எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, August 5, 2010

யாரு ஏமாளி ?

டீவில வர்ற விளம்பரங்கள பாத்தா நமக்கு தலை சுத்தி டென்சனாகி போகுதுங்க .............. அதுல ஒன்னு காம்ப்ளான் விளம்பரம் ......

"காம்ப்ளான் குடிக்காத குழந்தைக வளர்ராங்க 3 செட்டிமீட்டர், காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக வளர்ராங்க 6 செட்டிமீட்டர் , காம்ப்ளான் குடிக்காத குழந்தைகளவிட காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக இரட்டிப்பு வளர்ச்சி அடையுறாங்க .."

அப்படின்னா 18 வயசுல காம்ப்ளான் குடிக்காத குழந்தைக 6 அடி இருந்தா , காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக 12 அடி இருக்குமா ???

-----@@@@@-----

இன்னொன்னு டிவி கிளாரிட்டி பத்தி ,

"ஒரு டீவில நிகழ்ச்சிகள் மங்களா இருக்கும் , அதே விளம்பரம் குடுக்கும் கம்பனி டீவில தெளிவா கிளாரிட்டியா தெரியிற மாதிரி காட்டிட்டு , பாருங்கள் எங்கள் டிவியில் எவ்வளவு கிளாரிட்டியா இருக்குன்னு சொல்லுவானுக"

அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???

-----@@@@@-----

நான் ரொம்ப குழம்பி போன விளம்பரம் இதுதானுங்க , முன்னாடி அடிக்கொரு முறை வரும் இப்ப காணோம் .

"முட்டை சாப்பிடுங்க , எல்லோரும் முட்டை சாப்பிடுங்கோன்னு ஒரு விளம்பரம் வருமுங்க , அதுல ஏதாவது கம்பனி பேர சொல்லி அந்த கம்பனி முட்டைய சாப்பிடுங்கன்னு சொன்னாலும் பரவாஇல்லை சும்மா மொட்டையா முட்டை சாப்பிடுங்கன்னு வரும் ."

யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.

-----@@@@@-----

"அப்புறம் இப்ப எல்லா கடைகளிலும் ஆடிக்கு 50 பிரசன்ட் தள்ளுபடி தர்ரானுக , . குடுக்குற 50 பிரசன்ட் தள்ளுபடி போக மீதமுள்ள 50 பிரசன்ட் ல மிக குறைந்த பட்சம் 10 பிரசன்ட் லாபமாவது இருக்கும் . சும்மா லாபம் இல்லாமல்தர அவனுக யாரும் நமக்கு சொந்த பந்தம் கிடையாது. "

அப்படின்னா ?
200 ரூபா சேலைய 50 பிரசன்ட் தள்ளுபடி போக 100 ரூபாயிக்கு தர்ரானுக , அதுல 10 பிரசன்ட் 10 லாபம் பத்து ரூபா , ஓகே . அதே சேலை ஆடித்தள்ளுபடி இல்லாத போது 200 விக்கிராணுக. அப்ப 200 ரூபாயிக்கு விற்கும் சேலையில் லாபம் மொத்தம் 110 ரூபாயா ?

-----@@@@@-----

"அப்புறம் இந்த CSE , ABC , IJK ன்னு ஒரே கம்ப்யுடர் கிளாஸ் எடுக்கும் கம்பனிகளின் விளம்பரம் , எங்க கம்பனில கம்பியுடர் கோர்ஸ் முடிச்ச உடனே லட்சகனக்கான் ரூபாய் சம்பளத்துல வெளிநாடுகளில் விலை கிடைக்கும் அப்படின்னு விளம்பரம் பண்ணுவானுக ."

அட பன்னாட , பரதேசிகளா இப்படி விளம்பரம் குடுத்து சம்பாரிக்கிரதுக்கு நீங்களே வெளிநாடுகள்ள போய் வேலைக்கு சேர வேண்டியதுதானே ? சொல்லிகுடுக்குற உங்களுக்கே வேலை kidaikkaama தானே இந்த வேலை பாக்குரிக்க ?

