எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 31, 2010

மங்குனி டி.வி ???????

பாருங்க எங்க ஆபிசுல ஆணிபுடுங்க சொல்லி அநியாயம் பண்றானுக , எனக்கு ஆணிபுடுங்க தெரியாதுன்னு அவனுகளுக்கே தெரியும் , ஆனாலும் அழிச்சாட்டியம் பண்றானுக , அதுதான் வேலைய ரிசைன் பண்ணிட்டு பேசாம கவுருமெண்ட்டு ஆபீசுல வேலைக்கு சேந்திடலாம்ன்னு இருக்கேன். எனவே நண்பர்களே என்னால் அதிக நேரம் ப்ளாக் -களில் செலவிடமுடியவில்லை , யாரும் தவறாக நினைக்காதீர்கள் . சீக்கிரம் இந்த ஆணிகள புடுங்கி எறிஞ்சிட்டு வந்துடுறேன்.

------------------------------------------------------

அன்பான நேயர்களே , அருமையான நன்பர்களே நீங்கள் ஆவலுடன்(????) எதிபார்த்த "மங்குனி டி.வி" இன்று முதல் இனிதே ஆரம்பம் .....


டொன்ட்ட..... டொன்ட்ட.......டொன்ட்ட.....டொய்ய்யி

மங்குனி டி.வி யின் முதல் நிகழ்ச்சியாக நேயர் கடிதம்???


(யோவ் இன்னைக்கு தான் டி.வி ஆரம்பிச்சிக அதுக்குள்ள எப்படி நேயர் கடிதம்????)


சார் , சும்மா டென்சன் ஆகாதிக , எல்லா பயலுகளும் திருட்டு டி.வி.டில பாத்துட்டு லெட்டர் போட்ருக்கானுக!!!!

நடுவர் : சரி சரி , முதல் லெட்டர படிங்க ?

அழகான இளம் பெண் தொகுப்பாளினி (ஹி .ஹி ,ஹி ): புழல் ஜெயில்ல இருந்து , வெடிகுண்டு முருகேசன் எழுதியிருக்கார் சார் ,

நடுவர் : புழல் ஜெயில்ல டி.வி.யா ? எங்க படிங்க?


அ.இ.பெ.தொ : சார் நான் உங்க டி.வி நிகழ்சிகள பார்த்தேன் , ரெண்டு நாளா திருட்டு டி.வில திருட்டு டி.வி.டில உங்க நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்தேன்................!!!!!, நான் இன்னும் ரெண்டு நாள்ல ரிலீஸ் ஆகுறேன் !!! ....அதுக்குள்ள கவுரதையா சொல்றேன் மரியாதையா உங்க டி.வி கம்பனிய மூடிட்டு ஓடிடுன்ங்க... இல்ல மவனே வந்தவுடன் மொதோ டெட் பாடி நீதான் , நாதாரி என்னைய மறுபடியும், மறுபடியும் கொலகாரனாக்காத..............

நடுவர் : மொதோ கடிதமே டெர்ரரா இருக்கு???, சரி , சரி அடுத்த கடித்த படிங்க?


அ.இ.பெ.தொ : சார் மைலாபூர்ல இருந்து பார்த்த சாரதி எழுதிருக்கார்.


நடுவர் : மைலாபூர் பார்த்தசாரதி பேரே நல்லாருக்கே ? எங்க படிங்க ?


அ.இ.பெ.தொ: சார் , உங்கள் நிகழ்சிகள் அனைத்தும் அருமை , அதிலும் அந்த எட்டுக்கால் பூச்சி பத்திய நிகழ்ச்சி மிகவும் அருமை , ஆனா அதுல வந்த எட்டுக்கால் பூச்சிக்கு எழு கால் தான் இருந்தது , ஏன் ????

நடுவர் : அது......, அதுவந்து....... அது ஊனமுற்றோர்களுக்கான நிகழ்ச்சி அதுதான்!!!!! நல்லா கேக்குரானுக கேள்வி ? (உஸ்.... அப்பா எப்படியெல்லாம் ஆப்பு வக்கிரானுக ), அடுத்த கடிதம் படிங்க ?

அ.இ.பெ.தொ: கோபிசெட்டி பாளையத்துல இருந்து , கோபி எழுதிருக்கார் சார் சார் , உங்கள் நகழ்ச்சிகள் அனைத்தும் அருமை ,அதிலும் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் படம் அருமையோ அருமை ..

நடுவர் : ஏய்? நிறுத்து நிறுத்து நிறுத்து , அந்த படம் இன்னும் ரிலீசே ஆகலையே அப்புறம் எப்படி நம்ம டி.வி.ல??? (ஆஹா...... , எவனோ கள்ள டெலிகாஸ்ட் வேற பன்னிருக்கானுகளே ?) .

