எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, December 29, 2011

விடைபெறுகிறேன் நண்பர்களே


டியர் பிரண்ட்ஸ் ,


எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, என்னால இனிமே இந்த வலையுலகில் தொடர்ந்து செயல்படமுடியாத சூழல் உருவாகிவிட்டது . ஆனால் கடந்த நாட்களில் எனக்கு இந்த உலகம் முழுவதிலிருந்து பல நண்பர்கள் கிடைத்தார்கள் .  எனது நட்பின் மூலம் அதில் சிலருக்கு மனவருத்தங்களும் சங்கடங்களும் ஏற்பட்டு இருக்கலாம் , எனவே நண்பர்களே விடைபெறும் இந்த நேரத்தில் அவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . தயவு செய்து உங்கள் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். கலங்கிய கண்களுடன் விடைபெறுகிறேன் .

இப்படிக்கு

2011டுஸ்கி : தயவுசெய்து கீழேயுள்ள டிஸ்கியை யாரும் படிக்காதீர்கள் .

டிஸ்கி : ஹி.ஹி.ஹி.....ஒன்னும் இல்லைங்க போனவருசம் (2010 ) ஒரு பதிவர் இந்தமாதிரி பதிவு போட்டு இருந்தார். இந்த கான்செப்ட் ரொம்ப எனக்கு புடிச்சிருந்தது அதான். (@பட்டா ..... இந்த இடத்துல தான் நீ காரி துப்பனும் )

சரி இப்போ மேட்டருக்கு வருவோம் ..........

டெர்ரர் கும்மி குரூப்புல இருந்த நாங்க பதிவர்களின் பதிவுகளுக்கு  ஒரு சின்ன பரிசுப்போட்டி    வச்சிருக்கோம் . கீழ உள்ளத கிளிக் பண்ணி டீடைல்ஸ் பார்த்துக்கங்க .  

இதுல முதல் முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மி மெம்பர்கள் யாரும் போட்டி  நடுவர்கள் கிடையாது  .

அடடா ..... ஆமா இவனுக பூராம்  ஹை கோர்ட் ஜட்ஜா இருந்தவுங்க , தீர்ப்பு சொல்லிட்டாலும் .......???


இதுல ரெண்டாவது  முக்கியமான கண்டிசன் என்னான்னா ??? 

டெர்ரர் கும்மியை சேர்ந்த யாரும் இந்த போட்டில கலந்துக்க கூடாது .

அடிங்.... ங்கொய்யாலே , நாதாரி கும்மி நாயிகளா என்னமோ இவனுகள கலந்துக்க விட்டுட்டா எல்லாரும் பரிசு வாங்கி குவிக்கப்போறது  மாதிரி  என்னமா பில்டப் குடுத்திருக்காணுக. ஒரு பயலுக்கு (முக்கியமா என்னையும் சேர்த்துதான்)  ஒழுங்கா ஒரு பதிவு எழுத தெரியாது , இப்படி ஒரு கண்டிசன் இவனுகளா போட்டு போட்டில கலந்து தோத்துபோயி  கேவலப்படுரதுல இருந்து தப்பிக்க ஐடியா பண்ணிட்டானுக .34 comments:

நிரூபன் said...

வணக்கம் அமைச்சரே
உங்களுக்கு எம்புட்டு தெனாவெட்டு?
ஹே...ஹே..

அவ்வளவு சீக்கிரம் நம்மளை விட்டு விலகிப் போயிட நாம விடுவமா?

ஹே...ஹே...

Mohamed Faaique said...

புது வருடதுக்கு சுவீட் குடுத்துட்டு பரிச்சிகிட்டது போல இருக்கு உங்க ஸ்டேட்மண்ட்..

Mohamed Faaique said...

///ஒரு சின்ன பரிசுப்போட்டி வச்சிருக்கோம் ///

குடுக்குரத எதாவது பெருசா குடுங்கப்பா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யார்டா அவன் மங்குனி பிளாக்கை ஹேக் பண்ணினது

பெசொவி said...

:))))))

(enna ezhutharathunne theriyamal smilie mattum poduvor sangam)

Madhavan Srinivasagopalan said...

