எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, March 10, 2010

சூசைட் பாயின்ட்
முஸ்கி:

(பின்னா"டி" எழுதினா "டி"ஸ்கி , "மு"ன்னாடி எழுதினா "மு"ஸ்கி, எப்படி நம்ம கண்டுபிடிப்பு ? ஹி ஹி ஹி ...) இந்த தொடர (மங்கு எல்லாம் நேரம்டா, பித்தன் அண்ணே நான் உங்க கைய புடிச்சு கெஞ்சினத பத்தி எல்லாரும் கேட்ப்பாக சொல்லிடாதீங்க, அடிச்சு கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க ) சீரியசா இல்ல மொக்கையா எப்படி எழுதலாம்னு யோசிச்சு சரி சீரியசா எழுதிடலாம்னு எழுதி படிச்சு பாத்தேன் , எனக்கே சிரிப்பு தாங்கல. நமக்கு சீரியஸ் எல்லாம் சரி வராதுன்னுட்டு அப்புறம் உங்க நல்லதுக்காக மொக்கையாவே எழுதிட்டேன்.


நான் அப்ப எட்டாவது படிசுகிட்டு இருந்தேன், ( தக்காளி இப்பவரைக்கும் நீ எட்டாவது தானடா படிச்சிருக்க ) கூட்டாளிக (எங்கம்மா கூட்டுகலவானிக-ன்னு சொல்லுவாங்க ) எல்லாம் சேந்து "புன்னகை மன்னன் " படத்துக்கு போறதா முடிவு பண்ணிட்டோம், நாங்கள்லாம் அப்பவே டெர்ரர் தாடி காரன் மொக்க படத்த ரெண்ட்ருதடவ பாக்குற தற்கொலைபடைங்க. இது நம்ம கமல் படம் , நாங்க கமலின் தீவிர ரசிகர்கள் , அந்த படம் எங்க ஊர்லருந்து 15 கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊர்ல போட்டு இருந்தார்கள். கமலுக்காக கண்டம் விட்டு கண்டம் கூட தாண்டலாம்.


பிளான் ஓகே ,


பணம் ? !!!!!!!!!

பக்கத்து ஊர் வேற, அமொண்ட் ஜாஸ்தியாகும் , என்ன பண்ணலாம் ???
…………………
………………….
யோசிச்சு கடைசியா ரைட்டு நம்ம லாக்கர்ல கைவக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு லாக்கர் என்னோட அக்காவோட உண்டியல், ரெண்டு ரூபா , அஞ்சு ரூபா காயின்ச சேத்து வைக்கும் . பாவம் அதும் கிட்டத்தட்ட அஞ்சு வருசமா சேத்துச்சு ஆனா அந்த உண்டியல் தான் ரொம்பவே இல்ல. நம்ம அந்த உண்டியல்ல ஜாயின் அக்கௌன்ட் (வித்ட்ராவல் only) வச்சிரிந்தோம்னு அதுக்கு தெரியல.

வழக்கம் போல அக்கௌன்ட்-ல வித்ட்ராவல் பன்னிட்டு படத்துக்கு போயாச்சு. கோனைசு, சமோசா எல்லாம் சாப்படு படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன்.

வாசல்ல....... அம்மா .... !!!

அம்மா : எங்கடா போயிட்டு வர்ற ?


நம்ம : கிரிகெட் விளையாடம்மா
(பொலேர்ன்னு ஒரு அர, தல கிர்ருன்னு சுத்தி கண்ணுல தண்ணி வந்திடுச்சு )

அம்மா : பொய் சொல்லாதடா
(ஆகா எந்த பன்னாடயோ போட்டுகுடுதுட்டான் )

நம்ம : இல்லம்மா விளையாடதாம்மா போயிட்டு வர்றேன்

அம்மா : நம்ம குமார் உன்னைய "தேனி" -ல (ஊர் பேரு ) சினிமா தியேட்டர்ல பார்த்ததா சொன்னான் ?

