எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, March 14, 2012

விஞ்ஞானிகள் உடனடியாக மேடைக்கு வரவும்

அன்புள்ளம் கொண்ட விஞ்ஞானிகளே தயவுசெய்து ஏன் பிரச்னைக்கு நல்ல தீர்வு தருமாறு மிகத்தாழ்மையுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் .

பிரச்சனை என்னன்னா ????

  
பூரான் , பூரான் , பூரான்

 (ஒரு பூரான் தாங்க ஒரு பில்டப்புக்காக மூணுவாட்டி சொன்னேங்க )வீட்டு (பஸ்ட்டு புளோர் )  பாத்ரூம்தண்ணி போற ஹோல்ஸ் வழியா வாரத்துக்கு ரெண்டுதடவை இந்த சனியன் வந்திடுதுங்க . எனக்கு இத கண்டாலே பயங்கர அலர்ஜி. உள்ளங்கால்ல இருந்து உச்சந்தலை வரைக்கும் இருக்க முடியெல்லாம் நட்டமா நின்னுக்கும்.

 சின்ன வயசுல நான் ரொம்ப தைரியசாலி , இத பார்த்தவுடன் பின்னகால் பிடரீல அடிக்க ஓடிப்போயிடுவேன் , இப்போ பாருங்க பயத்துல ஓடக்கூட முடியலை . அதுவும்  என்னைய பார்த்ததும் எப்படிதான் கண்டுபுடிக்குதுதோ தன்னோட அம்பது கால் மேல மீதி அம்பதொகால தூக்கி போட்டு என்னைய பார்த்து நக்கலா சிரிக்கும்.

அதை பார்த்து நான் போடுற சத்தத்தை கேட்டு என் பொண்டாட்டி  வந்து கார்பரேசன் குப்பைலாரில அடிபட்ட சொறிநாய பாக்குறது மாதிரி என்னை பார்த்துட்டு (மனசுக்குள்ள என்ன சொல்லி திட்டுறாலோ???)  பூரான ஹிட் (HIt  ) அடிச்சு கொன்னு தூக்கி போட்டுருவா.

இதுல முக்கியமான மேட்டர் வீட்டு டைல்ஸ் எல்லாம்  டார்க் கலர் , பூரான் பாத்ரூமை விட்டு வெளியே வந்துட்டா அத கண்டு புடுக்கிறதே கஷ்டம் . நானும் ஹவுஸ் ஓனர்கிட்ட போயி சார் டைல்ஸ் எல்லாம்  லைட் கலரா மாத்திக்குடுங்கன்னு கேட்டேன் . 

அவன் என்ன கோவத்துல இருந்தானோ + 2  பசங்க சுவாலாஜி லேபுல மல்லாக்க போட்டு கால்ல ஆணி அடிச்சு   அருத்துபோட்ட தவலைய பாக்குறது மாதிரியே பார்த்தான் , அப்புறம் டைல்ஸ் எல்லாம் மாத்தமுடியாது வாடகைவேன்னா 2000  ரூபா ஏத்துறேன்னு வாடகைய  ஏத்திட்டான் . 

எனவே அன்பும் , பண்பும் , பாசமும் , நேசமும் கொண்ட அன்பு நண்பர்களே இதற்கொரு நிரந்தர தீர்வு இருந்தால் சொல்லவும்.

டிஸ்கி : யப்பா தெய்வகளா நிஜம்மா நல்ல தீர்வா சொல்லுங்க . HIt  வாங்குறதுக்கு மாசம் ஒரு பெரிய்ய பட்ஜெட் ஒதுக்கவேண்டி இருக்கு . 

48 comments:

! சிவகுமார் ! said...

//உள்ளங்கால்ல இருந்து உச்சந்தலை வரைக்கும் இருக்க முடியெல்லாம் நட்டமா நின்னுக்கும்.//

ஸ்பைக் கட்டிங் வெட்டுன பூரான் போல!!

! சிவகுமார் ! said...

ஒரு நாலு வருசத்துக்கு உங்க தலைமுடிய வெட்டாம விட்டுருங்க. அப்பால அந்த ப்ளடி பூரான் கிட்ட நல்லா ஜூம் செஞ்சி உங்க முகத்தை கிட்ட போய் கட்டுங்க. அப்பறம் அந்த பூரான் வம்சமே டுமீலுதான்!

மொக்கராசா said...

NO parking for பூரான் ந்னு ஒரு போர்டு மாட்டி வையுங்க இனிமே அதுக வராது.....

TERROR-PANDIYAN(VAS) said...

கொதிக்க கொதிக்க தண்ணியை காய்ச்சி பைப் அடச்சிகிட்டு போர மாதிரி ஊத்து மச்சி. பாத்ரூம் பைப்ல குப்பை எதுவும் அடப்பு இல்லாம பார்த்துகோ.

வெளங்காதவன்™ said...

யாரோ மன்குநியோட ஐ.டி.ய ஆட்டையப் போட்டுட்டாங்க போலியே!!

வெளங்காதவன்™ said...

//TERROR-PANDIYAN(VAS) said...