கும்மிக் குழுவிலுள்ள நானும், தம்பி செல்வாவும், பரிசல்-ஆதி இனைந்து நடத்திய சவால் சிறுகதை 2011 போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றோம் என்பதை உங்களுக்கு வயத்தெரிச்சல் வரும் வரை சொல்லிக்கொள்ளும் இந்த தருவாயில், மற்ற கும்மி நண்பர்கள் (நீங்கள் உட்பட) ஒருசில திரட்டிகளில் தொடர்ந்து முதல் பத்து இடங்களில் இருந்திருப்பதாக தற்போது மீண்டும், மறுபடியும் ஞாபகப் படுத்தும் இவ்வேளையில்.. மற்ற நண்பர்கள் பலரும் கும்மிக் குழுவிற்கு அபரிமிதமான பேராதரவையும் அளித்துவந்தாலும்.. இந்த நேரத்தில் அதைப் (எதை) பற்றி எப்படி, எவ்வாறு (ரெண்டும் ஒன்னுதானோ.. சரி சரி.... ஒரு ஃப்ளோல வந்துடிச்சு..) எதுக்கு, ஏன், உங்களுக்கு வெளக்குமாறு.. (மறுபடியும் சாரி) வெளங்குமாறு நான் ஏன் சொல்ல வேண்டும் என்பதை தெரிவிக்கும் இவ்வேளையில் நீங்கள் 2011 முடிவதற்கு மூன்று நாட்கள் இருக்கையில் எப்படி இப்படி ஒரு பதிவு போடலாம் என்று கேட்டுக் கொண்டும்.. அதற்கு நாட்டு மக்கள் சார்பாகரும்.. கிரகோரியன் காலேண்டர் 2011 ம் ஆண்டு சார்பாகவும் கண்டிக்கிறேன் எனினும் நீங்கள் பகிரங்கமாக ஏதாவது கேட்டால் தான் எங்கள் (யார் ?) கோவம் தீரும்.. எனக் கூறி எனது சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்.

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. வாய்ப்பளித்தமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது எனது கடமையாக இருப்பதால், பன்றி.. சாரி.. சாரி நன்றி.

NADESAN said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அமைச்சரே
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
துபாய்

NAAI-NAKKS said...

Appa unmai illaiya ????
Nan vera unmai-nu ninaichi
roomba happy
aaittene....
Vedi vedichi kondadittene...!!!!!

NAAI-NAKKS said...

Ithukku pesama
thina thanthi
cartoon pottirukkalam.....

Palaniappan Kandaswamy said...

நீங்க பதிவுலக விட்டு போறீங்கன்னு கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேனுங்க. அப்பறமாத்தான் தெரிஞ்சுது அது சும்மானாச்சிக்கும் சொன்னதுன்னு. எனக்கு பொக்குனு போச்சுங்க.

அர்த்தம் புரியலைன்னா ஆராச்சும் கோயமுத்தூர்க்காரனக் கூப்பிட்டு கேட்டுக்கோங்க!

Selvakumar selvu said...

//நீங்க பதிவுலக விட்டு போறீங்கன்னு கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேனுங்க. அப்பறமாத்தான் தெரிஞ்சுது அது சும்மானாச்சிக்கும் சொன்னதுன்னு. எனக்கு பொக்குனு போச்சுங்க./

தாத்தா நீங்க கவலைப்படாதீங்க.. நம்ம பாசை தெரிஞ்சவன் ஒருத்தன் இவுங்க கூட குப்பை கொட்டிட்டு இருக்கேன். இன்னும் ரண்டுபேர் (மாலுமி, ஜுனியர் அருண்)இருக்காங்க. நாங்க புரிய வச்சுக்கிறோம். எப்படியும் மங்குனி அமைச்சர பதிவுலகத்துல இருந்து தூக்கி, பதிவுலகத்தைக் காப்பத்திடலாம் :))

மனசாட்சி said...

ஹிம்...அதிரடி தலைப்பு

வெங்கட் said...

// ஒரு பயலுக்கு (முக்கியமா என்னையும் சேர்த்துதான்)
ஒழுங்கா ஒரு பதிவு எழுத தெரியாது , இப்படி
ஒரு கண்டிசன் இவனுகளா போட்டு போட்டில
கலந்து தோத்துபோயி கேவலப்படுரதுல இருந்து
தப்பிக்க ஐடியா பண்ணிட்டானுக . //

கம்பெனி சீக்ரெட்டை பப்ளிக்காக சொன்னதால்
மங்குனி ,அவர் குடும்ப உறுப்பினர்கள், மற்றும்
ஒன்னுவிட்ட பங்காளி , எதிர்வீட்டுக்காரன்,
பக்கத்து வீட்டுக்காரன், என அனைவரையும்
" டெ.கு.மு.க "-வில் ( டெரர் கும்மி முன்னேற்ற கழகம் )
இருந்து நீக்குமாறு தலைமைக்கு பரிந்துரைக்கிறேன்.

மர்மயோகி said...

யோவ் மங்குனி..இத்தன நாளா வெலகிதானே இருந்தே..இப்போ 2011 வருஷத்த காரணமா வெச்சு மறுபடியும் வந்துட்டியா?

ssr sukumar said...

muthalil enakku shocking aakaththaan irunthathu.mokkaiyaaka irunthaalum rasikkumbadiyaaaka iruppathu manguniyin style of flow.vaazhththukkal.

MANO நாஞ்சில் மனோ said...

கிளம்பியாச்சா.......

MANO நாஞ்சில் மனோ said...

கும்முங்க ராசா கும்முங்க...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சரிக்கை: மங்குனி ப்ளாக் திருடப்பட்டுள்ளது...!

Anonymous said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in


இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in

பட்டாபட்டி.... said...

கலங்கிய கண்களுடன் விடைபெறுகிறேன் .
//

ரைட்..ரைட்டு.. கிளம்பு.. காற்று வரட்டும்..

இந்தவரிக்கு மேல, என்னால உன்னோட பதிவை படிக்கமுடியல..

