எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, September 30, 2010

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு

இன்று அயோத்தியில் ஒரு இடம் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு கூறப்போகிறார்கள். 60 ஆண்டுகளாக நடந்த வழக்கு இது , எல்லாத்தலைவர்களும் (பிரதமர் உட்பட) நாட்டு மக்களை அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர் . 73 கோடி ரூபாய் செலவில் அந்த மாநில அரசு லத்திகள் (பட்டா இது போலிஸ் கைல வச்சு இருப்பாங்களே அந்த குச்சி ) வாங்க உள்ளது . உள்துறை அமைசர் இது இறுதி தீர்ப்பல்ல இதை சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யலாம் , எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார் .

எனக்கென்னவோ இங்கு பொது மக்கள் யாரும் வேலையெல்லாம் விட்டுட்டு அந்த தீர்ப்ப எதிர் பார்த்து கொலை வெறியோட காத்துக்கிட்டு இருப்பது மாதிரி தெரியவில்லை . உத்திர பிரதேசத்தில் நாளை விடுமுறை , மற்றும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு என இந்த அரசியல் தலைவர்கள் அப்படி ஒரு பிரம்மையை உருவாக்குகிறார்கள் .

கோர்ட் தீர்ப்பு எதுவாக இருந்தாலு அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் , அத விட்டு கோர்ட் தீர்ப்புக்கு எதிரா கலவரம் பன்னுரவுங்களுக்கு எதிரா லத்திய வச்சுகிட்டு என்ன செய்றது ?

யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ள வேண்டியது தானே?

தீர்ப்பு தனக்கு சாதகமாக வராவிட்டால் கலவரம் பண்ணனுமின்னு நினைப்பவர்கள் எதற்கு கோட்ல 60 பது வருசமா கேஸ் நடத்தனும் ?

சில மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் ,கழுகுகளும் சுயநலத்திற்காக மக்களை தூண்டி விட்டு அதில் அரசில பன்ன நினைக்கிறார்கள் . அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் போதும் இங்கு ஒரு கலவரமும் நடக்காது .

எனக்கு என்னவென்று புரிய வில்லை , இந்திய சட்டப்படி கோர்ட் கூறும் தீர்ப்பு சொன்னவுடன் , இல்லை நான் அதை ஏற்க மாட்டேன் என்று எப்படி கூறமுடியும் ? பிறகு எதற்கு கோர்ட்டுக்கு போகணும் ?

டிஸ்கி : காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசும் , முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரளா அரசும் கோர்ட் தீர்ப்பை (அல்லது இடைக்கால தீர்ப்பை ) செயல் படுத்த வில்லை.

Wednesday, September 29, 2010

ஒரு சின்ன விடுகதை

ஊருல சொந்தக்கார குழந்தைகளோட இந்த நாலுநாள ஒரே லூட்டி தாங்க , அதுக ஒரே விடுகதையா சொல்லி ஆள கொளப்பி எடுத்திடுச்சுக , சும்மா ஜாலியா இன்னைக்கு சாம்பிளுக்கு அதுல ஒரு சின்ன விடுகதை , சரியா விடை சொன்னவுங்க எல்லாருக்கும் நோக்கியா கேமரா மொபைல் பரிசு .........

--------------------

மூணு கோவில் இருக்கு , ஒவ்வொரு கோவிலுக்கும் எதிராக ஒவ்வொரு குளம் என மொத்தம் மூணு குளம் இருக்கு, அதன் குளத்தொட சக்தி என்னன்னா நீங்கள் அந்த குளத்தில் எத்தினை பூக்கள் போடுகின்றீர்களோ அது அப்படியே எண்ணிக்கையில் இரட்டிப்பாகும் ,( எத்துக்காட்டு இப்ப 10 பூக்கள் போட்டீர்கள் என்றால் அது 20 பூக்களாக மாறிவிடும் ).

இப்ப நீங்க கைல கொஞ்சம் பூக்கள் கொண்டு போறீங்க , முதல் குளத்தில் போடுறிங்க , உடனே அது டபுள் ஆகுது , அதில் கொஞ்சம் பூக்கள எடுத்து முதல் கோவில்ல போடுறிங்க , மீதிப் பூக்கள அடுத்த குளத்தில் போடுறிங்க அதுவும் டபுள் ஆகுது, இப்ப முதல் கோவில்ல எத்தின பூக்கள் போட்டிங்களோ அதே எண்ணிக்கை உள்ள பூக்கள் இரண்டாவது கோவில்லையும் போடுறிங்க , அடுத்து மூணாவது குளத்தில் மீதமுள்ள பூக்கள போடுறிங்க அதுவும் டபுள் ஆகுது , இப்ப மூணாவது கோவில்லையும் முதல் ரெண்டு கோவில்ல என்ன எண்ணிக்கைல பூக்கள் போட்டிகளோ அதே எண்ணிக்கையுள்ள பூக்கள போடுறிங்க , போட்ட பிறகு உங்க கைகளில் ஒரு பூ கூட மிச்சம் இல்லை .

