எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, June 28, 2011

என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???

சாயிந்தரம் வீட்டுக்கு போனா   அங்க ஜூனியர் மங்கு ( என்பையன் தாங்க) படிக்காம ஜாலியா டி.வி பாத்துக்கிட்டு இருந்தான் , எனக்கு வந்துச்சே பாருங்க கோவம் .........

"டேய் , அறிவுகெட்டவனே ஏன்டா  படிக்கிற நேரத்துல இப்படி டி.வி பாத்துக்கிட்டு இருக்கியே நீயல்லாம் எப்படி உருப்புடுவ ?" 

" யோவ் லூசு "

"என்னது லூசா ? "

"ஆமாய்யா , இப்போ எதுக்கு கரடியா கத்துற ?"

"இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம மாடு மேயிக்கதான் போகனும்."

"போய்யா.....என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???"

"என்னடா சொல்ற ?"

"இலவச அரிசி  வாங்கி 

இலவச கிரைண்டர்ல அரைச்சு

இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு 

இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு 

இலவச திருமண உதவிப்பணம் வாங்கி 

இலவச திருமணம் பண்ணிக்கிட்டு 

இலவச கான்கிரீட் வீட்டுல 

இலவச மிசாரத்துல 

இலவச ஃபேன் போட்டு 

இலவச டி.வில 

இலவச நெட் கணக்சன்ல 

இலவசமா உல்லாசமா படம் பாக்குறத விட்டு கஷ்ட்டப்பட்டு  என்னா ம@#த்துக்கு நான்  படிக்கனும்  அப்புறம்  உன்னைய மாதிரி லோள்படனும்???"


இதுல 


இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .


என்ன படிக்கலைன்னா.............. 


இலவச சைக்கிளும் 


இலவச  லேப் டாப்பும் கிடைக்காது........ நோ பிராப்ளம்..... அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது "

வாழ்க ஜனநாயகம்

நன்றி - எஸ்.எம்.எஸ்.
டிஸ்கி :  வேறு ஏதாவது இலவசம்  விட்டுப் போயிருந்தால் என்னை மன்னித்தருளுமாறு  மிக தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன் .

45 comments:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சூப்பர் பாஸ். பிண்ணி பெடலெடுத்துட்டீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உங்க பவர பயன்படுத்தி கெவர்மெண்ட்ட இலவச கக்கூசு கட்டி கொடுக்க சொல்லுங்கண்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டர்ல அரைச்சு
இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு
இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு /////////

அண்ணே அண்ணே இத்தனை கருமத்த பண்றதுக்கு பதிலா ஹோட்டல் டோக்கன் வாங்கி கொடுத்துட்டா நாங்க போய் சாப்புட்டு வந்துடுவோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன இங்க இருந்த ஒரு கமெண்ட்ட காணோம்?

சி.பி.செந்தில்குமார் said...

சமீப காலமா கோகுலத்தில் சூரியன் வெங்கட் கூட அதிகமா பழகுனீங்களா? ஹா ஹா ஒரே ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கை வெச்சு ஒரு பதிவையே தேத்திட்டீங்களே.. ( டேய் சி பி.. நீ இன்னும் வளரணும்டா)

பட்டாபட்டி.... said...

ஏன் ....அப்படியே கழுவ ஆளையும் அனுப்பச்சொல்லு!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
ஏன் ....அப்படியே கழுவ ஆளையும் அனுப்பச்சொல்லு!!!!////////

ஆமாண்ணே நெறைய பேருக்கு கெவர்மென்ண்டு வேல கெடச்ச மாதிரியும் இருக்கும்..........

பட்டாபட்டி.... said...

:-))))))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
சமீப காலமா கோகுலத்தில் சூரியன் வெங்கட் கூட அதிகமா பழகுனீங்களா? ஹா ஹா ஒரே ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கை வெச்சு ஒரு பதிவையே தேத்திட்டீங்களே.. ( டேய் சி பி.. நீ இன்னும் வளரணும்டா)
////////

அண்ணே அப்போ நீங்க காம்ப்ளான் குடிக்கலியா? மொதல்ல அதக் குடிங்க..........!

பட்டாபட்டி.... said...

சிரிச்சு சிரிச்சு தண்ணியா வருது!  

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
சிரிச்சு சிரிச்சு தண்ணியா வருது! ////////

தண்ணியா வருதா தண்ணியா போவுதா? நல்லா உத்து பாத்து சொல்லுங்க?

அமுதா கிருஷ்ணா said...

உங்க பையன் என்றால் சும்மாவா?

மாணவன் said...

ஜூனியர் மங்குனி ராக்ஸ்.... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் மங்கு, பேசாம டாஸ்மாக்ல நல்லா ஏத்திட்டு, கெவர்மெண்ட்டு லேப்டாப்ப வாங்கி ஜாலியா கேம்ஸ் வெள்ளாடுவியா, அதவிட்டுப்புட்டு, வேல, பொழப்புன்னு சும்மா உடம்ப கெடுத்துட்டு இருக்க.........?

பட்டாபட்டி.... said...

யோவ்.. அடுத்த தடவை எனக்கு ஓட்டுப்போட்டி கெலிக்க வை..

இலவச காண்டம் கொடுத்து உன் பிரச்சசனைய முடிச்சு வைக்கிறேன்..

மொக்கராசா said...

பன்னி இலவச கக்கூஸ் சூப்பர் அத விட கழுவி விட ஆள் அத விட சூப்பர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.... said...
யோவ்.. அடுத்த தடவை எனக்கு ஓட்டுப்போட்டி கெலிக்க வை..

