எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, May 24, 2011

வாடகைக்கு - புதிதாக கட்டிய சட்டசபை

நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே இருக்கிறது இல்லை போன போட்டு புதுசா கட்டுன   சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,


 "நானும் பத்து  ஐடியா சொன்னேன் வொர்கவுட் ஆகல அதுனால நீங்கதான் ஏதாவது பண்ணியே ஆகனுமின்னு" 


சட்டசபை கட்டிடத்தோட பொறுப்ப  எந்தலைல  கட்டிட்டு போயிட்டார் , வேற வழியில்லாம நானும் செயல்ல இறங்கிட்டேன் .......பஸ்ட்டு வருமானத்துக்கு ஏதாவது  வழியிருக்கா  பார்ப்போம் ???


வாடகைக்கு - புதிதாக கட்டிய சட்டசபை




301524 சதுர அடிகள் பரப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்  சட்டசபைக்கு (மட்டும்)  வாடகைக்கு விடப்படும் . எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை . 

* வாடகை Rs 4000/-

* அட்வான்ஸ் - பத்துமாச வாடகை 

* புரோக்கர் கமிசன் - ரெண்டுமாச  மாச வாடகை (ஹி.ஹி.ஹி....)

* காலைல 6 டு 8  , சாயந்திரம் 7 டு 9  இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம்  நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும் 

* அதேமாதிரி கரண்ட் - காலைல 11 டு 12  சாயந்திரம் 4  டு 5  டைம்ல மட்டும்  தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs  250 /-  

* பிரதி மாதம் 5 தேதி கரக்ட்டா வாடகைய குடுத்திடனும் 

* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது  

* சொந்தக்காவுங்க யாரும் வந்து தங்கக்கூடாது

* நான்-வெஜ் சமைக்க கூடாது 

* நைட்டு 10  மணிக்கு கேட் மூடிடுவோம் 

விருப்பமுடையவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய தொலைபேசி எண் - 99999 99999 .


அப்படி வருமானத்துக்கு செட் ஆகலைன்னா , மக்களுக்கு உபயோகப்படுறது மாதிரி சில ஐடியா இருக்கு அதை வேணா டிரை பண்ணுங்க .....


1  ) அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .

2  ) இல்லைன்னா அதுக்குள்ளே ஒரு ரெண்டுமூணு புளோர்ல  மொட்டைமாடி கட்டிவிட்டா பசங்க பட்டம் விட வசதியா இருக்கும் .  இந்த பட்ட நூல் ஆக்ஸிடன்ட்   நடக்காது .

3 ) இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் . 

4 ) அதுவும் சரியில்லைன்னா  பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி......  இது நல்லா இருக்குல்ல )

டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன

(இந்த பதிவு  சும்மா காமடிக்கு மட்டும் ) 


Thursday, May 19, 2011

பின்னங்கால் பிடரில அடிக்க எடுத்தே.....ன் பாரு ஓட்டம்

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........... வெயில் மண்டைய பொளக்குது . அதுல பைக்ல  டிராவல் பன்றது  மண்டை காயுது . என்ன பண்ணலாம் .......???????



பேசாம சூரியனுக்கு புல்லா ஏ.சி பண்ணிடலாமா ???

இம்ம்ம் .... அது சரிவராது கரண்ட்டு பில்லு ஜாஸ்த்தியா வரும் ...... வேற என்ன பன்னலாம் ??????? 





என்னோட குளோஸ் பிரண்டுதான் பைக் மெக்கானிக் , நேர அவன் வொர்க் சாப் போனேன் 


" மாமா வெயில் தாங்க முடியல என் பைக்கு  ஏ .சி போட்டு குடேன் "


" என்னானானானாது .........????"


" சென்ட்ரலைஸ்டு  ஏ.சி பண்ண முடியாட்டியும் பரவாஇல்லை ரெண்டு சீட்ட மட்டும் ஏ.சிபன்னி குடு " 


" டேய் , மாப்ள நான் ஏற்கனவே காலைல என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குன வேகாலத்துல இருக்கேன் , மரியாதையா ஓடிப்போயிடு  அநியாயமா என்னைய ஒரு கொலைகாரனாக்காத "


அப்பத்தான்  ஏற்கனவே பிரண்டு கூட பைக்ல போகும் போது ஏ.சி போடச்சொல்லி பொலேர்ன்னு அடிவாங்கினது எனக்கு டக்குன்னு நியாபகம் வந்துச்சு , சரி பைக்கு ஏ.சி மாட்ட முடியாது போல ...........


" சரிடா மாமா பைக்கு ஏ.சி  பன்னமுடியாட்டி பரவாயில்ல , அட்லீஸ்ட் என் ஹெல்மெட்டுக்காவது ஏ.சி போட்டுகுடேன் "


" அடிங் .......... பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது " "  


அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு ஸ்பானர   எடுத்துக்கிட்டு என்னைய நோக்கி கொலை வெறியோட  வந்தான் " 


ஹே,ஹே,ஹே....... யாருகிட்ட? நம்ம கிட்டேயா?? ,நாங்க மானத்துல தமிழ் நாட்டு அரசியல்வாதிக ஜாதி ......  டக்குன்னு கால் விழுந்துட்டேன் .....


"மாமா கோபப்படாத எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம் "


"......ங்ங்ங்கொய்யாலே.... பஸ்ட்டு உன்னைய தீத்துட்டு, அப்புறம் கோர்ட்டுல பேசிக்கிறேன்டா   "


அப்படியும் விடாம ஸ்பானரால  அடிக்க வந்தான் ...........