இப்ப கேள்விகள் :

1 . நீங்க எத்தினை பூக்கள் எடுத்துச் சென்றீகள்.
2 . ஒவ்வொரு கோவிலிலும் வைத்த பூக்கள் எவ்வளவு .

டிஸ்கி : சும்மா ஒரு சஸ்பன்சுகாக காமாட்ச அப்ரூவல்ல வைக்கிறேன்

Thursday, September 23, 2010

எனக்கு நாக்குல சனி

"என்னங்க மதியத்துக்கு பிரியாணி பண்ணவா ?"

(எனக்கு பகீர்ன்னு ஆகிப்போச்சு ,ஆஹா , டே, மங்கு உனக்கு ஆப்பு ரெடியாகுது பீ கேர்புல் )

"என்னம்மா இன்னைக்கு என்ன விசேசம் ?"


"அது ஒன்னும் இல்லைங்க வர்ற குவாட்டர்லி லீவுக்கு என்னோட அண்ணன் தம்பி ரெண்டு பேரும் நம்மள அங்க வரச்சொன்னாங்க , நான்தான் உங்களுக்கு லீவு கிடைக்காது அதுனால நீங்க எல்லாரும் இங்க வாங்கன்னு சொல்லிட்டேன்" .

" லீவு கிடைக்காதுன்னு நான் எப்ப சொன்னேன் ?" (மங்கு வலைவிரிக்கிறாங்க மாட்டிக்காத ?)

இவனுக வந்தா எப்படியும் வாடகைக்கு கார் எடுத்துக்கிட்டு 25 வது தடவையா ஒரு நாள் மகாபலிபுரம் போகணும் , ஒரு நாள் ஜூ-க்கு போகணும் , ஒரு நாள் சில்ட்ரன்ஸ் பார்க் ,பீச் போகணும் , ஒரு நாள் கிஸ்கிந்தா அப்புறம் ரெண்டு படம் பார்க்கணும் . இதுல காருக்கே 5000 ரூபா வந்திடும் . அப்புறம் தினம் வகைவகையா சாப்பாடு எல்லா செலவும் சேத்து எப்படியும் 10000 இல்லை 12000 வந்திடும் . (எல்லாம் சொந்த அனுபவம் தானுங்க ) . இவனுக எத்தின தடவ வந்தாலும் மேல சொன்ன எல்லாத்தையும் பாக்காம போகமாட்டேன்குராணுக .

என்ன பண்ணலாம் .....??????

பேசாம நாம அங்க போனமின்னா ? டிரைன் டிக்கட் தவிர அங்க போய் கொடைக்கானல் , வகை ஆணை போற செலவெல்லாம் அவனுக தலைல கட்டிரலாம்.

என் பையன் கிட்ட கொடைக்கானல் போற ஆசைய காட்டி லைட்டா தூண்டிவிட்டேன் , கரக்ட்டா வொர்கவுட் ஆகி நாங்களே ஊருக்கு போறதா முடிவாயிடுச்சு . (டே மங்கு நீ கிங்குடா , அசத்திட்ட எனக்கு நானே கைகுடுத்துக்கிட்டேன் )

"என்னங்க ஊருக்கு போறோம் கொலுசு ரொம்ப பழசா போயி , முத்து எல்லாம் உதிந்து போச்சு , அதை மட்டும் மாத்திகுவமா ?"

"சே...சே .... கொலுசு மாத்துறது தானே , என்ன ஒரு 1000 ரூபா எக்ஸ்ட்ரா வருமா ? வா போயி மாத்திட்டு வரலாம் ". (இங்க தான் என் நாக்குல சனி உட்கார்ந்திருச்சு )

கொலுசு மாத்த டி.நகர் போனோங்க, சொக்கா உனக்கு இரக்கமே இல்லையா ????


மொத்த பில்லு 6900 ரூபா , கொலுசுக்கு 1600 , ஒரு தோடு எக்சேன்ஜ் 3500 ,ரெண்டு புடவை , அப்புறம் பையன்னுக்கு சூ........... எக்ஸ்சட்ரா.............(..ம்ம்ம்.... என்னது எனக்கா ? பில்லு மட்டும் தாங்க எனக்கு )

உஸ் .... இப்பவே கண்ண கட்டுதே , ஒரு கொலுசு எக்சேன்ஜ் பன்னவந்தது தப்பாப்பா ?