இலவச காண்டம் கொடுத்து உன் பிரச்சசனைய முடிச்சு வைக்கிறேன்..////////

அண்ணே ஏற்கனவே அது எலவசமாத்தான் கெடைக்குது, ஆனா யூஸ் பண்ணத்தான் முடியல, அதுனால....

Shiva sky said...

தினமும் உங்கள் பதிவை எதிர் பார்க்கிறேன்

வெட்டிப்பேச்சு said...

//இதுல


இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .


என்ன படிக்கலைன்னா


இலவச சைக்கிளும்


இலவச லேப் டாப்பும் கிடைக்காது........ நோ பிராப்ளம்..... அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது "
//

பேஷ்..பேஷ்..

koodal bala said...

நல்ல கவர்மெண்டு ....நல்ல மக்கள் .....உருப்படும் ?!

வெட்டிப்பேச்சு said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பட்டாபட்டி.... said...
சிரிச்சு சிரிச்சு தண்ணியா வருது! ////////

தண்ணியா வருதா தண்ணியா போவுதா? நல்லா உத்து பாத்து சொல்லுங்க?//


நெசமாலுமே தாங்கலைங்க..

Yoga.s.FR said...

வெட்டிப்பேச்சு said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பட்டாபட்டி.... said...
சிரிச்சு சிரிச்சு தண்ணியா வருது! ////////தண்ணியா வருதா தண்ணியா போவுதா? நல்லா உத்து பாத்து சொல்லுங்க?////////
நெசமாலுமே தாங்கலைங்க..
////கரெக்ட்!அப்பிடீன்னா,"போவுது"ன்னு அர்த்தம்!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...

"இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம "மாடு" மேயிக்கதான் போகனும்."////"அது(மாடு) கூட ப்ரீயா குடுக்கப் போறாங்களாம்!

Madhavan Srinivasagopalan said...

//இலவச சைக்கிளும்

இலவச லேப் டாப்பும் கிடைக்காது........ நோ பிராப்ளம்..... அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது " //

Master piece.

THOPPITHOPPI said...

ஹஹஹா............

மனசாட்சி said...

நன்றி மங்குனி,

உண்மை தான்....கேவலமாக இருக்கு நம் நிலைமையை நினைத்தால் - வரும் காலம் ?????

ரியாஸ் அஹமது said...

நல்ல வஞ்ச புகழ்ச்சி ....
நல்ல சிரிப்பு

ரியாஸ் அஹமது said...

TAMIL MANAM 12

அருண் பிரசாத் said...

விடுங்க மங்கு...நாமலும் இலவசமா ஆபிஸ் இண்டர்நெட்ல இலவச பிளாக்ல தான் கலாய்ச்சிட்டு இருக்கோம்

சேட்டைக்காரன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே உங்க பவர பயன்படுத்தி கெவர்மெண்ட்ட இலவச கக்கூசு கட்டி கொடுக்க சொல்லுங்கண்ணே.....!//

ரிப்பீட்டு!

இப்பல்லாம் ரெண்டு ரூபா வாங்குறாய்ங்க!

சென்னை பித்தன் said...

//வாழ்க ஜனநாயகம்//
வழி மொழிகிறேன்!

r.elan said...

sirichi,sirichi,vairu punnu aahevitathu!!!!!!!!sabash!!!!!!!

மதுரன் said...

அருமையான காமடி.. கூடவே இலவசக்காரங்களுக்கு நல்ல சாட்டையடி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அருண் பிரசாத் said...
விடுங்க மங்கு...நாமலும் இலவசமா ஆபிஸ் இண்டர்நெட்ல இலவச பிளாக்ல தான் கலாய்ச்சிட்டு இருக்கோம்
////////

யோவ் என்ன வார்த்த சொல்லிட்ட? மங்கு அவரு ஆப்பீஸ்ல ஓனரா வேல பாக்குறாருய்யா... அவரப் போயி இப்படி ஒரு வார்த்த சொல்லிப்புட்டியே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அருண் பிரசாத் said...
விடுங்க மங்கு...நாமலும் இலவசமா ஆபிஸ் இண்டர்நெட்ல இலவச பிளாக்ல தான் கலாய்ச்சிட்டு இருக்கோம்
////////

யோவ் என்ன வார்த்த சொல்லிட்ட? மங்கு அவரு ஆப்பீஸ்ல ஓனரா வேல பாக்குறாருய்யா... அவரப் போயி இப்படி ஒரு வார்த்த சொல்லிப்புட்டியே?//

அப்ப..போலிஸ் மாதிரி மங்குனி அடிமாடா இல்லையா?

NADESAN said...

அப்படியே வீட்டுல ஒரு A/C யும் வேண்டும் வெயில் அதிகமாக இருக்கு அமைச்சரே

நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

♔ம.தி.சுதா♔ said...

/////வேறு ஏதாவது இலவசம் விட்டுப் போயிருந்தால் என்னை மன்னித்தருளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .////

அதை கண்டு பிடிக்கிறவன் தான் அடுத்த அரசியல்வாதியோ...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

பெசொவி said...

க.க.க.போ!

பித்தனின் வாக்கு said...

good. once again you proved yourself.

Anonymous said...

missed free goats and cows!

இந்திரா said...

வாழ்க ஜனநாயகம்

கோவை நேரம் said...

டாஸ்மாக்ல வேற ப்ரீயா கொடுத்தாலும் கொடுப்பாங்க ...

M.R said...

இன்னும் என்னத்தெல்லாம் இலவசமா தரபோரானுங்களோ தெரியல

கூழாங் கற்கள் said...

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.

பலே பிரபு said...

நல்ல புத்திசாலிதான் பாஸ்