivu

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி ,
இப்ப தான்யா ஒரு அமைச்சர் என்ற முறையில் மக்களுக்கு தேவையான ,முக்கியமான பதிவ போட்டிருக்கே ....,நன்றி நன்றி

Chitra said...

என்ன கொடுமை சார், இது?

அருண் பிரசாத் said...

@ மங்குனி,

நீங்க ரமெஷ் பத்தி சொல்லலைதானே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. இப்போ பேனாவுலையே கேமரா இருக்கு. சட்டைல மாட்டிக்கிட்டு பக்கத்துல நின்னு வீடியோ எடுத்தா கூட தெரியாது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் பிரசாத் said...

@ மங்குனி,

நீங்க ரமெஷ் பத்தி சொல்லலைதானே!//

கேமரா அப்டின்ன என்ன? மோரிசியஸ்ல உள்ள ஒரு ஊரா?

vasu balaji said...

முக்கியமான பகிர்வு. நன்றி

பெசொவி said...

A timely and educating post.

Good Post Manguni!

(enna koduma saami, tamil transliteration work pannalai)

இம்சைஅரசன் பாபு.. said...

அமைச்சரே இதே மாதிரி நாலு அமைசர் தமிழ் நாட்டுக்கு கிடைச்ச ........நல்ல இருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

நம்ம மேட்டர் எல்லாம் எப்படியோ லீக் ஆகிடுது

சி.பி.செந்தில்குமார் said...

எங்கே ராமசாமியக்காணோம்,?

அஞ்சா சிங்கம் said...

உண்மைதான். இதற்காகவே தனியாக மொபைல் மார்க்கெட்டில் கிடைக்கிறது .
ஒரே போனில் 12 கேமரா இருக்கும் .எந்த பக்கம் இருந்தும் படம் பிடிக்கலாம் . 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட
பசங்க தான் இந்த மாதிரி மொபைல் வச்சிக்கிட்டு சுத்துறாங்க .

எஸ்.கே said...

மிகவும் அவசியமான பதிவு! இதுபோல் படம் எடுத்து இணையதளத்தில் விட்ட சம்பவங்களும் உண்டல்லவா! எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காவல்துறையும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்!
தகவலுக்கு மிக்க மிக்க நன்றி!

Sivaramalingam said...

saatharana jananga sonna enke kettukiraanga,

manthirinka sonnathaane kettukiraanga
naatukku nallathu nadantha sarithaan

anbudan
aasi

sathishsangkavi.blogspot.com said...

அனைவருக்கும் அவசியமான பதிவு... சென்னை பெண்களுக்கு மட்டுமல்ல எல்லோரும் அறிய வேண்டிய பதிவு...

மின்மினி RS said...

நல்ல பகிர்வு மங்குனி அண்ணே.. பெண்கள் எப்போதும் விழிப்புடனே இருக்கணும்; இல்லையென்றால் வேண்டாத விபரிதங்களை சந்திக்க வேண்டியுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

யோவ் மங்கு..
அதென்ன சென்னை நகர பெண்கள்???
மத்த நகர பெண்கள் பற்றிக் கவலையில்லையா உமக்கு??
என்ன மாதிரி மதுரை நகர பெண்கள் மேல அக்கறை இல்லையா??
நீயெல்லாம் ஒரு அமைச்சரா??

priyamudanprabu said...

அவசியமான பகிர்வு.

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

யோவ் மங்கு..
அதென்ன சென்னை நகர பெண்கள்???
மத்த நகர பெண்கள் பற்றிக் கவலையில்லையா உமக்கு??
என்ன மாதிரி மதுரை நகர பெண்கள் மேல அக்கறை இல்லையா??
நீயெல்லாம் ஒரு அமைச்சரா??
////

அப்படி இல்லைங்க மேடம் , இங்கதான் ஆரம்பிச்சு இருக்கு , இதைச்சொன்னாலே நீங்க எல்லாம் உஷாராயிடுவிங்கள்ள ,அதான்

அஞ்சா சிங்கம் said...

ஏன்னா வில்லத்தனம் .

சைவகொத்துப்பரோட்டா said...

இப்படியும் ஒரு வில்லத்தனமா! தகவலுக்கு நன்றி அமைச்சரே.

mohana ravi said...



அதானே! செனனை பெண்கள்னு சொல்ல்றது!

தமிழ்நாட்டு பெண்கள்னு சொன்னா குறைஞ்சா போயுடுவேள்!

மங்குனி அமைச்சரை யாராவது ’’மாங்கு மாங்கு’’ போடுங்கோளேன்!