டிரைன் , இப்ப பில்லு ரெண்டையும் சேத்து இப்பவே 8500 , எமாந்துட்டடா மங்கு , ஏமாந்துட்ட????

ஊர்ல போய் இன்னும் என்னன்னா ஆப்பு இருக்குன்னு தெரியலையே ?????

டிஸ்கி : பேசாம மச்சினன்கள இங்க வரச்சொல்லி இருக்கலாமோ ? அப்புறம் அங்க போயி என்ன ஆச்சுன்னு போயிட்டு வந்து சொல்றேன் .

Monday, September 20, 2010

தில் இருந்தா ஆட்டோ அனுப்பிப் பாருங்கடா

முஸ்கி :தயவு செய்து ஆட்டோ அனுப்புபவர்கள் இதை படிக்க வேண்டாம்.

நம்ம வானம்பாடிகள் சார் , போன பதிவுல ஒரே கமன்ட் போட்டு இருந்தார் , ஆட்டோ வராமலிருக்க ஐம்பது வழிகள்னு ஒரு புக் போட சொன்னார்.
(தெய்வமே... , தெய்வமே.... நன்றி சொல்வேன் தெய்வமே )

ஆட்டோ வராம இருக்கனுமின்னா பதிவு போடாம ஓடி ஒளிஞ்சு வாழனும் , அப்படி வாழ நாம என்ன கோழைகளா? , மறத்தமிழர்கள் இல்லையா? வீரம் நம் ரத்தத்தில் இரண்டரக்கலக்கவில்லையா ? என் தோள்கள் இரண்டும் தினவெடுக்கின்றன , எதிரிகளை பந்தாடுவதை விடுத்து ஓடி ஒழிவதா வெட்கம் , வெட்கம் ............... (ஆஹா....., ரோட்ல போற ஓனான வேட்டிக்குள்ள விட்ட கதையா , உனக்கு நீயே ஆப்ப தேடிகிட்டியே , ...ங்கொய்யாலே இன்னைக்கு உனக்கு சங்குதாண்டி )


என்னைய மாதிரி பலபேரு பதிவுபோட்டு ஆட்டோவுக்கு பயந்து போயி என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கிறதா உளவுத்துறை தகவல் சொல்லிச்சு (என்னது உளவுத்துறையா ? நீ அந்த அளவுக்கெல்லாம் ஒர்த்து இல்லையே ?) ,

இனி ஆட்டோ வந்தால் என்ன செய்வது ? எப்படி அதை எதிர்கொள்வது என்று பார்ப்போம் ..

டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் .


1 ) ஆட்டோ நுழைய முடியாத 2 அடி சந்துக்குள வீடு கட்டி வாழலாம்.( மனசாட்சி: இதுக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம்)


2 ) வீட்ட சுத்தி பெரிய அகழி வெட்டி அதுல நிறைய்ய முதலைகளை போட்டு வச்சிங்கன்னா , ஆட்டோ என்ன? டிரைன்னு , ஃபிளைட்டு கூட பக்கத்துல வராது . (அடங்...... ங்கொன்னியா நீ கெட்டகேட்டுக்கு உனக்கு ஃபிளைட்டுவரனுமா? நான் என்னைச் சொன்னேன் )


3 ) வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .(பக்கத்து வீட்டு காரனும் அதே பயத்துல உன் வீட்ட நோக்கி டைவர்சன் போர்டு வச்சிருந்தா என்னா பன்றது?)

4 ) வீட்டு தெரு முனைல "நோ என்ட்ரி ஃபார் ஆடோஸ்" அப்படின்னு போர்டு ஒன்னு வச்சா ஆட்டோ உள்ள வராது . (ஆட்டோவுக்கு படிக்க தெரியுமா? ஒரு வேல படிப்பறி இல்லாத ஆட்டோ வந்தா என்ன பன்றது?)

5 ) எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம் .(திடீர்ன்னு மழை வந்துட்டா என்ன பன்னுறது?)

6 ) வீட்டுல "பின் லேடன் , அல்கொய்தா" அப்படின்னு ஒரு நேம் போர்டு வைக்கலாம் . (அப்புறம் ஆடோ தேவை இல்லை , ஆட்டோமேடிக்கா என்கவுண்டர்ல போட்டு தள்ளிருவாங்க )


டிஸ்கி : இன்னும் நிறைய ரோசனைகள் இருக்கு , அப்பப்ப சொல்லுறேன் .

