எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, October 20, 2010

"போரம்" நல்லதா? கெட்டதா?

போரம் - திடீரென்று ஒரு மோதல் - ஒரே ரணகளம், ரத்த பூமியா ஆகிப்போச்சு . ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று ஆராய்ந்தால் உங்களுக்கும் எனக்கும் வயசாகிப் போகும் , இரண்டு பக்கமும் மூட்டை, மூட்டையாக ஆதாரங்கள் வெளியிட்டார்கள் . (ஒரு பயலும் அதை முழுசா படிக்கல )

அதில அவுங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு புகைந்து கொண்டு இருந்த போது , வினவு ஒரு பெண்ணுக்கு ஆதரவா ஒரு பதிவு போட , இந்த பக்கமும் அந்த பக்கமும் கூட்டம் சேர அது அப்படியே கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது . நண்பர்களுக்குள் பரிமாறிக்கொண்ட சொந்த விஷயங்கள் நடு ரோட்டில் இழுத்து நாறடிக்கப் பட்டது .

இதில் பெண் பதிவர்கள் மிக வக்கிரமாக தாக்கப் பட்டார்கள். இந்த சண்டையில் ஹைலைட் என்னவென்றால் "வார்த்தைகள்". எல்லாம் பெரிய்ய இலக்கிய விஞ்ஞானி ஆயிட்டாங்க . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி சுயசொறிதல் , ஆணாதிக்கம் , பெண்ணியம் , வன்புணர்ச்சி, துகிலுரிதல் , நாட்டாம ,சொம்புதூக்கி, அடிவருடி ....இன்னும் பல பதிவிடமுடியாத வார்த்தைகள் . (அவுங்க பதிவுல போட்டாங்க ).இந்த மாத்ரி எதார்தத்தை மீறிய வார்த்தைகள் உபயோகித்தால் தான் தாம் இலக்கியவாதி என்று நிரூபிக்கபடுவோம் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும்.

எனக்கு தெரிந்து "
வினவு" பெண் பதிவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஏற்பட்ட இரண்டாவது பெரிய சர்ச்சை இது . நண்பர்களுக்குள் சண்டைக்குள் பேசிமுடிய வேண்டிய விஷயம் ,தேவையே இல்லாது ஏற்பட்ட வினவுவின் தலையீட்டால் இந்த இரண்டு விசயங்களும் பெரிதாக்கப் பட்டது .இரண்டு பேருக்கு இடையே நடந்த சண்டையை , கோஷ்டி மோதலாக மாற்றியது வினவு . ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்னும் கொள்கையை வினவு கடைபிடிப்பதாக எனக்கு தோன்றுகிறது .


இதி ஒரு தரப்பினர் போத்துக்கு வெளியேயும் , மற்றொரு தரப்பினர் தன் தரப்பு நியாயத்தை கூறுகிறேன் என்ற பெயரில் போரத்தில் புலம்பிக்கொண்டார்கள். இவர்களின் தொந்திரவு தாங்காது இதில் இந்த பிரச்சனையில் எந்த சம்பந்தமும் இல்லாத சிலர் போரத்தை விட்டு வெளியேறினார்கள்.

தினமும் நான்கு ஐந்து பேர் கொண்ட ஒரு தரப்பினர் ஏதோ மூன்றாம் உலகப்போர் அவர்கள் மேல் திணிக்கப் பட்டது மாதிரி சீரியஸ் ஆக தேவையே இல்லாது ஒண்ணுமே இல்லாத விஷயத்தை விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

இதில் போரம்மில் உள்ள மற்றவர்கள் தொந்திரவாக இருக்கிறது என்று சொல்லும்போது , நீங்கள் உங்கள் மெயிலுக்கு பில்டர் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள் .

நாலு பேரு கூடுற சந்தைல வந்து நின்னுகிட்டு நீ பில்டர் காப்பி வச்சுக்க , பிளாக் டீ போட்டுக்கோன்னு சொல்லக்கூடாது , நாங்க ன்னா செய்யனுமின்னு எங்களுக்குதெரியும் . நீங்க உங்க நாலுபேருக்கும் ஒரு குரூப் மெயில் உருவாக்கி அதற்குள் விவாதத்தை வைத்துக் கொண்டால் நாங்கள் ஏன் தலையிடுகிறோம் . இதை எதிர்க்காமல் krp செந்தில் சார் , சிரிப்பு போலீஸ் ரமேஸ் மற்றும் பலர் போரத்தை விட்டு வெளியேறியது சுத்த பைத்தியக்காரத்தனம்.

இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது போரத்தை ஆரம்பித்த கேபிள் சங்கர் அவர்களுக்கு நிறைய பேர் சண்டையை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள் , அதை அவர் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை . அவர் நினைத்து இருந்தால் அதை தவிர்த்து இருக்கலாம் . அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு அவரை பற்றி யாரோ பதிவு போட்டவுடன் ஒரு பதிவில் போட்டு அதில் தன்னை பற்றிய விசயங்களை தவிர்க்க சொல்கிறார். என்னை எந்த பிரச்சனையிலும் இழுக்காதீர்கள் என்று நாகரீகமாக சொல்லிவிட்டார். அது அவரது நிலைப்பாடு. அதில் வினாவுக்கும் ஒரு "ஃ" ன்னா வைத்து உள்ளார் .அவரது இந்த செயல் வினவுவின் எதிர் குழுவை ஆதரிப்பது போல் உள்ளது .

------------------

போரம் உலகம் முழுவது நமக்கு புதிய நண்பர்களை ஏற்படுத்தி தரும் தளமாகவும் , பிரச்சனை என்று வந்தால் அதை பெரிது படுத்த உதவும் களமாகவும் உள்ளது .

எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?

199 comments: