திருப்பதி , என்னுடைய நண்பர் , என்னோடு காலையில் ஷட்டில் விளையாடுபவர், மனைவி இரண்டு குழந்தைகள் என அழகான குடும்பம். வழக்கம் போல் நேற்று (04 /07 /2010 ) விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்றார் . எல்லாம் ஞாயிட்று கிழமையும் போல் நேற்றும் எல்லாம் வழக்கம் போல் நடந்தது. மாலை நான்கு மணிக்கு வியசர்பாடியிலுள்ள ரிலேடிவ் வீட்டிற்கு சென்ற தனது மனை குழந்தைகளை அழைத்து வர சென்றார்.
போகும் வழியில் விதி விளையாடியது, அவரது குடும்ப வாழ்கையை புரட்டிப் போட்டது. சிறுவர்கள் விளையாட்டு வினையில் முடிந்தது . எங்கிருந்தோ அறுந்து வந்த பட்டத்துனுடைய மாஞ்சா நூல் பைக்கில் சென்று கொண்டிருந்த திருப்பதியின் கழுத்தை அறுத்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.மேலும் அருகில் மற்றொரு பைக்கில் வந்த இன்னொரு மனிதரும் மிகவும் சீரியஸ் ஆக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் முடிந்து இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
தற்போது நான்கு பள்ளிச் சிறுவர்களை விசாரணை செய்து வருகிறது காவல்துறை. அதனால் என்ன பயன் ???
சென்னையில் இதுவரை இந்த மாதிரி பலர் இறந்துள்ளனர் , சென்னையில் பட்டம் விடக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது . அதற்கு பிறகும் இந்த மரணங்கள் தொடர்கிறது , இதற்கு யார் பொறுப்பு ????
காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ???
(மாஞ்சா நூல் என்பது , கண்ணாடித்தூள் , வஞ்சிரம் மற்றும் பசை சம்மந்தப்பட்ட பொருள்கள் கொண்டு செய்து பட்டம் விடும் நூலில் தடவி விடுவார்கள் . மிக டேஞ்சரான விஷயம் . )