கொதிக்க கொதிக்க தண்ணியை காய்ச்சி பைப் அடச்சிகிட்டு போர மாதிரி ஊத்து மச்சி. பாத்ரூம் பைப்ல குப்பை எதுவும் அடப்பு இல்லாம பார்த்துகோ.//

நீ அங்க, இதுதான் பண்ணிட்டு இருக்கியா மச்சி???

மொக்கராசா said...

//இதுல முக்கியமான மேட்டர் வீட்டு டைல்ஸ் எல்லாம் டார்க் கலர் //

வெத்தல சுண்ணாம்பு வாங்கி எல்லா டைல்சுலேயும் ஒட்டி விடுங்க...அப்பறம் பூரான் வந்தா நசுக்கு நசுக்குன்னு நசுக்கலாம்.


(கன்சல்டேசன் பீஸ் ஏதாவது போட்டு குடுங்க)

Madhavan Srinivasagopalan said...

எனக்கும்.. அதே பிரச்சனை..
பூரானுக்கு பதிலா மரவட்டை.. (சின்னதா கருப்பு கலர்ல இருக்குமே.. அந்த ஜந்து.. )

பழனி.கந்தசாமி said...

விஞ்ஞானி நான் இருக்கறப்போ யார் யாரோ என்னென்னமோ ஐடியா குடுக்கிறாங்களே? இதை யாருகிட்ட போய்ச் சொல்லுவேன்?

மனசாட்சி said...

இதுக்கு எதுக்குவோய் விஞ்ஞானி

NAAI-NAKKS said...

பூரான் கிட்ட போய்...
NO ENTRY போர்ட காட்டவும்...

அதுக்கு இங்கிலீஷ் தெரியலைனா ...
எந்த மொழி தெரியும்-னு கேட்டு
அந்த மொழில எழுதி காட்டவும்...

NAAI-NAKKS said...

பூரானை...கழுகுகள் கொத்தி தின்னும்...
ஒரு கழுகு வாங்கி வளர்க்கவும்...

NAAI-NAKKS said...

எதுவுமே சரிவரவில்லை என்றால்...
சீனா காரண மாதிரி பூரானை...
வருது திங்க கற்றுக்கொள்ளவும்...

சாஸ் இதுக்கு நல்ல காம்பினேஷன்...

NAAI-NAKKS said...

"விஞ்ஞானிகள் உடனடியாக மேடைக்கு வரவும்"/////

நீங்க பன்னிகுட்டி-ஐ கூப்பிடல இல்ல...

NAAI-NAKKS said...

நல்ல மலையாள மாந்திகனை கூப்பிட்டு
மந்திரிக்கவும்...

NAAI-NAKKS said...

மேலும்...ஐடியா வேண்டுமென்றால்...
என் அக்கௌன்ட்-க்கு பணம் அனுப்பவும்...

NAAI-NAKKS said...

வர எல்லா பூரான்-கிட்டயும்...
டெரர்,,போலீஸ்,,இன்னும் சிலரது..
போஸ்ட்-ஐ படிச்சி காட்டவும்...

உடனடி மரணம்..
யாருக்கோ...

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் அது பூரானா இல்லை பாம்பா தெளிவா பார்த்து சொல்லுய்யா...

விக்கியுலகம் said...

யோவ் மாப்ள...நீயே பூரான் போல தான் எப்பவாவது வெளிய தல்ய பதிவு மூலமா காட்ர..இதுல...ஹெஹெஹெ!

MANO நாஞ்சில் மனோ said...

நக்கீரன் மாதிரி நாய் வளர்க்கவும்...

MANO நாஞ்சில் மனோ said...

பூரான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும்....

விக்கியுலகம் said...

NAAI-NAKKS said...
நல்ல மலையாள மாந்திகனை கூப்பிட்டு
மந்திரிக்கவும்...

>>>>>>

ஏற்கனவே இந்தாளுக்கு உருட்டுன எலுமிச்சை பத்தாது போல!

MANO நாஞ்சில் மனோ said...

பூரானை பார்த்து நடிகர் அசோகன் மாதிரி சிரிக்கவும்.....

MANO நாஞ்சில் மனோ said...

எப்பவாவது பூரான் மாதிரி வெளியே வந்துட்டு, பிச்சிபுடுவேன் பிச்சு...

வீடு K.S.சுரேஸ்குமார் said...

பூரானை கிச்சுகிச்சு செய்யவும்..கெக்கேபிக்கே என சிரிக்கும் போது அதன் வாயில் ஒன்று போடவும்...!

MANO நாஞ்சில் மனோ said...

பூரான் காலை பிடித்து தூக்கி தலையை பத்து சுத்து சுத்தி மரத்தில் அடிக்கவும் ஹி ஹி...

விக்கியுலகம் said...

இந்த பதிவு போட்ட மங்குனிக்கு இந்த கதின்னா..கமண்ட் போடறவங்க நிலைய நெனச்சா...கர்ர்ர்ர்ர்!

NAAI-NAKKS said...

பாத்ரூம் முழுக்க மிளகாய் தூளை...
கொட்டி வைக்கவும்...