நம்ம : (நாதாரி, குமார் எங்க அண்ணனோட பிரெண்ட்) இல்லம்மா குமார் அண்ணன் பொய் சொல்லுதும்மா

அம்மா : நீ ரொம்ப யோக்கியம் , குமார நீ சொல்றியா ?
இன்னும் சில பல அடிகளுடன் அன்றைய எபிசோடு முடிந்தது.

சரி அடுத்த மேட்டர்க்கு வருவோம் ,
டுஸ்கி:

(பதிவுல ந"டு"ல போட்டா "டு"ஸ்கி , எப்பூ......டி )
அப்ப நடந்தத இப்ப நினச்சா சிப்பா இருக்கு , இது நடத்த அன்னைக்கு சீரீஸ்- ஆ எனக்கு எவ்வளவு பயம் , டென்சன் இருந்தது தெரியுமா ? இப்ப சொன்னா அந்த எபெக்ட் உங்களுக்கு புரியாது. அந்த கடை காரன் பிரேக் இன்னர் விலை சொல்லவும் தான் எனக்கு உயிரே வந்துச்சு.
ஒரு வாட்டி அண்ணன் பிரண்டோட TVS 50 -அ எடுத்துகிட்டு பிரண்ட்ஸ்ட பந்தா பண்ணிக்கிட்டு இருக்கும் போது பிரேக் கட் ஆகிப்போச்சு, எனக்கு கொலையே நடுங்கி போச்சு . எவ்வளவு இருக்கும்னு தெரியல. நெஜம்மா ரொம்ப பயந்துட்டேன் . அப்புறம் TVS 50 -அ பிரண்டு வீட்ல விட்டிட்டு நம்ம பைக்க (அது தாங்க சைக்கிள் ) பண வேட்டைக்கு கிளம்பினேன்.

வீட்டுக்கு போக முடியாது , போனா TVS 50 -அ எங்கன்னு அண்ணன் கேட்பான் , அதனால் நேரா எங்க சித்தி வீட்டுக்கு போய் எங்கம்மா கேட்டாங்கன்னு 50 ரூபா வாங்கினேன் , இந்த மாதிரி இன்னும் சில பல பேர ஏமாத்தி (மங்குனி நீ எப்படியும் போலசுகுவடா , உனக்கு கைவசம் தொழில் இருக்குடா ) 114 ரூபா சேத்தேன். வீடு பக்கத்தில இருக்க மெக்கானிக்ட போனா தெரிஞ்சவுங்க யாரும் பத்திருவாங்கண்டு பஸ் ஸ்டான்ட் பக்கத்துக்கு மெக்கானிக்ட TVS 50 -அ தள்ளிகிட்டே போனேன். அவன் எனடான்னா என்னையவே போய் பக்கத்து ஸ்பேர்ஸ் கடைல ப்ரேக் இன்னர் ஒன்னு வாங்கிட்டு வர சொன்னான்.

ஆண்டவா 114 ரூபாக்குள்ள இருக்கணும்னு கடவுள வேண்டிகிட்டு பயந்துகிட்டே போய் கடைல கேட்டேன்

நம்ம : சார் ஒரு TVS -50 ப்ரேக் இன்னர் குடுன்ங்க?

நம்ம : எவ்வளவு சார் ?

>

>

>

>

கடக்காரன்: : எட்டு ரூபா குடுப்பா

நம்ம : எவ்வளவு ?

கடக்காரன்: : எட்டு ரூபாப்பா

நம்ம : ***&%#@^***

(நாம அந்த வயசிலேயே மன்குநியாதான் இருந்திக்கோம் )

அத மாட்ட ஒரு ரெண்டு ரூபா , ஆக மொத்தம் செலவு பத்து ரூபா.

டிஸ்கி :இதுல முக்கியமான இன்னொரு மேட்டர் என்னன்னா , எங்க சித்தி வீட்ல போய் பணத்த திரும்ப குடுக்கும் போது எங்கம்மா அங்க வந்துட்டாங்க, அப்புறம் என்ன நடந்திருக்கும்னு உங்க கற்பனைக்கே விட்டுர்றேன் .

டிஸ்க்கிக்கு ஒரு கிஸ்கி : இதுக்கு மேல தொடரலாமா வேணாமான்னு நீங்க தான் முடிவு பண்ணி சொல்லனும்.

66 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

தொடருங்கள் அமைச்சரே, உங்களின் லீலைகள் நல்லா இருக்கு.

முகிலன் said...

தொடருங்க தொடருங்க.. நல்லாருக்கு..

Chitra said...

உங்களுடைய முஸ்கி, டுஸ்கி, டிஸ்கி, கிஸ்கி, விஸ்கி - எல்லாம் நல்லா வந்துருக்கே. தொடரட்டும், உமது பஸ்கி. (பதிவு)

பித்தனின் வாக்கு said...

தொடருங்க தொடருங்க, ரொம்ப நல்லா இருக்கு, முஸ்கி,டுஸ்கி,டிஸ்கி கண்டுபிடிப்பெல்லாம் சூப்பர். விஸ்கி அடிச்ச மாதிரி எழுதறிங்க. ஆமா அத்தனை வருசத்தில ஒரு தபா கூட உண்டியல் மேட்டருல மாட்டுனது இல்லையா? இல்லை அக்கா போட்டுக் கொடுக்கவில்லையா? நன்றி மங்குனி.

kavisiva said...

தமிழ் கூறும் பதிவுலகிற்கு "முஸ்கி","டுஸ்கி" போன்ற ஈடில்லா தமிழ் சொற்களை அள்ளிக் கொடுத்த மங்குனியாருக்கு பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. பதிவுலக ஸ்டாருங்க எல்லாம் கண்டிப்பா கலந்துக்கணும் இல்லேன்னா அன்பாக தட்டப்படுவீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தொட்டதற்கெல்லாம் பாராட்டு விழா எடுப்போர் சங்கம்

ஜீவன்சிவம் said...

நல்லாயிருக்கு

பட்டாபட்டி.. said...

கலக்கு..நல்லாக் கலக்கு...

அப்புறம்.. இனியாவது , உண்டியல விட்டுட்டு...
.
.
.
.
கொஞ்சம் பெரிய லெவல்ல திங்க் பண்ணி,
'நகை..கிகை' எடுக்கப்பாரு..
ஏன்னா.. வாழ்க்கையில , 'Continuos Improvement ' முக்கியம்..

அப்புறம்.. இதை நான் தான் சொன்னேனு .. எல்லோரிடமும் சொல்லிட்டு
திரியாதே..
எனக்கு தற்பெருமை பிடிக்காது.. ஹி..ஹி..

பதிவு சூப்பரய்யா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

:)

சேட்டைக்காரன் said...

அப்ஜெக்சன்! கடைசியிலே போடுறது டிஸ்கி! முதல்லே போட்டா முஸ்கி! நடுவிலே போட்டா நஸ்கி! இலக்கணத்தை மாத்தப்படாது, சொல்லிப்புட்டேன்!

மர்மயோகி said...

டி வி எஸ் 50 க்கு 50 ரூபா சித்திகிட்டே 50 ரூபா வாங்கினிங்களே அப்போ RX 100 ன்னா 100 ரூபா வாங்கி இருப்பீங்களோ மங்குனி? அப்புறம் புன்னகை மன்னன் முத்தக்காட்சி பத்தி ஒண்ணுமே சொல்லலையே..உன்னை கமலும் ரேகாவும் விழுந்த ஆத்துல புடிச்சு தள்ளினா என்ன..?

Muthu said...

மங்கு பொழைச்சே இதுவும் வழக்கம் போல் மொக்கையாய் இருந்தால் மொங்கி இருப்பேன்

Muthu said...