டே, டே.......... உடனே கடைய மூடுங்கடா , எஸ்கேப்ப்ப்ப்ப்ப்..............................

நன்றி நண்பர்களே மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சநதிப்போம் .

Thursday, May 27, 2010

யாராவது பெரிய படிப்பு படிச்சவுக இருக்கீகளா??????

வானிலை அறிக்கை

கடந்த பத்து நாட்களாக பிளாகர்களின் வானிலை மிக மந்தமாக உள்ளது , (அனேகமா எல்லாரும் ஆணி புடுங்க போய்ட்டாங்கன்னு நினைக்கிறன்) , தினமும் பதிவு போடும் பிளாகர்களை தவிர மத்த பிரபல பதிவர்களின் பிளாக்கள் "நம் மங்குனி அமைசர் ப்ளாக் உட்பட" (ஹி.ஹி..ஹி... எல்லாம் ஒரு விளம்பரம் தான் ) இந்த வாரம் மந்த நிலையிலேயே இருந்தன. இன்னும் ஒரு வாரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் திரு .ரமணன் கூறியுள்ளார் .

----------------------------------------

பிளீஸ் , பிளீஸ் யாராவது படிச்சவுக இங்க என்னா நடக்குதுன்னு படிச்சு பாத்து சொல்லுங்க ?

நக்சலைட் தாக்குதல்கள் :

* நக்சலைட்கள் போலீஸ் நிலையத்தை தாக்கி 12 போலீசாரை சுட்டு கொன்று ஆயுதங்களை கடத்தி சென்றனர் .


* 06/04/2010 , நக்சலைட் கண்ணிவெடி தாக்குதலில் 76 போலீசார் பலி

* 18/05/2010 , நக்சலைட் கண்ணிவெடி தாக்குதலில் 40 பேர் பலி

* 25/05/2010 , இரவில் வந்த நக்சல்கள் ரோடு போடு இயந்திரம் , மற்றும் சரக்கு வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்


முக்கிய செய்தி : உள்துறை அமைசர் திரு பா.சிதம்பரம் அறிக்கை....... நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போடும்வரை தாக்குதல்கள் தொடரும்....(????)

மங்குனி : சார் , எனக்கு ஒன்னுமே புரியல ? திரு பா.சிதம்பரம் யாருக்கு எச்சரிக்கை விடுகிறார் ? யாராவது படிச்சவுக , விவரமான ஆட்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் , இந்த மரமண்டைக்கு ஒன்னும் பிரியல ????

----------------------------------------


உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா மறுபடியும் கரண்ட்டு போச்சு (மொரைக்காதிக பில்லு கட்டிட்டேன் ) , ஒரே வியர்வை , டென்சன் , கோபம்... எல்லா வேலையும் கெட்டுப்போச்சு? ..... இதுக்கெல்லாம் யார் காரணம் ???

ஆற்காட்டு வீராசாமியா ?

இல்லைங்க பாவம் அவர் என்னா செய்வார்?


கலைஞர் ?


சீ, சீ .... பாவம் அவரே
மேல் சபை 6 எம்.பி க்கு வாரிசுகள் இல்லையேன்னு கவலைல இருக்கார் .

பின்ன ஜெயலலிதாவா ?


அட போக சார் ,
சும்மா காமடி பன்னிகிட்டு இதெல்லாம் கவனிக்க அவுகளுக்கு நேரம் எங்க இருக்கு ?

அப்ப யாருன்னு சொல்லி தொலை ?

எல்லாத்துக்கும் காரணம் அந்த படவா ராஸ்கோல் நம்ம "மைகேல் பாரடே" (இவருதானே கரண்ட கண்டுபுடிச்சாரு??? ) தான் சார் , அந்த ஆள் மட்டும் கரண்ட்ட கண்டுபுடிகாட்டி நமக்கு இந்த டென்சன் இருக்குமா? , இப்படி ப்ளாக் ஆரம்பிச்சு இந்த இம்ச பட்ருப்பமா? இந்த பாழாப்போன கம்ப்யுடர் முன்னாடி உட்கார்ந்து இப்படி பொலம்புவமா ? அந்த ஆளு , "மைகேல் பாரடே" மட்டும் என்கைல கிடைச்சான் ? அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது ...... ஆமா சொல்லிபுட்டேன் , அந்த ஆள் கிட்ட சொல்லி கொஞ்ச நாள் என் கண்ல படவேனாம்னு சொல்லிவைங்க ..................(அந்த ஆள் நேரா ஜெனரேட்டர் கண்டுபுடிசிருக்க வேண்டியது தானே ?)

