எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, July 5, 2010

வினையான விளையாட்டு

திருப்பதி , என்னுடைய நண்பர் , என்னோடு காலையில் ஷட்டில் விளையாடுபவர், மனைவி இரண்டு குழந்தைகள் என அழகான குடும்பம். வழக்கம் போல் நேற்று (04 /07 /2010 ) விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்றார் . எல்லாம் ஞாயிட்று கிழமையும் போல் நேற்றும் எல்லாம் வழக்கம் போல் நடந்தது. மாலை நான்கு மணிக்கு வியசர்பாடியிலுள்ள ரிலேடிவ் வீட்டிற்கு சென்ற தனது மனை குழந்தைகளை அழைத்து வர சென்றார்.

போகும் வழியில் விதி விளையாடியது, அவரது குடும்ப வாழ்கையை புரட்டிப் போட்டது. சிறுவர்கள் விளையாட்டு வினையில் முடிந்தது . எங்கிருந்தோ அறுந்து வந்த பட்டத்துனுடைய மாஞ்சா நூல் பைக்கில் சென்று கொண்டிருந்த திருப்பதியின் கழுத்தை அறுத்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.மேலும் அருகில் மற்றொரு பைக்கில் வந்த இன்னொரு மனிதரும் மிகவும் சீரியஸ் ஆக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எல்லாம் முடிந்து இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தற்போது நான்கு பள்ளிச் சிறுவர்களை விசாரணை செய்து வருகிறது காவல்துறை. அதனால் என்ன பயன் ???

சென்னையில் இதுவரை இந்த மாதிரி பலர் இறந்துள்ளனர் , சென்னையில் பட்டம் விடக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது . அதற்கு பிறகும் இந்த மரணங்கள் தொடர்கிறது , இதற்கு யார் பொறுப்பு ????

காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ???

(மாஞ்சா நூல் என்பது , கண்ணாடித்தூள் , வஞ்சிரம் மற்றும் பசை சம்மந்தப்பட்ட பொருள்கள் கொண்டு செய்து பட்டம் விடும் நூலில் தடவி விடுவார்கள் . மிக டேஞ்சரான விஷயம் . )

52 comments:

Anonymous said...

மிகவும் வருத்ததிற்கு உரிய விசயம். தங்களின் நண்பரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

haish126

Madhavan Srinivasagopalan said...

Very sad to hear

Mohamed Faaique said...

திடீர் மரணங்கள் மிகவும் கவலைக்குரியவை.. ஆழ்ந்த அனுதாபங்கள்

Anonymous said...

உங்கள் நண்பர் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்..

'பரிவை' சே.குமார் said...

மிகவும் வருத்ததிற்கு உரிய விசயம். தங்களின் நண்பரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said...

உங்களின் துன்பத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தங்களின் நண்பரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

Balamurugan said...

தங்களின் நண்பரின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜில்தண்ணி said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

சிநேகிதன் அக்பர் said...

மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க காவல்துறை ஆவன செய்ய வேண்டும்.

சுசி said...

உங்க நண்பர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்..

மனோ சாமிநாதன் said...

வாழ்க்கை இப்படி மின்னல் போல மறைந்து போகும் என்று கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார் உங்கள் நண்பர்! அவரது முடிவு மனதை மிகவும் கனமாக்குகிறது! அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! உங்களுக்கும் இது அதிர்ச்சியாகவும் ஆழ்ந்த சோகமுமாகவும் இருக்கும். காலம்தான் உங்கள் வேதனையை குறைக்க வேண்டும்.

சென்ற பதிவைப்படித்து சிரித்ததில் மனதில் திடீரென்று ஏற்பட்டிருந்த சலிப்பு உடனே மறைந்தது. உடனேயே நன்றி தெரிவித்து பதில் போட நினைத்தும் முடியவில்லை. அந்த சிரிப்பை அப்படியே உறைய வைக்கிறது இந்தப் பதிவு!

Anonymous said...

மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ...உங்க நண்பன் ஆத்மாக்கு சாந்தி கிடைக்க நான் கடவுள் கிட்டே வேண்டுகிறேன் ..அவங்க குடும்பதினாற்கு என்னுடே ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கிறேன்
"(மாஞ்சா நூல் என்பது , கண்ணாடித்தூள் , வஞ்சிரம் மற்றும் பசை சம்மந்தப்பட்ட பொருள்கள் கொண்டு செய்து பட்டம் விடும் நூலில் தடவி விடுவார்கள் . மிக டேஞ்சரான விஷயம் . )"
இது ban பண்ணினா தான் பிரச்சினைக்கு தீர்வு ..

