முஸ்கி : தயவு செய்து யாரும் இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிடாதிக, மிரட்டி கேப்பாக சொல்லிடாதிக, அடிச்சு கூட கேப்பாக அப்பவும் சொல்லிடாதீக
எங்க காலேஜுல இன்டேனல் எக்ஸ்ஜாம், இன்டேனல் எக்ஸ்ஜாம் அப்படின்னு ஒன்னு நடக்கும்,
"ஜெய்லானி : டே, கூமுட்ட மங்கு, இன்டேனல் எக்ஸ்ஜாம் எல்லா காலேஜிலையும் நடக்கும் "
"சரிப்பா விடு , எந்நேரமும் ஆப்பு வைகிரதுலே குறியா இருக்கானுக ."
நமக்கு மேஜர் மாத்ஸ்(?????????)
அதுனால இங்கிலீசு எல்லாம் அவ்வளவு சரியா வராது , மத்த பேப்பர் எல்லாம் அடுத்தவன பாத்து எழுதிடுவோம் , ஆனா , இங்கிலீச யாரையும் பாத்து எழுத முடியாது , ஏன்னா ? எவனுக்குமே இங்கிலீஸ் தெரியாது
"வெளியூர்காரன் : என்னமோ , மத்ததுல எல்லாம் பின்னிபெடலெடுக்குற மாதிரி ..."
யு.ஜில பஸ்ட்டு நாலு செமஸ்டருக்கு லாங்குவேஜ் இங்கிலீஸ் இருக்கும் , இன்டேனல் அப்ப பஸ்ட்டு தமிழ் எக்ஸ்ஜாம்ல ரெண்டு மூணு அடிசனல் சீட் சுட்டுவந்துருவோம் , மறுநாள் இங்கிலீஸ் எக்ஸாம் முக்கு வரபோற " essay" வ அப்படியே கம்ப்ளீட்டா எழுதிட்டு போய் மறுநாள் எக்ஸாம்ல உள்ள சொருகிடுவோம்.
முஸ்கி : எதிலையும் ஒரு நேர்மை இருக்கனும், ஆனா காலேஜ் நிவாகத்துக்கு அது தெரியலையே ?
பாருங்க இது பொறுக்காம (என்னமோ நாங்க இந்திய ராணுவரகசியத்த கடத்திட்ட மாதிரி ) அப்புறம் அடிசனல் சீட்ல "a "," "b" , "c " ,"d " அப்படின்னு சீல் போட்டு குடுக்க ஆரமிச்சாங்க.
வாழ்க்கைல இப்படி பல தடைகள் வரத்தான் செய்யும் , அதை கண்டு துவன்டு விடகூடாது. அப்படின்னு சாலமன் பாப்பையா சொல்லிருகாரு
சரின்னு எல்லா டிபார்ட்மென்ட் பசங்களையும் ஒன்னுகூட்டி ஒரு ரகசிய அவசரஆலோசனை நடத்தினோம் ,
"சித்ரா:அப்ப கூட படிச்சு எழுதனும்ன்னு நினைசானுகளா பாருங்க "
"சித்ரா மேடம் நீங்களுமா.............. , ஆஹா இன்னைக்கு ஊரே ஒன்னு கூடிடாங்கப்பா"
ஸ்டூடன்ட்சா கொக்கா , அடுத்த எக்ஸ்ஜாமில இருந்து டெய்லி ஒரு சீல்னு அடிசனல் பேப்பர் சுட்டு வந்து , அடுத்த இண்டேனல் இங்கிலீஸ் எக்ஸ்சாமுக்கு எல்லா சீல்லையும் , ஒரே "essay" வ எழுதிட்டு போய் அன்னைக்கு எந்த சீல் பேப்பர்தர்றாங்களோ அந்த அடிசனல் சீட்ட எடுத்து சொருகிட்டு வந்துகிட்டே இருப்போம் (தக்காளி அப்படியும் பாடர்ல தான் பாஸ் பன்னுவோம்).
"வால்பையன் : சேம் பிளட் "
"வா தல, நீ எங்கயும் போகாத என் பக்கத்திலே இரு , சுத்தி, சுத்தி அடிகிரானுகப்பா"
அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டு , யு .ஜி பாஸ் பன்னிட்டு (டே , பட்டா நம்ம ஜெய்லானி மேல சத்தியமா பாஸ் பண்ணிட்டேன் சும்மா நொன்ன நோனாங்கி தனமா எதுவும் கேட்காத ), பி .ஜி ல இதே மாதிரி அடிசனல் சீட்ல essay எழுதிட்டு போய் , செகண்ட் டே இன்டேனல்ல சொருகிட்டு வந்துட்டேன் , வெளிய வந்து பொம்பள புள்ளைகல்ட்ட பெருமையா சொன்னேன் , அதுக ஆபிரிக்கா காட்டு ஜந்து போல பாத்துசுக , என்னாடான்னு கேட்டா பி.ஜி.ல லாங்குவேஜ் பேபரே கிடையாதாம்!!!!!
டிஸ்கி : சே , இந்த பயபுள்ளைக எப்பவுமே இப்படிதான் கிண்டி விட்டு வேடிக்க பாப்பானுக்க , முன்னாடியே பி.ஜி ல எல்லாம் லாங்குவேஜ் பேப்பர் கிடையாதுன்னு சொல்லகூடாது ?
கிஸ்கி : ஆஹா , ஊருக்குள்ள நமக்கு எதிரிக்க ஜாஸ்தி ஆகி போச்சு , பேசாம கன்னத்துல ஒரு மருவ வச்சுக்கிட்டு, ஒரு கூலிங் கிளாஸ் மாட்டிகினு மாறுவேசத்துல திரிய வேண்டியதுதான்.
------- /// --------- /// ............
என்னோட சின்ன வயசு போட்டோ ஒன்னு இப்பதான் கிடைச்சு , பாருங்க
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
மம்மி..... அந்த லைடர எடு.............
( நாங்கல்லாம் பிறக்கும் போதே ரவுடிக)

எதிர்ப்பு தெரிவிக்கும் ப்ளாகர்ஸ்...... , சிகரெட்ட பத்த வச்சாதான் பேச்சு...................