Monday, May 24, 2010

வழக்கம் போல "பல்பு" தான்

முஸ்கி: அது எப்படிதான் நம்மள பத்தி தெரியுதோ??? , தேடி, தேடி வந்து பல்பு குடுக்குரானுக....

ஒன்னுமே புரியல உலகத்துலே
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது

.................................
.................................


காலைல எழும்போதே கரண்ட் இல்ல , ஒரே டென்சன் ,பக்கத்து
வீட்ல கரண்ட் இருக்கு நமக்கு இல்ல , பீ.பீ கூடிபோச்சு , ஈ.பீக்கு போன போட்டு என்னான்னு கேட்டா , இன்னைக்கு சன்டே லீவு நீங்க நாளைக்கு போன் பனுங்கன்னு சொல்றாங்க , அட சன்டேல கூட போன எடுக்குறாங்கன்னு பாத்தா , அது ரெகார்டேட் மெசேஜ் ???!!!

சரின்னு அன்னைக்கு பூராம் பக்கத்து வீட்லயே பேமிலியோட சாப்டோம் , (பாருங்க எங்க வீட்ல கரண்ட் போனா கேஸ் அடுப்பும் எரியமாட்டேன்கிது).

மறுநாள் மன்டே (தோ...டா... பெரிய கண்டுபிடிப்பு ), மறுபடியும் ஈ.பீக்கு போன போட்டு.....


"ஹலோ , ஈ.பீ ஆபிசா ?"


"ஆமா சார் , சொல்லுங்க "


"(என்னாட இது மரியாதையா பேசுறாங்கன்னு நினைசுகிடே ) என்ன சார் வேலை பாக்குறிங்க ? ரெண்டுநாளா என் வீட்ல கரண்ட் இல்லை?, சம்மர் வேற சீக்கிரம் சரிபன்னுங்க சார் ...

"
சாரி சார் , கோபபடாதிங்க இப்பவே சரி பன்னிடுறோம் , உங்க அட்ரெஸ் சொல்லுங்க ? "

"நம்பர் 44 , .... .... (மங்கு சத்தபோடாம சொல்லு உன் அட்ரெஸ் தேடி ஒரு பெரிய பிளாகர் குரூப் அலைஞ்சுகிட்டு இருக்கு , பீ கேர் புல் பர்சையும் , கிரெடிட் கார்டையும் பத்திரமா காப்பாத்திக்க) "

சார் கொஞ்சம் உங்க ஈ.பீ நம்பர் சொல்லுங்க


"388 ............ ."


"யோவ் பஸ்ட்டு பில்ல கட்டுயா, கரண்ட் தானா வரும் "


"....ங்ங்ங்ங்கே ??????????"

டுஸ்கி: ஆஹாஹா............ இன்னைக்கு காலைலே சைத்தான் தலை சீவ ஆரம்பிச்சிடுச்சு , இனி அது சடை பின்னி , பூவச்சு, பொட்டு வைக்காம போகாதே???? குலசாமி என்னைய நீ தான் காப்பாத்தனும்

சரின்னு , வண்டி எடுத்துகிட்டு ஆபீஸ் கிளம்புனேன் , கிளம்பி ஒரு 15 நிமிசத்துல வண்டி ஆபாயிடுச்சு, நானும் ரொம்ப நேரம் என்னென்னமோ ட்ரை பன்னி பாத்தேன் வண்டி ஸ்டார் ஆகல ,நேத்து தானே சர்வீஸ் பன்னோம் , மெக்கானிக் நாம் குளோஸ் பிரண்டுதான் , போன போட்டேன்

நா அடிச்சா தாங்கமாட்ட, நாலுமாசம் தூங்க மாட்ட .........
(அந்த பயலோட ரிங்க்டோன்)

"ஹலோ..."

"ஹலோ மாமா என்னையா வேல பாத்த , வண்டி ஆபிஸ் போகும்போது ஆபாயிடுச்சுடா ?"

"அடடா எங்க?"

"உதயம் தியேட்டர் பக்கத்துல "

"சோக் போட்டு ஸ்டார்ட் பன்னி பாரு ."

"எல்லாம் பாத்துட்டேன் ஒன்னும் வேலைக்காகல"

"அப்படியா சரி இரு வர்றேன் "

அவனும் பாவம் உடனே ஒரு வண்டில வந்து சேந்தான் , வந்தவன் ஒரு ரெண்டு நிமிஷம் வண்டிய நோண்டுனான் அப்புறம் வண்டிய விட்டு என்னைய சொறிநாய பாக்குற மாதிரி பாத்தான் ,

"என்னடா மாமா என்னாச்சு ?"