Anonymous said...

எதுக்கு அப்படிப்பட்ட நூலை தயாரிக்கிறார்கள். முதலில் தடை செய்யவேண்டியது அப்படியான நூல் தான்.

I agree with Mano aunty

நாடோடி said...

ரெம்ப‌ வ‌ருந்த‌ த‌க்க‌ நிக‌ழ்வு... அவ‌ர‌து குடும்ப‌த்திற்கு என‌து ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்.

சாருஸ்ரீராஜ் said...

படிக்கும் போதே கண்கள் குளமாகின்றன்.தங்களுக்கும் தங்கள் நண்பரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்

அமைதி அப்பா said...

அடிக்கடி இது மாதிரியான விபத்துக்கள் நடக்கின்றன, மக்கள் திருந்துவதாக இல்லை. இதை தவிர்க்க சட்டம் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.
நண்பரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெசொவி said...

:(( இதில் திருந்த வேண்டியது மக்கள் தான்.

யூர்கன் க்ருகியர் said...

ஆழ்ந்த இரங்கல்கள் ..
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது

Unknown said...

My deepest condolences to your friend's family..

We need awareness amongst ourselves first before blaming the government or the police.

Unknown said...

My deepest condolences to your friend's family..

We need awareness amongst ourselves first before blaming the government or the police.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-(

ராம்ஜி_யாஹூ said...

very sad to hear.

Praveenkumar said...

மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி..! நானும் தங்களின் நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

athira said...

கடவுளே... இது என்ன கொடுமை, நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஒரு நிமிடத்தில் மனிதனின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது.
உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடைய நானும் பிரார்த்திக்கிறேன்.

இப்படித்தான் ஒரு விபத்து சமீபத்தில் ஜேர்மனியிலும் நடந்தது, 4 குழந்தைகளின் தந்தை(தமிழர்). வேலைக்குப் போவதற்காக ரெயின் பிடிக்க ஸ்டேஷனில் காத்திருந்த போது, திடீரென ஓடிவந்த ஒரு மன நோயாளி, வேகமாக வந்துகொண்டிருந்த எலக்ரிக் ரெயின்மீது இவரைத் தள்ளிவிட்டதில், அதிலேயே அவர் சரி.

vasu balaji said...

வட சென்னையில் இந்த எமனுக்கு விடிவே கிடையாதா? உங்கள் நண்பரின் குடும்பத்துக்கு அனுதாபங்கள்.

Jey said...

னண்வரின் குடும்பத்தாருக்கு,ஆழ்ந்த இரங்கல்கள்.
பட்டம் விட நினைப்பவர்கள், மெரினா பீச் சென்று விட்டால், நல்லது.

goma said...

இந்த செய்தியை ம்நனும் வாசித்தேன்

இது ஒரு கொடூரமான முடிவு.அவர் மனதில் என்னன்ன குடும்பத்தைப் பற்றிய ஆசைகள்,ஏக்கங்கள்,குறிக்கோள்கள்...அத்தனையையும் ஒரு மாஞ்சா கயிறு துவம்சம் பண்ணிவிட்டதே.

elamthenral said...

மிகவும் வேதனைக்குறிய விஷயம்தான் நண்பரே! உங்களின் நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

ஜெய்லானி said...

:-(

அழகன் said...

மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம். இந்த "மாஞ்சா" என்பது தடை செய்யப்பட்ட ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விபத்துகள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஒரு உயிரின் மதிப்பு நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வேதனை,வேதனை.

Kousalya Raj said...

கொடுமை. உங்கள் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன் மௌனமாக ..

சீமான்கனி said...

நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...பட்டங்களை விடுவதற்கு தனி இடம் அமைத்து கொடுத்தால் கட்டுபடுத்தலாம் என நினைகிறேன்...

பனித்துளி சங்கர் said...

மிகவும் வருத்ததிற்கு உரிய விசயம். நண்பர் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

Chitra said...

உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Chitra said...

