எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, June 23, 2010

செந்தழல்

"அண்ணே இந்த வாரம் சனிக்கிழமை காசுகுடுதிறேன்"

"அதுக்கு சொல்லலாமா , பாரு நானும் காசுகுடுத்து தான் சந்தையில இருந்து சாமான் வாங்க வேண்டி இருக்கு , நீ ஒரு ஆளு மூணு மாசம் பாக்கிவச்சா நான் எப்படிம்மா சமாளிப்பேன்?"

"இல்லண்ணே அவருக்கு மூணுமாசமா சம்பளம் தரல , இந்த வாரம் வந்திடும்ன்னு சொன்னாரு , வர்ற சனிக்கிழம தந்துடுறேன் "

"சரிம்மா என்னா வேணும்?"


சமையல் சாமான்களுடன் வீட்டிற்கு வந்து பசியால் அழுது கொண்டிருத்த குழந்தையை ஆசுவாசபடுத்தி விட்டு சமைக்க தொடங்கினால் . மறுநாள் இரவு ஏழுமணிக்கு முருகேசன் வந்துவிட்டான் .

"புள்ள இந்தா மூணுமாச சம்பளத்தையும் சேத்து குடுத்திட்டாக , நல்லா சமைச்சு வையி நான் வெளியில போயிட்டு வர்றேன்" .

"மாமா சீக்கிரம் வந்திடு ரொம்ப குடிக்காத"

"சரி, சரி "

பணத்தை சாமி படத்துக்கு அருகில் வைத்து கும்பிட்டால் . குழந்தையை தூக்கி கொண்டு அண்ணாச்சி கடைக்கு சென்றால்

"அண்ணாச்சி , அவுக சம்பளம் வாங்கிட்டு வந்துட்டாக , இன்னைக்கு விளக்கு வச்சாச்சு அதுனால காலைல காச செட்டில் பண்ணிடுறேன் "

"சரிம்மா இப்ப என்ன வேணும்? "

"அண்ணாச்சி இத லிஸ்ட்டுல இருக்காத போட்டு வைங்க , நான் போய் கோழி வாங்கிட்டு வர்றேன் "

"சரிம்மா குடு "

கோழி வாங்க பாலம் தாண்டி மெயின் ரோடு முக்கை நோக்கி நடந்தால்...

"என்னா முருகேசு இன்னைக்கு தான் வந்தியா? "

"ஆமாண்ணே , கொஞ்சம் சரக்கு சாப்பிடுங்க "

"இல்லைப்பா இப்ப தான் சாப்பிட்டேன் "

"அண்ணே கொஞ்சம் சாப்பிடுங்க "

"சரிப்பா ஒரு கட்டிங் மட்டும் ஊத்து "

திடீரென்று குப்பத்தில் ஒரே சத்தம் .....

முருகேசன் அடிச்சு விழுந்து ஓடிவந்து பார்த்தான் , குப்பத்தில் பல குடிசைகள் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தன ,

ஆறு தீயணைப்பு வண்டிகள் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

எறிந்த நாற்பது குடிசைகளில் முருகேசன் குடிசையும் ஒன்று.

மூன்று மாத சம்பள பணத்துடன் எரிந்துபோயிருந்தது.


-------------------------------


டிஸ்கி : ஸ்டாப் , ஸ்டாப்............... , ஸ்ஸ்ஸ்டாப் ........... என்னா சின்னபுள்ள தனமா இருக்கு , எதுனாலும் பேசி தீத்துகல்லாம் , நல்லா இருந்தா புடிச்சிருக்குன்னு சொல்லுங்க இல்லை புடிக்கலைன்னு சொல்லுங்க , அத விட்டுட்டு.................. பஞ்சாயத்துல வச்சு பேசிக்கலாம் ...........