"போடா , பொறம்போக்கு, நாதாரி நாயே,டோமரு , பேமானி , நீ என்னைக்காவது தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தாண்டா சாவ ...."

"ஏ , எனாச்சு மாமா ஏன் இவ்வளவு டென்சனா இருக்க?"

"டே பரதேசி , பஸ்ட்டு வண்டிக்கு பெட்ரோல் போடுடா"

அப்பதாங்க கவனிச்சேன் பெட்ரோல் காலியாகி வண்டி ஆபாயிருக்கு. (எல்லா பயலுகளும் கோபக்கார பயலுகளா இருக்கானுக.)

டிஸ்கி : நம்ம மேல ஒன்னும் தப்பு இல்லை , நம்ம ஜாதகத்துலதான் ஏதோ பிசகு (வேற வழி எப்படிதான் தப்பிகிறது )

கிஸ்கி : எதுக்கு ஒரு அளவு இருக்கு?, என்னைய பாத்தா லூசு மாதிரியா இருக்கு?
அடுத்து இந்தமாதிரி ஏதாவது ஆச்சு? , பீ கேர்புல் (நான் என்னை சொன்னேன் ),

Wednesday, May 19, 2010

லஞ்சம் , லஞ்சம் , ஊரெல்லாம் லஞ்சம்

கனவு , ஒரு நாள் நிஜமாகும் ..... என்கிற தலைப்பில் பட்டாப்பட்டி ஒரு பதிவு போட்டு அவருக்கு நம் சமுதாயத்தின் மேல் உள்ள கோபத்தை மிக காட்டமாக கூறியிருந்தார் .....

அதை பற்றி எனது கருத்து......

லஞ்சம், பெட்ரோல் விலை இவை இரண்டையும் எந்த ஒரு நாடு கட்டுக்குள் வைத்திருக்கிறதோ அது தானாகவே முன்னேறிவிடும்.

லஞ்சம் எங்கே ஆரம்பமாகிறது ? (இப்ப எல்லாம் பிறக்கும் போதே லஞ்சம் குடுத்து தான் பிறக்க வேண்டி உள்ளது , எல்லா அரசு பொது மருத்துவமனைகளிலும் லஞ்சம் குடுத்தால் தான் பிரசவம் பார்கிறார்கள் ) .

நமது தேவைகள் அவசரமாகும் போது . உதாரணமாக,
நமக்கு ஓட்டுனர் உரிமம் , கடவுச்சீட்டு ( அட தூய தமிழ், மங்கு அசத்துடா ) இவற்றை பெற இரண்டு நாள் அலைய நேரமில்லை (நாம் நேராக சென்றால் நிச்சயம் லஞ்சம் இல்லாமல் காரியம் முடியும்) , நேராக முகவர்களிடம் செல்கிறோம் , முகவர்கள் வேலை விரைவில் முடிய லஞ்சம் கொடுகிறார்கள் . அதுமட்டும் அல்லாது அரசு கேட்டுக்கும் சான்றிதல்கள் தர இயலாதவர்கள் இன்னும் அதிகமாக லஞ்சம் கொடுக்க முன் வருகிறார்கள். இப்பொழுது அரசு அதிகாரிகள் மட்டுமல்ல , மக்களும் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எங்க ? ஏன் ? எதற்கு ? எப்படி ?
(நிறுத்து நிறுத்து , ஏன் இந்த டென்சன் கோபம் )

ஒட்டு போடத்தான் .

இருபது கோடி செலவு செய்து வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினர் ,
என்ன செய்வார் ?
????????
( ம் ம்ம்ம்ம்.... தெருவுல நாய்
குறைக்கும் போது , பக்கத்து கோயில்ல உண்ட கட்டி வாங்கி சாப்புடுவாறு)

இவற்றை சரி செய்ய என்ன வழி?

(ஒன்னியும் பன்னமுடியாது .
)

சட்டத்தை கடுமையாக்கனும்.

அது அவ்வளவு சாதாரணமாக முடியாது
, ஏன் ?

வளைகுடா நாடுகளில் சட்டம் மிக கடுமையானது , அது போன்று கடுமையாக்க நாம் நம் சமுதாயத்தை ஆணி வேரிலிருந்து சரிசெய்ய வேண்டும் , நமக்கு பிறந்ததிலிருந்து உணவு , உடை , தங்குமிடம் , பாசம் அனைத்தும் தானாகவே கிடைத்து விட்டன , வளர, வளர நாகரீகம் சொல்லிக்கொடுக்கப்பட்டு எது சரி , எது தவறு , எது குற்றம் என்பது தெளிவாக சொல்லிகொடுக்கபடுகிறது .நமக்கு இந்த கடுமையான சட்டங்கள் பொருந்தும் .