இதுலாம் என்ன டெர்ரர் நான் ஒரு மேட்டர் சொல்றேன் கேளு .
நான் சின்ன வயதில் என் சித்தி பையனுடன் (முஸ்கி: எங்கள் சித்தி குடும்பத்துடன் நீண்ட நாள் பகை முடிந்து முதல் முறையாக எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள் ) ரஜினி படம் பார்த்த எபக்டில் ஒரு கயரை எடுத்து மொட்டை மாடி மேல் வீசி spider man போல் ஏற ட்ரை பண்ணி தொலைய அந்த பாடாவதி கயிறு செங்கலில் மாட்டி கீழே என் சித்தி பையன் தலையில் விழுந்தது.அன்று குடும்பத்துடன் போனவர்கள் தான் இன்று வரை எங்கள் வீடு பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை

ILLUMINATI said...

மக்கா,ரொம்ப டெவலப் ஆயிட்டீரு....

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
தொடருங்கள் அமைச்சரே, உங்களின் லீலைகள் நல்லா இருக்கு.//

ரொம்ப நன்றி சார்,
ஆமா சைவகொத்துப்பரோட்டால பரோட்டா போடுவிங்களா ?

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...
தொடருங்க தொடருங்க.. நல்லாருக்கு..//

ரொம்ப நன்றி முகிலன் சார்

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...
உங்களுடைய முஸ்கி, டுஸ்கி, டிஸ்கி, கிஸ்கி, விஸ்கி - எல்லாம் நல்லா வந்துருக்கே. தொடரட்டும், உமது பஸ்கி. (பதிவு)//

நன்றி மேடம்,"விஸ்கி" இத ஏன் நியாபகபடுதுரிங்க

மங்குனி அமைச்சர் said...

//ஆமா அத்தனை வருசத்தில ஒரு தபா கூட உண்டியல் மேட்டருல மாட்டுனது இல்லையா? இல்லை அக்கா போட்டுக் கொடுக்கவில்லையா? //

ரொம்ப நன்றி சார், இத பத்தி நா அடுத்த டிஸ்கில போடுறேன்

மங்குனி அமைச்சர் said...

//kavisiva said...
தமிழ் கூறும் பதிவுலகிற்கு "முஸ்கி","டுஸ்கி" போன்ற ஈடில்லா தமிழ் சொற்களை அள்ளிக் கொடுத்த மங்குனியாருக்கு பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. பதிவுலக ஸ்டாருங்க எல்லாம் கண்டிப்பா கலந்துக்கணும் இல்லேன்னா அன்பாக தட்டப்படுவீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தொட்டதற்கெல்லாம் பாராட்டு விழா எடுப்போர் சங்கம்//

ஆக என்னா நல்ல மனசு , அப்படியே விழாவுல ஒரு பொற்கிளி குடுங்க (உங்க செலவுல தான் )
இப்படிக்கு
ஓசியில் ஒன்டு குடித்தனம் நடத்துவோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

//ஜீவன்சிவம் said...
நல்லாயிருக்கு//

வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி ஜீவன்சிவம் சார்

Rajalakshmi Pakkirisamy said...

ha ha ha... good :)

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...
கலக்கு..நல்லாக் கலக்கு...

கொஞ்சம் பெரிய லெவல்ல திங்க் பண்ணி,
'நகை..கிகை' எடுக்கப்பாரு..
ஏன்னா.. வாழ்க்கையில , 'Continuos Improvement ' முக்கியம்..//

நீ தான் டா நண்பன் , என்னோட வளர்ச்சிக்கு எவ்ளோ ஐடியா குடுக்குற

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லா இருக்கு.//

ரொம்ப நன்றி ராதாகிருஷ்ணன் சார்

மங்குனி அமைச்சர் said...