நெல்லை ஆசி ( சிவா ) said...

இந்தியாவில் உள்ள ஆபாச இணைய தளங்கள் விண்ணை தொட்டு விட்டது. பற்றாக்குறைக்கு செல்போன் கேமிராக்கள் வேறு பெண்களை அச்சுறுத்தி வருகின்றது, இதற்கு காவல்துறையால் எதுவும் செய்ய இயலாது. அதனால் பெற்றோரும் பெண் பிள்ளைகளும் அவர்களுக்கு அவர்களே பாதுகாப்பாக இருப்பது நல்லது. திரும்பிய பக்கமெல்லாம் செல்போன் கேமிராகளின் ஆதிக்கமே .
கேமிராக்கள் நல்லவற்றிற்கு மட்டுமல்ல, மோசமானதிற்கும் பயன்படுகின்றது என்பதற்கு, இது சரியான உதாரணம்.
மங்குனி அமைச்சருக்கு எனது மனமார்ந்த்த நல்வாழ்த்துக்கள் .

நெல்லை ஆசி ( சிவா ) said...

இந்தியாவில் உள்ள ஆபாச இணைய தளங்கள் விண்ணை தொட்டு விட்டது. பற்றாக்குறைக்கு செல்போன் கேமிராக்கள் வேறு பெண்களை அச்சுறுத்தி வருகின்றது, இதற்கு காவல்துறையால் எதுவும் செய்ய இயலாது. அதனால் பெற்றோரும் பெண் பிள்ளைகளும் அவர்களுக்கு அவர்களே பாதுகாப்பாக இருப்பது நல்லது. திரும்பிய பக்கமெல்லாம் செல்போன் கேமிராகளின் ஆதிக்கமே .
கேமிராக்கள் நல்லவற்றிற்கு மட்டுமல்ல, மோசமானதிற்கும் பயன்படுகின்றது என்பதற்கு, இது சரியான உதாரணம்.
மங்குனி அமைச்சருக்கு எனது மனமார்ந்த்த நல்வாழ்த்துக்கள் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடி, ஒருவழியா நம்ம அமைச்சரு இப்பத்தான்யா நாட்டப் பத்தியும் கவலப்பட்டிருக்காரு! மேட்டரு நெனைக்கவே அதிர்ச்சியா இருக்கு! போலீசு சீக்கிரமே இவனுங்கள புடிச்சி உள்ளே போட்டா தேவல! ஆனா அதுபற்றீய விழிப்புணர்ச்சி மிகமிக அவசரமாகத்தேவை!
அதற்கு ஆவண செய்யும் இப்பதிவிற்காக நன்றி அமைச்சரே!

Unknown said...

good post! keep it up...

வெட்டிப்பேச்சு said...

பொறுப்பான பதிவு..தங்களின் சமூக சிந்தனைக்கு நன்றிகள்.

ஆமாம் நான் கேட்டதுக்கு சொல்லவே இல்லையே...

அதென்ன தமிழ் மணத்தில் பாசிடிவ் மற்றும் நெகடிவ் ஓட்டுகள் சமமாக இருக்கு..?

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

karthikkumar said...

தொழில்நுட்பம் அழிவுக்கும் வழிவகுக்கிறது

செல்வா said...

இப்படியும் சிலர் இறக்கத்தான் செய்யுறாங்க ..
இவுங்களை எல்லாம் என்ன பண்ணுறது ..?

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்படி ஒரு கும்பல் வேற அலையுதா...

ரோஸ்விக் said...

என்னய்யா பீதியக் கெளப்புற... ஆத்தாடி...
எடுக்குற பன்னாடை பணக்குறி-ல அவுக அக்கா, தங்கச்சியையும் எடுத்துத் தொலைக்கும்போலையே!!!

சுந்தரா said...

எதுக்கெல்லாம் பயப்படுறதுன்னே தெரியல...எச்சரிக்கைப் பதிவுக்கு நன்றி அமைச்சரே.

Gayathri said...

மிகவும் பயனுள்ள தகவல்...

கழிஷடைகள் என்கேந்துதான் கேளம்புரன்களோ...எல்லார் கண்ணையும் எடுத்து கண்ணிலாதவன்களுக்கு தானமா குடுதுடனும்..

சௌந்தர் said...

நல்ல பதிவு இப்படி கூட நடக்குதா என்ன கொடுமை

வெங்கட் said...

@ அருண்.,

// நீங்க ரமெஷ் பத்தி சொல்லலைதானே! //

அடப்பாவி.., இப்படியா ரமேஷை
காட்டி குடுக்கறது..?!