ஆனால் ?????

சென்டல் , எக்மோர் ரயில் நிலையங்கள் , குப்பை மேடுகள் போன்ற வற்றில் அனாதையாக திரியும் சிறுவர்கள் , அவர்களுக்கு உடை இல்லை, தங்குமிடம் இல்லை , பாசம் இல்லை , இருப்பது எல்லாம்........

பசி, பசி ,பசி ???


முதலில் திருட ஆரம்பிகிறார்கள் , பின்பு ரவுடியிசம் , மாமூல் , கட்டபஞ்சாயத்து ............................................ (மங்கு ரொம்ப யோசிக்காத , மூளைக்காய்ச்சல் வந்திட போகுது )

இவர்கள் செய்யும் தவறுக்கும் அந்த கடுமையான சட்டம் பொருந்துமா ???????

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது எல்லாம் ஒருவித திருட்டு தான் , அவனுக்கும் , பசிக்காக திருடுபவனுக்கு ஒரே தண்டனை கொடுக்க இயலுமா ??????

எனவே ஆணிவேரிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது ஏன் கருத்து , உடனடியாக முடியாது மிக நீண்ட காலம் ஆகலாம் , அனால் இப்பொழுதே அந்த வேலை ஆரம்பிக்க படவேண்டும் ,

அதை யார் செய்வது ?
வேறு யார் அரசாங்கம் தான் .

எந்த அரசாங்கம் ?
தொகுதிக்கு இருபது கோடி செலவு செய்து வெற்றி பெரும் அரசு.

ஏன் இருபது கோடி செலவு செய்கிறார்கள் ? நம்ம மக்கள் லஞ்சம் கேட்பதால். (பாஸ் முன்னாடி தான் பாஸ் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தார்கள் , இப்ப எல்லாம் மக்களே கேட்க ஆரம்பிச்சுடாங்க )

பட்டாப்பட்டி :ங்கொய்யாலே..... பைனலா நீ என்னா சொல்ல வர்ற ?
....ம்ம்ம்..... சென்னைல நேத்து நைட்ல இருந்து நல்ல மழை

Monday, May 17, 2010

அடுத்த முதல்வர் யார் ??????

முஸ்கி: ஹாய் பிரண்ட்ஸ், போன பதிவும் இந்த பதிவும் சும்மா தமாசு , யாரும் சீரியஸா நினசிகிட்டு ஆடோ கீட்டோ எதுவும் அனுபிராதிக , , (...ங்கொய்யாலே.... மண்ட வறண்டு போய் என்னா எழுதுறதுன்னு தெரியாம ஒளரிட்டு இப்ப பிலிம் காட்டறியா ? )

போதும்டா சாமி , இப்படி தொரத்தி, தொரத்தி அடிக்கிறாங்க , முடியலே....... , எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , இப்படியா கேப் விடாம அடிக்கிறது, போன வாட்டி அடிச்சவனுக கூட வலிதெரியாம இருக்க ஒரு ஏற்பாடு பன்னிட்டு அடிச்சானுக , இவனுக துள்ள, துடிக்க கொல வெறியோட கூடி ,கூடி, கும்மி அடிகிரானுக, போதும்பா........ போதும் .

-----------------------------------------------


ஓகே , இப்பா பிரபல பதிவர் ஆயாச்சு இனி கட்சிய நடத்தனும்னா கண்டிப்பா ஒரு டி.வீ சேனல் வேணும், சரின்னு மச்சினன்டையும், வைப்டையும் கலந்து ஆலோசிச்சு அவுகளோட ஆலோசனைப்படி மங்குனி டி.வி சேனல் ஆரம்பிக்க போறேன் .(பின்ன பைனான்ஸ் மிஸ்டர் அவுகதானே )

இனிதே ஆரம்பம் "மங்குனி டி.வி"
வருங்கால முதலமைச்சர் குஸ்பு திறந்து... சே.., துவைக்கி வைக்கிறார் (அப்பாட....... தலைப்புக்கு பதில் சொல்லியாச்சு )

இனி வரும் நாட்களில் நாட்டில் நடக்கும் அனைத்து அநியாயங்களும்(????) , மக்கள் முன்னிலையில் தோலுரிக்க படும். (பஸ்ட்டு உந்தோல பாத்துக்க)