Thursday, September 16, 2010

நாங்களும் மாத்தி யோசிப்போமுல

முஸ்கி: நாமக்கு இந்த நாடும் நாட்டு மக்களும் என்ன செய்த்ததுன்னு யோசிச்சேங்க , டக்குன்னு என்னோட மனசாட்சி "ஏன்டா நாயே (என்னத்தாங்க ) இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நீ என்ன பண்ணி கிழிச்சன்னு" நறுக்குன்னு நாக்க புடுங்குரமாதிரி கேட்டுச்சுங்க , டக்குன்னு எனக்கும் ரோசம் வந்திருச்சு , சரி இந்த நாட்டு மக்களுக்காக நாம ஏதாவது செஞ்சே ஆகணுமின்னு , மொட்ட மாடில மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த (டேய் மங்கு , மொட்ட மாடில ஏதுடா விட்டம்? ) பார்த்துகிட்டே யோசித்த போது கன நேரத்தில் உதயமானதுதான் இந்த மெசேஜ்..... , (இனி உங்க தலைஎழுத்து போல நடக்கும் நான் என்னத்த சொல்ல ?????)

ஒரு சின்ன விஷயம் தான் , நாம எல்லாரும் அட்ரஸ் எழுதும் போது ஃபஸ்ட்டு பேரு , அப்புறம் கதவு எண் , அப்புறம் தெரு பேரு, அப்புறம் கிராமம், தாளுக் , டிஸ்ட்ரிக் கடைசியா எந்த நாடு அப்படின்னு தான் எழுதுறோம் , எக்ஸ்சாம்பிள்

மங்குனி அமைசர்

எண் : 4562
மத்திய சிறைச்சாலை
புழல்
சென்னை மாநகரம்
தமிழ் நாடு மாநிலம்
இந்தியா

இத வரிசையா படிச்சு பாருங்க, ஒவ்வொரு லைனுக்கும் ஒரு கேள்வி வரும் , அத வச்சு அடுத்த வரியா படிப்போம், கடைசில எல்லாத்தையும் மெமரில வச்சு அப்புறம் தான் ஒரு முடிவுக்கு வருவோம் ,.......

மங்குனி அமைசர்
ஓகே

எண் : 4562
எந்த தெருவுல ?

மத்திய சிறைச்சாலை
எந்த ஏரியாவுல ?

புழல்
எந்த ஊருல ?

சென்னை மாநகரம்
எந்த மாநிலத்துல ?

தமிழ் நாடு மாநிலம்
எந்த நாட்டுல ?

இந்தியா

சரிங்களா , இதவே இப்படி எழுதிப்பாருங்க

மங்குனி அமைசர்

இந்தியா
தமிழ் நாடு மாநிலம்
சென்னை மாநகரம்
புழல்
மத்திய சிறைச்சாலை
எண் : 4562

இப்ப முதல் அட்ரஸ்-ஐ விட இதில் ஈசியாக ஐடன்டிபை பன்னிவிடலாம்

மங்குனி அமைசர், இந்திய நாட்டில் , தமிழ் நாடு மாநிலத்தில் , சென்னை மாநகரில் , புழல் ஏரியாவில் , மத்தியசிறையில் , எண் 4562 ,


எப்படி என் லாவகமான சிந்தனை ? இனி முடிந்தால் எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம் .

(இந்த முறை ஈசியாக இருக்கும் என்று அட்ரஸ் எழுதி அது சரியான முகவரியை சென்று அடையவில்லை என்றால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல.)

டிஸ்கி :ஐயோ, ஐயையோ , ஏய் , ஏய் ... யாருப்பா அது ? நிறுத்து , ஸ்........டா.........ப்.........அப்புறம் கொலை கேசுல உள்ள போயிருவ ? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் , என்ன சின்னபுள்ளதனமா இருக்கு . மெசேஜ் புடிச்சா பாலோ பண்ணுங்க இல்லாட்டி விட்ரனும் அத விட்டிட்டு பாவம் ஒரு பச்ச மண்னபோட்டு இந்த அடி அடிக்ககூடாது .

Monday, September 13, 2010

இனி சூரிய மண்டலத்தி ப.மு.க துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது

எங்கள் ப.மு.க (யோவ் ப.மு.க ன்னா பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம் , அப்புறம் இந்த ஜாதி , மதம் ,ம@#று, மட்டைன்னு பேசுறவுங்க எல்லாம் அப்படிக்கா ஓடிப்போயிருங்க ) துணையில்லாமல் இனி யாரும் , மாநில, மத்திய அரசுகள் மட்டுமல்லாது செவ்வாய் , புதன் , வியாழன் , சனி கிரகங்களிலும், மொத்தத்தில் சூரிய, சந்திர மண்டலங்களில் ஆட்சி (யோவ் , ஆச்சி இல்லை ஆட்சி ) அமைக்க முடியாது என்று சமீபத்தில் தமிழ் நாட்டிற்கு சூறாவளி சுற்றுப் பயணம் சென்று வந்த ப.மு.க பொது செயலாளர் மாண்புமிகு , உயர்திரு மக்கள் தொண்டன், பாட்டிகளின் பாதுகாவலன், ஏழைகளின் இதைய தெய்வம் நமது பட்டாப்பட்டி அவர்கள் சிங்கப்பூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் .

