எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, July 15, 2010

கல்லூரி கலாட்டா (ஆப்பு தான் )

எங்க காலேஜுல வருசத்துக்கு ஒரு வாட்டி ஏதாவது தமிழ் படம் ஒன்னு போடுவாங்க . (நல்ல காலேஜா இருக்கு போல ?) .

ஆடிடோரியத்துல ஸ்கிரின் வச்சு , சின்ன ப்ரொஜெக்டர் வச்சு போடுவாங்க .( வெங்காயம் நீ மேட்டர சொல்லு, எங்களுக்கு தெரியும் , எங்க ஊர் திருவிழாவுல பாத்திருக்கோம் )

காலைல புல்லா லேடிஸ் , அவுக வீட்டுக்கு போனப்புறம் மதியம் பசங்களுக்கு (அப்பவே என்னா வில்லத்தனம்? ).


நான் யு.ஜி செகண்டு இயர் படிக்கும்போது அந்த வருட சினிமா "சின்னத்தம்பி" ( நீங்களே விசில் அடித்து கொள்ளவும் ) , வழக்கம் போல காலைல லேடிஸ் எல்லாம் படம் பாத்திட்டு கிளம்பினாங்க , நானும் பிரண்டு சிவாவும் வழக்கம் போல எங்க பிகருகள கொண்டுபோய் வீட்ல டிராப் பன்னிட்டு(அட சைக்கிள்ல பின்னாடியே போவம்ங்க ) திரும்ப வந்தோம் .

"அப்போ காலேஜுல போயி இந்த செகுரிடி வேல பாத்திகளா ??"
"நாயிக்கு தெரியுமா ஒரு சந்தி பானை , கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன (அடபழமொழி , திட்டாத விடுப்பா ஒரு புலோல வந்திருச்சு ) . "

சரி காலேஜ் உள்ள போறத்துக்கு முன்னாடி ஒரு "டீ" சாப்பிடலாம்ன்னு "டீ"கடைல போய் "டீ" சாப்ட்டுகிட்டு இருந்தோம் . ( பன்னாட "டீ" போய் "டீ" கடைலசாப்பிடாம அப்புறம் பர்னிச்சர் கடையிலையா போய் "டீ" சாப்பிடுவாங்க,.... உஸ்....... அப்பா எத்தின "டீ" )

திடீர்ன்னு நம்ம பிரண்டு ஒரு பய பின்னங்கள் பிடரில அடிக்க தப தபன்னு ஓடிவந்தான் , அவனுக்கு பின்னாடியே காலேஜ் வாட்ச்மேன் ரெண்டு பேருஅப்புறம் நம்ம எதிரி குரூப் பசங்க ரெண்டு பேரு தொரத்திகிட்டே வந்தாங்க , வந்தவனுக நம்ம பிரண்ட புடிச்சு தரதரன்னு காலேஜுக்குள்ள இழுக்கஆரம்பிச்சானுக , நாங்க ஓடிப்போயி என்னன்னு கேட்குறதுக்குள்ள அடிதடிஆகிப்போச்சு , நம்ம பயல அடிச்சா விடுவமா ?

நாங்களும் அடிக்க ஆரம்பிச்சோம் திடீர்ன்னு "ஸ்டாப் இட்" ன்னு சத்தம், எவ அவன்னு திரும்பி பார்த்தா ???

பிரன்சிபால் மற்றும் ஏழு டிபார்ட்மன்ட் H.O.D எல்லாம் புடைசூழ நிக்கிறாங்க , நேரா எங்க அஞ்சு பேத்தையும் பிரின்சிபால் ரூமுக்கு கூப்ட்டு போய் நாலு நாள் சஸ்பென்ட் பண்ணாங்க. ( நாங்க ரெண்டுபேரு , ஓடிவந்த நம்ம பிரண்டு எதிரிகுரூப் பசங்க ரெண்டுபேரு).


சரின்னு நம்ம பயல தனிய கூப்ட்டு என்னடா நடந்திச்சுன்னு கேட்டா , சின்னத்தம்பி படத்துல போவோமா ஊர்கோலம் பாட்டு ஓடும்போது இந்த நாதாரி உணச்சிவசப்பட்டு வேகமா ஓடிப்போய் குஸ்புவுக்கு முத்தம் குடுத்திருக்கு , அப்பஸ்க்ரீன் கீழ விழுந்திடுச்சு , இது பயந்து போய் ஓடிவந்திருக்கு அவனுகளும் என்னமோ ஏதோன்னு தொரத்திருக்கானுக .

இந்த நாயிஅங்கே இருந்திருந்தா பேச்சு வார்த்தையிலேயே பிரச்சனை முடிச்சிருக்கும் . (அடிதடி நடக்கு போது காலேஜ் பியூன் ரெண்டுபேருக்குஅடிவிளுந்திருக்கு அதுதான் சஸ்பென்சன் .)