//வெள்ளிநிலா ஷர்புதீன் said...
:)//

:-))

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...
அப்ஜெக்சன்! கடைசியிலே போடுறது டிஸ்கி! முதல்லே போட்டா முஸ்கி! நடுவிலே போட்டா நஸ்கி! இலக்கணத்தை மாத்தப்படாது, சொல்லிப்புட்டேன்!//

சனிகிழம வரைக்கும் லீவுன்னு சொல்லிட்டு தக்காளி இங்க என்னா பன்றே, இரு உன் ப்ளாக் -கு வந்து வசுகிர்றேன்

//நடுவிலே போட்டா நஸ்கி! இலக்கணத்தை மாத்தப்படாது, சொல்லிப்புட்டேன்!//

புலவரே உன் இலக்கணப்படி பாத்தா பின்னாடி எழுதுவதற்கு பிஸ்கி என்று போடவேண்டும், சோ நான் தான் ரைட் , புலவரே முஸ்கி , டுச்கி ரெண்டோட டேபிநிசனையும் நன்றாக படியுங்கள்

மங்குனி அமைச்சர் said...

//மர்மயோகி said...
டி வி எஸ் 50 க்கு 50 ரூபா சித்திகிட்டே 50 ரூபா வாங்கினிங்களே அப்போ RX 100 ன்னா 100 ரூபா வாங்கி இருப்பீங்களோ மங்குனி? //

இப்பகூட பல்சர் 150 வந்திருக்கு சார்


//அப்புறம் புன்னகை மன்னன் முத்தக்காட்சி பத்தி ஒண்ணுமே சொல்லலையே..உன்னை கமலும் ரேகாவும் விழுந்த ஆத்துல புடிச்சு தள்ளினா என்ன..?//

அத சொல்லித்தான் தெரியனுமா ?

மங்குனி அமைச்சர் said...

//Muthu said... //

முத்து அன்னாருக்கு ஒரு காபி பார்சல்

மங்குனி அமைச்சர் said...

//ILLUMINATI said...
மக்கா,ரொம்ப டெவலப் ஆயிட்டீரு....//

எல்லாம் உங்க ஆசிவாதம் தான் தலைவரே

மங்குனி அமைச்சர் said...

//Rajalakshmi Pakkirisamy said...
ha ha ha... good :)//

வரவுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க

யூர்கன் க்ருகியர் said...

அதே திருட்டு ;அதே அடி ;
What a pity :)
same blood here...

மங்குனி அமைச்சர் said...

//யூர்கன் க்ருகியர் said...
அதே திருட்டு ;அதே அடி ;
What a pity :)
same blood here...//

வாங்க தல வாங்க , ஆஹா நீங்களும் நம்ம கூட்டாளிதான ?
இப்ப நீங்க கேட்டபுரம் தான் ஞாபகம் வருது , எங்கம்மா காசு ஏதுன்னு கேக்கலையே ?

asiya omar said...

ஆணானப்பட்ட மங்குனியே இப்படின்னா?நான் மட்டும் எப்படி விவரமா இருக்க முடியும்?

Muthu said...

asiya omar said...
ஆணானப்பட்ட மங்குனியே இப்படின்னா?நான் மட்டும் எப்படி விவரமா இருக்க முடியும்?///:என்ன ஆணானப்பட்ட? யோவ் மங்கு இதுக்கெல்லாம் மெர்சல் ஆகி சூசைடு பண்ணிக்காதே

Muthu said...

மங்குனி அமைச்சர் said...

முத்து அன்னாருக்கு ஒரு காபி பார்சல்///


என்ன காபியுடன் கழட்டி விட்டுவிடலாமுன்னு நினைச்சியா? கோட்டர் முதல் மேட்டர் வரைக்கும் சீக்கிரம் ஏற்பாடு பண்ணு இல்ல உன் வீடியோ தாண்டி அடுத்து

பட்டாபட்டி.. said...

வருக.. வருக.. பட்டாபட்டி..
( என்னையா பண்றது.. மங்குனி கூப்பிட மாட்டிங்கிறான் )

பட்டாபட்டி.. said...

மங்குனி ஓசி சரக்க அடிக்க ஓட்டேரி போயிருக்கான் போல..