மேலும் சிங்கபூர் பஸ் ஸ்டாண்டிற்கு நமது தானைத்தலைவன் , தன்மான சிங்கம், தரணி போற்றும் "பன்னிகுட்டி ராமசாமியின்" பெயர் வைக்கப்பட வேண்டும் இல்லையேல்
நமது "பனங்காட்டு நரி" சத்தியம் தியேட்டர் வாசலில் சாகும் வரை பிச்சை எடுப்பார் என்றும் கூறியுள்ளார் .

அதுமட்டுமில்லாமல் எங்கள் கொ.ப.சே. கீரிபுள்ளை புகழ் "பட்டிக்காட்டான் (பட்டணத்தில் ) ஜெய்" , அவர்களுக்கு டைபாயிடு வர காரணமாக இருந்த கயவர்களை கைது செய்யும் வரை எந்திரன் படம் பார்க்க மாட்டோம் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் .

நீங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு என்ன செய்வீர்கள் ? நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் ஏழைகளே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அனைத்து ஏழைகளுக்கும் இலவச திருவோடு கொடுத்து கட்டாய பிச்சைகாரர்கள் ஆக்கிவிட்டால் அப்புறம் பிச்சைகாரர்கள் தான் இருப்பார்கள் , ஏழைகள் இருக்க மாட்டார்கள் .

சரி நாடு முன்னேற்றத்திக்கு என்ன செய்ய போகிறீர்கள் ?
எனது இரண்டு மச்சினர்களும் சும்மாதான் இருக்கிறார்கள் , அவர்களில் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும் அடுத்தவருக்கு மத்திய அமைசர் பதவில்யிலும் அமர்த்தி நாட்டு மக்களுக்காக மிக மிகக் கடுமையாக உழைக்க சொல்லபோகிறேன் .

உங்க கூட்டணி கட்சிகளுடான உடன் படிக்கை என்ன ?
அது ஒன்னும் இல்லை , ஒரு கட்சி தலைவர் மகனுக்கு ஒரு மத்திய அமைசர் பதவி குடுத்தால் போதும் , அப்புறம் அடுத்த கட்சி தலைவர்கள் அவர்கள் கட்சிக்குள் "நமக்கு பதிவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு பதவி கிடைக்க கூடாது" என்ற கொள்கை உடையவர்கள் எனவே அவர்கள் வெளியில் இருந்த ஆதரவு தருவார்கள் .

எதிர்கட்சியை எப்படி சமாளிப்பீர்கள் ?
அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க , கொடநாட்டுப்
பகுதியில் தூங்குபவர்களை தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள அதற்கென்று ஒரு அமைச்சரவை உருவாக்க ஆவன செய்யப்படும்.

கடைசியாக ஒரு கேள்வி , இந்த பதிவுலகத்தி ஒரே ரத்த பூமியா இருக்கே அதற்க்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?
இது சம்மந்தமாக மத்திய அரசுக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் எழுதி விட்டேன் , மீட்டும் எழுதுவேன். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சண்டையிட்டுகொள்ள சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பத்தூரில சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரே மைதானம் கட்டிக் கொடுக்கப்படும்.

Wednesday, September 8, 2010

ஏழாவது அறிவு

சிக்ஸ்து சென்ஸ் டெக்நாலாஜி இந்த வேல்பூல் கம்பனி காரன் எப்ப கண்டு புடுச்சானோ அப்ப ஆரம்பிச்சதுங்க எனக்கு சனிப்பெயர்ச்சி . அந்த பிரிட்ஜ் விளம்பரத்த பாக்கும் போதெல்லாம் என்னோட வீட்டுகாரம்மாவோட டயலாக்

"பாரு மிசினுக்கு கூட ஆறு அறிவு இருக்கு, நமக்கு ஒன்னு வாச்சிருக்கே? மூணு அறிவு கூட இல்லாம? "

ஹி,ஹி,ஹி, நீங்க என்னை திட்டறதா தான நினைச்சிங்க ? அதுதான் இல்லை அந்த திட்டு எங்க வீட்டு பிரிட்ஜுக்கு . (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு ?).