-----@@@@@-----

டிஸ்கி: பாருங்க இதெல்லாம் ஏண்டான்னு கேட்டா என்ன லூசுங்குராணுக.(பட்டாப்பட்டி : கேட்கலைனாலும் நீ லூசு தான மங்கு )

78 comments:

Unknown said...

எனக்கு டிவி ல வர்ற ப்ரோகிராம விட விளம்பரங்கள்தான் புடிக்குது அமைச்சரே..
அப்பத்தான் இப்பிடி நம்மால சிந்திக்க முடியுது பாருங்க ,,

எல் கே said...

///அப்ப 200 ரூபாயிக்கு விற்கும் சேலையில் லாபம் மொத்தம் 110 ரூபாயா ?//

sariyaana kelvi amaichare

எல் கே said...

athai vidunga, unga thangsku aadi thallupadila saree eduthu koduthachha

Anonymous said...

//அட பன்னாட , பரதேசிகளா இப்படி விளம்பரம் குடுத்து சம்பாரிக்கிரதுக்கு நீங்களே வெளிநாடுகள்ள போய் வேலைக்கு சேர வேண்டியதுதானே ? சொல்லிகுடுக்குற உங்களுக்கே வேலை இடிக்காம தானே இந்த வேலை பாக்குரிக்க ?//

சாட்டையடி கேள்வி அமைச்சரே!

//அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???//

ஹி ஹி ஹி...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விளம்பரங்கள பத்தி சொல்லிட்டு நம்ம சன் பிக்சர்ஸ் பத்தி சொல்லாம விட்டுடிங்கலே......

Jey said...

sari meeting mudissittu vanthu comments poodureen., ippa vote mattum pootrukkeen.

enna meeting nu keekkaathee, rendu paratheesingkakuudathaan, athu yaarunnum apuram vanthu solreen:)

பெசொவி said...

//200 ரூபா சேலைய 50 பிரசன்ட் தள்ளுபடி போக 100 ரூபாயிக்கு தர்ரானுக , அதுல 10 பிரசன்ட் 10 லாபம் பத்து ரூபா , ஓகே . அதே சேலை ஆடித்தள்ளுபடி இல்லாத போது 200 விக்கிராணுக. அப்ப 200 ரூபாயிக்கு விற்கும் சேலையில் லாபம் மொத்தம் 110 ரூபாயா ?//

கணித மேதை ராமானுஜத்துக்கு அப்புறம், நீர் தானோ அமைச்சரே?

//சும்மா மொட்டையா முட்டை சாப்பிடுங்கன்னு வரும் ."

யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.//

அது இந்திய அரசாங்கத்தின் (கோழி, முட்டை வளர்ச்சி கார்ப்பரஷன்) விளம்பரம்பா!

Anonymous said...

விளம்பரத்தை பத்தி ஆராய்ச்சி பண்ணி கலக்கிடிங்க மங்குனி ..

Mohamed Faaique said...

வேண்டாம் அமைச்சரே வேண்டாம்.... உங்களைபோல மொக்கை சிங்கம் எல்லாம் இந்த மாதிரி முளையை பாவித்து பதிவு எழுத ஆரம்பித்துவிட்டால். மொக்கை ரசிகர்கள் எங்கள் நிலை என்னாவது...

மர்மயோகி said...
This comment has been removed by the author.
Vidhya Chandrasekaran said...

கடைசி மேட்டர்:)))

மர்மயோகி said...

நல்லாத்தான் யோசிக்கிர்றீங்க மங்கு..
அப்புறம் 50 பைசா சாக்லேட்டுக்கும், 5 ரூபாய் பேஸ்ட்டுக்கும் , 100 ரூபாய் பாடி ஸ்ப்ரய்க்கும் மயங்கி ஆண்கள் பின்னாடி அழகிகள் போறதாக காட்டுரானுங்களே..அதைப் பத்தி என்ன சொல்றீங்க?

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சிரிச்சு முடியல.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அப்படின்னா 18 வயசுல காம்ப்ளான் குடிக்காத குழந்தைக 6 அடி இருந்தா , காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக 12 அடி இருக்குமா ???]]

அதானே?...

நாங்கெல்லாம் வளத்திய எப்படி குறைப்பதுன்னு திண்டாடுறோம்...