மாதேவி said...

"அன்றைய எபிசோடு" சிரித்து விட்டேன்.

Muthu said...

மங்கு சீக்கிரம் present sir ன்னு சொல்லு இல்ல,நம்ம இலுமியை விட்டு உன் வாழ்கை வரலாற்றை (அப்படி ஒன்னு இருக்கா !) இங்கிலிபிஷ்யில் எழுத சொல்லி படிக்கவைத்து விடுவேன் (கருமம் புரிஞ்சிட்டாலும்)

Muthu said...

பட்டாபட்டி.. said...
வருக.. வருக.. பட்டாபட்டி..
( என்னையா பண்றது.. மங்குனி கூப்பிட மாட்டிங்கிறான் )

வெட்றதுக்கு ஆடு அதுவே கூப்பிடுமா என்னா, நாமளா பார்த்துதான் வெட்டி பிரியாணி போடனும்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மங்குனி அமைச்சர் உங்கள் பெயரே அசத்தலா இருக்கு.

பதிவைப் படித்ததும் வயித்து வலியாகிவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தபோது மனைவி சொன்னா "நல்ல டாக்டரா போய் பாருங்க"ண்ணு.

அவர் மருந்து தர மறுத்துவி்ட்டார்.

சிரிப்புத்தான் காரணம் என்று சொல்லி திருப்பிவிட்டார்.

வீடு திரும்பிய பின்னர்தான் வயிற்று வலி நின்றது.

சிரிப்பும் நின்றது.

மனைவி சமைத்த சாப்பாட்டைப் பார்த்ததும்.

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...
ஆணானப்பட்ட மங்குனியே இப்படின்னா?நான் மட்டும் எப்படி விவரமா இருக்க முடியும்?//

என்னா பன்றது மேடம் இப்படியெல்லாம் அரசியல் பண்ணாதான் பொழைக்க முடியுது

மங்குனி அமைச்சர் said...

//மாதேவி said...
"அன்றைய எபிசோடு" சிரித்து விட்டேன்.//

வருகைக்கும் , காமேன்ட்சுக்கும் நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

//Muthu said...
மங்கு சீக்கிரம் present sir ன்னு சொல்லு இல்ல,நம்ம இலுமியை விட்டு உன் வாழ்கை வரலாற்றை (அப்படி ஒன்னு இருக்கா !) இங்கிலிபிஷ்யில் எழுத சொல்லி படிக்கவைத்து விடுவேன் (கருமம் புரிஞ்சிட்டாலும்)//

உனக்கு தான் எவ்ளோ நல்லா மனசு

மங்குனி அமைச்சர் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...//
சிரிப்பும் நின்றது.

மனைவி சமைத்த சாப்பாட்டைப் பார்த்ததும்.//

வாங்க டாக்டர் , வருகைக்கும் , காமன்ட்சுக்கும் ரொம்ப நன்றி.
உங்க வீட்லயும் அந்த கொடுமதானா ?
அது சரி பேமிலி பிசிசியன்னு போட்ருக்கிகளே, பேச்சுலர்ஸ், பேச்சுலரீஸ்(பேச்சுலர்ஸ்சோடா பெண் பால் ஹி ,ஹி,ஹி) வந்தா என்னாபன்னுவிங்க?

ஸாதிகா said...

ஐயா மங்குனி அமைச்சரே.உங்கள் புதிய தமிழ்சொற்கள் கண்டுபிடிப்புக்கு பொற்கிளியே பரிசளிக்க வருவார்கள்.முஸ்கி,டுஸ்கி இவற்றுக்கெல்லாம் விளக்கம் சொன்னதுபோல் கிஸ்கி க்கும் விளக்கம் சொல்லீருக்கலாம் இல்லையா?அம்மாகிட்டே அடிவாங்கினது,மற்றொரு அடியை படிப்பவர்களின் கற்பனைக்கே விட்டது..ஒரே சிரிப்புத்தான்.இதில் இருந்து ஒன்றை தெரிந்துகொண்டேன்சீரியசான சமயத்தில் உங்கள் இடுகையைபடித்தால் சிரிப்பாகிவிடும்.தேன்ங்ஸ்ங்க அமைச்சரே!