முடியுமா? , நடக்குமா ??...... நாமெல்லாம் யாரு ?????


பின்னங்கால் பிடரில அடிக்க  எடுத்தே....ன் பாரு ஓட்டம் ......... நேரா ஒரு ஹெல்மெட் விக்கிற கடைல போயி நின்னேன் .....


அங்க இருந்த பொண்ணு என்னைய  பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .


" மேடம் , என்னோட ஹெல்மெட்டுல  ஏ.சி போடணும்  "


" என்னங்க சார் ?"


" என்னோட ஹெல்மெட்டுக்கு ஏ.சி பண்ணனும் "


இப்போ அந்த பொண்ணு  பைத்தியத்துக்கு  வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி   என்னை பாத்துச்சு 


"இம்ம்ம்மம்ம்ம்ம் ...........ஆயிரம் ரூபா ஆகும் , பரவாயில்லையா ?"


"அட இவ்ளோ சீப்பா இருக்கே , உடனே பண்ணிக்குடுங்க மேடம் "


" பஸ்ட்டு பணத்த  கட்டுங்க "


" ஓகே மேடம் , இந்தாங்க "




பத்து நிமிஷம் ........... என்னா  அழகா ஏ.சி போட்டு குடுத்துட்டாங்க பாருங்க ....


*
*
*
*
*
*
*








ஹி.ஹி.ஹி.......... எப்புடி நல்லா இருக்கா ????



ஏ.சின்னா இப்படியா இருக்கும்......... குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ...........

Monday, May 16, 2011

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு Rs. 67.22 தாங்க

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு  Rs. 67.22  தாங்க  ...........லிட்டருக்கு 5 ரூபாய்தான் கூட்டி இருக்காங்க ,   இதுக்கு போயி மக்கள்  ரொம்ப பீலிங்க்ஸ் காட்டுறாங்க ..... பாருங்க நான் போன வருசமே எப்படி டெக்னிக் பண்ணி சமாளிச்சு இருக்கேன்னு .......

***************

ஆகா பெட்ரோல் விலை மறுபடியும் ஏறிடுச்சு    , இனி நம்மக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது , என்ன பன்னலாம்னு மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சப்ப ஒரு அருமையான ஐடியா தோணிச்சு ,

"பேசாம நாம் ஏன் ஒரு குதிரை வாங்ககூடாது "

குட் , உடனே நம்ம ஏரியாவுல இருக்க சூபர் மார்கெட் போய், குதிரை இருக்கா?  என்னா விலைன்னு கேட்டேன் , அதுக்கு டக்குன் அந்த சூபர் மார்கெட் ஓனர் வேலைய ரிசைன் பன்னிட்டு போயிட்டாரு .

டுஸ்கி: ஒன்னு இருக்குன்னு சொல்லனும் , இல்ல இல்லைன்னு சொல்லனும். என்னா கோபகாரனா இருக்கானுக .

விசாரிச்சப்ப குதிரைல்லாம் சூபர் மார்கெட்ல விக்க மாட்டாங்கன்னு சொன்னாக , சரி எங்க கிடைக்கும்னு விசாரிச்சா, பீச்சுல கிடைக்கும்னு சொன்னாக , சரின்னு பீச்சுக்கு போய் பாத்தா அங்க நாலுபேரு காக்கி டிரஸ் போட்டு குதிரை ஓட்டிகிட்டு இருந்தாக ,


அண்ணே இந்த குதிர என்னா விலைன்னு தாங்க கேட்டேன் அவரு என்னா கோபத்தில இருந்தாரோ , நேரா குதிரையோட போய் கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டார் .

என்னான்னு கேட்டா அவரு போலிசாம் குதிரை கவுருமென்டு குதிரையாம் , அங்க இருந்து சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகி கூகுள் தேடினால குதிர சவுதி அரேபியாவுல கிடைக்கும்னு இருந்துச்சு , சரின்னு பக்கத்து வீட்டு காரரிடம் passport கடன் வாங்கிட்டு சவுதி அராபியாவுல போய் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தேன்


மறுநாள் காலைல பந்தாவா ஆபிசுக்கு குதிரைல போனேன் , போகும்போது ஒன்னும் பிரச்னை இல்லை , ஆனா வரும் போது வழக்கம் போல நாலு டிராபிக் போலீஸ் நம்மள சுத்துபோட்டாக. என்னான்னு கேட்டேன் , மறுபடியும் ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ் , எங்க குதிரைக்கு ஹெட் லைட்டு , அப்படி இப்படின்னு ...கேட்டாக , என்னாது ? குதிரைக்கு ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ்ஆ....... நான் டென்சனாகி குதிரைய அவுகல்டே குடுத்துட்டு பொடி நடையா வூடுபோய் சேந்தேன்.


டிஸ்கி:அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க 

??
?
?
?
?
?
?

?
?

?
கிஸ்கி : நல்லா பிராக்டிஸ் பன்னிட்டு அப்புறம் தான் ஓட்டனும்,....சரியா .......

?
?
?

?

?
?
?
?





பட்டாப்பட்டி said......
ஆமா இவரு பெரிய்ய லாடு லபக்கு தாசு , மீள்பதிவு போடுராராம்....மீள்பதிவு ...... போடா போயி  வேலை ம@#% பாரு ..