Karthick Chidambaram said...

அமைச்சரே உங்களுக்கு மத்திய அரசுல தகவல் ஒலிபரப்பு துறை தர சொல்லி போரடலாம்னு இருக்கேன். என்ன சொல்லறீங்க ??

செல்வா said...

அதவிட அந்த காம்ப்ளான் விளம்பரத்துல வர்ற பையன்
முதல் தடவ விளம்பரம் போடும்போதே 6 செ.மீ வளர்ந்துடுவான்.
அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்த மறுபடியும் உயரம் கம்மியா இருக்கான்னு காட்டுவாங்க .. இது கூட குழப்பமாத்தான் இருக்கு ...!!

ஜில்தண்ணி said...

ஆமாம் மங்கு நாமெல்லாம் ஆராய்ச்சி பண்ண கிளம்புனா ஒருத்தன் நிக்க முடியாது போல

இன்னும் நிறைய விளம்பரம் செம காமெடியான விஷயங்கள் இருக்குங்க :)

கலக்கல்

ஜெய்லானி said...

நா கணக்குல ரொம்ப வீக் இரு கால்குலேட்டர் கொண்டு வரேன் .. என்னான்னவோ சொல்றே .ஒன்னியும் பிரிய மாட்டேங்குது

வால்பையன் said...

முட்டை விளம்பரம் அரசாங்கமே கொடுக்கும்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மக்கு மங்குனி அமைச்சரே.. இவ்வளவு நடந்தும் இன்னுமா உமக்கு புரியவில்லை யார் ஏமாளி என்று...

Katz said...

அதுவும் முறுக்கு கம்பி விளம்பரம் கொடுமையா இருக்கு.

கடற் கரைல சின்ன பசங்க முறுக்கு கம்பி யூஸ் பண்ணி வீடு கட்டறாங்கலாமா? அவனுங்கள எல்லாம் அந்த கம்பி வச்சே முறுக்கி கொல்லனும்.

Katz said...

அருமை அமைச்சரே!

அதுவும் முறுக்கு கம்பி விளம்பரம் கொடுமையா இருக்கு.

கடற் கரைல சின்ன பசங்க முறுக்கு கம்பி யூஸ் பண்ணி வீடு கட்டறாங்கலாமா? அவனுங்கள எல்லாம் அந்த கம்பி வச்சே முறுக்கி கொல்லனும்.

S Maharajan said...

அமைச்சரே..
My best advice neengal vilambaram parpathai thavirkavum

p said...

////அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???////

அமைச்சரே.. உங்களுக்கு இந்நேரம் நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்... :-) :-P

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

add film figure ra site adikkirathukku enna pechchu?

GEETHA ACHAL said...

நல்லா தான் டிவி பாக்குறிங்க போல..ரொம்ப டைம் கிடைக்குதோ மங்குனி....//unga thangsku aadi thallupadila saree eduthu koduthachha//நீங்க LK????..

vinu said...

இன்னொன்னு டிவி கிளாரிட்டி பத்தி ,

"ஒரு டீவில நிகழ்ச்சிகள் மங்களா இருக்கும் , அதே விளம்பரம் குடுக்கும் கம்பனி டீவில தெளிவா கிளாரிட்டியா தெரியிற மாதிரி காட்டிட்டு , பாருங்கள் எங்கள் டிவியில் எவ்வளவு கிளாரிட்டியா இருக்குன்னு சொல்லுவானுக"

அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???

intha matteru romba naalla enn manusulla uruthiitea irrunthucchu innaikku neengalum solliteenga

appuram antha muttai vilambaram eatho oru government department kodukkuthupaaaaaa

ஜெயந்தி said...

டிஸ்கவுண்ட் எப்படின்னா 200 ரூபா துணியில 400 ரூபான்னு ஸ்டிக்கர் ஒட்டிடுவாங்க. அதே 200 ரூபா துணிய அதே காசுகொடுத்துத்தான் வாங்கனும். 100 ரூபா நஷ்டத்துக்குகொடுக்க அவனுங்க என்ன கேணயா?