மங்குனி அமைச்சர் said...

//ஸாதிகா said...
ஐயா மங்குனி அமைச்சரே.உங்கள் புதிய தமிழ்சொற்கள் கண்டுபிடிப்புக்கு பொற்கிளியே பரிசளிக்க வருவார்கள்.முஸ்கி,டுஸ்கி இவற்றுக்கெல்லாம் விளக்கம் சொன்னதுபோல் கிஸ்கி க்கும் விளக்கம் சொல்லீருக்கலாம் இல்லையா?அம்மாகிட்டே அடிவாங்கினது,மற்றொரு அடியை படிப்பவர்களின் கற்பனைக்கே விட்டது..ஒரே சிரிப்புத்தான்.இதில் இருந்து ஒன்றை தெரிந்துகொண்டேன்சீரியசான சமயத்தில் உங்கள் இடுகையைபடித்தால் சிரிப்பாகிவிடும்.தேன்ங்ஸ்ங்க அமைச்சரே!//வருகைக்கும் , கமன்ட்சுக்கும் ரொம்ப நன்றி மேடம்,
கிஸ்கி : டிஸ்கிக்கும் கடைசில வர்றதால கிஸ்கி, அதாவது டிஸ்"கி" => "கி"ஸ்கி

Muthu said...

ஸாதிகா said...
ஐயா மங்குனி அமைச்சரே.உங்கள் புதிய தமிழ்சொற்கள் கண்டுபிடிப்புக்கு பரிசளிக்க வருவார்கள்///


என்ன மங்கு வூட்டுகார அம்மாவுக்கு தெரியாம பொற்கிளின்னு ஒரு பிகரே மடக்க பார்கிறியா இரு போட்டு கொடுக்கிறேன்

Muthu said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...
This comment has been removed by a blog administrator.
மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...

யோவ் மங்கு 114 ல 10ரூ போனா மீதி 104 ரூபாய என்னயா பன்னின இங்கே கமெண்ட் குடுத்த யாருமே கேக்காட்டி சொல்லமாட்டியா ? பட்டு நீயாவது கேளுயா!!!!

ILLUMINATI said...

யோவ் மங்கு,புது போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து படிச்சிட்டு கமெண்ட் போட்டுட்டு போ.அப்புறம்,இத படிச்சிட்டு delete பண்ணிடுயா.send me your email address ok?thanks.
:)

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

யோவ் மங்கு 114 ல 10ரூ போனா மீதி 104 ரூபாய என்னயா பன்னின இங்கே கமெண்ட் குடுத்த யாருமே கேக்காட்டி சொல்லமாட்டியா ? பட்டு நீயாவது கேளுயா!!!!//

அடப்பாவி நீ உயிரோடதான் இருக்கியா? நேத்து தான் உன் பாடி கரை ஒதுங்குனதா நூசு வந்துச்சு ?

மங்குனி அமைச்சர் said...

//ILLUMINATI said...

யோவ் மங்கு,புது போஸ்ட் போட்டு இருக்கேன்.வந்து படிச்சிட்டு கமெண்ட் போட்டுட்டு போ.அப்புறம்,இத படிச்சிட்டு delete பண்ணிடுயா.send me your email address ok?thanks.
:)//

பொது மக்களே எல்லாரும் நல்லா கேட்டுகங்க படிச்சிட்டு delete பன்னிடனுமாம், பட்டா, ஜெய்லானி, வெளியூரு, முத்து என்ன ஒரு வாய்ப்பு , வாங்க போய் குமுறிட்டு வருவோம்

ILLUMINATI said...