நாடோடி said...

ந‌ல்ல‌ ச‌மூக‌ அக்க‌றையுள்ள‌ ப‌கிர்வு அமைச்ச‌ரே... வாழ்த்துக்க‌ள்..

Anonymous said...

மிகவும் அவசியமான பதிவு!

http://kuwaittamils.blogspot.com/2010/10/blog-post_14.html

Anonymous said...

சரியான நேரத்தில் சரியான பதிவு .நான் கூட you tube யில் பார்துவுள்ளேன் .இதுக்கு எல்லாம் ஒரே தீர்வு இஸ்லாமிய பெண்கள் போல் புர்கா அணிந்து செல்வதுதான் .

சாமக்கோடங்கி said...

ஜெர்மனியில் இருக்கும் பெண்கள் நவீன ஆடைகளைத தான் அணிகிறார்கள்.. ஆனால் கவர்ச்சி காட்டும் ஆடைகளாக அவைகள் இல்லை.. ஆனால நம்மூர் ஆடைகள் அப்படி இல்லை.. இழுத்து மூடி இருப்பது போல் இருந்தாலும் அவைகள் பல விஷயங்களைச் சுண்டி இழுக்கும் சக்தி கொண்டவை.. நம்ம ஊர்ப் பெண்கள், அதுவும் கற்பை பெரிதும் மதிக்கும் பெண்கள், பொது இடங்களில் மிகவும் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.. எனக்கு பிடித்திருக்கிறது, எனக்கு வசதியாக இருக்கிறது என்று சொல்லாமல், உங்கள் குடும்பம் குழந்தைகளை மனதில் வைத்து கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள்.. எங்கேயும் பதிவாகி நமது குழந்தைகள் பார்க்க நேர்ந்தால் அந்த விபரீதத்தை நம்மால் ஊகிக்க முடிகிறதா....?

அன்புடன்
சாமக்கோடங்கி...

பித்தனின் வாக்கு said...

good nalla pathivu

SHANTHINI said...

mikavum thevaiyana pathivu.......

SHANTHINI said...

migavum thevaiyana pathivu.....

தீயஷக்தி... said...

மங்குனியாரே உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.... நல்ல பதிவு... நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

அவசியமான பகிர்வு.

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!

தாராபுரத்தான் said...

நன்றிங்க..அவசியமான பதிவுங்க..

Unknown said...

எல்லோருக்குமே தேவையான பதிவு. பயனுள்ள பகிர்வு.

"உழவன்" "Uzhavan" said...

இப்ப புதுசா இது வேறயா..

இதெல்லாம் உண்மையா.. இல்ல யாராவது கெளப்பிவிடுறாங்களா?

MANO நாஞ்சில் மனோ said...

நீர் மங்குனி அமைச்சர் என்று பதிவுக்கு ஒரு முறை நிரூபிக்கிறீர்

முரளிகண்ணன் said...

மிக அவசியமான பதிவு அமைச்சரே

வார்த்தை said...

மங்குனி அமைச்சர் எழுதியிருக்கும் "பெண்களே கவனம்"......நான் பெண் என்பதால் என்னை இப்படி உடுத்த சொல்லுவாயா?

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/10/blog-post_15.html

என்ன நடக்குது மங்குனி....?
(இதுனால பதிவுலகத்துல எதுனா டிரபுள் வருமா????)

Ramanathan said...
This comment has been removed by the author.
Ramanathan said...

இங்கு பின்னூட்டம் தந்திருக்கும், பெண்களை தெய்வமாக மதிக்கிற, ஆபாச தளங்களை இரவில் பார்க்காத ஆண்களுக்கும், மிக மிக கண்ணியமாக மட்டுமே ஆடை உடுத்தும் தமிழ் பெண்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்பரசன் said...

மிகவும் அவசியமான பதிவு!
தகவலுக்கு நன்றி!

Jaleela Kamal said...

அட பாவிகளா இப்படி வேர ஒரு குருப் அலையுதா?

ம்ம் மொக்க பதிவு க்கு நடுவுல, உஷார் பதிவும் போட்டு ஒரு விழிப்புணர் வு கொடுத்து இருக்கீஙக

cheena (சீனா) said...

அட - இப்படியும் நடக்குதா - பெண்களே உஷார் - நல்வாழ்த்துகள் மங்குனி அமைச்சர் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அட - இப்படியும் நடக்குதா - பெண்களே உஷார் - நல்வாழ்த்துகள் மங்குனி அமைச்சர் - நட்புடன் சீனா