விளம்பர ஆராய்ச்சி சூப்பர்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அப்படின்னா 18 வயசுல காம்ப்ளான் குடிக்காத குழந்தைக 6 அடி இருந்தா , காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக 12 அடி இருக்குமா ???//

ஹா ஹா ஹா...
அதானே... என்னமா டவுட்டு வருதுங்க உங்களுக்கு??

//யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.//

அதுக்கு ஒரு குடும்ப பாட்டு வருமே.... அத விட்டுட்டீங்களே...
"சாப்பிடுவாய் என்னுயிரே கோழிமுட்டை.. ஆஹா..
சாப்பிடுவாய் என்னுயிரே கோழி முட்டையை....!! "

//டிஸ்கி: பாருங்க இதெல்லாம் ஏண்டான்னு கேட்டா என்ன லூசுங்குராணுக//

மங்குனி அமைச்சருக்கு, இவ்ளோ அறிவான்னு அவங்களுக்கெல்லாம் பொறாமைங்க...
நீங்க ஒன்னும் கவலை படாதீங்க..!!

Gayathri said...

ஆமாம் இந்த விளம்பரங்களின் தொல்லை தாங்க வில்லை...எதை தொட்டாலும் விளம்பரம்...இதுல எல்லாத்துக்கும் முனு நாலு பொண்ணுகள ஆடவர விற்றுவாங்க...ஒரு பெரிய கடையில ஆயிரத்துக்கும் மேலா பில் இருந்த சேமிக்கும் பெட்டி இலவசமாம்..என்னத்த சேமிக்க இவங்க கடையிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போனா ?? கலி காலம் இல்லை விளம்பாரக்காலம்..அருமையான பதிவு

அமுதா கிருஷ்ணா said...

காம்ப்ளான் குட் கேள்வி...

சீமான்கனி said...

காம்ப்ளான் சிந்திக்க வைக்கிறது அமைச்சரே...
பாவம் விளம்பர படம் எடுக்குறவங்க அமைச்சர் கண்ணுல பட்டுடாங்களே...

நசரேயன் said...

//அட பன்னாட , பரதேசிகளா இப்படி விளம்பரம் குடுத்து சம்பாரிக்கிரதுக்கு நீங்களே வெளிநாடுகள்ள போய் வேலைக்கு சேர வேண்டியதுதானே ? சொல்லிகுடுக்குற உங்களுக்கே வேலை kidaikkaama தானே இந்த வேலை
பாக்குரிக்க ?//

நியாய மான கேள்வி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

(பட்டாப்பட்டி : கேட்கலைனாலும் நீ லூசு தான மங்கு )
//

சே...சே... நா அப்படி சொல்லுவனா மங்கு?...

ஹி..ஹி ...ஹோ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் டீ.வீ பார்ப்பதில்லை..

ஒன்ணு மட்டும் உண்மையா.. டீவீ கண்டுபிடிச்சவன்.ரிமோட்டையும் கண்டுபிடிச்சான் பாரு.. அவனுக்கு ஒரி சல்யூட்..

அப்புறம்..மச்சி.. இந்த ரிமோட் ல ம்யூட் பட்டன் இருக்கும்..அதை அமுக்கிட்டு பாரு..அப்படித்தான் இருக்கும்...

Shanthi Krishnakumar said...

Aaha nalla post and reality

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

எனக்கு டிவி ல வர்ற ப்ரோகிராம விட விளம்பரங்கள்தான் புடிக்குது அமைச்சரே..
அப்பத்தான் இப்பிடி நம்மால சிந்திக்க முடியுது பாருங்க ,, ////

அது உண்மைதான் சார் , டிவி புரோகிராமை விட விளம்பரங்கள் அருமையா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

LK said...

///அப்ப 200 ரூபாயிக்கு விற்கும் சேலையில் லாபம் மொத்தம் 110 ரூபாயா ?//

sariyaana kelvi amaichare////

thanks LK Sir

மங்குனி அமைச்சர் said...

LK said...

athai vidunga, unga thangsku aadi thallupadila saree eduthu koduthachha////

ஆகா , ஏன் இப்படி மாட்டிவிடுரிங்க ?