அப்பத்தான் என்னோட அறிவுகள் எப்ப வளர ஆரம்பிச்சதுன்னு ஆராயிச்சி பண்ண ஆரம்பிச்சேன் .

டுஸ்கி: இப்போதைக்கு ஒவ்வொரு அறிவு வந்ததையும் சுருக்கமா சொல்லி இருக்கேன் , நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு அறிவை பத்தியும் ஒரு பதிவு போடுறேன் .

--------@@@@@--------

முதல் அறிவு : பொய் சொல்றது

இது கிட்டத்தட்ட ஒன்னாப்பு , ரெண்டாப்பு படிக்கும் போதே வந்திருச்சு , எவனையாவது அடிச்சிட்டு வந்து அவன்தான் பஸ்ட்டு என்னைய அடிச்சான்னு பொய் சொல்றதுல ஆரம்பிச்சு இப்ப பெரிய ஆழ மரமா வளர்ந்து நிக்குது .


ரெண்டாவது அறிவு : திருட்டு அறிவு

இது செவன்த்து , எய்த்து படிக்கும் போது இருக்குமின்னு நினைக்கிறேன் , எப்ப வீட்டுக்கு தெரியாம சினிமாவுக்கு போக ஆரம்பிச்சானோ? அப்போ, அப்பா பாகெட்டுல இருந்து காச திருட்டு ஆரம்பிச்சதுல இருந்து இந்த திருட்டு அறிவு வளர ஆரம்பிச்சது.

மூணாவது அறிவு : சைட் அடிப்பது

இது 9th படிக்கும் போது வளர ஆரம்பிச்சது , என்னைக்கு ஹைஸ்கூல்ல சேந்தனோ? அப்பவே இந்த அறிவு அசுரத்தனமா வளர ஆரம்பிச்சது .


நாலாவது அறிவு : லவ் பண்ணுவது

இந்த அறிவு +1 ஆரம்பிச்சு காலேஜு , அப்புறம் ஆஃபீசு அங்க, இங்கன்னு கல்யாணம் முடியிற வரைக்கும் இந்த அறிவ பலபேர் கிட்ட வளந்துச்சு.


அஞ்சாவது அறிவு : ஓசி அறிவு


படிச்சிட்டு வேலைதேடுறேன்குற பேர்ல பிரண்ட்சோட மேன்சன் ரூம்ல டெண்ட்டு போட்டு ஓசில உட்கார்ந்தப்ப ஆரம்பிச்சது ,அப்படியே சில பல வருசங்கள் அடுத்தவன் காசுலையே மஞ்சகுளிச்சம் பாருங்க அப்ப வளர ஆரம்பிச்சு , இன்னமும் எந்த அடிமையாவது சிக்குனாலும் தயவு தாட்ச்சண்யம் பாக்காம போட்டு தள்ளுற லெவல்ல இருக்கு .அந்த டைம்ல இந்த மூணாவது , நாலாவது அறிவுகள நல்லா டெவலப்பண்ணி வளக்குறதுக்கு ரொம்ப உதவியா இருந்தது.


ஆறாவது அறிவு : முட்டாள் ஆகுறது


அதாங்க கல்யாணம் பண்றது , இதுக்கு மேல இந்த அறிவ பத்தி என்னத்த சொல்ல ?

இதெல்லாம் இல்லாம நமக்குன்னு ஏழாவது அறிவு வேற ஒன்னு இருக்கு , அது தான் தி ஸ்பெசல் கிரேட் அறிவு ....


ஏழாவது அறிவு : மங்குனி அறிவு


நம்ம வீட்டு காரம்மா ஏன்னா திட்டு திட்டினாலும் , இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விடுறம் பாருங்க , அது எவ்ளோ பெரிய அறிவு ? எல்லா அறிவையும் விட இதுதான் அதிகமா வளந்திருக்கு.

டிஸ்கி : நமக்குத்தான் அந்தந்த கால கட்டத்துல எல்லா அறிவும் கரக்ட்டா தானே வளர்ந்திருக்கு அப்புறம் ஏன் குறை சொல்றா ??? எல்லாம் கலிகாலம்.....