இதுக்கு பேருதான்

"தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் "

அப்படின்கிறதோ
??? (அட மங்கு இன்னைக்கு என்னடா ஒரே பழமொழியா இருக்கு? அசத்துடா ?)







Monday, July 12, 2010

பட்டாப்பட்டி vs மங்குனி T .V .

சரி சரி , எல்லாம் ரெடியாகுங்க இன்னைக்கு பிரபல தொழிலதிபர் சே...... பிரபல பிளாகர் பட்டாபட்டிய பேட்டி எடுக்கிறோம் , அவரு கரக்ட்டா பதினோருமணிக்கு வந்திடுவார் ஸ்டுடியோவ ரெடி பண்ணுங்க.

(என்னது ஸ்டுடியோவா ??? பத்துக்கு பத்து ரூம் ஒன்ன வச்சுகிட்டு ஸ்டுடியோன்கிறான். யோவ் பஸ்ட்டு சம்பளத்த குடு , வேலைக்கு சேந்துமூணுமாசம் ஆச்சு இன்னும் ஒருவாட்டிகூட சம்பளம் தரல, வெங்காயம் இதுபேசுற பேச்ச பாரு )

"கேமராமேன் எங்க ? ஏம்பா கேமராவ ரெடியா வச்சுக்க?"

"என்னது கேமராவா ? சார் ரிகார்ட் பண்ண பிலிம் இல்லை"

"பிலிம் இல்லையா ? சரி சரி எல்லாத்துக்கும் கம்பனில இருந்து மொபைல் வங்கி கொடுத்தமே அதுல, கேமரா மொபைல் இருக்கா ? அத வச்சு அட்ஜஸ் பண்ணிக்கலாம் ".

"சார் , நீங்க வாங்கி குடுத்த 500 ரூபா மொபைல்ல கேமராவெல்லாம் இல்லை."

"அப்படியா ? அப்ப நம்ம ஓனர் ப்ளாக் போ அங்க அவரு ஒரு நோக்கியா கேமரா மொபைல் வச்சுருப்பாரு , அத வாங்கிட்டு வா ".

"வர்ற பட்டாப்பட்டி பெரிய V.I.P. , எல்லாம் கரக்ட்டா இருக்கணும் , அந்த போகஸ் லைட் எடுத்து கரக்ட்டா பிக்ஸ் பண்ணுங்க"

"சார் , சார் இருந்த ஒரு போகஸ் லைட்டையும் சேட்டு கல்யாணத்துக்கு வாடகைக்கு குடுத்திட்டோம் ."

"சரி சரி மானத்த வாங்காதிங்க , பக்கத்து கடைல போய் ஒரு பெடோமாக்ஸ் லைட் வாடகைக்கு வாங்கிகிட்டு வாங்க ."

"சார் , அவுங்க பழைய பாக்கி 137 ரூபா குடுத்தாதான் பெடோமாக்ஸ் லைட் தருவாங்களாம் ."

"அப்படியா , சரி இருக்க நாலு டியுப் லைட்டையும் போடுங்க ".

"யோவ் , பில்லு கட்டலன்னு .பி காரன் போன வாரமே பீச புடுங்கிட்டு போய்ட்டான்"

ஓகே ,ஓகே பேட்டிய மொட்ட மாடில வச்சுக்கலாம் . (தக்காளி இன்னைக்கு எப்படியும் பட்டாப்பட்டி கிட்ட ஒரு 10000 ரூபா டொனேசன் வாங்கிடனும் )

>>>>@@@@<<<<

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக , ப்ளாக் ஆரம்பித்து சில மாதங்களே ஆன, அதற்குள் பிரபலம் அடைந்த உங்கள் பிரபல பதிவர் திரு.பட்டாப்பட்டி அவர்களின் பேட்டி இப்பொழுது ஒலிபரப்பப் படும் .

இரண்டு வாரங்களில் பேட்டிக்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து பரிசுகளை வெல்லுங்கள் .

முதல் பரிசாக போயிங் 747 நேயர்களேபஸ்
இரண்டாம் பரிசு சொகுசுக் கப்பல்
மற்றும் பல நூறு விதமான பரிசுகளை வெல்லுங்கள் ..........

@@@@@***@@@@@


"வணக்கம் திரு .பிரபல தொழிலதிபர் சே... பிரபல பதிவர் பட்டாப்பட்டி அவர்களே

"வணக்கம், வணக்கம்"

நீங்க எப்படி பிரபல பதிவரானிங்க?

(அடப்பாவிகளா வந்ததும் டீ தருவானுகன்னு நினைச்சேன் , இவனுக தண்ணிகூட குடுக்கலையே , இன்னைக்கு எப்படியும் இவனுககிட்ட டீ குடிக்காம போககூடாது ) அது வந்து சார் , நான் சின்ன வயசுலே ஸ்கூல்ல பக்கத்து பிகர் கிட்ட ஹேர் கிளிப்பு, ரப்பர் பேண்டு , பென்சில் இப்படி பொருட்கள திருடி கொஞ்சம் கொஞ்சமா பிரபலமானேன். அப்புறம் கடைய தொறந்து வச்சா ஒரு பய வரல, என்னடாபன்றதுன்னு யோசிச்சு அப்புறம் ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிரபலமான நம்ம மங்குனி அமைசர் ப்ளாக் இருந்த பதிவுகள திருடி என் கடைல வச்சேன் நல்லா வியாபாரம் சூடுபிடிச்சு இப்போ பிரபலம் ஆகிட்டேன்

நேயர்களே நீங்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பட்டாப்பட்டி அவர்களின் பேட்டி அடுத்த வாரம் தொடரும் , நன்றி வணக்கம்

Thursday, July 8, 2010

குப்பைக்கு போகும் கடவுள்கள்

என்னுடைய போன பதிவில் வருத்தங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கு என் நன்றி . கடந்த இரண்டு நாட்களாக காவல்துறை இது சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் . ரொம்ப நல்ல விஷயம் . இனி இது போல் ஒரு விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .

-------------------------------------

முஸ்கி : மூடு சரியில்லாததால் இந்த முறை நோ மொக்க பதிவு , எனவே என் மனதில் ரொம்ப நாளாக இருந்த ஒரு ஆதங்கம் .

குப்பைக்கு போகும் கடவுள்கள்

என்னா தலைப்ப பாத்து டென்சன் ஆகிட்டிகளா ? ஆனா நியாயமான கேள்வி? நீங்களே கரக்டா பதில் சொல்லுங்கள்.

இது ஜாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லா மதத்திலும் நடக்கின்றது .

எங்கே ? எப்படி ?

கல்யாண பத்திரிகை , காலண்டர் போன்றவற்றில் போடப்படும் கடவுள் படங்கள்.

அனைத்தும் கடைசியில் குப்பையில் தான் போய் சேருகின்றன . அதிலும் மிக அதிகமாக செலவு செய்து சில கல்யாண பத்திரிகைகளில் கடவுள்கள் சிலை போல எம்போஸ் (கொஞ்சம் 3D எஃபக்டில் இருக்கும்) செய்து மிக அழகாக பத்திரிகை அடிக்கிறார்கள் . ஆனால் அது கடைசியில் குப்பைக்கு தான் செல்கிறது. .

இதே மாதிரி மிக செலவு செய்து மிக அழகான பத்திரிகை அடித்த என் நண்பன் ஒருவனிடம் கேட்டேன், இல்லை அதை பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் . அது எப்படி சாத்தியம்? என் வீட்டையே எடுத்து கொண்டால் ஒரு வருடத்திற்கு நியாயமாக இருபது கல்யாண பத்திரிகைகள் வருகின்றது , ஐந்து , பத்து வருடங்கள் ஆனால் எவ்வளவு பத்திரிகைகள் இருக்கும்? அதை என்ன செய்வது ?

அதே போல் காலண்டர்கள்??? அதில் மிக மிக பெரிதாக ஆயில் பிரிண்ட் செய்வார்கள் , ஒரு வருடத்திற்கு பிறகு மிக நிச்சையமாக அது குப்பைக்கு தான் போகும் , எவ்வளவு படங்களை சேர்த்து வைக்க முடியும் ???

எனவே கல்யாண பத்திரிகை , காலண்டர் போன்ற வற்றில் கடவுள் படங்களை தவிர்க்கலாமே ???

இதே போல் வேறு ஒன்றும் உள்ளது ?

தேசிய கொடி

ஒரு முறை சென்னையில் நடந்த கிரிகெட் பார்க்க ஸ்டேடியம் சென்றோம் , அங்கு பத்து ரூபாய்க்கு மிக அழகான சிறிய பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசிய கொடி கொடுத்தார்கள் , கிட்டத்தட்ட அங்கு வந்த அனைவரும் வாங்கி விட்டார்கள் , மேட்ச் நடக்கும் போது அனைவரும் கொடியை காட்டினார்கள் மிகவுல் அழகாக இருந்தது .

மேட்ச் முடிந்து வெளியே வந்து பார்த்தால் நூற்றுக்கனக்கான தேசிய கொடிகள் தரையிலும் குப்பையிலும் கிடந்தன. அனைத்தையும் பொருக்கி எடுக்கலாம் என்றால் , எடுத்து என்ன செய்வது ???

நாங்கள் வாங்கியதை எங்கள் வண்டியில் மாட்டி விட்டோம், ஆனாலும் அது கடைசியில் குப்பைக்கு தான் சென்றது.

எனவே இது போன்ற விசியங்களை தவிர்ப்பது நல்லது .