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//அட பன்னாட , பரதேசிகளா இப்படி விளம்பரம் குடுத்து சம்பாரிக்கிரதுக்கு நீங்களே வெளிநாடுகள்ள போய் வேலைக்கு சேர வேண்டியதுதானே ? சொல்லிகுடுக்குற உங்களுக்கே வேலை இடிக்காம தானே இந்த வேலை பாக்குரிக்க ?//

சாட்டையடி கேள்வி அமைச்சரே!

//அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???//

ஹி ஹி ஹி...////

நன்றி பாலாஜி சரவணன் சார்

மங்குனி அமைச்சர் said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விளம்பரங்கள பத்தி சொல்லிட்டு நம்ம சன் பிக்சர்ஸ் பத்தி சொல்லாம விட்டுடிங்கலே......///

அட ஆமா சார் , விட்டுப்போச்சு விடுங்க அடுத்த வாட்டி பாத்துக்குவோம்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//200 ரூபா சேலைய 50 பிரசன்ட் தள்ளுபடி போக 100 ரூபாயிக்கு தர்ரானுக , அதுல 10 பிரசன்ட் 10 லாபம் பத்து ரூபா , ஓகே . அதே சேலை ஆடித்தள்ளுபடி இல்லாத போது 200 விக்கிராணுக. அப்ப 200 ரூபாயிக்கு விற்கும் சேலையில் லாபம் மொத்தம் 110 ரூபாயா ?//

கணித மேதை ராமானுஜத்துக்கு அப்புறம், நீர் தானோ அமைச்சரே?////

ஹி,ஹி,ஹி

/// //சும்மா மொட்டையா முட்டை சாப்பிடுங்கன்னு வரும் ."

யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.//

அது இந்திய அரசாங்கத்தின் (கோழி, முட்டை வளர்ச்சி கார்ப்பரஷன்) விளம்பரம்பா!/////

சரி , அப்ப கத்திரிக்கா சாப்பிடுன்னும் குடுக்கலாமுல்ல

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

விளம்பரத்தை பத்தி ஆராய்ச்சி பண்ணி கலக்கிடிங்க மங்குனி ..////

நன்றி சந்தியா மேடம்

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...

வேண்டாம் அமைச்சரே வேண்டாம்.... உங்களைபோல மொக்கை சிங்கம் எல்லாம் இந்த மாதிரி முளையை பாவித்து பதிவு எழுத ஆரம்பித்துவிட்டால். மொக்கை ரசிகர்கள் எங்கள் நிலை என்னாவது...////

அப்படியா சொல்றிங்க Mohamed Faaique உங்க பேர தமிழ்ல அடிக்க ட்ரை பண்ணினே , முடியல

மங்குனி அமைச்சர் said...

வித்யா said...

கடைசி மேட்டர்:)))////

அந்த லூசு மேட்டர் தானே , ரொம்ப சரியா சொன்னிக்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

நல்லாத்தான் யோசிக்கிர்றீங்க மங்கு..
அப்புறம் 50 பைசா சாக்லேட்டுக்கும், 5 ரூபாய் பேஸ்ட்டுக்கும் , 100 ரூபாய் பாடி ஸ்ப்ரய்க்கும் மயங்கி ஆண்கள் பின்னாடி அழகிகள் போறதாக காட்டுரானுங்களே..அதைப் பத்தி என்ன சொல்றீங்க?/////

சபாஸ் சரியான கேள்வி

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சிரிச்சு முடியல.////

என்னைய லூசுன்னு சொன்னா உங்களுக்கு சிரிப்பா இருக்கா , இருங்க ,எங்களுக்கு ஒரு காலம் வரும்

Kumar said...

//நான் ரொம்ப குழம்பி போன விளம்பரம் இதுதானுங்க , முன்னாடி அடிக்கொரு முறை வரும் இப்ப காணோம் .

"முட்டை சாப்பிடுங்க , எல்லோரும் முட்டை சாப்பிடுங்கோன்னு ஒரு விளம்பரம் வருமுங்க , அதுல ஏதாவது கம்பனி பேர சொல்லி அந்த கம்பனி முட்டைய சாப்பிடுங்கன்னு சொன்னாலும் பரவாஇல்லை சும்மா மொட்டையா முட்டை சாப்பிடுங்கன்னு வரும் ."

யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.//

National Egg Coordination Committee (NECC) is giving this advt.
Namakkal and Palladam EGG prices are determined by this commitee

மங்குனி அமைச்சர் said...

புன்னகை தேசம். said...

அப்படின்னா 18 வயசுல காம்ப்ளான் குடிக்காத குழந்தைக 6 அடி இருந்தா , காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக 12 அடி இருக்குமா ???]]

அதானே?...

நாங்கெல்லாம் வளத்திய எப்படி குறைப்பதுன்னு திண்டாடுறோம்...///

பால்ல காம்ப்ளான போட்டு சாப்பிட்டா இரைட்டை வளர்ச்சி, அப்படியே ரிவர்சா காப்லான்ல தண்ணி ஊத்து சாப்பிட்டு பாருங்க ஒருவேள ஹைட் குறைஞ்சாலும்குறையும்

மங்குனி அமைச்சர் said...

Karthick Chidambaram said...

அமைச்சரே உங்களுக்கு மத்திய அரசுல தகவல் ஒலிபரப்பு துறை தர சொல்லி போரடலாம்னு இருக்கேன். என்ன சொல்லறீங்க ??///

ஆவன செய்யுங்க சார் ,

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

அதவிட அந்த காம்ப்ளான் விளம்பரத்துல வர்ற பையன்
முதல் தடவ விளம்பரம் போடும்போதே 6 செ.மீ வளர்ந்துடுவான்.
அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்த மறுபடியும் உயரம் கம்மியா இருக்கான்னு காட்டுவாங்க .. இது கூட குழப்பமாத்தான் இருக்கு ...!!////

இது பாயிண்ட்டு , நீங்க சொல்றபடி பாத்தா இத்தின நாளைல அவன் 30 அடி வளந்திருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆமாம் மங்கு நாமெல்லாம் ஆராய்ச்சி பண்ண கிளம்புனா ஒருத்தன் நிக்க முடியாது போல

இன்னும் நிறைய விளம்பரம் செம காமெடியான விஷயங்கள் இருக்குங்க :)

கலக்கல்////

ஜில்தண்ணி நீங்களும் அடிச்சு ஆடுங்க இனி ஒரு பய விளம்பரம் போடக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

நா கணக்குல ரொம்ப வீக் இரு கால்குலேட்டர் கொண்டு வரேன் .. என்னான்னவோ சொல்றே .ஒன்னியும் பிரிய மாட்டேங்குது////

கால்குலேட்டர் அப்படின்னா என்னா ஜெய்லானி ?

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

முட்டை விளம்பரம் அரசாங்கமே கொடுக்கும்!///

வாங்க தல . ஓகே தல

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

மக்கு மங்குனி அமைச்சரே.. இவ்வளவு நடந்தும் இன்னுமா உமக்கு புரியவில்லை யார் ஏமாளி என்று...///

ஹி,ஹி,ஹி நீங்க என்னை சொல்லலில

மங்குனி அமைச்சர் said...

வழிப்போக்கன் said...

அருமை அமைச்சரே!

அதுவும் முறுக்கு கம்பி விளம்பரம் கொடுமையா இருக்கு.

கடற் கரைல சின்ன பசங்க முறுக்கு கம்பி யூஸ் பண்ணி வீடு கட்டறாங்கலாமா? அவனுங்கள எல்லாம் அந்த கம்பி வச்சே முறுக்கி கொல்லனும்.///

ஏன் சார் , நம்ம நமிதா வர்ற விளம்பரத்த பாத்திகளா ?

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

அமைச்சரே..
My best advice neengal vilambaram parpathai thavirkavum///

ரொம்ப நன்றி மகாராஜன் சார் , இனி அத்தான் செய்யனும்

மங்குனி அமைச்சர் said...

sethupathy said...

////அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???////

அமைச்சரே.. உங்களுக்கு இந்நேரம் நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்... :-) :-P///

வாங்க சேதுபதி சார் , இன்னும் தரமாட்டேகுறாங்க , நீங்க கொஞ்சம் ரெகமன்ட் பண்ணுங்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

add film figure ra site adikkirathukku enna pechchu?///

ஹி,ஹி,ஹி நீயும் அப்படித்தானா

மங்குனி அமைச்சர் said...