----------------------------------------------------------------------------

டுஸ்கி: சரி இப்ப நாம பிரபல பதிவர் ஆகிட்டதால , பிரபல பதிவர் ஆவது எப்படின்னு மத்தவுங்களுக்கு ஐடியா குடுக்கலாம்

பிரபல பதிவர் ஆக 5 சிறந்த வழிகள்:-

1) லேடிஸ் பேர்ல ஆரமிங்க (அப்புறம் நீங்க தும்முனா கூட 100 கமண்ட்ஸ் வரும் , ஒரு மாசத்துல 200 பாலோவர்ஸ் வந்துருவாங்க )

2 ) யாராவது பிரபல ப்ளாக்கர் நம்ம வால்பையன் , சித்ரா மேடம் இவுகள மாதிரி ஆட்கள பத்தி கண்டமானிக்கு திட்டி ஒரு பதிவு போடுங்க. (ஆடோ மேடிகா அவுகளே உங்கள பிரபல படுதிருவாக )


3 ) இல்லாட்டி ராஜீவ் காந்திய கொன்னது சரிதான் , இந்தியா என்ன சத்திரமா ? பார்வதி அம்மாவ இந்தியாவுக்குள்ள மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்க கூடாது அப்படின்னு நொன்ன தனமா போடுங்க (உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு எல்லா பிளாகரும் உங்ககூட சண்டைக்கு வருவாங்க அப்படியே பிக் அப் பன்னிக்கலாம்)

4) 100 க்கு மேல பாலோவர் வந்துட்டா , நம்ம பின்னூட்டம் குலசாமிக்கு உங்க தலைய காணிக்க செலுதுறதா வேண்டிகங்க, அப்படி வேண்டிகிட்டத ஒரு பதிவு போடுங்க , ஒரே நாள்ல 100 பால்லோவர் வந்துருவாங்க .(ஏன்னா ஆடு தற்கொல பன்ன வைகிரதுன்னா எங்களுக்கு ஒரே குஜால் , உடனே ஒன்னு கூடிடுவோம் )

5) இல்லைனா "சுறா" படத்த மூணு வாட்டி(மொதோ வாட்டி பாத்துட்டு , உயிரோட இருந்தா ) தொடர்ந்து பாருங்க, மூணு வாட்டி பாத்துட்டு உயிரோட இருந்திகன்னா அப்புறம் நீங்க தான் இந்த உலகத்திலே பிரபல பிளாகர் , (எங்களுக்கு விஷம் குடுத்து , கத்தியால குத்தி, துப்பாகியால சுட்டு அப்புறம் தூக்கு போட்டு கடைசியா பெட்ரோல் ஊத்தி கொளுத்தி கொல்ரதுதான் ரொம்ப புடிக்கும் )


டிஸ்கி : காலைலே கடவுள் என் கனவுல வந்து சொன்னாருங்க , "இன்னைக்கு உன் நண்பர்களுக்கு நேரம் சரி இல்லைன்னு" , பாருங்க அதே மாதிரி ஆகிபோச்சு (இதில் ஏதும் உள்குத்து இல்லை )


Thursday, May 13, 2010

உலக தலைவர்கள் கடும் அதிர்சி


நன்றி சொல்லவே எனக்கு என் நண்பர்களே வார்த்தையில்லையே ................


பிப்ரவரி 17 , 2010 , முதல் பதிவு, இந்த மூன்று மாதங்களில் மொத்தம் 21 பதிவுகள் , 105 பாலோவர்ஸ் , என்னைய என்னாலே நம்பமுடியல , சும்மாதான் எழுத ஆரமிச்சேன் இப்போ அதிக ஆர்வம் வந்திடுச்சு .............சும்மா காலேஜ்ல பசங்க கூட காமடியா பேசிகிட்டு இருப்பேன் , எனக்கு எழுத எல்லாம் வரும்னு சத்தியமா நினைக்கல.

ஆனா ப்ளாக் ஒரு போதைங்க, அதுவும் ராஜ போதை 24 மணிநேரமும் இதே சிந்தனையா இருக்கு , வேலை கெட்டு போகுது , இருந்தாலும் சந்தோசமா இருக்கு , எனக்கு எவ்வளவு புதிய நண்பர்கள் , முகம் பார்க்காவிட்டாலும் மிக நெருங்கிய நட்பு உணர்வு உள்ளது , இப்பொழுது எனக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் , இது ப்ளாக்-ஐ தவிர வேறு எதிலும் சாத்தியம் இல்லை .

என்னை ஊக்குவித்த , பாராட்டிய , திட்டிய அனைத்து ப்ளாக் உலக நண்பர்களுக்கு மிக்க நன்றி , நன்றி , நன்றி
....