Monday, September 6, 2010

வாழ்க பதிவர்கள் , வாழ்க 18 +

முஸ்கி : நீயல்லாம் ஒரு ஆளா? ஹிட்சுக்காகவும் , ஓட்டுக்காகவும் , பாலோவருக்காகவும் பதிவு எழுதுவதெல்லாம் ஒரு பொழப்பா? , நீ எழுதுறது எல்லாம் ஒரு பதிவா ? உன்னை போல நான் ஹிட்சுக்காகவோ , ஓட்டுக்காகவோ எழுதலை என்னுடைய ஆத்தம திருப்திக்காகவும் , இந்த சமுதாய முன்னேற்றத்திற்காகவும் எழுதுறேன்னு சொல்லற அன்புள்ளம் கொண்ட ரொம்ப, ரொம்ப நல்லவர்கள் எல்லாம் அப்படிக்கா ஓடிப்போயிடுங்க .

-----------@@@@@@@@-----------

உண்மையிலேயே போன பதிவுல அடல்ஸ் ஒன்லி மேட்டர் ஒன்னு எழுதி வச்சு இருந்தேன் , ஆனா கடைசி நிமிடத்தில் அதை எடுத்து விட்டேன்(ஆமா இவரு பெரிய்ய பட்ஜெட் தாக்கல் செய்தாரு?) . இந்த விசயத்தையும் நம்ம பன்னிகுட்டி ராமசாமி கரக்ட்டா கண்டுபுடுச்சிட்டார். (பாம்பின் கால் பாம்பரியுமின்னு சும்மாவா சொன்னாங்க ).

இது வரை நான் எழுதிய பதிவுகளுக்கு(பட்டாப்பட்டி இங்க பாரு , இங்க ஒரு சாணி @#%*& உருவாடுதுடோய்) வந்த விசிட்ஸ் எண்ணிக்கை எல்லா வற்றையும் ஓவர் டேக் பண்ணிவிட்டது இந்த "18+ (அடல்ஸ் ஒன்லி)" .(ஹி.ஹி.ஹி........... வாழ்க பதிவர்க , வாழ்க ஜனநாயகம்)

ஆம் இது வரை ஒரு நாளில் 600 மேல வந்தது இல்லை (என்னது 600 விசிட்ஸ்ஆ ? ஏய் ஓவரா பொய் சொல்லக்கூடாது ), இந்த பதிவிற்கு மட்டும் முதல் நாள் 1400 மேல் விசிட்ஸ் வந்தது(அவ்வளவுக்கு ஆகிப் போச்சா ? அப்ப வால்பையன சண்டைக்கு இழுக்க வேண்டியது தான் ) . இரண்டாம் நாள் 900 மேல் விசிட்ஸ் வந்தது .

எங்க யாராவது ஏன் அவ்ளோ விசிட்ஸ் வந்துச்சுன்னு கேளுங்க? கேளுங்க? கேளுங்க?

-----------@@@@@@@@-----------


அப்புறம் அன்னைக்கே(என்னைக்கே ?) நான் ஒரு விஷயம் சொல்லணுமின்னு நினைச்சேன் , இந்த தினத்தந்தி ஆபீஸ பஸ்ட்டு மூடனும் சார் (அடப்பாவி , நீ எப்படியும் புழல் ஜெயிலுக்கு போகாம அடங்கமாட்டேன்னு நினைக்கிறேன் ) . பதிவுலகுல மெத்த படிச்ச அறிவியல் மேதாவிகள் பலபேர் இருக்காங்க சார் அவுங்க எல்லாம் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ,மும்பை பாசஞ்சர், கல்கத்தா கூட்ஸ் , ஹிந்து ,முஸ்லிம் , கிறிஸ்டியன் போன்ற இங்கிலீசு பேப்பர் எல்லாம் படிச்சு பதிவு எழுதுவாங்கன்னு நினைக்கிறேன் .சரி நாமளும் அந்த மாதிரி புத்திசாலித்தனமா(????) பதிவு எழுதலாமுன்னு நினைச்சு அன்னைக்கு ஒரு நாள் அந்த பேப்பர் எல்லாம் வாங்கி பாத்தேன் சார் , அடங்.................. ங்கொன்னியா ???

எல்லாமே இங்கிலீசுல(அது இங்கிலீசுன்னு கண்டு புடுச்ச பாரு அதுக்கே உனக்கு டாக்டர் பட்டம் குடுக்கலாம் ) இருக்கு சார், நமக்கு தலையும் புரியல வாலும புரியல (ஏன்? தமிழ்ல படிச்சா மட்டும் உனக்கு புரிஞ்சிடுமா? ). நமக்கும் இந்த இங்கிலீசுக்கும் இடைல ஒரு பூர்வ ஜென்ம பகை இருக்கு சார் . சரின்னு தினதந்திய படிச்சிட்டு பதிவு போட்டா ஆளாளுக்கு மிரட்றாங்க . நம்ம பனங்காட்டு நரி வேற பீதிய கிளப்புறான் . எனவே தயவு செய்து யாராவது மேற்கண்ட இங்கிலீசு பேபர கொஞ்சம் தமிழுல டிரான்ஸ்லேட் பன்னி எனக்கு மெயில்ல அனுப்புனிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் .