GEETHA ACHAL said...

நல்லா தான் டிவி பாக்குறிங்க போல..ரொம்ப டைம் கிடைக்குதோ மங்குனி....//unga thangsku aadi thallupadila saree eduthu koduthachha//நீங்க LK????..///

அப்படி கேளுங்க மேடம் , ஹலோ LK சார் இதுக்கு பதில் சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

vinu said...

இன்னொன்னு டிவி கிளாரிட்டி பத்தி ,

"ஒரு டீவில நிகழ்ச்சிகள் மங்களா இருக்கும் , அதே விளம்பரம் குடுக்கும் கம்பனி டீவில தெளிவா கிளாரிட்டியா தெரியிற மாதிரி காட்டிட்டு , பாருங்கள் எங்கள் டிவியில் எவ்வளவு கிளாரிட்டியா இருக்குன்னு சொல்லுவானுக"

அட மட மாக்கானுகளா எங்கவீட்டுல இருக்க டிவியோட கிலாரிடில தான் மொத்த விளம்பரமும் தெரியும் ???

intha matteru romba naalla enn manusulla uruthiitea irrunthucchu innaikku neengalum solliteenga

appuram antha muttai vilambaram eatho oru government department kodukkuthupaaaaaa///

உங்களுக்கும் இது தோணிச்சா , அப்ப நீங்களும் நம்ம ஆளு தானா ?

மங்குனி அமைச்சர் said...

ஜெயந்தி said...

டிஸ்கவுண்ட் எப்படின்னா 200 ரூபா துணியில 400 ரூபான்னு ஸ்டிக்கர் ஒட்டிடுவாங்க. அதே 200 ரூபா துணிய அதே காசுகொடுத்துத்தான் வாங்கனும். 100 ரூபா நஷ்டத்துக்குகொடுக்க அவனுங்க என்ன கேணயா?

விளம்பர ஆராய்ச்சி சூப்பர்.///

வாங்க ஜெயந்தி மேடம் , நன்றி

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

//அப்படின்னா 18 வயசுல காம்ப்ளான் குடிக்காத குழந்தைக 6 அடி இருந்தா , காம்ப்ளான் குடிக்கிற குழந்தைக 12 அடி இருக்குமா ???//

ஹா ஹா ஹா...
அதானே... என்னமா டவுட்டு வருதுங்க உங்களுக்கு?? ////

நன்றி ஆனந்தி

//யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.//

அதுக்கு ஒரு குடும்ப பாட்டு வருமே.... அத விட்டுட்டீங்களே...
"சாப்பிடுவாய் என்னுயிரே கோழிமுட்டை.. ஆஹா..
சாப்பிடுவாய் என்னுயிரே கோழி முட்டையை....!! "///

அட பாட்டு எல்லாம் நியாபகம் வச்சு இருக்கிகளே

//டிஸ்கி: பாருங்க இதெல்லாம் ஏண்டான்னு கேட்டா என்ன லூசுங்குராணுக//

மங்குனி அமைச்சருக்கு, இவ்ளோ அறிவான்னு அவங்களுக்கெல்லாம் பொறாமைங்க...
நீங்க ஒன்னும் கவலை படாதீங்க..!!////

சரியா சொன்னிக்க (இப்படி சொல்லித்தான் மனச தேத்திகிட்டு இருக்கேன் )

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

ஆமாம் இந்த விளம்பரங்களின் தொல்லை தாங்க வில்லை...எதை தொட்டாலும் விளம்பரம்...இதுல எல்லாத்துக்கும் முனு நாலு பொண்ணுகள ஆடவர விற்றுவாங்க...ஒரு பெரிய கடையில ஆயிரத்துக்கும் மேலா பில் இருந்த சேமிக்கும் பெட்டி இலவசமாம்..என்னத்த சேமிக்க இவங்க கடையிலேயே எல்லாத்தையும் கொட்டிட்டு போனா ?? கலி காலம் இல்லை விளம்பாரக்காலம்..அருமையான பதிவு///

சேமிக்கும் பெட்டியா இது புது செய்தியா இருக்கே மேடம் ?