இதுக்குப்பின்னாடி மட்டுன் என்ன, காவியமா எழுதியிருக்கப்போறே..?


சீக்கிரம் போய் சேரு. அப்படியே பன்னிய கேட்டதா சொல்லு...

:-)

Yoga.S.FR said...

வணக்கம்,அமைச்சரே!ஒரு செகண்டுல பீதி(பேதி இல்ல)ய கிளப்பி விட்டுட்டீங்களே? நியாயமா,அடுக்குமா????

அமுதா கிருஷ்ணா said...

வரப்போகும் வருடமும் தன் தலையில் அந்த பையன் அடித்து கொண்டே தான் இருக்க போகிறான்.பாவம்.

பித்தனின் வாக்கு said...

awish you happy new year to you and your family

சுவடுகள் said...

நீர் மங்குனி அமைச்சரென்பதை மணிக்கொருமுறை காட்டிக்கொண்டே இருக்கிறீர்.
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.
வாழ்க தமிழ்.
வளர்க இங்கிலிஸ்.

Veliyoorkaran said...

யோவ் பட்டாப்பட்டி...இவன கொல்றதுக்கு எத்தன் ரூவாயா செலவாகும்...? சும்மனாச்சுக்கும் விளம்பரம் பண்ணி அட்டெண்டன்ஸ் போட்ரவனுகள எல்லாம் உசுரோட விடகூடாதும் ஓய்..! வக்காளிதக்க கொல்றோம் இவன..!

Veliyoorkaran said...

@@@Yoga.S.FR said...
வணக்கம்,அமைச்சரே!ஒரு செகண்டுல பேதிய கிளப்பி விட்டுட்டீங்களே? ////

யோவ் பட்டாப்பட்டி..மங்குனி மொக்க போடறத நிறுத்திட்டா இந்த பையனுக்கு பேதியாகுமா...? என்னய்யா இது புதுசா இருக்கு...? வழக்கமா இவன் பதிவ படிக்கரவனுக்கு மட்டும்தான் வாந்தி பேதி எல்லாம் வாக்கையா வரும்...!

Veliyoorkaran said...

@@@@ ssr sukumar said...
muthalil enakku shocking aakaththaan irunthathu.////

நானும்தான் சார்..அப்டியே ஷாக் ஆய்ட்டேன்..! :)

Veliyoorkaran said...

@@@மனசாட்சி said...
ஹிம்...அதிரடி தலைப்பு//

உங்க ப்ரோபைல் போட்டோவுக்கே காசு போச்சு சார்...நல்ல வேலை ...! மைனர் குஞ்சுன்னு உங்க ப்ளாகுக்கு பேர் வேய்க்கள..! :)

Veliyoorkaran said...

@@@ Palaniappan Kandaswamy said...
எனக்கு பொக்குனு போச்சுங்க.
(அர்த்தம் புரியலைன்னா ஆராச்சும் கோயமுத்தூர்க்காரனக் கூப்பிட்டு கேட்டுக்கோங்க!)

யோவ் பட்டாப்பட்டி..என்ன அர்த்தம்யா இதுக்கு...! எதுனா கெட்டவார்த்தையா...? (நீ கோயம்பத்தூர்காரன்தான..?)

Veliyoorkaran said...

@@@Madhavan Srinivasagopalan said...ஆறுதல் பரிசு பெற்றோம் என்பதை உங்களுக்கு வயத்தெரிச்சல் வரும் வரை சொல்லிக்கொள்ளும் இந்த தருவாயில், ///


உஆவ்...தூக்கம் வருது சார்..! எதுனா கட்சில கொள்கை பரப்பு செயலாளரா இருந்தீங்களா...? இந்த ஆத்து ஆத்துறீங்க..! :)

பட்டாபட்டி.... said...

Veliyoorkaran said...

@@@ Palaniappan Kandaswamy said...
எனக்கு பொக்குனு போச்சுங்க.
(அர்த்தம் புரியலைன்னா ஆராச்சும் கோயமுத்தூர்க்காரனக் கூப்பிட்டு கேட்டுக்கோங்க!)

யோவ் பட்டாப்பட்டி..என்ன அர்த்தம்யா இதுக்கு...! எதுனா கெட்டவார்த்தையா...? (நீ கோயம்பத்தூர்காரன்தான..?)

//

பலூன்ல காற்றை பிடுங்கிவிட்டமாறி....


சே.. இவங்களுக்கு விளக்கம் சொல்லியே...

யோவ்.. மங்கு... இனி மேல உன்னிய இங்க பார்த்தேன்.. பதிவர் சந்திப்பு நடத்தி... விசம் வெச்சு அனுப்பிடுவேன்...

:-)

athira said...

உண்மையில நானும் என்னாச்சோ ஏதாச்சோ எனப் பதறிட்டென் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

ஜெய்லானி said...

புது வருட வாழ்த்துக்கள் :-))


அடுத்த மாசம்தான் சொல்லலாமின்னு நினைச்சேன் வெளியூரு பிலாகிலதான் பார்த்தேன் இந்த மாசம்தான் புதுவருஷமாம் ஹி...ஹி... :-))

sigaram bharathi said...

Nice manna...