Thursday, September 2, 2010

18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )


STOP

பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படியே காமாட்ஸ்ல போயி நான் இதை படிக்கல அப்படின்னு கமன்ட் போட்டுருங்க , மத்தவுங்க ஃபாலோ ......... மி .....................


எனக்கும் 18+ பதிவு ஒன்னு போடனுமின்னு ரொம்ப நாளாக ஒரு எண்ணம் இருந்துச்சு , இதை பெண் பதிவர்கள் எப்படி எடுத்துக்குவாங்கன்னு ஒரு தயக்கம் வேற இருந்தது.

அப்படித்தான் ஒரு வாட்டி ஒரு டாட்டூஸ் படம் போட்டேன் , அதுல இருந்து சில பெண் பதிவர்கள் நம்ம பிளாக் பக்கம் வர்றதையே நிறுத்திடாங்க.

மறுபடியும் அப்படி ஆயிடுமோன்னு ஒரு பக்கம் பயமா இருந்தது. பல பதிவுகள் இந்த மாதிரி பாத்தா பிறகுதான் சரி நமக்கு தெரிஞ்சத போடலாமுன்னு ஒரு தைரியம் வந்துச்சு .

இன்னும் இதை பத்தி பேசவோ , படிக்கவோ , விவாதம் பன்னவோ நமக்கு வெக்கமாகவும்
கூச்சமாகவும் இருக்கு . காரணம் என்னான்னு அலசிபாத்தம்ன்னா நமக்கு பள்ளிகளில் இது பற்றிய போதிய பாடங்கள் இல்லை , நமது பெற்றோர்களும் இதை பற்றி தெரியப்படுத்துவது இல்லை . பதினெட்டு வயசுக்கு மேலும் இதை பத்தி தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் . எனவே வேறவழி இல்லாமல் இந்தப் பதிவு .................


இனி ................... பதினெட்டு வயசுக்கு மேல செய்ய வேண்டியவை என்னன்னா ??? ?
?

?

?

?

?

?



1 ) ஒட்டு போடலாம்
2 ) டூவீலர் மற்றும் காருக்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்கலாம்
3 ) சட்டப்படி அவர்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்
4 ) அரசு மற்றும் வெளிநாடுகளில் வேளையில் சேரலாம்

பிம்பிளிக்கி பிளிகிலி ....... மாமா பிஸ்கோத்த்த்த்த்து , ஐ ....... ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா? , ஏமாந்திங்களா ?

(18 + போட்டு பதிவு போடுறது இப்ப ஃபேசனா போச்சு . 18 + போட்டா போதும் உடனே வேலை வெட்டிய விட்டுட்டு , லைட்ட ஆஃப் பண்ணிட்டு சவுண்ட குறைச்சு வச்சுகிட்டு (யோவ்... படிக்கிறதுக்கும் ஏன்யா சவுண்ட குறைச்சு வக்கணும் ?) " ஆ"ன்னு வாயத்தொரந்துகிட்டு , வாயிக்குள்ள "ஈ" போறது கூட தெரியாம படிக்க ரகசியமா வேண்டியது.)


ங்கொய்யாலே இனிமே யாராவது "18+" போட்டு பதிவு போடுவிங்க? , போடுவிங்க? , போடுவிங்க ?

----------@@@@@@------------

சரி இப்ப எங்கையோ படிச்ச ஒரு சர்தார்ஜி "A " ஜோக்

ஒரு சர்தார்ஜி 18 வது முறையா ஒரு ஹிந்தி படத்துக்கு போனானாம், அதை பார்த்த அவன் பிரண்டு ஏன் ஒரே படத்த 18 தடவை பாக்குறேன்னு கேட்டானாம் , அதுக்கு அந்த சர்தார்ஜி சொன்னாராம் ,

இல்லை நம்பா , அந்த படத்துல ஒரு பொண்ணு குளத்துல குளிக்க போவா , குளிக்கிறதுக்கு முன்னாடி ஒவ்வொரு டிரஸ்சா கழட்ட ஆரம்பிப்பா , கடைசி டிரெஸ்ஸ கழட்டும் போது கரக்ட்டா டெயிலி ஒரு ட்ரைன் குறுக்க வந்துருது , ட்ரைன் போனபின்னாடி பாத்தா அவ தண்ணிக்குள்ள இருக்கா , என்னைக்காவது அந்த ட்ரைன் லேட்டாவராமலா போயிடும்? அதான் இன்னைக்கும் பார்க்கப் போறேன் .