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

காம்ப்ளான் குட் கேள்வி...///

thank you

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

காம்ப்ளான் சிந்திக்க வைக்கிறது அமைச்சரே...
பாவம் விளம்பர படம் எடுக்குறவங்க அமைச்சர் கண்ணுல பட்டுடாங்களே...////

ஆனா சில விளம்பரம் ரொம்ப அருமையா இருக்கும் சார்

மங்குனி அமைச்சர் said...

நசரேயன் said...

//அட பன்னாட , பரதேசிகளா இப்படி விளம்பரம் குடுத்து சம்பாரிக்கிரதுக்கு நீங்களே வெளிநாடுகள்ள போய் வேலைக்கு சேர வேண்டியதுதானே ? சொல்லிகுடுக்குற உங்களுக்கே வேலை kidaikkaama தானே இந்த வேலை
பாக்குரிக்க ?//

நியாய மான கேள்வி///

நன்றி நசரேயன் சார்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

(பட்டாப்பட்டி : கேட்கலைனாலும் நீ லூசு தான மங்கு )
//

சே...சே... நா அப்படி சொல்லுவனா மங்கு?...

ஹி..ஹி ...ஹோ...///

இந்த சிப்பிலே உன்னோட மனசு புரியுது பட்டா

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

நான் டீ.வீ பார்ப்பதில்லை..

ஒன்ணு மட்டும் உண்மையா.. டீவீ கண்டுபிடிச்சவன்.ரிமோட்டையும் கண்டுபிடிச்சான் பாரு.. அவனுக்கு ஒரி சல்யூட்..

அப்புறம்..மச்சி.. இந்த ரிமோட் ல ம்யூட் பட்டன் இருக்கும்..அதை அமுக்கிட்டு பாரு..அப்படித்தான் இருக்கும்...////

அப்பிடியா சொல்ற பட்டா ???

மங்குனி அமைச்சர் said...

shanthi said...

Aaha nalla post and reality///

வாருங்கள் சாந்தி , வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

மங்குனி அமைச்சர் said...

Kumar said...

//நான் ரொம்ப குழம்பி போன விளம்பரம் இதுதானுங்க , முன்னாடி அடிக்கொரு முறை வரும் இப்ப காணோம் .

"முட்டை சாப்பிடுங்க , எல்லோரும் முட்டை சாப்பிடுங்கோன்னு ஒரு விளம்பரம் வருமுங்க , அதுல ஏதாவது கம்பனி பேர சொல்லி அந்த கம்பனி முட்டைய சாப்பிடுங்கன்னு சொன்னாலும் பரவாஇல்லை சும்மா மொட்டையா முட்டை சாப்பிடுங்கன்னு வரும் ."

யாரு? எதுக்கு குடுக்குரானுகண்ணே தெரியாது ?.//

National Egg Coordination Committee (NECC) is giving this advt.
Namakkal and Palladam EGG prices are determined by this commitee////

தகவலுக்கு நன்றி குமார் சார்

'பரிவை' சே.குமார் said...

அது சரி...
இதெயெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ...?
எல்லா விளம்பரமும் அப்படித்தான்... என்ன் செய்வது?

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

அது சரி...
இதெயெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ...?
எல்லா விளம்பரமும் அப்படித்தான்... என்ன் செய்வது? ////

ஆமா சார் , லொள்ளு பண்றானுக

சிநேகிதன் அக்பர் said...

கேட்குறது எல்லாம் நல்லாத்தா இருக்கு.

இதுக்கு யாரு பதில் சொல்வாங்க.

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

கேட்குறது எல்லாம் நல்லாத்தா இருக்கு.

இதுக்கு யாரு பதில் சொல்வாங்க.///

ஹி,ஹி,ஹி ....... (அக்பர் சார் இப்படியெல்லாம் மடக்க கூடாது )

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.///

வாங்க , வாங்க , விருதுக்கு நன்றி வந்து திருடிக்கிர்றேன்

Anonymous said...

Good Post. :)