வீடு K.S.சுரேஸ்குமார் said...

அது ஆண் பூரான் என்றால் ஒரு பெண் பூரானை வளர்த்து லவ் செய்யவிடவும்!

NAAI-NAKKS said...

தடயஅறிவியல் துறை-ல் கேட்டு..
அந்த பவுடர்ஐ வீடு முழுவதும்...
தூவி விட்டால் அதன் தடத்தை அறிந்து...
பிறகு ஆட்களை கூட்டி வந்து...
அடிக்கலாம்...

வெளங்காதவன்™ said...

இப்புடியெல்லாம் பதிவு போட்டதுக்கு நாண்டுகிட்டு சாகவும்...

:-)

வெளங்காதவன்™ said...

கமண்டு போட்டதுக்கு முதலில் பார்த்து, போட்டுக்கொடுக்கவும்!!

ப.செல்வக்குமார் said...

// வாடகைவேன்னா 2000 ரூபா ஏத்துறேன்னு வாடகைய ஏத்திட்டான் . //

:)))))))))

ப.செல்வக்குமார் said...

நீங்க ஏன் பெரிசா ஒரு பூரான் வளர்க்கக் கூடாது ? அதப் பார்த்ததும் சின்னப் பூரான் எல்லாம் ஓடிரும்ல ?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

try fixing P-Trap in the drinage.
http://en.wikipedia.org/wiki/Trap_(plumbing)

பாலராஜன்கீதா said...

வாடகை வீடுதானே ? ஹவுஸ் ஓனரை மாற்றிக்கொள்ளுங்கள். (அதாவது பூரான் இல்லாத வேறு வீட்டிற்கு மாறிக்கொள்ளவும்.)

எஸ்.கே said...

நீங்களும் சம்பாதிக்கலாம்....

பூரான் வளர்ப்பு மூலம்...

ஹாலிவுட்ரசிகன் said...

ஒன்னும் பிரச்சினை இல்ல. டைல்ஸ் டார்க் கலர் தானே? பேசாம பூரானப் புடிச்சி, அதுக்கு வெள்ளைப் பெயிண்ட் அடிச்சுவிடுங்க. ப்ராப்ளம் சால்வ்ட். ஐ யாம் வில்லேஜ் விஞ்ஞானி நோ?

சிநேகிதன் அக்பர் said...

பூரானை எல்லாம் புடிச்சி மிக்ஸில போட்டு அரைச்சு கப்சி பானம் தயாரிங்க அமைச்சரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே பூரான்னா எல்லாரும் கக்கூஸ் பூச்சின்னு சொல்லுவாங்களே அதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////NO parking for பூரான் ந்னு ஒரு போர்டு மாட்டி வையுங்க இனிமே அதுக வராது...../////

அப்போ பூரான் நடந்து வந்தா என்ன பண்ணுவீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
மேலும்...ஐடியா வேண்டுமென்றால்...
என் அக்கௌன்ட்-க்கு பணம் அனுப்பவும்.../////

மைல்டா ஒரு டவுட்டு வருதே, அந்த வித்தவுட் பார்ட்டி வாடை வருதே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
நக்கீரன் மாதிரி நாய் வளர்க்கவும்...

//////

அதுக்கு நாய்நக்சையே கூட்டிட்டு போய்டலாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
பூரான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும்....//////

எல்லா கால்லேயுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பூரான் வெளியே வந்ததும் அது மேல ஒருவாட்டி கக்கா போகவும்.....

பட்டாபட்டி.... said...

ஹாய் மங்கு...
யாரையும் நம்பாதே..

கால்-ல விழு.. கையெடுத்து கும்புடுனு ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க...

நம்புனே.. கெட்ட...


மருந்துக்கடையில போய் டிக்-20னு கேளு.. கொடுப்பானுக.. வாங்கி
அப்படியே லப்னு முழுங்க...


10 நிமிசத்தில உம்மோட பிரச்சனையும்..எங்களோட பிரச்சனையும் முடிஞ்சிடும்....

:-)

( குடிக்கும்முன்.. பாதுகாப்பாக..
..
.
.
.
உம்முடைய ப்ளாக் பாஸ்வேர்டை எனக்கு.....SMS பண்ணிவிடவும்....)

ஜெய்லானி said...

ஓய் மங்கு இனிமே குளிக்கவே வேனாம் ..சோப்பு செலவு , தண்ணி செலவு மிச்சம் . அடிக்கிர கெட்ட நாத்ததுக்கு அது உன் கிட்டேயே வராது ..அனுவபமான்னு எல்லாம் கேட்கப்பிடாது :-))

பித்தனின் வாக்கு said...

"விஞ்ஞானிகள் உடனடியாக மேடைக்கு வரவும்"


விஞ்ஞானி நான் இருக்கறப்போ யார் யாரோ என்னென்னமோ ஐடியா குடுக்கிறாங்களே? இதை யாருகிட்ட போய்ச் சொல்லுவேன்?

ada mangu thinam padukka pokum pothu toilet la konjam pinayil uthi vaichudu. pooran varathu.