------------------------------------------------------------------------


முக்கிய செய்தி :


இந்த செய்தியை அறிந்த உலக தலைவர்கள் அனைவரும் கடும் அதிர்சி அடைந்துள்ளனர்,தங்கள் ஆட்சி பறிபோய்விடும் என்று கலக்கம் அடைத்துள்ளனர் . 21 பதிவுகளில் 105 பால்லோவர்ஸ் எப்படி வரமுடியும் என்று அறிய , எப்.பி.ஐ , ரா போன்ற உலகிலுள்ள அனைத்து உளவுத்துறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது , இது சம்மந்தமாக பேசி முடிவெடுக்க நாளை ஜெனிவாவில் உலக நாட்டு தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது , அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நம் நாட்டு பிரதமர் இன்று தனி விமானத்தில் விரைகிறார் .

பீதியில் பின்லேடன் பின்னங்கால் பிடரில் அடிக்க பின்கட்டு வழியாக ஓடிபோய் புத்த பிச்சு வாக மாறிவிட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன .

உலக மக்கள் அனைவரும் மிக ஆர்வமாகவும் , சந்தோசமாகவும் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்கிறார்கள் . இனி உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர் .

நமது பிபிசி நிருபருக்கு பேட்டி அளித்த "பிரபல பதிவர் மங்குனி அமைசர் " இது காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல , அன்பால் தானாக சேர்ந்த நண்பர்கள் கூட்டம் என்றார் .

முஸ்கி : சரி சரி இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்

"தக்காளி நீயெல்லாம் ஒரு ஆளு , நீ போடுறது எல்லாம் ஒரு பதிவு " அப்படின்னு திட்ட ஆரம்பிக்கு பட்டாபட்டி
"ஸ்டாப் மூசிக் "

நான் இப்ப ரவுடி இல்ல , அதுக்கு மேல டான் ஆகிட்டேன் , இனி நானும் "பிரபல பதிவர் மங்குனி அமைசர்" (ஹி...ஹி...ஹி...) என்கிட்ட எதுவும் வச்சுக்காத ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரத



ஜெய்லானி ஸ்டார்ட் மூசிக்.......

"பிரபல பதிவர் மங்குனி அமைசர்"
"வாழ்க "

அடுத்த ஒசாமா பின்லேடன் "மங்குனி அமைசர்"
"வாழ்க, வாழ்க"

தமனா
பாய் பிரண்ட்" மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"


வருங்கால அமெரிக்க ஜனாதிபதி " மங்குனி அமைசர் "
"வாழ்க,வாழ்க,வாழ்க"

......ங்கொய்யாலே , என் கண்ணு ரெண்டும் கலங்கி போச்சு , குடுத்த காசுக்கு மேலே கூவுராண்டா நம்ம ஜெய்லானி


டிஸ்கி : ஏதோ நம்மளால முடிஞ்சது

Monday, May 10, 2010

பேக் டு தி காலேஜ் லைப்


ஆகா................................. ஒரு வாரம் , இனிமையான நாட்கள் , சில வருடங்களுக்கு பிறகு அனைத்து நண்பர்களையும் சந்தித்த சந்தோசம் , பழைய கல்லூரி வாழ்க்கையின் நினைவுகள் ......................

எங்கள் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து , எல்லா கவலைகளையும் மறந்து சந்தோசமாக ஊர் சுற்றினோம் , அதில் ஒரு நாள் ............... அனைத்து நண்பர்களும் மூணாறு கிளம்பினோம் ,

எங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டரில் மேற்கு தொடச்சி மலை ஆரம்பம் , அழகான வளைந்து நெளிந்த மலைப்பாதை , மலை பாதையில் பைக் ஓட்டுவது தனி சுகம் , பதினைந்து நிமிடங்களில் லேசான சில் காற்று , நாற்பது நிமிடங்களில் சில், சில் காற்று , இந்த கோடை வெப்பத்தில் அந்த சில் காற்றை சுவாசிக்க கொடுத்து வைக்க வேண்டும் , முதல் 22 கிலோமீட்டர் காட்டு மலைப்பாதை , அதற்க்கு பின் போடிமெட்டு , தமிழ் நாடு - கேரளா செக் போஸ்ட்.