சிறு பிள்ளைகளுக்கு பட்டம் விடும் போது, கவனிக்க வேண்டிய விஷயங்களை சொல்லி தர வேண்டிய பெற்றோர்கள் - பெரியோர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்களோ?

Unknown said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

வவ்வால் said...

Miguntha varutham tharukirathu. Aazhntha anuthabangal.

Kids enna seykirarkal ena kavanithu, vazhipadutha thavariya parents kalai uthaikka vendum.

Eppadiyo pogattum ena roadla alaiya vidum parents than ithukkellam kaaranm.

Sariya valarkka mudiyathavarkal yen pethukkanum.athaan ella kadailayum urai vikkurane vaangi maatti tholaiyarathu.

மர்மயோகி said...

விளையாட்டு என்று விட்டுவிடாமல், நடுரோட்டில் பட்டம் விடும் நாய்களையும் (ஆம் நாய்கள்தான்) நடு ரோட்டில் கிரிக்கெட் விளையாடு தே....பசங்களையும் நாய் வண்டியில் ஏற்றி சித்திரவதை செய்து கொல்லவேண்டும்..அதற்கான சட்டம் இயற்றவேண்டும்..!

மர்மயோகி said...

விளையாட்டு என்று விட்டுவிடாமல், நடுரோட்டில் பட்டம் விடும் நாய்களையும் (ஆம் நாய்கள்தான்) நடு ரோட்டில் கிரிக்கெட் விளையாடு தே....பசங்களையும் நாய் வண்டியில் ஏற்றி சித்திரவதை செய்து கொல்லவேண்டும்..அதற்கான சட்டம் இயற்றவேண்டும்..!

மர்மயோகி said...

விளையாட்டு என்று விட்டுவிடாமல், நடுரோட்டில் பட்டம் விடும் நாய்களையும் (ஆம் நாய்கள்தான்) நடு ரோட்டில் கிரிக்கெட் விளையாடு தே....பசங்களையும் நாய் வண்டியில் ஏற்றி சித்திரவதை செய்து கொல்லவேண்டும்..அதற்கான சட்டம் இயற்றவேண்டும்..!

செல்வா said...

ரொம்ப கஷ்டமா இருக்குங்க .. யாரோ ஒருவருடைய சந்தோசம் மற்றவர்களின் உயிரை குடிக்கும் அளவிற்கு கொடுமையாக இருப்பது வேதனையளிக்கிறது ..

தூயவனின் அடிமை said...

படித்தவுடம் மனதிற்கு ரொம்ப கஷ்டமாகி விட்டது. உங்கள் நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மர்மயோகி said...

மிகவும் வருத்தமளிக்கும் செய்தி..
விளையாட்டுதானே என்று விட்டுவிடாமல்..நடுரோட்டில் மக்களுக்கு இடையூறாக பட்டம் விடும் தெரு நாய்களையும் (ஆம் தெரு நாய்கள்தான்) நடுரோட்டில் மக்களுக்கு இடைஞ்சலாக கிரிக்கெட் விளையாடும் தே... பசங்களையும் நாய் வண்டியில் ஏற்றி சித்திரவதை செய்து கொல்லவேண்டும்..மாஞ்சா நூல் போன்ற அபாயகரமான பொருட்களை விற்கும் பொறுக்கித் தே....பசங்களையும் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லவேண்டும்...

வால்பையன் said...

வருத்துகிறேன்!

Unknown said...

தங்களின் நண்பரின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மங்குனி அமைச்சர் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

Vincent said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனசு வலிக்கிறது. நண்பரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஸாதிகா said...

பத்திரிகையில் படித்து விட்டு பதறினேன்.பட்டம்,மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்பவர்களையும்,கடைகளையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கா விட்டால் இந்த நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

கன்கொன் || Kangon said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிலருக்கு ஏற்படும் மரணங்கள் வழமையான மரணங்களை விட அதிகமாகவே பாதிக்கும்.

நண்பரை இழந்திருக்கும் உங்களுக்கும், குடும்பத்தில் ஒருவரை இழந்திருக்கும் நண்பரின் குடும்பத்திற்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தக்குடு said...

தங்களின் நண்பரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிருச்சுங்க :-(

நண்பரின், குடும்பத்திற்கு ஆண்டவன் எல்லா நலமும் தந்து வாழ வைக்கட்டும்.