யோவ்,பொது மக்களுக்கு பாதிப்பு வந்துடக்கூடாதுன்னு ஒரு அக்கறையில சொன்னேன்யா.எல்லோரும் உம்ம மாதிரியே மன்குனியா இருப்பாங்கன்னு எதிர் பார்க்க முடியுமா?

ILLUMINATI said...

யோவ்,பொது மக்களுக்கு பாதிப்பு வந்துடக்கூடாதுன்னு ஒரு அக்கறையில சொன்னேன்யா.எல்லோரும் உம்ம மாதிரியே மன்குனியா இருப்பாங்கன்னு எதிர் பார்க்க முடியுமா? :)

மங்குனி அமைச்சர் said...

//ILLUMINATI said...

யோவ்,பொது மக்களுக்கு பாதிப்பு வந்துடக்கூடாதுன்னு ஒரு அக்கறையில சொன்னேன்யா.எல்லோரும் உம்ம மாதிரியே மன்குனியா இருப்பாங்கன்னு எதிர் பார்க்க முடியுமா? :)//

நீ இப்ப லைன் தான் இருக்கியா ? my email id "yasinshaji@gmail.com"

ஆடுமாடு said...

மங்குனி, நாமெல்லாம் ஒரே டேஸ்ட் பார்ட்டிங்கன்னு சொல்லுங்க...

நாங்களும் அனுபவிச்சிருக்கோம்ல!

நல்லாருக்கு. வாழ்த்துகள்.

Jaleela said...

அமைச்சரே டிஸ்கிக்கு முஸ்கி பேஷ் பேஷ் புது கண்டுபிடிப்பு..

கலக்கலான பதிவு

மங்குனி அமைச்சர் said...

//ஆடுமாடு said...

மங்குனி, நாமெல்லாம் ஒரே டேஸ்ட் பார்ட்டிங்கன்னு சொல்லுங்க...

நாங்களும் அனுபவிச்சிருக்கோம்ல!

நல்லாருக்கு. வாழ்த்துகள்.//

வாங்க வாங்க தல , ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே டிஸ்கிக்கு முஸ்கி பேஷ் பேஷ் புது கண்டுபிடிப்பு..

கலக்கலான பதிவு//

என்னத்த கண்டுபுடுச்சு என்னா செய்ய மேடம், ஒரு பயலும் ஒரு அவார்டு இம்ம்ம்கும் ஒரு குச்சி மிட்டாய் கூட வாங்கித்தர மாட்றாங்க

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... மதுரைக்காரராய்யா நீரு. சூப்பரு. போட்டுத் தாக்குங்கப்பு. சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது.

ஜெய்லானி said...

//அடப்பாவி நீ உயிரோடதான் இருக்கியா? நேத்து தான் உன் பாடி கரை ஒதுங்குனதா நூசு வந்துச்சு ?//

அது சரி !!! அவார்டு கேக்குதா அவார்டு இருய்யா.. ஆவியா வந்து நடுராத்திரியில நடுமண்டையில சும்மா நச்..நச்..நச்சுன்னு தரேன்.

ஜெய்லானி said...

//என்ன காபியுடன் கழட்டி விட்டுவிடலாமுன்னு நினைச்சியா? கோட்டர் முதல் மேட்டர் வரைக்கும் சீக்கிரம் ஏற்பாடு பண்ணு இல்ல உன் வீடியோ தாண்டி அடுத்து//

யோவ் முத்து குவாட்டருக்கு மயங்கிடாதய்யா!!!

ஜெய்லானி said...

//கொஞ்சம் பெரிய லெவல்ல திங்க் பண்ணி,
'நகை..கிகை' எடுக்கப்பாரு..
ஏன்னா.. வாழ்க்கையில , 'Continuos Improvement ' முக்கியம்..//

நீ தான் டா நண்பன் , என்னோட வளர்ச்சிக்கு எவ்ளோ ஐடியா குடுக்குற//

அடப்பாவி புழல் ல உமக்குதானயா புதுசா கட்டியிருக்கான்.

Cool Boy said...

ur thinging is very good..
keep it
:P