அங்கிருந்து 16 கிலோமீட்டர் "டீ எஸ்டேட்" , பூபாறை. அதிலுருந்து இரு புறமும் அடர்த்தியான "ஏலக்காய் எஸ்டேட்" , செல்லும் வழியில் மழை சாரல் , மழை சாரலில் நனைந்து கொண்டு மலைப்பாதையில் பைக் ஓட்டுவது மிக அருமையான அனுபவம் , வழியில் பண்ணையார் டேம் , மீண்டும் "டீ எஸ்டேட்" , கேரளத்து சாப்பாடு , போகும் வழியில் அருமையான சிறு அருவி , சில்லென்று குளியல் , மீண்டும் மலைப்பாதையில் , மழை சாரலோடு ஒரு அருமையான அனுபவம் , பலமுறை சென்ற இடம்தான் , ஆனாலும் இயற்கை ...........மலை பள்ளத்தாக்குகள், டீ , ஏலக்காய் எஸ்டேட் , அடத்தியான மரங்கள் , கண்ணுக்கு எட்டிய வரை பச்சை வண்ணம் இவையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது .

முடிந்தால் நீங்களும் ஒரு முறை மலை பகுதிக்கு சென்று வாருங்கள் . மலைப்பாதையில் பைக்ல போனா ரொம்ப நல்லா இருக்கும் .

டிஸ்கி : இதுல என்னா காமடின்னா, நம்ம குரூப்ள ஒரு பயபுள்ள, ரொம்ப நல்லவன் , எந்த கேட்ட பழக்கமும் கிடையாது , திரும்பி வரும்போது கார்ல வர்றான்னு பைக் பசங்களும் , பைக்ல வர்றான்னு கார் பசங்களும் அவன அங்கேயே விட்டு வந்துட்டோம் , கடைசீல பயபுள்ள பஸ்சுல வந்து எங்கள கொல வெறியோட தேடிகிட்டு இருக்கிறதா செய்தி வந்தது , அதுக்குள் நான் எஸ்கேப் ஆகி இந்த அழகான , கூட்டமில்லாத , டிராபிக் இல்லாத , இந்த கோடையிலும் சில்லுனு இருக்க , தூசியில்லாத , பொழுசன் இல்லாத , ரம்யமான சென்னைக்கு ஓடி வந்துட்டேன் .

Monday, May 3, 2010

அரசாங்க அறிவிப்பு








சத்தியமா இது பட்டாப்பட்டி........... இல்லை (நம்புங்க .....ஏன்னா பட்டாப்பட்டி இவ்வளோ அழகா இருக்காது)




டம,டம,டம,...................


இதனால் சகலமான பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ,

நமது அதிபுத்திசாலியான ,
"அதுக்கு பஸ்ட்டு மூளை இருக்கனும்"


அறிவுநிறைந்த ,
"ரெண்டும் ஒன்னு தான்டா டோமரு"


நேர்மையான ,
"சொன்னாக , சொன்னாக"


வீரம் மிக்க ,
"பாத்தம், பாத்தம்"


மேன்மை மிக்க ,
"அப்டினா"

தெளிந்த சிந்தனைகொண்ட ,
"பாத்தாலே தெரியுது"


சாதுர்யம் மிக்க ,
"தோடா........"

திறமையான ,
"என்னாது? "



ராஜதந்திரங்களை கரைத்து குடித்த ,
"நீ கரைச்சு குடிச்சது பருத்தி கொட்டடா புண்ணாக்கு"


நமது நாட்டையும் ,
"ம்ம்ம்ம்....... "


நாட்டு மக்களையும் காக்கும்
"பஸ்ட்டு அவன பாத்துக்கவே வழியில்ல"


நமது மங்குனி அமைசர் , அவர் சொந்த ஊரில் நடக்கவுள்ள விழாவில் கலந்துகொண்டு அவ்விழாவை சிறப்பிக்க ஊருக்கு செல்லவிருக்கிறார் , எனவே நமது

மாண்புமிகு,
"மறுபடியும் பார்ரா"


பெருமை மிகு
,...........................
"டே, போதும் நிறுத்து என்னைய கொலகாரனாக்காத
) "


"சரி , சரி , விடு டென்சன் ஆகாத ... (பொறாம, வயிதெரிச்சல் )"

மங்குனி அமைசர் அவர்கள் வரும் ஆறு நாட்களுக்கு சபைக்கு வரமாட்டார் (ங்கொய்யாலே....... தொலஞ்சாண்டா, அப்படி
அங்கேயே பருத்திப்பால்ல பாய்சன கலந்து குடுத்து கொன்றுங்கடா ) என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


அதுவரை கீழே உள்ள படத்தை கண்டு மகிழுங்கள்
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?


?


?


?


?



ஹி, ஹி , ஹி

ஏமாந்திங்களா, ஏமாந்திங்களா, ஏமாந்திங்களா